search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அய்யப்பன் கோவில்"

    • திருப்பூரில் சுவாமி ஊர்வலமும் நடக்கிறது.
    • ராஜபாளையம் உமாசங்கரின் இசையெனும் இறைமை சொற்பொழிவு நடக்கிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் காலேஜ் ரோடு அய்யப்பன் கோவிலில், 64ம் ஆண்டு மண்டலபூஜை விழா தொடங்கி உள்ளது. வருகிற 1-ந்ேததி கொடியேற்றம், கணபதி ேஹாமம் மற்றும் பல்வேறு பூஜைகள் நடக்கின்றன. 6-ந்தேதி பவானி கூடுதுறையில் ஆராட்டு விழாவும், அன்று மாலை, திருப்பூரில் சுவாமி ஊர்வலமும் நடக்கிறது.மண்டலாபிேஷக பூஜையை முன்னிட்டு தினமும் மாலை 6:30 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று கோவை உமாமகேஸ்வரியின் தாயுமான தலைவன் என்ற பக்தி சொற்பொழிவு. நாளை 26-ந்தேதி பட்டிமன்ற பேச்சாளர் ரவிக்குமாரின், எரிகிற கற்பூரம் ஆவேனோ பக்தி சொற்பொழிவு, 27-ந்தேதி, பட்டிமன்ற பேச்சாளர் ஐஸ்வர்யாவின் எண்ணிய முடிதல் வேண்டும் சொற்பொழிவு, 28-ந்தேதி உழவன் பக்தி இன்னிசை குழுவின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.

    29-ந்தேதி திருப்பூர் ஸ்ரீசத்திய சாய் சமிதியின் பஜனை பாடல்கள், 30-ந்தேதி நட்டுவனார் கார்த்திகை பிள்ளையின் இறைவன் செவிமடுத்த செந்தமிழ் வேதம் சொற்பொழிவு, டிசம்பர் 7-ந்தேதி சுண்டமேடு சபரி சாஸ்தா குழுவினரின் அய்யப்பன் பஜானமிர்தம், 10 -ந்தேதி ஸ்ரீகாவியா நிர்த்ராலயாவின் பரதநாட்டியம் நடக்கிறது. 11ந்தேதி கொங்கு தென்றல் மஞ்சுநாதன் சொற்பொழிவு, 12ந்தேதி சங்கரநாராயணனின் நால்வர் போற்றிய நன்னெறி பக்தி சொற்பொழிவு , 13 -ந்தேதி சங்கரநாராயணனின் ஆன்மிக வளர்ச்சிக்கு பெருந்துணை புரிவது பக்தியா? தொண்டா? பட்டிமன்றம் நடக்கிறது.

    14-ந்தேதி கோவை கவிதாவின் பக்தியோகமே வெற்றியோகம் சொற்பொழிவு, 15-ந்தேதி டி.கே.சி., கல்சுரல் நிகழ்ச்சி, 16ந்தேதி உடுக்கைபாட்டு அய்யப்பன் சரித்திரம் நிகழ்ச்சி நடக்கிறது.19-ந்தேதி வையத்துள் நல்வாழ்வு வாழ பெரிதும் தேவை, அருட்செல்வமா? பொருட்செல்வமா? என்ற பட்டிமன்றம், 21-ந்தேதி பேராசிரியர் தங்க ரவிசங்கரின் அன்பெனும் பிடியுள் சொற்பொழிவு, 22-ந்தேதி ராஜபாளையம் உமாசங்கரின் இசையெனும் இறைமை சொற்பொழிவு நடக்கிறது.

    24-ந்தேதி சிங்காரவேலு பட்டிமன்றம், 25-ந்தேதி பட்டிமன்ற பேச்சாளர் புவனேஷ்வரியின் இதயம் என்றும் உனக்காக சொற்பொழிவு, 26-ந்தேதி திமிரி சதாசிவத்தின், வேலை வணங்குவதே வேலை ஆன்மிக சொற்பொழிவு ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    • ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் சபரிமலை யாத்திரை பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.
    • சபரிமலையில் கடைப்பிடிப்பதை போன்ற சுயகட்டுப்பாடு, ஒழுக்க நெறியுடன் போதிக்கப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை முதல் நாளான இன்று ஏராளமான அய்யப்ப பக்தர்கள் சபரி மலை யாத்திரை செல்வதற்கு மாலை அணிந்து கொண்ட னர். குருவடியார் மோகன் சுவாமி பக்தர்களுக்கு மாலை அணிவித்தார்.

