search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமிரா"

    • கைதிகள் தகராறு செய்வதை தடுக்க புதிய நடவடிக்கை
    • கோவை மாநகர போலீசாருக்கு முதற்கட்டமாக, 24 காமிராக்கள் வழங்கப்பட்டு உள்ளன

    கோவை,

    நீதிமன்றங்களுக்கு அழைத்து செல்லும் போது, கைதிகளின் நடவடிக்கை கண்காணிக்க, போலீசாருக்கு பாடி-ஓன் காமி ராக்கள் வழங்கப்பட்டன.

    குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின் சிறையில் அடைக்கப்படுவர். தொடர்ந்து, இவர்கள் விசாரணைக்காக கஸ்டடியில் எடுக்கப்படுவர். இதன் பின் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர்.

    இவ்வாறு கைதிகளை நீதிமன்றங்களுக்கும், சிறைக்கும் அழைத்து செல்லும் போது அவர்கள் போலீசாருடன் தகராறில் ஈடுபடுவதாக புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன. அதேபோல், கைதிகளை துன்புறுத்துவதாக போலீசார் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டது.

    இதை தடுக்க, கைதிகளை அழைத்து செல்லும் போலீசாருக்கு, பாடி-ஓன் காமிரா என்னும் சீருடையில் பொருத்தக்கூடிய காமிரா வழங்கப்பட்டுள்ளது. கோவை மாநகர போலீசாருக்கு முதற்கட்டமாக, 24 காமிராக்கள் வழங்கப்பட்டு ள்ளன. இதுதவிர, கைதிகளை அழைத்து செல்லும் வாகனங்களிலும் இரு காமிரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், கைதிகளை அழைத்து செல்லும் ேபாது ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது. காமிராவில் பதிவாகும் காட்சிகளை சேமிக்கவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

    • பாவாணர் மணிமண்டபத்தில் கண்காணிப்பு கேமராக்கள் உடனடியாக பொருத்த வேண்டும்.
    • தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    தமிழ் மொழிக்காகவே வாழ்ந்து மறைந்து இன்றும் சரித்திரத்தில் நீங்கா இடம் பிடித்தவர் சொல் ஆராய்ச்சி வல்லுநர், பன்மொழிவித் தகர் போன்று போன்ற பல்வேறு பெருமைகளுக்கு உரியவர் தமிழ்தேசியத்தந்தை "மொழி ஞாயிறு" தேவநயப் பாவாணர்.

    அவரை பெருமைப்ப டுத்தும் விதமாக திருவுரு வச்சிலையுடன் கூடிய மணி மண்டபம் மதுரை சாத்த மங்கலத்தில் கடந்த 2007-ம் ஆண்டு கட்டப்பட்டது. அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி மணிமண்ட பத்தை திறந்து வைத்து, பாவாணரின் பேத்தி ஏ.எம்.டி.பரிபூரணம் என்பவருக்கு மணிமண்டப பொருப்பாளராக அரசு பணி நியமன ஆணை வழங்கினார். பரிபூரணம் உயிருடன் இருக்கும் வரை மணிமண்டபத்தை சிறப்பாக பராமரித்து அங்கு வரும் தமிழ் ஆர்வ லர்களுக்கு தனது தாத்தா தேவநேயப்பாவாணரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறி வந்தார்.இந்த நிலையில் கடந்த வருடம் உடல்நலக்குறைவால் பணிக்காலம் முடிவடையும் முன்னரே பரிபூரணம் உயிரி ழந்தார். இந்த நிலையில் மணிமண் டபத்திற்கு வரும் தமிழ் ஆர்வலர்கள் பாவாணரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்க நிலையான பொறுப்பாளர் நியமிக் கப்படாமல் உள்ளதால் தமிழ் ஆர்வலர்கள் பாவா ணரின் வரலாற்றை தெரிந்து கொள்ளமுடியால் சென்று விடுகின்றனர். மேலும் மணிமண்டபத்தை பார்வையிட வரும் ஆண்-பெண்களுக்கு தனித்தனியே கழிவறை வசதி இல்லை. இருபாலரும் ஒரே கழி வறையை பயன்படுத்தும் நிலையும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    மணிமண்டப வளாகத் திற்குள் இரவு நேரங்களில் மின் விளக்குகள் இயங்கா மல் இருப்பதால் சமூக விரோத செயல்கள் நடை பெற வாய்ப்பு உள்ளது. இத னால் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும், காவ லாளியை நியமிக்க வேண் டும், திறந்த வெளியில் உள்ள மின்சார பெட்டி உள்ளது.

