search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய ஒற்றுமை யாத்திரை"

    • பா.ஜ.க. மக்களை ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கிறது.
    • காங்கிரஸ் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்றார் ராகுல் காந்தி.

    போபால்:

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை தற்போது மத்திய பிரதேசத்தை அடைந்துள்ளது. இங்கு மொரேனா பகுதியில் இன்று நடந்த யாத்திரையில் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    நாட்டின் விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின் உற்பத்தித் துறை ஆகிய அனைத்தும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அனைத்து செல்வங்களும் ஒரு சில தொழிலதிபர்கள் கையில் உள்ளது.

    நாட்டில் வெறுப்பு மற்றும் வன்முறை பரவுவதற்கு என்ன காரணம் என மக்களிடம் கேட்டேன். அதற்குக் காரணம் அநீதி என அனைவரும் பதிலளித்தனர். நாட்டில் மக்களுக்கு பல்வேறு வழிகளில் அநீதி இழைக்கப்படுகிறது. அதனால்தான் இந்தியாவில் வெறுப்பு பரவுகிறது.

    ஒரு பக்கம் ஜாதி, மதத்தின் பெயரால் மக்களை பா.ஜ.க. பிரிக்கிறது. மறுபுறம் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. யாத்திரை மத்தியப் பிரதேசத்தின் புனித பூமிக்குள் நுழைந்துள்ளது.

    நாட்டில் 50 சதவீதம் ஓபிசி, 15 சதவீதம் தலித் மற்றும் 8 சதவீதம் பழங்குடி மக்கள் உள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் 73 சதவீதம் ஆகும். நாட்டின் பெரிய நிறுவனங்களில் ஓபிசி, தலித் அல்லது பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைக்கூட காணமுடியாது.

    விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை காங்கிரஸ் சட்டப்பூர்வமாக வழங்கும் என குறிப்பிட்டார்.

    • கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    • ராகுல்காந்தியுடன் இணைந்து கைகோர்த்து ஊர்வலமாக நடந்து சென்றார்.

    உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள ஜமால்பூரில் நடந்த இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி இன்று கலந்து கொண்டார்.

    இந்த யாத்திரை நிகழ்ச்சி அம்ரோஹா, சம்பல், புலந்த்ஷாஹர், அலிகார், ஹத்ராஸ் மற்றும் ஆக்ரா வழியாக பதேபூர் சிக்ரி செல்கிறது.

    இதில், ராகுல்காந்தியுடன் திறந்த ஜீப்பில் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் அமர்ந்து கொண்டு தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தவாறு சென்றனர்.

    காங்கிரஸ்- சமாஜ்வாதி கட்சி இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வெற்றி அடைந்து உள்ளதை தொடர்ந்து யாத்திரை நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது.

    அதை தொடர்ந்து இன்று கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த யாத்திரை இந்தியா கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.

    இந்திய ஒற்றுமை யாத்திரை உ.பி. ஆக்ரா நோக்கி மாலை 3.30 மணிக்கு வந்தது. அப்போது, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்யாதவ், கலந்து கொண்டார்.

    ராகுல்காந்தியுடன் இணைந்து கைகோர்த்து ஊர்வலமாக நடந்து சென்றார். இதனை பார்த்த தொண்டர்கள் உற்சாக கரகோஷமிட்டனர்.

    உத்தரபிரதேசம் ஆக்ராவில் நடந்த பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் பங்கேற்ற சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், " பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். வரும் நாட்களில், ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பதே மிகப்பெரிய சவாலாகும். பாஜகவால் சிதைக்கப்பட்ட டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்ற இந்தியா கூட்டணி பாடுபடும்" என்றார்.

    • இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு வரும் 26-ம் தேதி முதல் மார்ச் 1 வரை 5 நாட்கள் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
    • ராகுல் காந்தி மார்ச் 2ம் தேதி ராஜஸ்தானில் இருந்து இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை தொடங்குகிறார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை இன்று உத்தர பிரதேசத்தில் நுழைந்துள்ளது. 

