search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளநோட்டுகள்"

    • கார் ஒன்றில் அதிக அளவில் கள்ள நோட்டு கொண்டு செல்வதாக வையம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • பிடிபட்ட கள்ளநோட்டுகள் அனைத்தும் 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறைய அடுத்த வையம்பட்டியில் கார் ஒன்றில் அதிக அளவில் கள்ள நோட்டு கொண்டு செல்வதாக வையம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கசாமி தலைமையில் போலீசார் சம்மந்தப்பட்ட சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் பணத்துடன் அந்த காரை பறிமுதல் செய்தனர். பின்னர் காரில் வந்த 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் காரில் பணம் கொண்டு வந்தது கோவை கே.கே.புதூரை சேர்ந்த பார்த்தசாரதி (வயது 52), கணபதி பகுதியை சேர்ந்த டிரைவர் சதீஷ் ஆகியோர் என்பது தெரியவந்தது.

    வையம்பட்டியில் செல்போன் கடை நடத்தி வரும் தங்கவேல் என்பவருக்கு அந்த பணத்தை கொண்டு வந்ததும், அவர் கடை முன்பு தான் போலீசார் பிடித்ததும் விசாரணை வெளிவந்துள்ளது. பிடிபட்ட பணம் அனைத்தும் கள்ள நோட்டு என்பதும் கேரளாவை சேர்ந்த ஒரு பட தயாரிபாளர் கொடுத்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. பிடிபட்ட கள்ளநோட்டுகள் அனைத்தும் 2 ஆயிரம் ரூபாய் தாள்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • களப்பாகுளம் பகுதியில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • விசாரணையில் கைதான கிருஷ்ணவேணியின் கணவரான சிவக்குமார் உள்பட மேலும் 6 பேருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள களப்பாகுளம் பகுதியில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதவன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் கத்தை கத்தையாக ரூ.2 ஆயிரம் நோட்டுகள் இருந்தது. விசாரணையில் அவை கள்ளநோட்டுகள் என்பதும், ஈரோட்டில் இருந்து கோவில்பட்டி வழியாக சங்கரன்கோவிலுக்கு கடத்தி வரப்பட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து அந்த காரில் வந்த வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(வயது 49), சந்தோஷ்(32), சிராஜ்கரிம்(44), வீரபத்ரன்(34), ஜெகதீஸ்(38), ஈரோட்டை சேர்ந்த கிருஷ்ணவேணி(23), வளர்மதி(42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், கைதான கிருஷ்ணவேணியின் கணவரான சிவக்குமார்(34) உள்பட மேலும் 6 பேருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் 6 பேரும் பதுங்கியிருந்த இடத்தை போலீசார் கண்டுபிடித்து அங்கு விரைந்து சென்று அவர்களை பிடித்தனர்.

    சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த யாரிடம் கொடுப்பதற்காக கள்ளநோட்டுகளை காரில் எடுத்து வந்தனர்? எங்கு வைத்து பணத்தை மாற்ற திட்டமிட்டனர்? இவ்வளவு நோட்டுகள் எங்கிருந்து கிடைத்தது? இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரண்டு 100 ரூபாய், ஒரு 200 ரூபாய் என 400 ரூபாய்க்கு கள்ள நோட்டு இருப்பது தெரியவர அதிர்ச்சியடைந்தார்.
    • சந்தையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பல் ஊடுருவி உள்ளனரா? என்ற சந்தேகம் வியாபாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    அவிநாசி : 

    அவிநாசி கைக்காட்டிபுதூர் ராஜன்நகரில் உள்ள வாரச் சந்தை புதன்கிழமை தோறும் கூடுகிறது. 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சந்தையில் கூடி காய்கறி, மளிகைப் பொருட்கள், பழங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களை விற்கின்றனர்.

    அவ்வகையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில், அவிநாசி காந்திபுரம் பகுதியை சேர்ந்த ஒரு பெண் காய்கறி வியாபாரம் செய்தார். இரவில் தான் வியாபாரம் களைகட்டும் என்ற நிலையில் வியாபாரம் முடித்து இரவு 11 மணிக்கு வீடு திரும்பியுள்ளார்.

    அங்கு வியாபாரம் மூலம் கிடைத்த பணத்தை கணக்கிடும் போது அதில் இரண்டு 100 ரூபாய், ஒரு 200 ரூபாய் என 400 ரூபாய்க்கு கள்ள நோட்டு இருப்பது தெரியவர அதிர்ச்சியடைந்தார்.

    இத்தகவல் வியாபாரிகள் மத்தியில் பரவவே இதுபோன்று பல்வேறு இடங்களில் உள்ள சந்தையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பல் ஊடுருவி உள்ளனரா? என்ற சந்தேகம் வியாபாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    எனவே இதுபோன்ற செயலில் ஈடுபடும் கும்பல் யாரென்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×