search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India Unity Yatra"

    • கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    • ராகுல்காந்தியுடன் இணைந்து கைகோர்த்து ஊர்வலமாக நடந்து சென்றார்.

    உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள ஜமால்பூரில் நடந்த இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி இன்று கலந்து கொண்டார்.

    இந்த யாத்திரை நிகழ்ச்சி அம்ரோஹா, சம்பல், புலந்த்ஷாஹர், அலிகார், ஹத்ராஸ் மற்றும் ஆக்ரா வழியாக பதேபூர் சிக்ரி செல்கிறது.

    இதில், ராகுல்காந்தியுடன் திறந்த ஜீப்பில் அவரது சகோதரி பிரியங்கா காந்தியும் அமர்ந்து கொண்டு தொண்டர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்தவாறு சென்றனர்.

    காங்கிரஸ்- சமாஜ்வாதி கட்சி இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வெற்றி அடைந்து உள்ளதை தொடர்ந்து யாத்திரை நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது.

    அதை தொடர்ந்து இன்று கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த யாத்திரை இந்தியா கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.

    இந்திய ஒற்றுமை யாத்திரை உ.பி. ஆக்ரா நோக்கி மாலை 3.30 மணிக்கு வந்தது. அப்போது, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ்யாதவ், கலந்து கொண்டார்.

    ராகுல்காந்தியுடன் இணைந்து கைகோர்த்து ஊர்வலமாக நடந்து சென்றார். இதனை பார்த்த தொண்டர்கள் உற்சாக கரகோஷமிட்டனர்.

    உத்தரபிரதேசம் ஆக்ராவில் நடந்த பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் பங்கேற்ற சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், " பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். வரும் நாட்களில், ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பதே மிகப்பெரிய சவாலாகும். பாஜகவால் சிதைக்கப்பட்ட டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்ற இந்தியா கூட்டணி பாடுபடும்" என்றார்.

    ×