என் மலர்
நீங்கள் தேடியது "Release of prisoners"
- வேலூரில் இதுவரை மொத்தம் 26 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்
- சிறைத்துறை அதிகாரிகள் தகவல்
வேலூர்:
முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள நன்னடத்தை கைதிகள் 700 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பல்வேறு கட்டங்களாக கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி வேலூரில் உள்ள மத்திய ஜெயிலில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 5 ஆண் கைதிகளும், ஒரு பெண் கைதியும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
இதுவரை வேலூர் பெண்கள் ஜெயிலில் உள்ள 3. கைதிகளும், ஆண்கள் ஜெயிலில் 23 கைதிகளும் என 26 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 25 பேர் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






