search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கே எஸ் அழகிரி"

    • சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை பதவியேற்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
    • தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருப்பவர்கள் விளிம்பு நிலை மக்கள், தலித்துகள் தான்.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு, மாநிலத் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார். அவர் மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சி சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடை பெற்றது.

    இதையொட்டி அண்ணா சாலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சத்தியமூர்த்தி பவனை அடைந்த செல்வப் பெருந்தகை, கட்சியின் மேலிட பார்வையாளர் அஜோய் குமார் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண் டார். முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி பொறுப்புகளை ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை பதவியேற்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும்போது, ''தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருப்பவர்கள் விளிம்பு நிலை மக்கள், தலித்துகள் தான். கடந்த 70 ஆண்டுகளாக அவர்களிடம் நிறைய வாக்குகளை பெற்றிருக்கிறோம். ஆனால் அவர்களுக்கு நாம் குறைவாகவே செய்துஇருக்கிறோம். இன்று செல்வப்பெருந்தகை தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில் அவரை நான் மனமார வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன்.

    நான் திருநாவுக்கரசரிடமிருந்து தலைவர் பதவியை பெற்றபோது மகிழ்ந்தேன். அதே மகிழ்ச்சியோடு இந்த பதவியை செல்வப் பெருந்தகைக்கு வழங்குகிறேன்'' என்றார். நிகழ்ச்சியில் செல்வப்பெருந்தகை பேசியதாவது:-

    இந்தியாவுக்கு மிகப் பெரிய ஆபத்து வந்திருக்கிறது. நாட்டை காப்பாற்ற ராகுல்காந்தி பிரதமராக வேண்டும். மல்லிகார்ஜூன கார்கே நம்பிக்கையோடு இந்த பொறுப்பை எனக்கு வழங்கி இருக்கிறார். இந்த நாட்டை காக்க முடியும் என்றால் அது காங்கிரசால் மட்டுமே முடியும். அழகிரியின் பணி பாராட்டுக்குரியது. அவர் எல்லோரையும் அரவணைத்துச் சென்றார். 18 எம்.எல்.ஏ.க்கள், 8 எம்.பி.க்களை பெற்றுத்தந்தார்.


    காங்கிரஸ் தொண்டர்கள் ஒருபோதும் பாஜகவை தமிழகத்தில் காலூன்ற அனுமதிக்கமாட்டார்கள். அனைவரும் கூட்டு முயற்சி மேற்கொண்டால் காமராஜர் ஆட்சி கொண்டுவர முடியும். அதற்கு எல்லோரும் சேர்ந்து களம் அமைப்போம். இன்று இல்லை என்றாலும் ஒருநாள் நடந்தே தீரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட தலைவர் சிவ.ராஜ சேகரன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் தேசிய செயலாளர் சிரி வெல்ல பிரசாத், பெ.விஸ்வநாதன், முன்னாள் மாநில தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, கிருஷ்ணசாமி, திரு நாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர்கள் மணி சங்கர் அய்யர், சுதர்சன நாச்சியப்பன், தனுஷ்கோடி ஆதித்தன், மாநில சிறு பான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல் போன்ஸ், செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், மாநில பொருளாளர் ரூபி மனோகர், சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, எம்.பி.க்கள் விஜய்வசந்த், ஜோதிமணி, ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், ரஞ்சன்குமார், முத்தழகன், டில்லி பாபு, மகளிர் அணி தலைவி சுதா ராமகிருஷ்ணன், ஓ.பி.சி. பிரிவு மாநில துணை தலைவர் ரவிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் மகளிர் காங்கிரஸ் தலைவி வக்கீல் சுதா தலைமையில் 52 பானைகளில் பொங்கல் வைத்தனர்.
    • பொங்கல் பொங்கியதும் பொங்கலோ பொங்கல்... ராகுல், பிரியங்கா வாழ்க என்று கோஷம் எழுப்பினார்கள்.

    சென்னை:

    பொங்கல் திருநாளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கொண்டாடி மகிழ்வார்கள். தமிழக மகளிர் காங்கிரசார் சார்பில் பிரியங்கா காந்தியின் 52-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை பொங்கல் விழாவாக கொண்டாடினார்கள். முதலில் கேக் வெட்டினார்கள்.

    அதைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் மகளிர் காங்கிரஸ் தலைவி வக்கீல் சுதா தலைமையில் 52 பானைகளில் பொங்கல் வைத்தனர்.

    பொங்கல் பொங்கியதும் பொங்கலோ பொங்கல்... ராகுல், பிரியங்கா வாழ்க என்று கோஷம் எழுப்பினார்கள். பொங்கல் விழாவையொட்டி பவன் வளாகத்தில் கரும்பு, வாழை, மஞ்சள் குலைகளால் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது. பின்னர் அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

    அதை தொடர்ந்து பிரியங்கா பிறந்தநாள் விழா அரங்கத்தில் நடந்தது. விழாவில் சுமார் 500 பெண்களுக்கு புடவை, பாத்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வழங்கினார். நிகழ்ச்சியில் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, சுமதி, அன்பரசு, எஸ்.ஏ.வாசு, அகரம் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மோடியை தீவிரமாக எதிர்க்கும் நிலையில் காங்கிரஸ் தலைமை வேகமாக செயல்படவில்லை.
    • 5 ஆண்டுகள் தலைவராக இருந்துவிட்டால் சோர்வும், சுணக்கமும் இருக்கிறது. வேகமாக செயல்படுவதில்லை.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கே.எஸ். அழகிரியை மாற்ற வேண்டும் என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இது தொடர்பாக பலமுறை டெல்லி சென்றும் முறையிட்டுள்ளார்கள். ஆனால் இதுவரை டெல்லி மேலிடம் அந்த கோரிக்கையை கண்டு கொள்ளவில்லை.

    இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் திசையன் விளையில் நேற்று நடைபெற்ற பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்துக்கு கே.எஸ்.அழகிரி சென்றார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலக வாயிலில் மகளிர் அணியினர் கருப்பு உடை அணிந்து அமர்ந்து இருந்தனர்.

    இதற்கிடையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எம்.எல்.ஏ. கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். இதுதொடர்பாக அவர் கூறும்போது:-

    பாராளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் கட்சியின் மூத்த தலைவர்களை அழகிரி புறக்கணிக்கிறார். கூட்டங்களுக்கு எல்லோரையும் அழைப்பதில்லை. அவர் 5 ஆண்டுகள் தலைவராக இருந்துவிட்டால் சோர்வும், சுணக்கமும் இருக்கிறது. வேகமாக செயல்படுவதில்லை. வேலை போன போலீஸ் அதிகாரி ஒருவரை பா.ஜனதாவுக்கு தலைவராக நியமித்துள்ளார்கள்.

    அவர் தினம் ஒரு பொய்யை சொல்லி வருகிறார். அதற்கு பதிலடி கொடுக்கவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மோடியை தீவிரமாக எதிர்க்கும் நிலையில் காங்கிரஸ் தலைமை வேகமாக செயல்படவில்லை.

    எனவே புதிய தலைமை வேண்டும் என்று இரண்டு, மூன்று முறை டெல்லி மேலிடத்தில் கூறியிருக்கிறோம். கண்டிப்பாக மாற்றுவோம் என்றார்கள். கடந்த மாதமும் டெல்லியில் புகார் செய்தோம். அப்போதும் மாற்றுவதாக கூறினார்கள். ஆனால் இதுவரை மாற்றவில்லை.

    புதிய தலைமை தேவை என்பதை பலமுறை மேலிடத்தில் தெரிவித்தாகிவிட்டது. ப.சிதம்பரம், நான், முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, சட்டமன்றக் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை எல்லோருமே சொல்லி வந்துள்ளோம்.

    இவரை வைத்துதான் தேர்தலை சந்திக்க வேண்டும் என்றால் பாரத்தை வேறு யார் மீதாவது வைத்துவிட்டு வேலை செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவின் தனிநபர் வருமான வளர்ச்சி 5 டிரில்லியன் டாலரை நோக்கியதாக இருக்கிறதா?
    • வளர்ச்சியின் கதாநாயகனாக மோடி தன்னை முன்னிலைப்படுத்துவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவின் தனிநபர் வருமான வளர்ச்சி 5 டிரில்லியன் டாலரை நோக்கியதாக இருக்கிறதா? இதுவரை இது குறித்த அரசின் அதிகாரப்பூர்வ மதிப்பீடு ஏதும் வெளியாகவில்லை. இந்நிலையில் மோடியின் கனவு கேள்விக்குறியாகவே இருக்க முடியும். ஆனால், அதற்குள்ளாக சமூக ஊடகத்தில் தவறான புள்ளி விவரத்தின் அடிப்படையில் 4 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி அடைந்துவிட்டதாக செய்திகள் பரப்பப்பட்டது. இதன்மூலம் ஐந்து மாநில தேர்தல்களில் வாக்காளர்களை ஏமாற்றி விடலாம் என்று பா.ஜ.க. பகல் கனவு காண்கிறது.

    விநியோகம் அல்லது சமத்துவமற்ற குறியீட்டின் அடிப்படையில் மட்டுமே 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய முடியும். இந்த குறியீடு 0-100 என உலகப் பொருளாதாரத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி சீனா மற்றும் ஜப்பானின் மதிப்பு 50 க்கும் மேல் உள்ளது. ஆனால், 21.9 மதிப்பு உள்ள இந்தியாவை விடப் பல மடங்கு அதிகமாக இந்த நாடுகளின் பொருளாதார பங்களிப்பு உள்ளது.

    5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தால் ஏழைகள், பணக்காரர்கள் என்று இந்தியா இரண்டாகப் பிளவுபடுமா? பெரும்பாலான மக்கள் இன்னும் வளர்ச்சிப் பாதையில் இணைக்கப்படாமலேயே மோடி ஆட்சி நடைபெற்று வருகிறது. வளர்ச்சியில் சமநிலைத்தன்மை இல்லை. மோடி ஆட்சி என்பது யாருக்காக நடைபெறுகிறது என்பதை மேற்கண்ட புள்ளி விவரங்கள் தெளிவுபடுத்துகின்றன. அதேநேரத்தில் வளர்ச்சியின் கதாநாயகனாக மோடி தன்னை முன்னிலைப்படுத்துவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×