search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒத்திகை பயிற்சி"

    • கனமழையின்போது இடிபாடுகளில் சிக்கி தவிப்போரை எப்படி மீட்பது என்று செயல்விளக்கம்
    • மலைபாதையில் புதியதாக உருவாகும் நீர்வீழ்ச்சிகள் முன்பு புகைப்படம் எடுக்கவோ, குளிக்கவோ கூடாது என அறிவுறுத்தல்

    அருவங்காடு,

    நீலகிரியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக குன்னூர் தீயணைப்பு தீயணைப்புநிலையத்தில் செயல்முறை விளக்கம் மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அப்போது ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை கனமழையின்போது எப்படி மீட்பது, இடிபாடுகளில் சிக்கி தவிப்போரை பாதுகாப்பாக மீட்டு காப்பாற்றுவது ஆகியவை குறித்து தீயணைப்பு துறையினர் ஒத்திகை சோதனை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மேலும் குன்னூர் மலைப்பாதை மட்டுமின்றி நிலச்சரிவு, மண் சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வாகனங்களை நிறுத்தக்கூடாது, மலை பாதையில் புதியதாக உருவாகும் நீர்வீழ்ச்சிகள் முன்பு சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுக்க கூடாது, அருவிகளில் குளிக்கவும் செய்யக்கூடாது எனவும் போலீசார் அறிவுரை வழங்கினர்.

    • கீழ்பவானி வாய்க்காலில் பேரிடர் கால ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது.
    • தீயணைப்பு துறை வீரர்கள் பயிற்சியை நடத்தினர்.

    நம்பியூர்:

    நம்பியூர் வட்டம் குருமந்தூர் கிராமம் கோவை மெயின்ரோடு கீழ்பவானி வாய்க்காலில் பேரிடர் கால ஒத்திகை பயிற்சியானது நம்பியூர் தீயணைப்பு துறையினரால் நடத்தப்பட்டது.

    நம்பியூர் தாசில்தார் மாலதி முன்னிலையில், நம்பியூர் தீயணைப்புத் துறை ஆய்வாளர் முருகேசன் தலைமையில் தீயணைப்பு துறை வீரர்கள் பயிற்சியை நடத்தினர்.

    இதில் நம்பியூர் துணை தாசில்தார்கள் விஜயகுமார், பரமசிவம், நில வருவாய் ஆய்வாளர் கோகிலாம்பாள், கிராம நிர்வாக அலுவலர் பழனிச்சாமி, துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • காவிரி ஆற்றில், வடகி ழக்கு பருவ மழையை முன்னிட்டு வேலா யுதம்பாளையம் தீயணைப் புதுறை சார்பில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
    • ஆற்றில் சிக்கிக் கொண்ட வர்களை எப்படி காப்பாற்றுவது? பல்வேறு வகை யான நிகழ்வுகள் குறித்து ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றில், வடகி ழக்கு பருவ மழையை முன்னிட்டு வேலா யுதம்பாளையம் தீயணைப் புதுறை சார்பில் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

    இதில், தீயணைப்பு துறை நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு, காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது, ஆற்றில் சிக்கிக் கொண்ட வர்களை எப்படி காப்பாற்று வது? காவிரி ஆற்றின் நடுப்பகுதியில் பொதுமக்கள் சிக்கிக் கொண்டால் எப்படி மீட்பது? வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து கொண்டால், அவர்களை எப்படி காப்பாற் றுவது ? மரம் விழுந்தால் எப்படி தப்பிப்பது? உள்ளிட்ட பல்வேறு வகை யான நிகழ்வுகள் குறித்து ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது, பிளாஸ்டிக் போட்டை நடு காவிரி ஆற்றில் நங்கூரம் போட்டு நிறுத்தி பொதுமக்களை காப்பாற்றுவது போன்ற ஒத்திகைகளையும், வாழை மரங்கள், தென்னை மட்டைகள், வாட்டர் பாட்டில்கள், தண்ணீர் கேன்கள், ரப்பர் குடம், பிளாஸ்டிக் பேரல், லைப் ஜாக்கெட், கயிறு போன்ற வற்றின் மூலம் காவிரி ஆற்றில் ஒத்திகை பயிற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

    • பவானி தீயணைப்பு துறை சார்பில் முதல் உதவி சிகிச்சை ஒத்திகை பயிற்சி தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.

