search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டுமான தொழிலாளர்கள்"

    • 158 கல்குவாரிகள் வேலை நிறுத்தம்; 50 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • கட்டுமான தொழிலாளர்கள் ஆகியோரை திரட்டி சாலை மறி யலில் ஈடுபடுவோம் என்றார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 158 கல், கிராவல் மண் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் பெண்கள் உள்பட 50 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்ற னர். இந்த நிலையில் குவாரிகளுக்கு அனுமதி சீட்டு வழங்குவதில் மாவட்ட கனிம வளத்துறை இயக்குநர் தங்கமுனியசாமி தாமதம் செய்வதாக கூறி கடந்த 4-ந் தேதி முதல் 158 கல்குவாரி கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. தொடர் வேலை நிறுத் தத்தால் தொழிலா ளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மண், கற்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள் ளதால் மாவட்டத்தில் கட்டுமான பணிகளும் பாதி யிலேயே நிறுத்தப் பட்டு உள்ளது. இதுகுறித்து குவாரி குத்தகைதாரர்கள் மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் நாராயண பெருமாள் கூறுகையில், குவாரிகளுக்கு அனுமதி சீட்டு வழங்குவது தொடர்பாக கடந்த 10 நாட்களாக பிரச்சினை உள்ளது. கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள் ளோம்.

    மாவட்ட நிர்வாகம் தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் லாரி உரிமை யாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் ஆகி யோரை திரட்டி சாலை மறி யலில் ஈடுபடுவோம் என்றார்.

    • உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்காக ஏற்படும் செலவை தொழிலாளர்கள் நல வாரியம் வழங்கும்.
    • நிதியுதவியும் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் வாயிலாக வழங்கப்படும்.

    தமிழ்நாட்டில் வாழும் கட்டுமானத் தொழிலாளர்கள், பணியிடத்தில் விபத்தினால் உயிரிழந்தால், அவர்களின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்காக ஏற்படும் செலவை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    உடல் கூராய்விற்கு பின், அரசு அமரர் ஊர்தி மூலம் எடுத்துச் செல்ல ஆகும் தொகையும், விமானம் மூலம் சொந்த ஊருக்கு எடுத்து செல்வதாக இருந்தால் அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவியும் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் வாயிலாக, வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    • மதுரை மாவட்டத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால இலவச திறன் பயிற்சி வழங்கப்படுகிறது.
    • இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) க.மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி–ருப்பதாவது:-

    மதுரை தமிழ்நாடு கட்டு–மான கழகமானது தொழிலா–ளர் உதவி ஆணையர் அலு–வலகத்தின் மூலம் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலா–ளர்களுக்கு மூன்று மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒருவார கால திறன் மேம் பாட்டு பயிற்சிகள் வழங்கப் பட உள்ளது.

    3 மாத கால திறன் பயிற் சிக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரி–யத்தில் உறுப்பினராக பதிவு செய்திருத்தல் வேண் டும். கல்வித்தகுதி 5-ம் வகுப்ப முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை இருத்தல் வேண்டும்.

    இந்த பயிற்சி 3 மாதம் நடைபெற உள்ளது. முதல் மாதம் தையூரில் அமைய–வுள்ள கட்டுமான கழக பயிற்சி நிறுவனத்திலும், 2 மாத காலம் நீவலூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள எல் அண்டு டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்திலும் நடைபெற உள்ளது. கொத்தனார், பற்ற வைப்பர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மர–வேலை, கம்பி வளைப்பவர், தச்சுவேலை ஆகிய தொழில் புரிபவர்களுக்கு கட்டணம் ஏதுமில்லை.

    பயிற்சி கட்டணம், உணவு மற்றும் தங்குமிடம் இலவச–மாக வழங்கப்படும். பயிற்சி பெறுபவர்கள் அனைவருக் கும் எல் அண்டு டி கட்டு–மான திறன் பயிற்சி நிலை–யம் தனியார் நிறுவனத்தால் 100 சதவீத வேலை–வாய்ப்பு வழங்கப்படும்.

    ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு தமிழ்நாடு கட்டுமான தொழி–லாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து மூன்று ஆண்டு உறுப்பி–னராக இருத்தல் வேண்டும். 18 வயதிற்கு மேல் இருப்ப–தோடு, தொழிலாளர்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந் திருக்க வேண்டும். இந்த பயிற்சி தையூரில் அமைய–வுள்ள கட்டுமான கழகத்தில் 7 நாட்கள் நடைபெறும்.

    கொத்தனார், பற்ற வைப் பர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மர வேலை, கம்பி வளைப்பவர், தச்சு–வேலை பயிற்சிகள் வழங்கப் படும். பயிற்சியாளர்களுக்கு தினந்தோறும் வேலையிழப்பு ஏற்படுவதை ஈடு செய்ய தினந்தோறும் ரூ.800 வழங் கப்படும். இந்த தொகையில் உணவிற்கு மட்டும் பிடித்தம் செய்யப்படும்.

