search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாலை அணிந்து கொண்ட சபரிமலை யாத்திரை பக்தர்கள்
    X

    கார்த்திகை மாதம் பிறந்ததும் சபரிமலை யாத்திரை செல்லும் அய்யப்ப பக்தர்கள் துளசிமாலை அணிந்து விரதம் தொடங்குவது வழக்கம். அதன்படி கார்த்திகை முதல் நாளான இன்று ராமநாதபுரம் ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் தலைமை குருக்கள் பக்தர்களுக்கு மாலை அணிவித்த காட்சி.

    மாலை அணிந்து கொண்ட சபரிமலை யாத்திரை பக்தர்கள்

    • ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் சபரிமலை யாத்திரை பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.
    • சபரிமலையில் கடைப்பிடிப்பதை போன்ற சுயகட்டுப்பாடு, ஒழுக்க நெறியுடன் போதிக்கப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் கார்த்திகை முதல் நாளான இன்று ஏராளமான அய்யப்ப பக்தர்கள் சபரி மலை யாத்திரை செல்வதற்கு மாலை அணிந்து கொண்ட னர். குருவடியார் மோகன் சுவாமி பக்தர்களுக்கு மாலை அணிவித்தார்.

    கோவில் சன்னதி இன்று காலை 5 மணிக்கு திறக்கப்பட்டு கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், தீபாரா தனை நடந்தது. தொடர்ந்து வல்லபை விநாயகர், அய்யப்பன், மஞ்சமாதா சன்னதிகளில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    இன்று முதல் 48 நாட்க ளும் இரவு பஜனை, கூட்டு பிரார்த்தனை, அன்னதானம் நடைபெறும். முன்னதாக கோவிலில் மக்கள் நலமுடன் வாழ, மக்களுக்கு தேவை யான அளவு தண்ணீர் கிடைக்க மழை வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை வல்லபை அய்யப்பன் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தனர்.

    இது குறித்து வல்லபை அய்யப்பன் கோவில் தலைமை குருக்கள் மோகன் சுவாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சபரி மலையில் உள்ள அய்யப்பன் ஆலயம் போல இந்த ஆலயமும் அமைந் துள்ளது. ஆகவே இன்று கார்த்திகை முதல்நாளில் தரிசனம் செய்வதற்காகவும் மாலை அணிந்து கொள்வ தற்காகவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர் கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். மேலும் சபரிமலை செல்ல முடியாத சாமிமார்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து தங்களின் இருமுடியை ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் ஆலயத்தில் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக பிளாஸ்டிக் விழிப்பு ணர்விற்காக இருமுடிப்பை யில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதில்லை. புகையிலை பழக்கம் உள்ள வர்களும், 41 நாட்களுக்கு குறைவாக விரதம் இருப்ப வர்களுக்கும் இருமுடி கட்டப்படுவதில்லை.

    சபரிமலையில் கடைப்பிடிப்பதை போன்ற சுயகட்டுப்பாடு, ஒழுக்க நெறியுடன் போதிக்கப்படுகிறது

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×