    இந்நிலையில், வரும் 26-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை 5 நாட்கள் யாத்திரைக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 26-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை 5 நாட்கள் யாத்திரைக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடையே உரையாற்றுவதற்காக ராகுல் காந்தி லண்டன் செல்கிறார். 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் மாணவர்களிடையே உரையாற்ற உள்ளார். அதன்பின், நாடு திரும்பும் அவர் டெல்லியில் முக்கிய கூட்டங்களில் கலந்துகொள்கிறார். மார்ச் 2-ம் தேதி ராஜஸ்தானின் டோல்பூரில் இருந்து மீண்டும் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்குகிறார் என குறிப்பிட்டுள்ளார்.

    • பல்வேறு மாநிலங்களை கடந்து வந்த பாத யாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
    • காஷ்மீரின் ஸ்ரீநகரில் மிகவும் முக்கிய பகுதியான லால் சவுக்கில் ராகுல்காந்தி தேசியக்கொடி ஏற்றினார்.

    ஸ்ரீநகர்:

    காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, அரியானா, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை கடந்து தற்போது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

    சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டரை கடந்த ராகுல் காந்தியின் பாத யாத்திரை நாளை நிறைவடைகிறது. காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷெர் - ஐ - காஷ்மீர் கிரிக்கெட் மைதானத்தில் நாளை மதியம் 12 மணிக்கு நடைபெறும் பிரம்மாண்ட கூட்டத்துடன் ராகுல் காந்தியின் யாத்திரை நிறைவடைகிறது.

    இந்நிலையில், பாத யாத்திரையின் இறுதி நிகழ்வாக காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் சதுர்க்கத்தில் ராகுல் காந்தி இன்று தேசியக் கொடி ஏற்றினார்.

    இதுதொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், லால் சவுக்கில் தேசியக்கொடி ஏற்றியதன் மூலம் இந்தியாவுக்கு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. வெறுப்பு தோல்வியடையும், அன்பு எப்போதும் வெற்றி பெறும். இந்தியாவில் நம்பிக்கையின் புதிய விடியல் ஏற்படும் என பதிவிட்டுள்ளார்.

    • வயநாடு மாவட்டம் பழங்குடிகள் அதிகம் வசிக்க கூடிய பகுதியாகும்.
    • அதிகாரம் பெற்ற பழங்குடி சமூகமே வலிமையான இந்தியாவின் அடித்தளமாகும்.

    புதுடெல்லி:

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். இதில் அவர் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்வானார்.

    வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ராகுல்காந்தி எம்.பி. அடிக்கடி வயநாடு தொகுதிக்கு நேரில் வந்து மக்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி குறைகளை கேட்டறிகிறார்.

    மேலும் தனது தொகுதியில் மக்களுக்கான திட்டங்களை கேட்டு பெற்று அதனை நிறைவேற்றியும் கொடுத்து வருகிறார்.

    இந்த வயநாடு மாவட்டம் பழங்குடிகள் அதிகம் வசிக்க கூடிய பகுதியாகும். தற்போது பாதயாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி வயநாட்டில் யாத்திரை மேற்கொண்ட போது பழங்குடி மக்களையும் சந்தித்து பேசினார்.

    இந்த நிலையில் கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியினரின் அடிப்படை ஆவணங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு உள்ளன. அந்தவகையில் நாட்டிலேயே முதல் மாவட்டமாக வயநாடு மாறி இருக்கிறது.

    இந்த சாதனையை நிகழ்த்தியதற்காக மாவட்ட நிர்வாகத்துக்கு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    'அதிகாரம் பெற்ற பழங்குடி சமூகமே வலிமையான இந்தியாவின் அடித்தளமாகும். அனைத்து பழங்குடியினருக்கும் அடிப்படை ஆவணங்களை வழங்கியது மற்றும் டிஜிட்டல் மயமாக்கியதில் இந்தியாவின் முதல் மாவட்டம் வயநாடு என்பதில் பெருமை கொள்கிறேன்' என குறிப்பிட்டு இருந்தார்.

    • லகன்பூர் எல்லை வழியாக காஷ்மீருக்குள் ராகுல்காந்தி நுழைந்தார்.
    • ராகுல்காந்தியின் பாதயாத்திரை வருகிற 30-ந் தேதி முடிவடைகிறது.

    ஸ்ரீநகர்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.

    கடந்த செப்டம்பர் 7-ந் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம், டெல்லி, அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக பாதயாத்திரை சென்றார்.