    அதற்கு பாதுகாப்பு பெட்டக வசதி செய்து தர வேண்டும், வர்ணம் பூசி மணிமண்டபத்தை புதுப்பொலிவாக்கிட வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர் களின் கோரிக்கையாக உள்ளது. தமிழக அரசு இனிமேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து பாவாணரின் புகழை போற்றி பாதுகாக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

    • சிற்றாறு பகுதியில் புலி வந்த தடங்கள் குறித்து ஆய்வு செய்ய சென்றனர்.
    • ஒரு மிளாவையும் புலி அடித்துள்ளதாகவும் பழங்குடி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அருகே சிற்றாறு குடியிருப்பை சேர்ந்த மோகன்தாஸ், தொழிலாளி. இவரது தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு ஒன்றை புலி அடித்து கொன்றது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் ஒருவித அச்சத்துடன் உள்ளனர்.

    இதையடுத்து மாவட்ட வனத்துறை அலுவலர் இளையராஜா உத்தரவின் பேரில் களியல் வனச்சரக அலுவலர் சேக் முகைதீன் அப்துல் காதர் தலைமையில் வன அலுவலர்கள் சிற்றாறு பகுதியில் புலி வந்த தடங்கள் குறித்து ஆய்வு செய்ய சென்றனர். அப்போது மல்லமுத்தன்கரை என்ற இடத்தில் ஒரு புதர் பகுதியில் ஆட்டின் குடல் மற்றும் தோல் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் புலியின் காலடி தடங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

    இந்நிலையில் அப்பகுதியில் புலியின் நடமாட்டத்தை கண்டறியும் வகையில் விஷேச காமிரா பொருத்தும் பணிகள் வனத்துறை சார்பில் நேற்று மாலையில் தொடங்கப்பட்டது. இதுகுறித்து களியல் வனச்சரக அலுவலர் சேக் முகைதீன் அப்துல் காதர் கூறியதாவது:-

    சிற்றாறு ரப்பர் கழக குடியிருப்பு பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக குடியிருப்பு மக்கள் கூறியதையடுத்து மாவட்ட வன அலுவலரின் உத்தரவின் பேரில் அப்பகுதிகளில் வனத்துறை சார்பில் ஆய்வுகள் செய்தோம். தொடர் மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் தடயங்களை முழுமையான அளவில் சேகரிப்பதில் சிக்கல் உள்ளது. எனினும் விலங்கின் கால்தடத்தை கண்டுபிடித்துள்ளோம்.

    இது புலியா அல்லது சிறுத்தையா என்பதை உறுதியாக சொல்லமுடியாது. மேலும் காணமல்போன ஆட்டின் தோல் மற்றும் குடல் பகுதிகளையும் கைபற்றியுள்ளோம். தற்போது இங்கு 4 இடங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்படும் பணிகள் நடந்து வருகின்றன. விஷேச தன்மை கொண்ட இந்த கேமராவில் புலி அல்லது சிறுத்தை என எதுவாக இருந்தாலும் சரிவர பதிவாகும். மேலும் எந்த விலங்காக இருந்தாலும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியிலிருந்து காட்டுகள் துரத்தும் பணிகளை வனத்துறை செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து சிற்றாறு குடியிருப்பை சேர்ந்த ஞானசுந்தரம் கூறியதாவது:-

    சிற்றாறு பகுதியில் நடமாடுவது புலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சிறுத்தை மற்றும் புலிக்கான வித்தியாசங்கள் மக்களுக்கு நன்றாக தெரியும். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கால் தடம் புலியின் கால்தடமாக தான் உள்ளது. மேலும் புலியானது மல்லன்முத்தன் கரை காணிகுடியிருப்பை ஒட்டிய ரப்பர் கழக கூப்பு எண் 49 பகுதியில் உள்ளது. ஒரு மிளாவையும் புலி அடித்துள்ளதாகவும் பழங்குடி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    புலி நடமாட்டம் காரணமாக தொழிலாளர்கள் பால்வடிப்புக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மாலையில், வழுக்கம் பாறை சந்திப்பிலிருந்து நடந்து குடியிருப்பு பகுதிக்கு வருவதற்கும் அச்சப்படுகின்றனர்.