    பவானி:

    தென்மேற்கு பருவமழையின் காரணமாக காவேரி ஆற்றில் ஏற்படும் வெள்ள பெருக்கின் போது தண்ணீரால் ஏற்படும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாக ஒத்திகை பயிற்சி தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்தாண்டு பவானி சங்கமேஸ்வரர் கோவில் பின் பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி கூடுதுறையில் பவானி தீயணைப்பு துறை சார்பில் தண்ணீரில் அடித்து செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்து முதல் உதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வது வரை என ஒத்திகை பயிற்சி தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.

    இதில் பவானி தீயணை ப்பு நிலைய அலுவலர் மற்றும் வீரர்கள், பொது மக்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • மாநில அளவிலான வெள்ள பாதிப்பு மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை பயிற்சிகளை நடத்தி வருகின்றன.
    • மின்வாரிய ஊழியர்கள், வருவாய்த்துறையினர் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை பணிகள் போன்ற ஒத்திகை பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

     ஓசூர்,

    தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவை இணைந்து, மாநில அளவிலான வெள்ள பாதிப்பு மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை பயிற்சிகளை நடத்தி வருகின்றன.

    அதன் ஒருபகுதியாக கெலவர ப்பள்ளி அணையில் ஓசூர் சப்- கலெக்டர் தேன்மொழி முன்னி லையில்,

    வெ ள்ளத்தில் சிக்கி யவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்பது, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவ க்குழுவினர் சிகிச்சை அழிப்பது, மழைக்கா லங்களில் மரம் முறிந்து, மின் இணைப்புக்கள் துண்டிப்பு போன்ற நேரங்களில் மின்வாரிய ஊழியர்கள், வருவாய்த்துறையினர் மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை பணிகள் போன்ற ஒத்திகை பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    இதில், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன் மற்றும் வருவாய்துறை, மாநகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை மூலமாக வெள்ளப்பா திப்புகள் குறித்த ஒத்திகைப் பயிற்சி நாளை நடத்திட திட்டமிடப்ப ட்டுள்ளது.
    • பார்வையிட்டு, பேரிடர் காலங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை மூலமாக வெள்ளப்பா திப்புகள் குறித்த மாநில அளவிலான மாதிரி ஒத்திகைப் பயிற்சி நாளை நடத்திட திட்டமிடப்ப ட்டுள்ளது.

    அதன்படிதேனி மாவட்டத்தில் மாதிரி ஒத்திகைப் பயிற்சிகள் நாளை பெரியகுளம் வராகநதி, வீரபாண்டி முல்லைப்பெரியாறு, உப்புக்கோட்டை முல்லைப்பெரியாறு குன்னூர் வைகை ஆறு, லோயர் கேம்ப்-குமுளி மலைச்சாலை என 5 இடங்களிலும் வருவாய்த்து றை, காவல்துறை, தீயணைப்புத்துறை, உள்ளாட்சித்துறைகள், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொது சுகாதாரத்துறை, தமிழ்நாடு மின்வாரியம் மற்றும் தொடர்பான இதர துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

    முன்னெச்சரிக்கை செய்யும் குழு, தேடுதல் மற்றும் மீட்புக்குழு, பாதுகா ப்பாக வெளியேற்றும் குழு, நிவாரணம் மையம், பாதுகாப்பாக தங்க வைக்கும் குழு ஆகிய குழு க்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஒத்திகைப் பயிற்சிகளை கண்காணிக்கும் பொருட்டு, துணை ஆட்சியர் நிலையில் மேற்பார்வை அலுவலர்கள் நியமனம் செய்யப்ப ட்டுள்ளனர்.

