என் மலர்
உலகம்

கேளிக்கை விடுதியில் ஆயுதங்களுடன் புகுந்த நபரால் பரபரப்பு: பிணைக்கைதிகளாக பலர் சிறைபிடிப்பு
- கேளிக்கை விடுதியில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர்.
- அப்போது அங்கு ஆயுதங்களுடன் நுழைந்தவர் அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக சிறைபிடித்தார்.
ஆம்ஸ்டர்டாம்:
நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் அருகே அமைந்துள்ள சிறிய நகரம் ஈடி. இந்நகரில் இரவுநேர கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த கேளிக்கை விடுதியில் இன்று வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர். அப்போது அந்த கேளிக்கை விடுதிக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நபர் அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக சிறைபிடித்தார்.
தகவலறிந்த அங்கு விரைந்து வந்த போலீசார் அருகிலுள்ள குடியிருப்புகளில் இருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். தொடர்ந்து பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story