    எனவே வனத்துறையினர் புலியை கண்காணித்து அதனை காட்டுப்பகுதிக்குள் துரத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆட்டை கொன்ற புலியை பிடிக்க கண்காணிப்பு காமிரா மரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. அதன்மூலம் இரவு பகலாக வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். விரைவில் புலியை பிடித்து அதை காட்டு பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • கண்காணிப்பு காமிரா சரியாக இருந்திருந்தால் குற்றவாளிகளை நிச்சயமாக கைது செய்திருக்க முடியும்

    நாகர்கோவில், மே.10-

    எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மாலை நேரங்களில் பஸ் நிலையங்களிலும், பொதுமக்கள் அதிகம் நடமாடும் சாலைகளிலும், திருவிழாக்களிலும் பெண்களின் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகள் பறித்து செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. பஸ் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு காமிராக்கள் செயலிழந்து இருக்கின்றன. பல மாதங்களாக அண்ணா பஸ் நிலையத்தில் ஒரே இடத்தில் கடந்த மாதமும், இந்த மாதமும் நகை பறிப்பு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. யார் குற்றவாளி என்பதை கண்டுபிடிக்க போலீசார் திணறுகிறார்கள். கண்காணிப்பு காமிரா சரியாக இருந்திருந்தால் குற்றவாளிகளை நிச்சயமாக கைது செய்திருக்க முடியும். அவை சரியாக செயல்படாததால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளார்கள். மக்கள் வெளியே நடமாடுவதற்கே பயப்படுகிறார்கள். குமரி மாவட்டத்தில் போலீசார் விழிப்புடன் செயல்பட்டு தனிப்படை அமைத்து பஸ் நிலையங்களிலும் பொது மக்கள் அதிகம் நடமாடுகின்ற சாலைகளிலும், திருவிழாக்கள் மற்றும் வியாபாரம் நடைபெறுகின்ற இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். நகை பறித்து செல்பவர்கள் அதிகமாக வெளி மாவட்டங்களை சார்ந்தவர்கள் என கருதபடுகின்றது. எனவே சந்தேகத்துக்கு இடமாக யாராவது வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சுற்றிதிரிந்தால் அவர்களை விசாரித்து அனுப்ப வேண்டும். ஆகவே அரசு உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்கவும், இதுவரையிலும் திருடப்பட்ட நகைகளை உடனடியாக கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு காமிராவை பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரை தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சொக்கிகுளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வல்லபாய் மெயின் ரோட்டில் 4 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வீலிங் சாகசம் செய்து அதனை வீடியோ வாக பதிவு செய்து கொண்டி ருந்தனர்.

    அவர்கள் பொது இடத்தில் சாகசம் செய்ததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இதனை கண்ட போலீசார் அவர்கள் 4 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    இதில் அவர்கள் செல்லூர் சுயராஜபுரம் பாலமுருகன், எஸ்.கொடிக்குளம் கதிரவன், செல்லூர் சிவராமன், மீனாம்பாள்புரம் சத்திய மூர்த்தி மெயின் ரோடு மகாபிரபு என்பது தெரியவந்தது.

    இவர்கள் மதுரையில் செயல்பட்டு வரம் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஆவார்கள். இவர்கள் சமூக வலை தளத்தில் தங்கள் சாகசத்தை பதிவிடுவதற்காக மோட்டார் சைக்கிள் வீலிங் செய்து அதனை வீடியோ எடுத்துள்ளனர் என்பது தெரிய வந்தது.

    அவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் 4 பேரையும் ேபாலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு காமிராவை பறிமுதல் செய்யப்பட்டது.

    • விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார்.
    • ஏ.டி.எம். மையங்களிலும் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் உள்ள அனைத்து வங்கி அதிகாரி களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மணிநகர் சந்திர மஹாலில் நடைபெற்றது, மாவட்ட காவல்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை தாங்கி போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பேசியதாவது:-

    கண்காணிப்பு காமிராக்கள்

    ஏ.டி.எம் மையங்களில் நடைபெறும் கொள்ளை சம்பவங்களை தடுக்கும் பொருட்டு வங்கி அதிகாரிகள் தங்களது வங்கி மற்றும் ஏ.டி.எம். எந்திரங்களில் வைக்கப்பட்டிருக்கும் பணத்தை கண் காணிப்பதற்காக மறைமுக கண்காணிப்பு காமிராக்கள் நிறுவப்பட வேண்டும்,முகத்தை அடையாளம் காண உதவும் மென்பொருள் அடங்கிய கேமராக்கள் அனைத்து ஏ.டி.எம் மையங்களிலும் நிறுவ வேண்டும்.