    கோவில் சன்னதி இன்று காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், தீபாரா தனை நடந்தது. தொடர்ந்து வல்லபை விநாயகர், அய்யப்பன், மஞ்சமாதா சன்னதிகளில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    இன்று முதல் 48 நாட்க ளும் இரவு பஜனை, கூட்டு பிரார்த்தனை, அன்னதானம் நடைபெறும். முன்னதாக கோவிலில் மக்கள் நலமுடன் வாழ, மக்களுக்கு தேவை யான அளவு தண்ணீர் கிடைக்க மழை வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை வல்லபை அய்யப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தனர்.

    இது குறித்து வல்லபை அய்யப்பன் கோவில் தலைமை குருக்கள் மோகன் சுவாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரி மலையில் உள்ள அய்யப்பன் ஆலயம் போல இந்த ஆலயமும் அமைந் துள்ளது. ஆகவே இன்று கார்த்திகை முதல்நாளில் தரிசனம் செய்வதற்காகவும் மாலை அணிந்து கொள்வ தற்காகவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர் கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். மேலும் சபரிமலை செல்ல முடியாத சாமிமார்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து தங்களின் இருமுடியை ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் ஆலயத்தில் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக பிளாஸ்டிக் விழிப்பு ணர்விற்காக இருமுடிப்பை யில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதில்லை. புகையிலை பழக்கம் உள்ள வர்களும், 41 நாட்களுக்கு குறைவாக விரதம் இருப்ப வர்களுக்கும் இருமுடி கட்டப்படுவதில்லை.

    சபரிமலையில் கடைப்பிடிப்பதை போன்ற சுயகட்டுப்பாடு, ஒழுக்க நெறியுடன் போதிக்கப்படுகிறது

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் மாணவர்கள் வழிபாடு நடத்தினர்.
    • அரசுப் பொதுத்தேர்வை நல்ல முறையில் எழுதி சிறப்பான மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற சிறப்பு பூஜைகள் நடந்தன.

    ராமநாதபுரம்

    ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் அரசுப் பொதுத் தேர்வை நல்ல முறையில் எழுதி சிறப்பான மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற சிறப்பு பூஜைகள் நடந்தன.

    தலைமை குருக்கள் மோகன் ஆன்மீக சொற்பொழிவாற்றினார். இந்த பூஜையில் ராமநாதபுரம், ரகுநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகள் ஆலயத்தின் தலைமை குருக்கள் மோகன் ஆலோசனையில் வல்லபை அய்யப்பன் கோவில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்தனர்.

    • ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் பேட்டை துள்ளல், ஆராட்டு விழா நடந்தது.
    • விழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.



    ராமநாதபுரம் அருகே ெரகுநாதபுரம் சித்திரவல்லபை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு இன்று காலை உற்சவருக்கு 16 வகையான அபிஷேகதத்துடன் ஆராட்டு விழா நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரத்தில் புகழ் பெற்ற வல்லபை அய்யப்பன் ஆலயம் உள்ளது. எருமேலிக்கு அடுத்தபடியாக பேட்டை துள்ளல் விழாவும், பம்பைக்கு அடுத்தபடியாக ஆராட்டுவிழாவும் ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. தென் மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு ஊர்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 ஆண்டுகள் கொரோனா கட்டுப்பாடு காரணமாக கோவில் வளாகத்திற்குள் எளிமையாக மண்டல பூஜை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தற்போது கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டதால் வெகு விமர்சையாக நடத்த முடிவு செய்தனர்.

    கார்த்திகை மாதம் முதல் நாளில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கோவிலில் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த டிச. 18-ந்தேதி மண்டல பூஜை விழாவுக்கான கொடியேற்றம் நடந்தது. நேற்று 26-ந்தேதி மாலை கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க பள்ளி வேட்டை புறப்பாடு (நகர் ஊர்வலம்) நடந்தது. அப்போது கோவில் நடை சாத்தப்பட்டது.