    தமிழ்நாடு கட்டுமான கழகம் எல் அண்டு டி கட்டுமான திறன் பயிற்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு கட்டுமான திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு கழகத் தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இந்த 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் 15.8.2023 முதல் தொடங்கப்பட உள்ளது.

    இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்க மதுரை மாவட்டம் எல்லீஸ் நகர் வீட்டு வசதி வாரிய வளாகம், தொழிலாளர் உதவி ஆணை–யர் அலுவலகத்தை அணுகு–மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ரூ.1.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் அதற்கான நிபந்தனைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
    • ஆண்டொன்றுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கும் இந்த நலத்திட்டம் முதல்கட்டமாக 3 ஆண்டுகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை மேற் கொண்டு வரும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிக் தொகையாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் வீதம் அதிக பட்சம் 3 ஆண்டுகளுக்கு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுபெற்ற 60 வயதுக்குட்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில், இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று சிகிச்சை, டயாலிசிஸ், புற்று நோய், ஆஸ்துமா, சிலிக்கோசிஸ் மற்றும் பக்க வாதம் ஆகிய தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை மேற்கொண்டு வரும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, தீவிர நோய் பாதிப்பு நலத்திட்ட உதவித்தொகையாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கும் திட்டம் முதல்கட்டமாக 3 ஆண்டுகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் எனவும், இந்த நிதியுதவியானது 6 மாதங்களுக்கு ஒரு முறை விடுவிக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    அதனை செயல்படுத்தும் வகையில், ரூ.1.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் அதற்கான நிபந்தனைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    அதன் படி, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுசெய்த கட்டுமானத் தொழிலாளர்கள் தங்களது பதிவு அட்டையினை இணைத்து சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆணையர்களிடம் இது தொடர்பாக விண்ணப்பிக்க வேண்டும்.

    பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் தீவிர நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது குறித்து சிவில் சர்ஜன் தரத்திற்கு மேற்பட்ட அரசு மருத்துவரிடம் இருந்து மருத்துவ சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும், தீவிர நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை (அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்) மேற் கொள்ளப்பட்டு வருவது தொடர்பான மருத்துவ ஆவணங்களை மனுவுடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

    தீவிர நோய் பாதிப்பு குணமடையாமல் நீடிக்கும் நிலையினை அறிந்து கொள்ளும் பொருட்டு 2 மற்றும் 3 ஆண்டிற்கு சிகிச்சைக்கான மருத்துவ ஆவணங்களை கேட்பு மனுவுடன் இணைத்து அளிக்க வேண்டும் என்றும், ஆண்டொன்றுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கும் இந்த நலத்திட்டம் முதல்கட்டமாக 3 ஆண்டுகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    தீவிர நோய் பாதிப்பு உதவித்தொகையானது மாதம் ஒன்றுக்கு ரூ.1,000 வீதம் 6 மாதங்களுக்கு ஒரு முறை என ஆண்டுக்கு இரு முறை தொழிலாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வழங்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • 100 சதவீத வேலை வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கோட்டீசுவரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 3 மாதம் மற்றும் ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் கட்டுமானத் தொழிலாளர்கள் நலவா ரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து 3 ஆண்டு பதிவு மூப்பு பெற்ற தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம்.

    தொழிலாளர்களுக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்கள் 18 வயது மேற்பட்டவர்களாகவும், 40 வயது உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

    பயிற்சிக்கான கட்டணம், உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும் பயிற்சி பெறும் அனை வருக்கும் எல் அண்டு டி கட்டுமான திறன் பயிற்சி நிறுவனம் 100 சதவீத வேலை வாய்ப்பை உறுதி செய்துள்ளது. கொத்தனார், பற்றவைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துநர், மரவேலை, கம்பி வளைப்பவர், கார்பெண்டர், சாரம் கட்டுபவர் ஆகிய தொழிலா ளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

    3 மாத பயிற்சியானது முதல் ஒரு மாதம் தையூரில் உள்ள கட்டுமான கழக பயிற்சி நிறுவனத்திலும் அடுத்த 2 மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் நீவளுரில் அமைந்துள்ள எல் அண்டு டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்திலும் நடைபெறும். மேலும் ஒருவார கால திறன் மேம்பாட்டு பயிற்சி தையூரில் உள்ள தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் நடைபெறும்.

    பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.800 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இந்த தொகையில் இருந்து உணவுக்கு மட்டும் பிடித்தம் செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் நலவாரிய அட்டை, கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்ட நகல்களுடன் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து மைதானம் செல்லும் வழி, தோட்டக்கலை துறை அலுவலகம் அருகில், காஞ்சிரங்காலில் அமைந்துள்ள சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலக முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×