search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எரிப்பு"

    • மோட்டார் சைக்கிள் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டது.
    • மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த 2 பேரை தேடி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முத்து சாமிபுரம் காமராஜர்புரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது22). இவரது உறவினர்கள் அங்கு முக்கிய பொறுப்பில் உள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று அதே பகுதியை சேர்ந்த தலைமலை(21), பால்பாண்டி (23) ஆகிய 2 பேர் சதீஷ்குமாரின் உறவி னர்களை அவதூறாக பேசி பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது.

    இதனை சதீஷ்குமார் கண்டித்ததால் அவர்க ளுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் சமரசம் செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு சதீஷ்குமார் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். அப்போது அங்கு வந்த தலைமலை, பால்பாண்டி ஆகியோர் பெட்ரோல் ஊற்றி மோட்டார் சைக்கி ளுக்கு தீ வைத்து விட்டு தப்பினர். இதில் மோட்டார் சைக்கிள் எரிந்து சேதமானது. இதுகுறித்து சதீஷ்குமார் தளவாய் புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த 2 பேரை தேடி வருகின்றனர்.

    • கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அதில் கொடியேற்றி வைத்தார்.
    • சண்முகம் ஆகியோர் குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் அருகே காமராஜரின் முழு உருவச் சிலை உள்ளது. அதன் அருகே சமீபத்தில் பாரத் ஜோரா யாத்திரையின் நினைவு கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அதில் கொடியேற்றி வைத்தார். அதன் அருகே வேறு சில கட்சிகளின் கொடிக்கம்பங்களும் உள்ளன.இந்த நிலையில் நேற்று மர்ம நபர்கள் காங்கிரஸ் கொடியை கம்பத்திலிருந்து அகற்றி கிழித்து தீ வைத்து எரித்துள்ளனர். இன்று காலை இதனைப் பார்த்த காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர் .

    இது குறித்து நகர காங்கிரஸ் தலைவர் வைத்தியநாதன், மாவட்ட செயலாளர் சிவராஜ் சண்முகம் ஆகியோர் குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். சப்- இன்ஸ்பெக்டர் பிரசன்ன குமார் விசாரணை நடத்தி வருகிறார். நாளை காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கொடி அறுக்கப்பட்டு எரிக்கப்பட்டது பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

    • தற்கொலை செய்த பெண்ணின் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிக்கப்பட்டது.
    • இந்த சம்பவத்தில் தொடர்புடைய கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கே.சென்னம்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மனைவி முத்துமாரி (வயது45). இவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசுக்கு தகவல் அளிக்காமல் பெண்ணின் உடலை உறவினர்கள் எரித்து விட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து தகவல் அறிந்த கே.சென்னம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ஜெயா பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது ஜெயாவிற்கு கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு இருந்து வந்ததும், பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணம டையாததால் மனவிரக்தியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

    இருப்பினும் அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் தகவல் அளிக்காமல் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை எரித்தது குறித்து கள்ளிக்குடி போலீஸ் நிலையத்தில் ஜெயா புகார் செய்தார். அதன்பேரில் முத்துமாரியின் கணவர் வேல்முருகன், அவரது தந்தை பாண்டி, உறவினர்கள் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இன்று காலை 5 மணியளவில் வீட்டு முன்பு இருந்து சத்தம் வந்தது.
    • செட்டிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கோவை,

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ண சாகர் (வயது 22). கன்னியாகுமரியை சேர்ந்தவர் அபிஷ் (20), கதிரவன் (20). இவர்கள் 3 பேரும் மலுமச்சம்பட்டியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

    மாணவர்கள் 3 பேரும் மலுமச்சம்பட்டி அண்ணா நகரில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர். இவர்கள் கல்லூரிக்கு சென்று வருவதற்கு மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி வந்தனர். கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு திரும்பும் இவர்கள் அங்குள்ள காம்பவுண்டுக்குள் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு செல்வது வழக்கம்.

    சம்பவத்தன்று இரவு மாணவர்கள் வழக்கம் போல மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றனர். இன்று காலை 5 மணியளவில் வீட்டு முன்பு இருந்து சத்தம் வந்தது. உடனடியாக மாணவர்கள் வெளியே வந்து பார்த்தனர்.

    அப்போது 3 பேரின் மோட்டார் சைக்கிள்களும் தீ பிடித்து எரிந்து கொண்டு இருந்தது. இதனை பார்த்து மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயை அணைத்தனர். இருந்த போதிலும் 3 மோட்டார் சைக்கிள்களும் முழுவதுமாக எரிந்து நாசமானது.

