search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உற்பத்தியாளர்"

    • மற்ற மாநிலங்களில் மின் கட்டணம் குறைவாக உள்ளதால், ஜவுளி உற்பத்தியாளர்களால் விலை குறைவாக தர முடிகிறது.
    • கடந்த வாரத்தில் பஞ்சு விலை உயர்வு காரணத்தால், நூல் கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் 25 வரை விலையேற்றம் ஆனது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறியதாவது:-

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் முக்கிய தொழிலாக உள்ள விசைத்தறி ஜவுளித் தொழில் ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த ஜவுளித்துணிக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் ஜவுளித்தொழில் நெருக்கடியில் உள்ளது.

    இந்நிலையில் கடந்த வாரத்தில் பஞ்சு விலை உயர்வு காரணத்தால், நூல் கிலோ ஒன்றுக்கு ரூ.15 முதல் 25 வரை விலையேற்றம் ஆனது. ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் ஜவுளிக்கு இன்னும் உரிய விலை கிடைக்க வில்லை. பஞ்சு மற்றும் நூல் விலை உயர்கிறது .ஆனால் அதில் உற்பத்தி செய்யப்படும் துணி விலை உயரவில்லை.

    மேலும் மற்ற மாநிலங்களில் மின் கட்டணம் குறைவாக உள்ளதால், ஜவுளி உற்பத்தியாளர்களால் விலை குறைவாக தர முடிகிறது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வால் அவர்களுடன் போட்டியிட முடியாத சூழ்நிலை ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு தனி பேரிப்பு அமைத்து மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.

    மேலும் சிறு, குறு, நிறுவனங்களுக்கான தொழில் ஒப்பந்தம் வரவேற்கத்தக்கது. ஆனால் அதை உடனடியாக அமலுக்கு கொண்டு வந்ததால் வியாபாரிகள் ஜவுளி வாங்கு வதை நிறுத்திவிட்டனர். எனவே சிறுகுறு தொழில் ஒப்பந்தத்தை ஒரு வருட காலத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும். மேலும் தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் ஜவுளி உற்பத்தியை குறைப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே இன்று முதல் ஜவுளி உற்பத்தியை 50 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பல்வேறு மாநிலங்களில் மஞ்சள் உற்பத்தி பெருகி ஒரு குவின்டால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனையானது.
    • கர்நாடகா மாநிலம் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து மட்டுமே புதிய மஞ்சள் வரத்தாகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடம், பெரு ந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடம், ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடம், கோபிசெட்டிபாளையம் என 4 இடங்களில் மஞ்சள் மார்க்கெட்டுகள் செயல்பட்டு வருகின்றன.

    இங்கு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏல விற்பனை நடந்து வருகிறது. கடந்த 2010-11ம் ஆண்டுகளில் தங்கம் விலைக்கு இணையாக மஞ்சள் குவிண்டால் ரூ.18 ஆயிரம் வரை விற்பனையானது.

    அதன் பின்னர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மஞ்சள் உற்பத்தி பெருகி ஒரு குவின்டால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை விற்பனையானது. இதே நிலை சில ஆண்டுகள் நீடித்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு தொடக்கத்தில் பல்வேறு மாநிலங்களில் பலத்த மழை, பல மாநிலங்களில் போதிய மழை இன்மை போன்ற காரணங்களால் மஞ்சள் உற்பத்தி குறைந்து ஈரோடு மஞ்சள் குவிண்டால் ரூ.15 ஆயிரம் முதல் ரூ15 ஆயிரத்து 500 வரை விற்பனையானது.

    அதன்பின் கடந்த 6 மாதங்களாக குவிண்டால் ரூ.11 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரை விற்பனை ஆகி வந்தது. கடந்த வாரம் ரூ.15 ஆயிரத்தை தொட்டது. பின்னர் படிப்படியாக உயர்ந்து மீண்டும் குவிண்டால் ரூ.16 ஆயிரத்து 36-க்கு விற்பனையானதால் மஞ்சள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.12 ஆயிரத்து 678 முதல் ரூ.16 ஆயிரத்து 36 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.11 ஆயிரத்து 599 முதல் ரூ.13 ஆயிரத்து 800 வரையும் விற்பனையானது.

    இங்கு கொண்டுவரப்பட்ட 3 ஆயிரத்து 387 மஞ்சள் மூட்டைகளில் 1,938 மூட்டைகள் ஏலம் போன தாக நிர்வாகிகள் தெரிவித்தனர். கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.11 ஆயிரத்து 200 முதல் ரூ.13 ஆயிரத்து 799 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.11 ஆயிரத்து 200 முதல் ரூ.11 ஆயிரத்து 133 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

    பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.10 ஆயிரத்து 545 முதல் ரூ.15 ஆயிரத்து 89 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.8 ஆயி ரத்து 889 முதல் 13 ஆயிரத்து 739 வரையும் விற்பனையானது. இதைப்போல் ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடத்தில் விராலி மஞ்சள் குவிண்டால் ரூ. 12 ஆயிரத்து 633 முதல் 15 ஆயிரத்து 499 வரையும், கிழ ங்கு மஞ்சள் ரூ.10 ஆயிரத்து 556 முதல் ரூ.13 ஆயிரத்து 519 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

    இது குறித்து ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-தற்போது கர்நாடகா மாநிலம் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து மட்டுமே புதிய மஞ்சள் வரத்தாகிறது. இதற்கு தரத்தின் அடிப்படையில் சற்று விலை அதிகமாக கிடைக்கிறது.

