என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பணியிடத்தில் உயிரிழக்கும் கட்டுமான தொழிலாளர்கள்- தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு
- உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்காக ஏற்படும் செலவை தொழிலாளர்கள் நல வாரியம் வழங்கும்.
- நிதியுதவியும் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் வாயிலாக வழங்கப்படும்.
தமிழ்நாட்டில் வாழும் கட்டுமானத் தொழிலாளர்கள், பணியிடத்தில் விபத்தினால் உயிரிழந்தால், அவர்களின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்காக ஏற்படும் செலவை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உடல் கூராய்விற்கு பின், அரசு அமரர் ஊர்தி மூலம் எடுத்துச் செல்ல ஆகும் தொகையும், விமானம் மூலம் சொந்த ஊருக்கு எடுத்து செல்வதாக இருந்தால் அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவியும் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் வாயிலாக, வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Next Story






