தென் ஆப்பிரிக்கா - இரவு விடுதியில் 20 பேர் மர்ம மரணம்

தென் ஆப்பிரிக்காவின் இரவு விடுதியில் 20 பேர் இன்று உயிரிழந்த நிலையில் கிடந்தனர்.20 பேரின் மர்ம மரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரவு விடுதி
இரவு விடுதி
Published on

ஜோகன்னஸ்பர்க்:

தென் ஆப்பிரிக்காவின் தெற்கு நகரான கிழக்கு லண்டனில் நைட் கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் நிறைய பேர் நேற்று கூடியிருந்தனர்.

இந்நிலையில், இரவு விடுதியில் இன்று காலை சுமார் 20 பேர் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். அவர்களது மர்ம மரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விடுதியில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டனரா அல்லது வேறு ஏதேனும் விவகாரமா என்பது பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com