search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "free treatment"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரண்டு ஆண்டுகளில் ரூ3ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான இலவச சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.
    • அதிகபட்ச மக்களுக்கு இலவச சிகிச்சையளிக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை.

    திருவனந்தபுரம்:

    மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சேவையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் சார்பில் ஆரோக்கிய மந்தன் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்த விருதை கேரள மாநிலம் வென்றுள்ளது. ஏராளமானோருக்கு இலவச சிகிச்சை அளிப்பதில் முன்னணியில் இருப்பதன் காரணமாக கேரளாவுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

    கேரள மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டிருக்கும் காருண்ய ஆரோக்ய சுரக்க்ஷா என்ற திட்டம் மூலமாகவே ஆரோக்கிய மந்தன் விருது கேரளாவுக்கு கிடைத்திருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் இலவச மருத்துவ சேவையை பெற முடியும். அந்த திட்டத்தில் இரண்டு ஆண்டுகளில் ரூ3ஆயிரத்து 200 கோடி மதிப்பிலான இலவச சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. 613 மருத்துவமனைகளின் மூலம் 13 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

    இதுகுறித்து கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறும்போது, அதிகபட்ச மக்களுக்கு இலவச சிகிச்சையளிக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை. நிதி நெருக்கடிகள் இருந்தபோதிலும் ஏழை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய அரசு எடுத்துள்ள முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு இந்த விருது கிடைத்துள்ளது என்றார்.

    • மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் நடந்தது
    • இலவசமாக மருந்து, மாத்திரைகளை வழங்கினர்

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மாநகராட்சி கமிஷனர் ரத்தினசாமி உத்தரவின் பேரில் விருதம்பட்டியில் உள்ள வார்டு அலுவலகத்தில் இன்று காலை மருத்துவ முகாம் நடைபெற்றது.

    மாநகராட்சியில் வேலை செய்யும் நிரந்தர ஊழியர்கள், தொகுப்பூதிய ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், திடக்கழிவு திட்ட மேலாண்மை ஊழியர்கள், டெங்கு கொசு தடுப்பு பணி ஊழியர்கள் 400-க்கும் மேற்பட்டவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

    மாநகராட்சி ஊழியர்களுக்கு ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை, சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனை செய்து இலவசமாக மருந்து, மாத்திரைகளை வழங்கினர்.

    முகாமில் 1-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்

    பிரதம மந்திரி மருத்துவ காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டு 150 நாட்களுக்குள் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #PMModi #MedicalInsurance
    புதுடெல்லி:

    பிரதம மந்திரி மருத்துவ காப்பீடு திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 23-ந்தேதி தொடங்கப்பட்டது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இதனை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இதில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வீதம் 10.74 ஏழை குடும்பங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டது.

    இதற்காக இதுவரை 1.7 கோடி பயனாளர்கள் அட்டை அச்சடிக்கப்பட்டுள்ளது. 14,856 ஆஸ்பத்திரிகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் தொடங்கப்பட்டு 150 நாட்களுக்குள் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #PMModi #MedicalInsurance
    தமிழகத்தில் அதிகளவில் ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பது பாராட்டுக்கு உரியது என்று ஜப்பான் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    ஜப்பான் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் கென்ஜி அயா தலைமையிலான குழுவினர் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் நர்சுகளின் செயல்பாட்டினை களஆய்வு செய்தனர்.

    இதைத்தொடர்ந்து, எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியை சர்வதேச தரத்திற்கு உயர்த்திட அனைத்து உதவிகளையும் ஜப்பான் அரசு தொடர்ந்து வழங்கும் என உறுதியளித்தனர். பின்னர், இக்குழுவினருடன் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஜப்பான் குழுவினர் பேசியதாவது:-

    அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் நர்சுகளின் அர்ப்பணிப்புடன் கூடிய தன்னலமற்ற சேவை எங்களுக்கு நெகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையின் சிறப்பான செயல்பாட்டின் மூலம் தாய்-சேய் இறப்பு விகிதம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டில் அடையவேண்டிய நிலையான வளர்ச்சி இலக்குகளை தமிழகம் 14 ஆண்டுகளுக்கு முன்னதாகவே அடைந்து இமாலய சாதனை புரிந்துள்ளது.

    அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் செயல்படுத்தப்பட்டுவரும் தாய்ப்பால் வங்கித் திட்டம் புரட்சிகரமான திட்டமாகும். தமிழக அரசின் சீரிய திட்டங்களால் அதிகளவில் ஏழை எளிய மக்கள் எவ்வித கட்டணமும் இல்லாமல் தரமான சிகிச்சை பெற்றுவருவது பாராட்டுக்குரியது. ஜப்பான் அரசு, தமிழகத்தில் மேலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த எல்லாவித ஒத்துழைப்பையும் நல்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ×