நெதர்லாந்து கேளிக்கை விடுதியில் சிறை பிடிக்கப்பட்ட பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிப்பு

பல மணி நேரத்துக்கு பின்னர் பிணைக் கைதிகளில் 3 பேர் விடுவிக்கப்பட்டனர்.கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் விசாரணை நடந்து வருகிறது.
நெதர்லாந்து கேளிக்கை விடுதியில் சிறை பிடிக்கப்பட்ட பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிப்பு
Published on

நெதர்லாந்தின் ஈத் நகரில் உள்ள இரவு கேளிக்கை விடுதி ஒன்றில் ஆயுதங்களுடன் புகுந்த மர்ம நபர் அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்தனர்.போலீசார் விரைந்து வந்து பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பல மணி நேரத்துக்கு பின்னர் பிணைக் கைதிகளில் 3 பேர் விடுவிக்கப்பட்டனர்.

அதன்பின் 4-வது நபரும் பத்திரமாக வெளியே வந்தார். இதுகுறித்து நெதர்லாந்து போலீசார் கூறும்போது, கடைசி பிணைக் கைதியும் விடுவிக்கப்பட்டார். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போதைய சூழலில் கூடுதல் விவரங்களை தெரிவிக்க இயலாது என தெரிவித்தனர்.

இதற்கிடையே, இந்த சம்பவத்தில் பயங்கரவாத நோக்கம் இருப்பதாக சந்தேகிக்க எந்த காரணமும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள நபரிடம் விசாரணை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com