    இன்று மண்டல பூஜையை முன்னிட்டு காலை 5 மணிக்கு தலைமை குருக்கள் ஆர்.எஸ்.மோகன்சுவாமி தலைமையில் கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் நூற்றுக்கணக்கான பக்தர்கள்

    ரெகுநாதபுரம் முத்துநாச்சியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, கோவிலிலிருந்து அய்யப்ப பக்தர்கள் ரெகுநாதபுரம் வீதிகளின் வழியாக ஆடிப்பாடி, வேடமிட்டு, வண்ணக்கலவை பூசி அய்யப்பா முழக்கத்துடன் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி நடத்தினர். அலங்காரம் செய்யப்பட்ட வல்லபை அய்யப்பன் உற்சவர் பஸ்மகுளத்திற்கு பக்தர்கள் ஊர்வலமாக சுமந்து சென்று அங்கு உற்சவருக்கு 16 வகையான அபிஷேகதத்துடன் ஆராட்டு விழா நடந்தது. தொடர்ந்து சன்னிதானத்தின் முன்புறம் உள்ள தங்கமுலாம் பூசப்பட்ட கொடி கம்பத்தில் கொடியிறக்கம் செய்யப்பட்டது. அப்போது பக்தர்கள் சாமியே சரணம் அய்யப்பா என்று பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனர். இதையடுத்து மூலவருக்கு 33 வகையான மகா அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனை, பஜனை நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

    வருகிற 31-ந்தேதி காலையில் இருமுடி கட்டுதலும். இரவு சிறப்பு பஜனை, சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு சபரிமலை யாத்திரை புறப்பாடு நடக்கிறது.

    இதற்கான சிறப்பான ஏற்பாடுகளை வல்லபை அய்யப்பன் சேவை நிலையம் அறக்கட்டளை நிறுவனர் ஆர்.எஸ். மோகன்சுவாமி ஆலோசனையின் பேரில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • 63ம் ஆண்டு மண்டல பூஜை விமரிசையாக நடந்து வருகிறது.
    • மண்டல பூஜை விழாவை தொடர்ந்து தினமும் மாலை 6:45 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

    திருப்பூர் :

    திருப்பூர் ஸ்ரீஅய்யப்பன் கோவிலில், 63ம் ஆண்டு மண்டல பூஜை விமரிசையாக நடந்து வருகிறது. ஆராட்டு உற்சவம், ஊர்வலம் நிறைவடைந்துள்ளது.

    மண்டல பூஜையை தொடர்ந்து கோவிலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது.நான்காவது வார அன்னதானம் நேற்று முன்தினம் கோவில் வளாகத்தில் நடந்தது. ஸ்ரீசபரி ஐயப்ப சேவா டிரஸ்ட் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    அவல் பாயாசம், போண்டாவுடன் அறுசுவை உணவு பறிமாறப்பட்டது. பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, அன்னதானத்தில் பங்கேற்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள கரசேவகர்கள், மாலை வரை அன்னதானம் வழங்கும் பணியை தொடர்ந்தனர்.

    ஸ்ரீஅய்யப்பன் பக்தஜன சங்கம், ஸ்ரீதர்ம சாஸ்தா டிரஸ்ட் நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மண்டல பூஜை விழாவை தொடர்ந்து தினமும் மாலை 6:45 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

    • ஆலங்குடி அய்யப்பன் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது
    • உலக நன்மைக்காகவும், நோய் நொடி இன்றி மக்கள் வாழவும் நல்ல மழை பெய்து வேளாண்மை செழிக்கவும் வேண்டி ஒரே நேரத்தில் விளக்கேற்றி வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ள அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் அப்பகுதியைச்சேர்ந்த அய்யப்ப பக்தர்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள், கூட்டு வழிபாட்டு பிரார்த்தனைகளுடன் திருவிளக்கு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.

    கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்பின் காரணமாக இக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெறாமல் இருந்தது.

    மேலும் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 19-ந்தேதி அன்று ஆலங்குடி அய்யப்பன் கோவிலில் திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்று வரக்கூடிய நிலையில் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனாவால் விளக்கு பூஜை நடத்தப்படவில்லை.

    இந்நிலையில் நேற்று 18 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது. இதில் 301 பெண்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்காகவும், நோய் நொடி இன்றி மக்கள் வாழவும் நல்ல மழை பெய்து வேளாண்மை செழிக்கவும் வேண்டி ஒரே நேரத்தில் விளக்கேற்றி வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

    இந்த திருவிளக்கு பூஜையுடன் கார்த்திகை சோமவார பிரதோஷமும் சேர்ந்து வந்தது தனி சிறப்பாக பார்க்கப்பட்டது. மேலும் 18 படிகளும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு அய்யப்பனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாதரனை காட்டி சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது.

