search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணை விற்பனை செய்ய வேண்டும் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்
    X

    சங்கத்தின் கவுரவ ஆலோசகர் என்.எஸ்.என்.நடராஜ் சிறப்புரை ஆற்றிய காட்சி.

    ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணை விற்பனை செய்ய வேண்டும் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்

    • தேங்காய் எண்ணை உற்பத்தியாளர்கள் சங்க அலுவலக கூட்டரங்கில் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    காங்கயம் :

    காங்கயம் சென்னிமலை சாலை கச்சேரி பகுதியில் உள்ள காங்கயம் தேங்காய் எண்ணை உற்பத்தியாளர்கள் சங்க அலுவலக கூட்டரங்கில் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் என்.எஸ்.என். தனபால் வரவேற்று பேசி கூட்டத்தை தொடங்கிவைத்தார். செயலாளர் சக்திவேல் சங்கத்தின் ஓராண்டு கால செயல்பாடுகளை விரிவாக கூறினார். பொருளாளர் பாலாஜி ஜி.ஆர்.ரவிச்சந்திரன் ஆண்டு அறிக்கையை வாசித்தார். சங்கத்தின் கவுரவ ஆலோசகர் என்.எஸ்.என்.நடராஜ் சிறப்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காததாலும், தேங்காய் உலர் கலங்களுக்கு போதிய விலையில் தேங்காய் கிடைக்காததாலும், தேங்காய் எண்ணை அரவை ஆலைகளுக்கு போதிய விலையில் கொப்பரை கிடைக்காததாலும் தேங்காய் எண்ணையை பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்க தமிழகஅரசை வலியுறுத்த வேண்டுதல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்கத்தின் கவுரவ ஆலோசகர்கள் , நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×