    இந்த தகவல் கிடைத்ததும் செட்டிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ேரால் கசிவு காரணமாக மோட்டார் சைக்கிள்கள் தீப்பிடித்து எரிந்ததா அல்லது முன் விரோதம் காரணமாக என்ஜினீயரிங் மாணவர்களின் மோட்டார் சைக்கிள்களை தீ வைத்து எரித்து சென்றார்களா என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வைக்கோல் தீ வைத்து எரிக்கப்பட்டது.
    • சிந்துபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே சிந்துபட்டி போலீஸ் சரகம்

    பி.வாகைகுளத்தைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 27). இவரது மனைவி அனிதா. அதே பகுதியைச் சேர்ந்தவர் அனிதாவின் பெரியப்பா கணேசன். இவர்களிடையே சொத்து பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அனிதா வீட்டின் பின்புறம் உள்ள இடத்தில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் படப்பு நேற்று நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்தது.

    இதில் அருகில் இருந்த ஓட்டு வீடும் சேதமானது. சொத்து பிரச்சனையை மனதில் வைத்து தனது பெரியப்பா கணேசன் வைகோலுக்கு தீ வைத்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக சிந்துபட்டி போலீஸ் நிலையத்தில் அனிதா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவில் திருவிழா நிகழ்ச்சி நடைபெறுவதையடுத்து ஹரிஹரசுதன் ஊருக்கு வந்திருந்தார்.
    • மோட்டார் சைக்கிளின் இருக்கைகள் முழுமையாக தீயில் இருந்து நாசமாய் இருந்தது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வாகையடி தெருவை சேர்ந்தவர் ஹரி ஹரசுதன் (வயது 35).

    இவர் திருவனந்தபுரத்தில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். ஹரிஹரசுதன் விடுமுறையில் ஊருக்கு வந்து செல்வார். தற்பொழுது அந்த பகுதியில் உள்ள கோவில் திருவிழா நிகழ்ச்சி நடைபெறுவதையடுத்து ஹரிஹரசுதன் ஊருக்கு வந்திருந்தார்.

    நேற்று ஹரிஹரசுதன் வெளியே சென்று விட்டு இரவு 10 மணிக்கு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தினார். வீட்டில் சிறிது நேரம் பேசி கொண்டிருந்துவிட்டு நள்ளிரவு தூங்க சென்றார்.

    இன்று அதிகாலை பார்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். மோட்டார் சைக்கிளின் இருக்கைகள் முழுமையாக தீயில் இருந்து நாசமாய் இருந்தது.

    மேலும் முன்பகுதியும் எரிந்து சேதம் அடைந்தி ருந்தது. மோட்டார் சைக்கிள் முற்றிலுமாக சேதம் அடைந்து காணப்பட்டது. போலீசாரின் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள். மர்மநபர்களை பிடிக்க தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • வழக்கம்போல் பணிக்கு சென்று விட்டு தனக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பக்கத்தில் வைத்துவிட்டு தூங்கச் சென்றுள்ளார்
    • நள்ளிரவில் படார் என்று சத்தம் கேட்டுள்ளது. வெளியே வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் மளமளவென தீ பிடித்து எரிந்து கொண்டி ருந்துள்ளது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட திக்குறிச்சி கடவிளையை சேர்ந்தவர் அஜய் சிங் (வயது 20), கட்டிட தொழிலாளி.

    இவர் வழக்கம்போல் பணிக்கு சென்று விட்டு தனக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பக்கத்தில் வைத்துவிட்டு தூங்கச் சென்றுள்ளார். நள்ளிரவில் படார் என்று சத்தம் கேட்டுள்ளது. இதனால் பதறி அடித்த அஜய் சிங் மற்றும் அவரது குடும்பத்தார் வெளியே வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் மளமளவென தீ பிடித்து எரிந்து கொண்டி ருந்துள்ளது.

    தீயை அணைக்கும் முன்பு மோட்டார் சைக்கிள் முழுமையாக எரிந்து நாசமானது.

    இதுகுறித்து அஜய் சிங் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் மோட்டார் சைக்கிள் எவ்வாறு தீப்பிடித்து எரிந்தது என்றும், ஏதேனும் மர்ம ஆசாமிகள் தீ வைத்துவிட்டு தப்பி சென்றனரா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை அருகே மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை

    மதுரை செல்லூர் அகிம்சாபுரம் 6-வது தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் 34. சம்பவத்தன்று வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இவரது மோட்டார் சைக்கிளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டுச் சென்றனர்.

    இதில் மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×