    மழை, வெள்ளம், புயல், நிலச்சரிவு போன்ற பேரிடர்களின் போது அரசு துறைகளால் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்தும், மேற்படி பேரிடர்களின்போது பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது ஒத்திகைப் பயிற்சிகள் நடைபெறவுள்ளதால், தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும், தங்கள் பகுதிகளில் நடைபெறும் மாதிரி ஒத்திகைப் பயிற்சிகளை பார்வையிட்டு, பேரிடர் காலங்களில் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

    • கடலூரில் கலக கூட்டத்தினரை கட்டுப்படுத்துவது சம்மந்தமான போலீசார் ஒத்திகை நடைபெற்றது.
    • ஆயுதப்படை காவலர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது .

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் , கலக கூட்டத்தினரை கட்டுப்படுத்துவது சம்மந்தமான ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் ஒத்திகை பயிற்சியினை பார்வையிட்டு அறிவுரை வழங்கினார் . மாவட்டத்தில் திடீரென கலக கூட்டத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சமயத்தில் , கலக கூட்டத்தினரை காவல்துறையினர் எவ்வாறு கையாள்வது குறித்து ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சவுந்திரராஜன் முன்னிலையில் , ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருட்செல்வன் தலைமையில் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது .

    கலக கூட்டத்தினரால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கருதும் சூழ்நிலையில் முதலில் கலக கூட்டத்தினர்க்கு கூடியிருப்பது சட்டவிரோதமான கூட்டம் உடனே கலைந்து செல்ல எச்சரிக்கப்பட்டது . கூட்டம் கலையாத பட்சத்தில் வருண் வாகனம் மூலம் கலக கூட்டத்தினர் மீது தண்ணீர் பீச்சி அடித்தும், பின்னர் வஜ்ரா வாகனம் மூலம் கண்ணீர் புகை குண்டு வீசியும், பின்னர் லத்தி சார்ஜ் நடத்தியும் , பின்னர் கலக கூட்டத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியும் ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது . ஒத்திகை பயிற்சி கடலூர் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் சேத்தியாத்தோப்பு உட்கோட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது .

    • வெள்ளத்தில் சிக்கும் போது பொதுமக்கள் தனது உயிர்களையும் உடைமைகளையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
    • ஏரியில் உள்ளே காணாமல் போனவர்களை தேடுவது, அவர்களை எவ்வாறு மீட்டு வெளியே கொண்டுவருவது போன்ற பயிற்சியும் அளிக்கப்பட்டது.

    அரியலூர்:

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஒருங்கிணைந்த மாவட்டம் ஜெயம்கொண்டம் தீயணைப்பு மீட்புப் பணி நிலைய எல்லைக்குட்பட்ட உடையார்பாளையம் வேலப்ப செட்டி ஏரியில் பெரம்பலூர் மாவட்ட அலுவலர் ஆலோசனைப்படி மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது.

    உடையார்பாளையம் வருவாய் அலுவலர் பரிமளம் முன்னிலையில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அதிக அளவில் வெள்ளத்தில் சிக்கும் போது பொதுமக்கள் தனது உயிர்களையும் உடைமைகளையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

    மேலும் அந்த இடத்தில் இருந்து விரைந்து வெளியேறுவதற்கு ஏதுவாகவும் அவர்களுக்கு செயல்முறை விளக்கம் மற்றும் ஒத்திகை பயிற்சி நடத்திக் காண்பிக்கப்பட்டது. ஜெயங்கொண்டம் தாசில்தார் ஸ்ரீதர் மற்றும் தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையில் மீட்பு பணி குழுவினர் ஏரியில் உள்ளே காணாமல் போனவர்களை தேடுவது, அவர்களை எவ்வாறு மீட்டு வெளியே கொண்டுவருவது அவர்களுக்கு எவ்வாறு முதலுதவி செய்வது போன்றவற்றிற்கான செயல்முறை விளக்கத்துடன் போலி ஒத்திகை பயிற்சி நிகழ்ச்சி நடத்திக் காண்பித்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×