search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச சிகிச்சை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரண்டு ஆண்டுகளில் ரூ3ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான இலவச சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.
    • அதிகபட்ச மக்களுக்கு இலவச சிகிச்சையளிக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை.

    திருவனந்தபுரம்:

    மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சேவையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் ஆரோக்கிய மந்தன் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்த விருதை கேரள மாநிலம் வென்றுள்ளது. ஏராளமானோருக்கு இலவச சிகிச்சை அளிப்பதில் முன்னணியில் இருப்பதன் காரணமாக கேரளாவுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

    கேரள மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருக்கும் காருண்ய ஆரோக்ய சுரக்க்ஷா என்ற திட்டம் மூலமாகவே ஆரோக்கிய மந்தன் விருது கேரளாவுக்கு கிடைத்திருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் இலவச மருத்துவ சேவையை பெற முடியும். அந்த திட்டத்தில் இரண்டு ஆண்டுகளில் ரூ3ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான இலவச சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. 613 மருத்துவமனைகளின் மூலம் 13 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

    இதுகுறித்து கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறும்போது, அதிகபட்ச மக்களுக்கு இலவச சிகிச்சையளிக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை. நிதி நெருக்கடிகள் இருந்தபோதிலும் ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய அரசு எடுத்துள்ள முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு இந்த விருது கிடைத்துள்ளது என்றார்.

    • மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் நடந்தது
    • இலவசமாக மருந்து, மாத்திரைகளை வழங்கினர்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி உத்தரவின் பேரில் விருதம்பட்டியில் உள்ள வார்டு அலுவலகத்தில் இன்று காலை மருத்துவ முகாம் நடைபெற்றது.

    மாநகராட்சியில் வேலை செய்யும் நிரந்தர ஊழியர்கள், தொகுப்பூதிய ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், திடக்கழிவு திட்ட மேலாண்மை ஊழியர்கள், டெங்கு கொசு தடுப்பு பணி ஊழியர்கள் 400-க்கும் மேற்பட்டவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

    மாநகராட்சி ஊழியர்களுக்கு ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை, சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனை செய்து இலவசமாக மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.

    முகாமில் 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்

    • தற்போது சென்னையில் மழைக்கால நோயான ‘மெட்ராஸ் ஐ’ வேகமாக பரவி வருகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் முகாம்களில் மருத்துவர்கள், நர்சுகள், உதவியாளர்கள் இடம்பெற்று இருப்பார்கள்.

    சென்னை:

    சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழைக்கால நோய்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறையும், மாநகராட்சியும் இணைந்து நாளை (சனிக்கிழமை) மருத்துவ முகாம்கள் நடத்தும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.

    அதன்படி நாளை ஒவ்வொரு வார்டிலும் ஒரு மருத்துவ முகாம் வீதம் 200 வார்டுகளிலும் 200 இடங்களில் முகாம் நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் முகாம்களில் மருத்துவர்கள், நர்சுகள், உதவியாளர்கள் இடம்பெற்று இருப்பார்கள்.

    இதற்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிகளில் இருந்தும் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மாநகராட்சி மருத்துவமனை டாக்டர்களுடன் இணைந்து முகாம்களில் பணியாற்றுகிறார்கள்.

    200 வார்டுகளிலும் எந்தெந்த இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறும் என்ற விபரம் அனைத்து மண்டல அலுவலகங்களிலும், வார்டு அலுவலகங்களிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    தற்போது சென்னையில் மழைக்கால நோயான 'மெட்ராஸ் ஐ' வேகமாக பரவி வருகிறது. மருத்துவ முகாம்களில் கண்வலி, காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு, டைபாய்டு, சேற்றுப்புண் உள்ளிட்ட வியாதிகள் தொடர்பாக பரிசோதனை செய்து மருந்துகள் வழங்கப்படும்.

    மேல் சிகிச்சை தேவைப்படுபவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்படுவார்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நில வேம்பு குடிநீரும் வழங்கப்படும். உப்பு-சர்க்கரை கரைசலும் வழங்கப்படும்.

    பொதுமக்கள் இந்த மருத்துவ முகாம்களை பயன்படுத்தி பாதுகாப்பாக இருக்கும்படி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    ×