search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளநோட்டுகள் புழக்கம் - திருப்பூர் வியாபாரிகள் அதிர்ச்சி
    X

    கள்ளநோட்டுகள் புழக்கம் - திருப்பூர் வியாபாரிகள் அதிர்ச்சி

    • இரண்டு 100 ரூபாய், ஒரு 200 ரூபாய் என 400 ரூபாய்க்கு கள்ள நோட்டு இருப்பது தெரியவர அதிர்ச்சியடைந்தார்.
    • சந்தையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பல் ஊடுருவி உள்ளனரா? என்ற சந்தேகம் வியாபாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    அவிநாசி :

    அவிநாசி கைக்காட்டிபுதூர் ராஜன்நகரில் உள்ள வாரச் சந்தை புதன்கிழமை தோறும் கூடுகிறது. 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சந்தையில் கூடி காய்கறி, மளிகைப் பொருட்கள், பழங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களை விற்கின்றனர்.

    அவ்வகையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில், அவிநாசி காந்திபுரம் பகுதியை சேர்ந்த ஒரு பெண் காய்கறி வியாபாரம் செய்தார். இரவில் தான் வியாபாரம் களைகட்டும் என்ற நிலையில் வியாபாரம் முடித்து இரவு 11 மணிக்கு வீடு திரும்பியுள்ளார்.

    அங்கு வியாபாரம் மூலம் கிடைத்த பணத்தை கணக்கிடும் போது அதில் இரண்டு 100 ரூபாய், ஒரு 200 ரூபாய் என 400 ரூபாய்க்கு கள்ள நோட்டு இருப்பது தெரியவர அதிர்ச்சியடைந்தார்.

    இத்தகவல் வியாபாரிகள் மத்தியில் பரவவே இதுபோன்று பல்வேறு இடங்களில் உள்ள சந்தையில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பல் ஊடுருவி உள்ளனரா? என்ற சந்தேகம் வியாபாரிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    எனவே இதுபோன்ற செயலில் ஈடுபடும் கும்பல் யாரென்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×