search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடன்பாடு"

    • அ.தி.மு.க., பா.ம.க. தலைவர்கள் இன்று மாலையில் சந்தித்து பேசுவதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • பேச்சுவார்த்தையின் போது தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் இறுதியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் பா.ம.க. எந்த கூட்டணியில் சேரப்போகிறது? என்பது மிகப் பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. கூட்டணி தொடர்பாக பாரதிய ஜனதா, அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடன் பா.ம.க. ரகசியமாக பேசி வந்தது.

    இதில் எந்த அணியில் பா.ம.க. சேரப் போகிறது என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது.

    இந்த நிலையில் கூட்டணி தொடர்பாக பா.ம.க. இறுதி முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பது என்று பா.ம.க. அதிரடி முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. 10 தொகுதிகளை கேட்ட நிலையில் 7 தொகுதிகளை ஒதுக்குவதற்கு அ.தி.மு.க. சம்மதித்திருப்பதாகவும், இதனால் 2 கட்சிகளுக்கு இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக அ.தி.மு.க., பா.ம.க. தலைவர்கள் இன்று மாலையில் சந்தித்து பேசுவதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து சேலம் சென்றிருந்தார். இந்த நிலையில் அவர் இன்று பிற்பகலில் சென்னை திரும்புகிறார்.

    பா.ம.க. நிர்வாகிகள் இன்று மாலை அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டுக் குழுவினரை சந்தித்து பேச இருப்பதாகவும் அப்போது நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பின்னர், கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

    அதே நேரத்தில் தே.மு. தி.க. நிர்வாகிகளும் அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினரை இன்று மாலையில் சந்தித்து 3-வது கட்ட பேச்சுவார்த்தையை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்த பேச்சுவார்த்தையின் போது தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள் இறுதியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    குமாரபாளையம் அருகே 3 தலைமுறைகளாக தீராத மயான வழித்தடம் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சி வீரப்பம்பாளையம் பகுதியில் உள்ள அருந்த–தியர் தெருவில் சடலங்கள் மயானத்திற்கு கொண்டு செல்ல வழி இல்லாமல் இருந்தது.

    இதனால் வாய்க்கால், முட்புதர்களை கடந்து சடலத்தை மயானத்திற்கு கொண்டு சென்று இறுதி சடங்கு செய்து வரும் நிலை 3 தலைமுறைக்கும் மேலாக நீடித்து வந்தது. அந்த பகுதி பட்டா இடத்தின் உரிமையாளர்கள் வழித்தடம் கொடுக்க உடன்ப–டாமல் இருந்து வந்தனர்.

    இது குறித்து மாவட்ட கலெக்டர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் பேசியும் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து இதற்கான முயற்சி செய்த நிலையில் தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா தனது பதவி காலத்தில் இதகு தீர்வு காண வேண்டும் என, வழித்தடத்தின் அருகில் உள்ள இட உரிமையாளர்கள் வசம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இதை தொடர்ந்து தீர்வு ஏற்பட்டு, இட உரிமையாளர்கள் இடம் தர ஒத்துக்கொண்டனர். இதையடுத்து பொக்லைன் மூலம் மயானத்திற்கு பாதை அமைக்கப்பட்டது. இந்த பாதை வழியாக மயானத்திற்கு சடலங்களை எவ்வித தடையும் இல்லாமல் எடுத்து செல்லலாம் என்று ஊராட்சி தலைவி புஷ்பா தெரிவித்தார்.

    இதற்கு உதவி செய்த அனைவருக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

    போர் நிறுத்தம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், எல்லையில் இனி துப்பாக்கிச்சூடு வேண்டாம் என இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமலில் உள்ளது. எனினும், இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீரில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே அடிக்கடி இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இதில், இந்திய வீரர்களும் அப்பாவி பொதுமக்களும் பலியாகி வருவது வாடிக்கையான ஒன்றாக மாறியது.

    இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டாலும் வீரர்கள் இழப்பு என்பது அதிகரித்த வண்ணமே இருந்தது. பயங்கரவாத தாக்குதல்களை விட பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் வீரர்கள் பலியாவது கூடுதலாக உள்ளது. குறிப்பாக, காஷ்மீரின் ரஜோரி, சம்பா, உரி ஆகிய பகுதியில் பாகிஸ்தானின் அத்துமீறல் அதிகளவில் உள்ளது.

    இந்நிலையில், இரு நாட்டு ராணுவ செயல்பாட்டுபிரிவு இயக்குநர் ஜெனரல்கள் மத்தியில் இன்று பேச்சுவார்த்தை நடந்தது. ஹாட்லைன் தொலைபேசி மூலம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், எல்லை துப்பாக்கிச்சூடு குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது. 

    2003-ம் ஆண்டு போடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை முழு மூச்சாக கடைப்பிடிப்பது என உடன்பாடு எட்டப்பட்டது. 
    ×