    பஞ்சாப்பில் நடந்து வந்த பாத யாத்திரை நேற்று நிறைவு பெற்றது. அங்கிருந்த லகன்பூர் எல்லை வழியாக காஷ்மீருக்குள் ராகுல்காந்தி நுழைந்தார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ராகுல்காந்தி இன்று தனது யாத்திரையை காஷ்மீரில் இருந்து தொடங்கியது. கதுவா மாவட்டம் ஹட்லி மோர் என்ற இடத்தில் இருந்து யாத்திரை புறப்பட்டது.

    ராகுல்காந்தி வெள்ளை நிற டி.சர்ட்டுக்கு மேல் கருப்பு கோட் அணிந்திருந்தார். யாத்திரை காலை 7 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் மோசமான வானிலை காரணமாக 1¼ மணி நேரம் தாமதமாக யாத்திரை தொடங்கியது. பாத யாத்திரையில் ராகுல் காந்தியுடன் ஜம்மு-காஷ்மீர் மாநில தலைவர் விகார் ரசூல்வானி, காங்கிரஸ் தலைவர்கள், சிவசேனா கட்சி தலைவர் சஞ்சய் ராவத் உள்ளிட்ட தலைவர்கள், ஏராளமான தொண்டர்கள் நடந்து சென்றனர்.

    காஷ்மீரில் ராகுல்காந்தியின் பாதயாத்திரை தொடங்கியதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ராகுல்காந்தியை சுற்றி போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் அடங்கிய பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    யாத்திரை செல்லும் ஜம்மு-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் பதாகைகள், மாலைகளை ஏந்தியவாறு ராகுல்காந்தியை வரவேற்க காத்திருந்தனர். ராகுல்காந்தியின் பாதயாத்திரை வருகிற 30-ந் தேதி முடிவடைகிறது.

    • பல மாநிலங்களைக் கடந்து வந்த இந்த யாத்திரை இன்று காஷ்மீரில் நுழைந்தது.
    • காஷ்மீரின் லகான்பூர் வந்தடைந்த நிலையில் ஏராளமானோர் தீப்பந்தம் ஏந்தி ராகுலுடன் வந்தனர்.

    ஸ்ரீநகர்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கினார். பல மாநிலங்களைக் கடந்து பஞ்சாப்பில் நடந்து வந்த இந்த யாத்திரை நேற்று இமாசல பிரதேசத்தில் நுழைந்தது. கடும் பனியை பொருட்படுத்தாமல் ஏராளமானோர் நடந்தனர்.

    இந்நிலையில், இந்த யாத்திரை இன்று காஷ்மீரை வந்தடைந்தது. காஷ்மீரின் லகான்பூர் வந்தடைந்த நிலையில் ஏராளமானோர் தீப்பந்தம் ஏந்தி ராகுலுடன் வந்தனர்.

    காஷ்மீர் வந்தடைந்த ராகுலின் பாதயாத்திரையில் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பங்கேற்றார். ராகுல் காந்தியை வரவேற்று அவர் கலந்துரையாடினார்.

    • ராகுல்காந்தியின் பாத யாத்திரை வெள்ளிக்கிழமை 100 வது நாளை நிறைவு செய்கிறது.
    • இது அரசியல் யாத்திரை அல்ல, மக்களை ஒன்றிணைக்கும் பிரச்சாரம்.

    சவாய் மாதோபூர்:

    இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கடந்த செப்டம்பர் 7ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, பாதயாத்திரை நடத்தி வருகிறார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேச மாநிலங்களை தாண்டி இந்த யாத்திரை டிசம்பர் 4 ஆம் தேதி ராஜஸ்தானுக்குள் நுழைந்து நடைபெற்று வருகிறது. வரும் வெள்ளிக்கிழமை இந்த பாத யாத்திரை 100வது நாளை நிறைவு செய்கிறது. இதையொட்டி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் கூறியுள்ளதாவது:

    பாரத் ஜோடோ யாத்திரையை நடத்தி வரும் ராகுல் காந்தி, தினமும் 30 கிலோமீட்டர் நடந்து வருகிறார். மக்கள் அவரைப் பாராட்டுகிறார்கள், அவருடன் இணைந்து நடந்து வர முயற்சிக்கிறார்கள். அனைத்துப் பிரிவினரும் யாத்திரையில் பங்கேற்று வருகின்றனர். ராகுல் காந்தி தொடர்ந்து 100 நாட்களாக பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்பதன் மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளது,

