என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரவு விடுதி"

    • தாய்லாந்தின் ஃபூகெட்டுக்கு அவர்கள் சென்றனர்.
    • ஆனால் நீதிமன்றம் அவர்களின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்தது.

    கோவாவின் அர்போரா பகுதியில் இயங்கி வந்த, 'பிர்ச் பை ரோமியோ லேன்' இரவு விடுதியில், கடந்த 6ம் தேதி நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் விடுதி ஊழியர்கள் 20 பேர், வாடிக்கையாளர்கள் ஐந்து பேர் என மொத்தம் 25 பேர் உயிரிழந்தனர்.

    கிளப்பின் சட்டவிரோத கட்டுமானம் குறித்து ரவி ஹர்மல்கர் என்ற சமூக சேவகர் புகார் அளித்த பிறகு, அதை இடிக்க உத்தரவிடப்பட்டபோதும் கிளப் தொடர்ந்து செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.

    முன்னதாக கோவா காவல்துறை நடத்திய விசாரணையில், விபத்து நடந்ததும் தீயணைப்புப் படையினரும் பிற மீட்புப் படையினரும் கிளப்பில் தீயை அணைக்க முயன்று கொண்டிருக்கும்போது, மறுபுறம் லூத்ரா சகோதரர்கள் நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டனர்.

    விபத்து நடந்த சில மணி நேரங்களில் அதிகாலை 1:17 மணிக்கு, இருவரும் மேக் மை டிரிப் தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இருவரும் அதிகாலை 5:30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் ஏறி நாட்டை விட்டு வெளியேறினர். தாய்லாந்தின் ஃபூகெட்டுக்கு அவர்கள் சென்றனர்.

    இந்தச் சகோதரர்களைப் பிடிக்க சிபிஐ கோரிக்கையின் பேரில் இன்டர்போல் புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

    மேலும் தாய்லாந்து போலீசாரை இந்திய அதிகாரிகள் தொடர்பு கொண்டு சகோதரர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் நீதிமன்றம் அவர்களின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்தது.

    இதற்கிடையே சவுரப் லூத்ரா, கவுரவ் லூத்ரா ஆகியோர் டிசம்பர் 11 அன்று தாய்லாந்து போலீசாரால் கைது செய்து செய்யப்பட்டு புக்கெட்டில் உள்ள தடுப்பு மையதில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் இந்தியாவுக்கு நாடுதாடப்பட்டனர்.

    டெல்லி விமான நிலையத்தில் காவலில் உள்ள இருவரும் காட்டும் புகைப்படத்தை கோவா காவல்துறை வெளியிட்டுள்ளது.

    கோவா போலீஸ் குழு அவர்களை விமான நிலையத்தில் முறையாகக் கைது செய்தது. இருவரும் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   

    • மீட்புப் படையினர் கிளப்பில் தீயை அணைக்க முயன்று கொண்டிருக்கும்போது, மறுபுறம் லூத்ரா சகோதரர்கள் நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டனர்.
    • கிளப்பின் சட்டவிரோத கட்டுமானம் குறித்து ரவி ஹர்மல்கர் என்ற சமூக சேவகர் புகார் அளித்த பிறகு, அதை இடிக்க உத்தரவிடப்பட்டபோதும் கிளப் தொடர்ந்து செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

    கோவாவின் அர்போரா பகுதியில் இயங்கி வந்த, 'பிர்ச் பை ரோமியோ லேன்' இரவு விடுதியில், கடந்த 6ம் தேதி நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் விடுதி ஊழியர்கள் 20 பேர், வாடிக்கையாளர்கள் ஐந்து பேர் என மொத்தம் 25 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில் இந்த விடுதியின் உரிமையாளர்களான லூத்ரா சகோதரர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களை நாடு கடத்தும் பணிகள் நடந்து வருகிறது.

    கிளப்பின் சட்டவிரோத கட்டுமானம் குறித்து ரவி ஹர்மல்கர் என்ற சமூக சேவகர் புகார் அளித்த பிறகு, அதை இடிக்க உத்தரவிடப்பட்டபோதும் கிளப் தொடர்ந்து செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

    முன்னதாக கோவா காவல்துறை நடத்திய விசாரணையில், விபத்து நடந்ததும் தீயணைப்புப் படையினரும் பிற மீட்புப் படையினரும் கிளப்பில் தீயை அணைக்க முயன்று கொண்டிருக்கும்போது, மறுபுறம் லூத்ரா சகோதரர்கள் நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டனர். 

    விபத்து நடந்த சில மணி நேரங்களில் அதிகாலை 1:17 மணிக்கு, இருவரும் மேக் மை டிரிப் தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இருவரும் அதிகாலை 5:30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் ஏறி நாட்டை விட்டு வெளியேறினர். தாய்லாந்தின் ஃபூகெட்டுக்கு அவர்கள் சென்றுள்ளனர்.

    இந்தச் சகோதரர்களைப் பிடிக்க சிபிஐ கோரிக்கையின் பேரில் இன்டர்போல் புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

    மேலும் தாய்லாந்து போலீசாரை இந்திய அதிகாரிகள் தொடர்பு கொண்டு சகோதரர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இந்த நிலையில் சவுரப் லூத்ரா, கவுரவ் லூத்ரா ஆகியோரை இன்று அதி காலை தாய்லாந்து போலீ சார் கைது செய்து உள்ளனர். அவர்கள் இருவரும் புக்கெட்டில் உள்ள தடுப்பு மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடைமுறை தொடங்கப்பட்டு உள்ளன.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, கோவா கிளப்பின் உரிமையாளர்களான லூத்ரா சகோதரர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் குடிவரவு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு அவை முடிந்ததும் இன்று மாலை அல்லது நாளைக்குள் இருவரும் விமானம் மூலம் இந்தியாவுக்குத் திரும்ப அழைத்து வரப்படுவார்கள் என்றனர்.