    மேலும் ஏ.டி.எம். எந்திரங்கள் உடைக்கப் படும் போது எச்சரிக்கை மணி அங்கே ஒலிக்கவும் மற்றும் அருகிலுள்ள காவல் நிலையங்களில் ஒலிக்கவும் வழிவகை செய்ய வேண்டும்.கொள்ளை யர்களின் முகம் தெளிவாக தெரியும் வகையில் ஏ.டி.எம் மையங்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களையும், ரகசிய கேமராக்களையும் பொருத்த வேண்டும். அனைத்து வங்கி ஏ.எடி.எம். மையங்களிலும் பாதுகா வலர்களை நியமித்து பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என்று கூறினார்.

    ஏற்பாடுகளை தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணி ப்பாளர் (பொறுப்பு)சம்பத் தலைமையிலான காவல் துறையினர் செய்திருந்தனர்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி தென்பாகம் இன்ஸ்ெபக்டர் ராஜாராம், தாளமுத்துநகர் சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி, மத்தியபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் வங்கி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

    • நான் வீட்டிற்குள் சென்று தண்ணீர் தெளித்து வந்த போது சாமியார் மாயமாகி விட்டார்
    • சி.சி.டி.வி. காமிரா காட்சிகளின் பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் குமரி நெசவாளர் காலனி பகுதி யில் காவி உடை அணிந்து சாமியார் போல் வந்த ஒருவர், தோஷம் கழிப்பதாக கூறி முதியவர் ஒருவரை ஏமாற்றி ரூ.14 ஆயிரம் அபேஸ் செய்த சம்பவம் மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்தது எப்படி? என்பது குறித்து பணத்தை இழந்த கிருஷ்ணன் (வயது 72) போலீசில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

    எனது மனைவி லெட்சுமி நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு உள்ளார்.இந்த நிலையில் தான் சம்பவத்தன்று காவி உடை சாமியார் வந்தார். அவர் உங்கள் வீட்டில் தோஷம் உள்ளது. அதை கழித்தால் எல்லாம் சரியாகி விடும் என்று கூறினார்.

    இதனை நம்பி அவர் கேட்டபடி ரூ. 14 ஆயிரம் மற்றும் செம்பு தண்ணீர் கொடுத்தேன். பின்னர் தான் மந்திரித்து விட்டதாகவும், செம்பு தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து வாருங்கள் என்றும் கூறினார். அதன்படி நான் வீட்டிற்குள் சென்று தண்ணீர் தெளித்து வந்த போது சாமியார் மாயமாகி விட்டார். அப்போது தான் ஏமாற்றப்பட்ட விவரம் தெரிய வந்தது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மோசடி செய்த சாமியாரை தேடி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளின் பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர். அதில் காவி சாமியார், இரு சக்கர வாகனத்தில் செல்வது தெரிந்தது. அதை வைத்து அவரை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 2 காமிரா க்களை அமைத்தனர்.
    • பகல் நேரத்தில் 15 ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது இரவி லும் கண்காணிப்பு

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள சரல் விளை, நரிச்சிக்கல், குழிவிளை, கொரங்கேற்றி பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக, ரப்பர் பால் வெட்டச் சென்ற தொழி லாளர்கள் தெரிவித்தனர்.

    இதனால் அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள், சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 2 காமிரா க்களை அமைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று கல்லாம்பொற்றை கிராமத்தில் ஜோசப் சிங் என்ற விவசாயி வீட்டின் பின்புறம் கட்டப்பட்டு இருந்த 2 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. அந்த ஆடுகளை மர்ம விலங்கு கடித்துக் கொன்றது தெரிய வந்தது.

    எனவே ஆடுகளை கடித்துக் கொன்றது, சிறுத்தையாக இருக்கலாம் என்ற அச்சம் மக்களிடையே மீண்டும் பரவியது.

    இது குறித்த தகவல் கிடைத்ததும் மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமையில் வன ஊழி யர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வை யிட்டனர். அந்தப் பகுதியை ஆய்வு செய்த போது, விலங்குகளின் கால் தடம் உள்ளிட்ட எந்த தடயங்களும் கிடைக்கவில்லை.

    இதனால் ஆடுகளை கடித்துக் கொன்ற மர்ம விலங்கு பற்றிய அச்சம் நீடித்தே வரு கிறது. இதற்கிடையில் சிறுத்ைத நடமாட்டத்தை கண்காணிக்க கூடுதல் காமிராக்கள் பொருத்த வனத்துறை முடிவு செய்தது. அதன்படி 10 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    மேலும் கல்லாம் பொற்றை கிராமத்தில் கூண்டும் வைக்கப்பட்டு உள்ளது. பகல் நேரத்தில் 15 ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் தற்போது இரவி லும் கண்காணிப்பு பணிக்கு ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக வன அலுவலர் இளையராஜா தெரிவித்தார்.