    இதனால் பாஜக மிகவும் வருத்தமடைந்துள்ளது. இவ்வளவு பேர் எப்படி யாத்திரையில் இணைக்கிறார்கள் என்பது அந்த கட்சிக்கு கவலை அளிக்கிறது. குழந்தைகள், முதியவர்கள், விவசாயிகள், முன்னாள் ராணுவத்தினர், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோரை ராகுல் நேரில் சந்தித்து பேசுகிறார். அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அவர் பணியாற்றி வருகிறார். இது அரசியல் யாத்திரை அல்ல, நாட்டை மற்றும் மக்களை ஒன்றிணைக்கும் பிரச்சாரம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பாடகர் சுனிதி சவுஹான் தலைமையிலான இசைக் குழுவினர் இந்த இசை நிகழ்ச்சியை அளிக்க இருக்கின்றனர்.
    • யாத்திரையின் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் பொய்களை ராகுல் காந்தி அம்பலப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார் மத்திய மந்திரி நமோநாராயண் மீனா.

    ஜெய்ப்பூர்:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் ஸ்ரீநகர் வரையில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

    அவர் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேச மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ள ராஜஸ்தானில் நடைபயணத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்திய ஒற்றுமை யாத்திரையின் 100-வது நாளை கூடுதல் சிறப்புடன் கொண்டாட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

    அதன்படி, 100-வது நாளான வரும் 16-ம் தேதி ஜெய்ப்பூரில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாடகர் சுனிதி சவுஹான் தலைமையிலான இசைக் குழுவினர் இந்த இசை நிகழ்ச்சியை அளிக்க இருக்கின்றனர். இதனை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த இந்த 100-வது நாள் யாத்திரையில், இமாச்சலப் பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு, துணை முதல்-மந்திரிமுகேஷ் அக்னிஹோத்ரி, காங்கிரஸ் கட்சியின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

    இந்திய ஒற்றுமை யாத்திரை மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருதாகத் தெரிவித்துள்ள முன்னாள் மத்திய மந்திரி நமோநாராயண் மீனா, இந்த யாத்திரையின் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் பொய்களை ராகுல்காந்தி அம்பலப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

    ராஜஸ்தானில் 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற உள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை, வரும் 21-ம் தேதி அரியானாவிற்கு செல்ல இருக்கிறது. இந்த யாத்திரை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஜம்மு காஷ்மீரில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராகுல் காந்தி முன்னிலையில் தேசிய கீதத்திற்கு பதிலாக வேறு பாடல், வேறு மொழியில் ஒலிபரப்பப்படுகிறது.
    • இந்தியாவை ஒன்றிணைப்பவர்களின் தேசிய கீதமா இது? என பாஜக தேசிய செயலாளர் கிண்டலடித்துள்ளார்.

    மும்பை:

    காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தனது யாத்திரையை தொடங்கிய அவர், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா வழியாக தற்போது மகாராஷ்டிராவில் யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த யாத்திரையின்போது, அந்தந்த பகுதி மக்களுடன் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் வாசிம் மாவட்டத்தில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நிகழ்ச்சி ஒன்றில் தேசிய கீதத்திற்கு பதிலாக வேறு ஒரு பாடல் இசைக்கப்பட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. பாஜக தலைவர்கள் இதுதொடர்பான வீடியோவை வெளியிட்டு ராகுலையும், ஒற்றுமை யாத்திரையையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    கூட்டத்தின் நிறைவில் தேசிய கீதம் என்று ராகுல் காந்தி அறிவிக்கிறார். அப்போது தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக அனைவரும் எழுந்து நிற்கின்றனர். ஆனால் தேசிய கீதத்திற்கு பதிலாக வேறு பாடல் வேறு மொழியில் ஒலிபரப்பப்படுகிறது. இதைப் பார்த்து குழப்பமடைந்த ராகுல் காந்தி, அருகில் நின்றிருந்த காங்கிரஸ் நிர்வாகிகளிடம் சைகை மூலம் தவறை சுட்டிக் காட்டுகிறார். அவர்கள், பாடல் பிளே செய்யும் மைக் செட் பொறுப்பாளரை அழைத்து சொல்கிறார்கள். இதையடுத்து உடனடியாக தவறு சரி செய்யப்பட்டு, முறையான தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சி குறித்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாஜக தேசிய செயலாளர் சுனில் தியோதர், இந்தியாவை ஒன்றிணைப்பவர்களின் தேசிய கீதமா இது? என கிண்டலடித்துள்ளார். அதே வீடியோவை பகிர்ந்துள்ள தமிழக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, "ராகுல் காந்தி, என்ன இது?" என்று கூறி உள்ளார்.

    • காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி தற்போது கர்நாடகாவில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
    • அப்போது பேசிய அவர், எதையெல்லாம் விற்க முடியுமோ அனைத்தையும் பா.ஜ.க.வினர் விற்கின்றனர் என்றார்.

    பெங்களூரு:

    காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி தற்போது கர்நாடகாவில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

    கர்நாடகாவின் ஹிரியூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க. அரசை கடுமையாக சாடினார். அப்போது அவர் கூறியதாவது:

    நாட்டிலேயே ஊழல் மிகுந்த மாநில அரசாக கர்நாடக அரசுதான் உள்ளது. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 40 சதவீத கமிஷன்களை அவர்கள் பெறுகின்றனர். 1,300 தனியார் பள்ளிகளிடம் 40 சதவீத கமிஷன்கள் பெறப்பட்டுள்ளது.

    நான் சொன்னதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். பா.ஜ.க. எம்.எல்.ஏவே இந்தக் கருத்தை கூறியிருக்கிறார். முதல் மந்திரி பதவி 2,500 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டதாக பாஜக எம்.எல்.ஏவே ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார். ரூ.80 லட்சத்திற்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பதவி விற்பனை செய்யப்பட்டுள்ளது. கல்லூரி உதவி பேராசிரியர்களின் பணி விற்பனை செய்யப்படுகிறது.

    எதையெல்லாம் விற்க முடியுமோ அனைத்தையும் பாஜகவினர் விற்கின்றனர் என தெரிவித்தார்.

    • தசரா, விஜயதசமி பண்டிகை காரணமாக 2 நாட்கள் ராகுல்காந்தி ஒய்வெடுத்தார்.
    • மண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் இருந்து பாதயாத்திரை தொடங்குகிறது.

    பெங்களூரு :

    இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் ராகுல்காந்தி பாதயாத்திரை நடத்தி வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய பாதயாத்திரை கேரளா சென்று நிறைவடைந்து தற்போது கர்நாடகத்தில் நடந்து வருகிறது. தசரா, விஜயதசமி பண்டிகை காரணமாக நேற்று முன்தினமும், நேற்றும் 2 நாட்கள் ராகுல்காந்தி ஒய்வெடுத்தார்.

    மைசூரு அருகே உள்ள கபினி ரெசார்ட்டில் ராகுல்காந்தி தங்கி உள்ளார். இந்த நிலையில் ராகுல்காந்தியின் பாதயாத்திரையில் பங்கேற்ற அகில இந்திய காங்கிரஸ் தலைவியும், ராகுல்காந்தியின் தாயுமான சோனியா காந்தி கடந்த 2 நாட்களுக்கு முன்பு மைசூரு வந்தார். அவரும் ரெசார்ட்டில் தான் தங்கி உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று ராகுல், சோனியா காந்தி எச்.டி.கோட்டையில் உள்ள நாகரஒலே வனப்பகுதியில் சபாரி சென்று வனவிலங்குகளை பார்த்து ரசித்தனர். பின்னர் எச்.டி.கோட்டை தாலுகா பேகூர் என்ற கிராமத்தில் உள்ள பீமனகோலி கோவிலில் தசரா பண்டிகையையொட்டி சோனியா காந்தி சாமி தரிசனம் செய்தார். இந்த நிலையில் 2 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் ராகுல்காந்தி இன்று (வியாழக்கிழமை) தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்குகிறார். பாதயாத்திரையில் சோனியா காந்தியும் பங்கேற்கிறார். மண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் இருந்து பாதயாத்திரை தொடங்குகிறது.

    ×