மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 4 வாலிபர்கள் கைது

மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு காமிராவை பறிமுதல் செய்யப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 4 வாலிபர்கள் கைது
Published on

மதுரை

மதுரை தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சொக்கிகுளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வல்லபாய் மெயின் ரோட்டில் 4 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வீலிங் சாகசம் செய்து அதனை வீடியோ வாக பதிவு செய்து கொண்டி ருந்தனர்.

அவர்கள் பொது இடத்தில் சாகசம் செய்ததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இதனை கண்ட போலீசார் அவர்கள் 4 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இதில் அவர்கள் செல்லூர் சுயராஜபுரம் பாலமுருகன், எஸ்.கொடிக்குளம் கதிரவன், செல்லூர் சிவராமன், மீனாம்பாள்புரம் சத்திய மூர்த்தி மெயின் ரோடு மகாபிரபு என்பது தெரியவந்தது.

இவர்கள் மதுரையில் செயல்பட்டு வரம் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஆவார்கள். இவர்கள் சமூக வலை தளத்தில் தங்கள் சாகசத்தை பதிவிடுவதற்காக மோட்டார் சைக்கிள் வீலிங் செய்து அதனை வீடியோ எடுத்துள்ளனர் என்பது தெரிய வந்தது.

அவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் 4 பேரையும் ேபாலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு காமிராவை பறிமுதல் செய்யப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com