    • வருகிற 14-ந் தேதி காலை கணபதி ேஹாமம், மாலையில் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது.
    • முக்கிய வீதிகள் வழியாக சென்று ரத ஊர்வலம் அய்யப்பன் கோவிலை சென்றடைகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் ஸ்ரீஅய்யப்பன் கோவிலில், ஆண்டு தோறும் மண்டல பூஜை விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு மண்டல பூஜை நாளை மறுநாள் 14-ந் தேதி துவங்குகிறது. அய்யப்ப சுவாமி ஆறாட்டு விழா 14-ந்தேதி துவங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது.

    வருகிற 14-ந் தேதி காலை கணபதி ேஹாமம், மாலையில் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. மகா கணபதி ேஹாமம், நவகலச அபிேஷகம், 108 வலம்புரி சங்காபிேஷகம், பறையெடுப்பு, மகா விஷ்ணு பூஜை, உற்சவ பலிபூஜை, பகவதி சேவை, தாய்பகை மேளம், பள்ளிவேட்டை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    வருகிற 19 -ந் தேதி காலை 8மணிக்கு அய்யப்ப சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலுக்கு ஆறாட்டுக்கு புறப்பட்டு செல்கிறார். காலை 11மணிக்கு, சபரிமலை பிரதம தந்திரி கண்டரு பிரம்மஸ்ரீ மகேஷ் மோகனரு தலைமையில், வீரராகவப்பெருமாள் கோவில் குளத்தில் அய்யப்ப சுவாமி ஆறாட்டு விழா நடக்கிறது.மாலை 6:30 மணிக்கு விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் இருந்து அய்யப்பசுவாமி ரத ஊர்வலம் துவங்குகிறது. முக்கிய வீதிகள் வழியாக சென்று ரத ஊர்வலம் அய்யப்பன் கோவிலை சென்றடைகிறது.

    மண்டல பூஜை விழாவை முன்னிட்டு, 20ந் தேதி துவங்கி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 11:30 மணிக்கு கோவிலில் அன்னதானம் நடைபெற உள்ளது. மேலும் 15-ந்தேதி முதல், 18-ந் தேதி வரை தினமும், 7 மணிக்கு பறையெடுப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் சேவை விழா நடந்தது.
    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.

    ராமநாதபுரம்

    ரகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி சக்திவேல் தலைமையில் நடந்தது. முனியசேகர் முன்னிலை வகித்தார். கண்ணபிரான் வரவேற்றார். ராமநாதபுரம் ராமலிங்க சேவாபாரதி அன்பு இல்ல நிர்வாகி மோகன் மற்றும் வல்லபை உறுப்பினர்கள் பேசினர்.

    வல்லபை அய்யப்பா சேவை நிலைய அறக்கட்டளையின் நிறுவனர்-தலைவர் மோகன் தொகுப்புரையாற்றினார். 10 மற்றும் 12-ம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன. வெண்மதிநாதன் நன்றி கூறினார். அன்னதானம் நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை வல்லபை அய்யப்பா சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

    • ராமநாதபுரம் அருகே வல்லபை அய்யப்பன் ஆலயத்தில் வருடாபிஷேக விழா நடந்தது.
    • பகல் 12 மணிக்கு மூலவர் அய்யப்பனுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவி லில் 2017-ம் ஆண்டு 2-வது முறையாக கும்பாபி ஷேகம் நடந்தது. நேற்று வருடாபிஷேகத்தை முன்னிட்டு வல்லபை அய்யப்பன் கோவிலில் கணபதி ஹோமம் அஷ்டாபிஷேகம் நடந்தது.

    வல்லபை விநாயகர், மஞ்சமாதா, ஆஞ்சநேயர், சங்கரன் சங்கரி, முருகன், பெரிய கடுத்த சாமி, சிறிய கடுத்த சாமி, கருப்பாயி அம்மாள், நவகிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

    நேற்று பகல் 12 மணிக்கு மூலவர் அய்யப்பனுக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் நடந்தது. பூஜைகளை தலைமை குருசாமி மோகன் செய்தி ருந்தார். ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை அயப்பன் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

    ×