    லூத்ரா சகோதரர்கள் பாஸ்போர்ட்களை ரத்து செய்வது குறித்து வெளியுறவு அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

    மேலும் திங்களன்று, இதேபோன்ற முறையில் இயங்கி வந்த ரோமியோ கிளப்புக்குச் சொந்தமான இரண்டு இரவு விடுதிகளை அதிகாரிகள் மூடினர்.

    மேலும் இரவு விடுதியின் இணை உரிமையாளரான அஜய் குப்தா டெல்லியில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே லூத்ரா சகோதரர்கள் சார்பில் முன்ஜாமீன் கோரி டெல்லி ரோஹினி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட வணிகப் பயணத்திற்காக தாய்லாந்து சென்றதாக அவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த மனு குறித்து நாளை விசாரணை நடைபெறுகிறது. ஆனால் இருவருக்கும் ஜாமீன் வழங்குவதை கோவா காவல்துறை கடுமையாக எதிர்த்துள்ளது. 

    • கேளிக்கை விடுதியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
    • கட்டிடத்தின் இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர்.

    சாண்டோ டொமிங்கோ:

    கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசு நாட்டின் சாண்டோ டொமிங்கோவில் பிரபல இரவு கேளிக்கை விடுதியான ஜெட் செட் என்னும் விடுதி அமைந்திருந்தது.

    இந்த விடுதிக்கு உள்ளூரைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் கூடுவார்கள்.

    அந்த விடுதியில் கடந்த திங்கட்கிழமை இசைக்கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் ஏராளமானோர் அங்கு கூடினர். இதில், அரசியல்வாதிகள், பேஸ்பால் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    அப்போது திடீரென கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் பலர் சிக்கி கொண்டனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்டனர்.

    சுமார் 12 மணி நேரத்திற்குப் பிறகு இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உயிருடன் சிலர் மீட்கப்பட்டதாக மீட்புக்குழு தெரிவித்தது.

    இந்நிலையில், படுகாயம் அடைந்த 160 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் பலர் இறந்ததால் தற்போது பலி எண்ணிக்கை 218 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் இறந்தவர்களில் பலர் சுற்றுலா பயணிகள் என்பதால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுகிறது. எனவே உடைமைகளை வைத்து அவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர்.

    • கேளிக்கை விடுதியில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர்.
    • அப்போது அங்கு ஆயுதங்களுடன் நுழைந்தவர் அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக சிறைபிடித்தார்.

    ஆம்ஸ்டர்டாம்:

    நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் அருகே அமைந்துள்ள சிறிய நகரம் ஈடி. இந்நகரில் இரவுநேர கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்த கேளிக்கை விடுதியில் இன்று வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர். அப்போது அந்த கேளிக்கை விடுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நபர் அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக சிறைபிடித்தார்.

    தகவலறிந்த அங்கு விரைந்து வந்த போலீசார் அருகிலுள்ள குடியிருப்புகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். தொடர்ந்து பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • பல மணி நேரத்துக்கு பின்னர் பிணைக் கைதிகளில் 3 பேர் விடுவிக்கப்பட்டனர்.
    • கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    நெதர்லாந்தின் ஈத் நகரில் உள்ள இரவு கேளிக்கை விடுதி ஒன்றில் ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்தனர்.போலீசார் விரைந்து வந்து பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பல மணி நேரத்துக்கு பின்னர் பிணைக் கைதிகளில் 3 பேர் விடுவிக்கப்பட்டனர்.

    அதன்பின் 4-வது நபரும் பத்திரமாக வெளியே வந்தார். இதுகுறித்து நெதர்லாந்து போலீசார் கூறும்போது, கடைசி பிணைக் கைதியும் விடுவிக்கப்பட்டார். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போதைய சூழலில் கூடுதல் விவரங்களை தெரிவிக்க இயலாது என தெரிவித்தனர்.

    இதற்கிடையே, இந்த சம்பவத்தில் பயங்கரவாத நோக்கம் இருப்பதாக சந்தேகிக்க எந்த காரணமும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • துருக்கியில் இரவு விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது.
    • இந்த தீ விபத்தில் சிக்கி 29 பேர் உயிரிழந்தனர்.

    இஸ்தான்புல்:

    துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் அமைந்துள்ளது இரவு விடுதி. அந்த விடுதியில் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வந்தது.

    இந்நிலையில், இரவு விடுதியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது என இஸ்தான்புல் கவர்னர் தெரிவித்தார்.

    இந்த தீ விபத்தில் 29 பேர் பலியாகினர் என்றும், தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை என அவர் குறிப்பிட்டார்.

    விசாரணையில், தீ விபத்தில் பலியானோர் ஊழியர்கள் என தெரிய வந்தது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தென் ஆப்பிரிக்காவின் இரவு விடுதியில் 20 பேர் இன்று உயிரிழந்த நிலையில் கிடந்தனர்.
    • 20 பேரின் மர்ம மரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோகன்னஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்காவின் தெற்கு நகரான கிழக்கு லண்டனில் நைட் கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் நிறைய பேர் நேற்று கூடியிருந்தனர்.

    இந்நிலையில், இரவு விடுதியில் இன்று காலை சுமார் 20 பேர் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். அவர்களது மர்ம மரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விடுதியில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனரா அல்லது வேறு ஏதேனும் விவகாரமா என்பது பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.

    ×