    பழைய மஞ்சள் இருப்பில் இருந்தவை ரூ.9 ஆயிரத்துக்கு விலை போகிறது. ஈரோடு மாவட்டத்தில் இன்னும் புதிய மஞ்சள் அறுவடையாகவில்லை. சில மஞ்சள் புதிய ரகம் பெரு வட்டாக வரத்தாகி ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஒரு குவிண்டால் ரூ.16 ஆயி ரத்து 36 வரை விற்பனையானது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தமிழ்நாட்டிற்கு தேவையான 70 சதவீத நெல் விதைகள் தாராபுரம் பகுதியில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
    • புதிதாக 3 விதைசான்று அலுவலர் பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும்.

     தாராபுரம் :

    விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறை சார்பில் விதை நெல் உற்பத்தியாளர்களுக்கான ஆய்வு கூட்டம் தாராபுரம் அரிமா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருப்பூர் விதைச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து வரவேற்றார். கூட்டத்தில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இணை இயக்குனர் ஜெயசெல்வின் இன்பராஜ் தலைமை தாங்கி பேசியதாவது:- தமிழ்நாட்டிற்கு தேவையான 70 சதவீத நெல் விதைகள் தாராபுரம் பகுதியில் இருந்து உற்பத்தி செய்து வினியோகம் செய்யப்படுகிறது. தரமான நெல் விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கடமை உற்பத்தியாளர்களுக்கு உள்ளது. தரமான நெல் விதைகளை உற்பத்தி செய்து உற்பத்தியாளர்கள் விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும் தரமான விதை உற்பத்தி செய்வது தொடர்பாகவும் அங்ககச் சான்று மற்றும் அங்கக விவசாயம் தொடர்பாக உற்பத்தியாளர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் விதை உற்பத்தியாளர் தரப்பில் துறையில் உள்ள காலிபணியிடங்களை நிரப்பவேண்டும். தாராபுரம் பகுதிக்கு புதிதாக 3 விதைசான்று அலுவலர் பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும். மேலும் சான்றுபணிக்கு தேவையான சான்று அட்டைகளை தேவைக்கேற்ப முன்கூட்டியே இருப்பு வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆய்வுக் கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து விதை உற்பத்தியாளர்கள், விதை சான்று அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் விதை சான்று அலுவலர் ஆனந்தன் நன்றி கூறினார்.

    • மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் பனியன் ஏற்றுமதி நிறுவ–னம்
    • ஆடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

    திருப்பூர், நவ.21-

    திருப்பூரில் பின்னலாடை தொழில் பிரதானமாக நடந்து வருகிறது. நூல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக கடந்த சில மாதங்களாக பனியன் தொழில் மந்தநிலையில் காணப்படுகிறது. இந்தநிலையில் வெளிமாநில அரசு, தங்கள் மாநிலங்களில் பனியன் தொழில் தொடங்க திருப்பூர் பனியன் தொழில் துறையினருக்கு அழைப்பு விடுத்து வருகிறார்கள்.

    அதன்படி மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த அரசு அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழு–வி–னர் திருப்–பூர் வந்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகளை சந்தித்தனர். ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், இணை செயலாளர் சின்னசாமி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாக செயலாளர் சக்திவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

    மத்திய பிரதேச மாநில அரசின் வெளியுறவுத்துறை கூடுதல் செயலாளர் மணிஷ் சிங் தலையில் அதிகாரிகள் வந்தனர். ஏற்கனவே திருப்பூரை சேர்ந்த ஏற்றுமதியாளர் ஒருவர், மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் அமைத்–துள்ளார். இதைத்தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்தில் புதிதாக தொழில் தொடங்க வருபவர்களுக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் சலுகைகள் குறித்து எடுத்துக்கூறினார்கள்.

    கூடுதல் தொழிலாளர்கள், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உதவி, மின்கட்டண சலுகை, தொழில் முதலீட்டுக்கடன் சலுகை, ஆடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய 400 கிலோ மீட்டர் தூரத்தில் துறைமுகவசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள், சலுகைகள் குறித்து விளக்கி கூறினார்கள். தங்கள் மாநிலத்துக்கு வந்து பனியன் ஏற்றுமதி நிறுவனங்–களை தொடங்–கி–னால் சலுகை அளிப்பதாகவும், முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அழைப்பு விடுத்தனர்.

    • தேங்காய் எண்ணை உற்பத்தியாளர்கள் சங்க அலுவலக கூட்டரங்கில் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    காங்கயம் :

    காங்கயம் சென்னிமலை சாலை கச்சேரி பகுதியில் உள்ள காங்கயம் தேங்காய் எண்ணை உற்பத்தியாளர்கள் சங்க அலுவலக கூட்டரங்கில் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் என்.எஸ்.என். தனபால் வரவேற்று பேசி கூட்டத்தை தொடங்கிவைத்தார். செயலாளர் சக்திவேல் சங்கத்தின் ஓராண்டு கால செயல்பாடுகளை விரிவாக கூறினார். பொருளாளர் பாலாஜி ஜி.ஆர்.ரவிச்சந்திரன் ஆண்டு அறிக்கையை வாசித்தார். சங்கத்தின் கவுரவ ஆலோசகர் என்.எஸ்.என்.நடராஜ் சிறப்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காததாலும், தேங்காய் உலர் கலங்களுக்கு போதிய விலையில் தேங்காய் கிடைக்காததாலும், தேங்காய் எண்ணை அரவை ஆலைகளுக்கு போதிய விலையில் கொப்பரை கிடைக்காததாலும் தேங்காய் எண்ணையை பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்க தமிழகஅரசை வலியுறுத்த வேண்டுதல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்கத்தின் கவுரவ ஆலோசகர்கள் , நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.   

    • சேலம் மாவட்டத்திற்கு ஒரு ஆதிதிராவிடர் மகளிர் மற்றும் ஒரு பழங்குடியின மகளிருக்கு தலா ரூ.1 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • இதில் சேலம் மாவட்டத்திற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தலா ஒரு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு மானியம் ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது.

    சேலம்:

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 50 உறுப்பினர்களைக் கொண்ட மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்க சேலம் மாவட்டத்திற்கு ஒரு ஆதிதிராவிடர் மகளிர் மற்றும் ஒரு பழங்குடியின மகளிருக்கு தலா ரூ.1 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரின் அறிவிப்பில், 36 ஆதி திராவிடர்களுக்கும், 4 பழங்குடியினருக்கும் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத்தி ட்டத்தின் கீழ் 50 உறுப்பினர் களைக் கொண்ட மகளிர் கூட்டு றவு பால் உற்பத்தி யாளர் கூட்டுறவுச் சங்கங்கள் அமைத்திட ஆணையிடப் பட்டுள்ளது.

    இதில் சேலம் மாவட்டத்திற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தலா ஒரு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு மானியம் ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். கறவை மாடு வைத்துள்ள மற்றும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினராக உள்ள மகளிர் இத்திட்டத்தில் பயன் பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற ஆதிதிராவிடர் பயனாளிகள் https://application.tahdco.com என்ற இணையதளத்திலும், பழங்குடியினர் பயனாளிகள் https://fast.tahdco.com, https://fast.tahdco.com, ://fast.tahdco.com, https://fast.tahdco.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • கடந்த2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை கால ஆடை தயாரிப்பு ஆர்டர் வருகை சரிந்துவிட்டது.
    • ஆண்டு துவக்கம் முதலே திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை குறைவாகவே உள்ளது.

    திருப்பூர் :

    உள்நாட்டு சந்தைக்காக பின்னலாடை ரகங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் திருப்பூரில் ஆயிரக்கணக்கில் உள்ளன.இந்நிறுவனங்களுக்கு கோடை, குளிர் பருவ காலங்கள், பொங்கல், ரம்ஜான், தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் ஆடை தயாரிப்புக்கான ஆர்டர் அதிக அளவில் கிடைக்கிறது.

    பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தீபாவளி பண்டிகை மிக முக்கியமானது. இப்பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள வர்த்தகரிடமிருந்து திருப்பூர் நிறுவனங்களுக்கு அதிக அளவு ஆடை தயாரிப்பு ஆர்டர் கிடைக்கிறது. போனஸ் கிடைப்பதால் தொழிலாளர்களையும், தீபாவளி தித்திக்க செய்கிறது.கொரோனா பரவல் காரணமாக கடந்த2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை கால ஆடை தயாரிப்பு ஆர்டர் வருகை சரிந்துவிட்டது. அபரிமிதமாக உயர்ந்த நூல் விலை, கொரோனாவால் உள்நாட்டில் ஏற்பட்டுள்ள வர்த்தக மந்தநிலையால் நடப்பு ஆண்டு துவக்கம் முதலே திருப்பூர் நிறுவனங்களுக்கு ஆர்டர் வருகை குறைவாகவே உள்ளது. கைவசம் போதிய ஆர்டர் இல்லாததால் உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் சார்ந்துள்ள நிட்டிங், சாய ஆலை, பிரின்டிங், எம்ப்ராய்டரி உட்பட அனைத்துவகை ஜாப்ஒர்க் துறையினரும் கவலை அடைந்துள்ளனர்.

    வருகிற அக்டோபர் 24-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொரோனா குறித்த கவலைகள் விலகியுள்ளன. தீபாவளி ஆடை தயாரிப்புக்கு ஆர்டர் வருகை அதிகரிக்கும் என்கிற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் பின்னலாடை துறையினர்.நூற்பாலைகள், ஒசைரி நூல் விலைகளை ஒரே சீராக தொடர செய்து, வர்த்தகத்தை ஈர்ப்பதற்கு கைகொடுக்கவேண்டும் என்பது ஒட்டுமொத்த ஆடை உற்பத்தியாளர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

    ×