    • தொண்டியில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த ஆலோசனை செய்யப்பட்டது.
    • தொண்டியில் குற்றச்சம்பவங்கள் மற்றும் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி முதல் நிலைப் பேரூராட்சி பகுதியானது கடலோரப் பகுதியாகவும், பட்டுக்கோட்டை, வேளாங்கண்ணி பகுதிகளில் இருந்து ராமேசுவரம், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் கிழக்கு கடற்கரை சாலையின் மையப்பகுதியாகவும் உள்ளது.

    இதனால் தொண்டியில் குற்றச்சம்பவங்கள் மற்றும் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குற்றங்களை தடுக்கவும், விபத்துகளை கண்காணிக்கவும், தொண்டியில் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களை ஆய்வு செய்து கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த ரோட்டரி சங்கமும், ராமநாதபுரம் தனியார் நிறுவனமும் மற்ற தன்னார்வ நிறுவனங்களும் முன்வந்தது.

    அதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. ரோட்டரி கிளப் தலைவர் திருநாவுக்கரசு, செயலாளர் முருகேசன், பட்டயத் தலைவர் ஷேக் மஸ்தான் ராஜா, முன்னாள் தலைவர்கள் மரிய அருள், சிவராமகிருஷ்ணன் ரஜினி, வீரகுமார் முன்னிலை வகித்தனர். தொண்டி நகர் பகுதியில் 16 இடங்களில் 60 காமிராக்கள் பேரூராட்சி செயல் அலுவலர் அனுமதியுடன் பொருத்த முடிவு செய்யப்பட்டது.

    அனைத்து காமிராக்களையும் தொண்டி போலீஸ் நிலையத்தில் இருந்து 24 மணிநேரமும் கண்காணிக்கவும் ஆலோசனை செய்யப்பட்டது.

    • கோவிலில் பணம் திருடிய வாலிபர் நடந்து செல்வது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர்.
    • இரவு நேரங்களில் போலீசார் ரோந்து வரவேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே காங்கரை சந்திப்பில் மணத்திட்டை இசக்கி அம்மன் கோவில் உள்ளது.

    இங்கு தினமும் மாலையில் 5 மணி அளவில் நடை திறந்து பூஜை செய்வது வழக்கம். ஆடிச் செவ்வாய் நாளிலும் பூஜை செய்ய கோவிலுக்கு பூசாரி வந்தார்.

    அப்போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து கோவில் தர்மகர்த்தா கோபால கிருஷ்ணன் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது கோவிலில் பணம் திருடிய வாலிபர் நடந்து செல்வது பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் கொள்ளையனை தேடி வருகின்றனர்.

    இந்த கோவிலின் அருகில் தான் திருவட்டார் போலீஸ் நிலையம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோல் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை திருட்டு போனது. அந்த சம்பவத்திலும் இது வரை திருடனை கண்டு பிடிக்கவில்லை. எனவே இரவு நேரங்களில் போலீசார் ரோந்து வரவேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போக்குவரத்து நெருக்கடியை சீர் செய்யும் வகையில் பார்வதிபுரத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது
    • நாகர்கோவில் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி. காமிரா

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் கோட்டார் பஜாருக்கு அடுத்த படியாக பார்வதிபுரம் பஜார் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது.

    இதனால் அந்த பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போக்குவரத்து நெருக்கடியை சீர் செய்யும் வகையில் பார்வதிபுரத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக போக்குவரத்து நெருக்கடி குறைந்துள்ளது .

    தற்பொழுது அந்த பகுதி யில் கடை வீதிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு வரும் பொதுமக்கள் பார் வதிபுரம் பாலத்தின் கீழ் இருசக்கர வாகனங்கள் நிறுத்த ஒதுக்கப்பட்ட இடங் களில் வாகனங்களை நிறுத்தி விட்டு கடைவீதிகளுக்கு சென்று பொருட்களை வாங்கி விட்டு வருகிறார்கள்.

    சமீபகாலமாக அந்த பகுதியில் இருசக்கர மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் நடந்தது வியாபாரிகள் மத்தியில் மட்டும் இன்றி பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் அந்த பகுதியில் இருந்து திருடப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை குற்றவாளிகள் யாரும் சிக்கவில்லை. மோட்டார் சைக்கிள் திருட்டு சம்ப வத்தை தடுக்கும் வகை யில் போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    நாகர்கோவில் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

    அதே போல் பார்வதிபுரம் மேம்பாலம் பகுதியிலும் சி.சி.டி.வி. காமிரா அமைத்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    ×