என் மலர்
நீங்கள் தேடியது "மதுரை எம்பி வெங்கடேசன்"
- கடந்த 3-ந்தேதி தொடங்கிய மாநாடு இன்றுடன் நிறைவுபெறுகிறது.
- மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் பங்கேற்றுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 3-ந்தேதி தொடங்கிய மாநாடு இன்றுடன் நிறைவுபெறுகிறது. மாநாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் தொடங்கி வைத்து பேசினார்.
இந்த மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் எம்.ஏ.பேபி, ஜி.ராமகிருஷ்ணன், பிருந்தாகாரத், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கட்சியின் மத்தியக்குழு உறுப்பனிர் வாசுகி, டி.கே.ரங்கராஜன், எம்.பி.க்கள் சு.வெங்கடேசன், சச்சிதானந்தம், எம்எல்ஏக்கள் நாகை மாலி சின்னத்துரை உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர்.
இந்த நிலையில், மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்துள்ள மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சு.வெங்கடேசனை மாவட்ட ஆட்சியர் பழனி, கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் இருவரும் சந்தித்து நலம் விசாரித்தனர்.
- 17653 கச்சேகுடா - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் நிறுத்தப்பட்டது.
- 17655 காக்கிநாடா துறைமுகம் - புதுச்சேரி சர்கார் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் நிறுத்தப்பட்டது.
சென்னை - விழுப்புரம் ரெயில் வழித்தடம் விரைவில் சரி செய்யப்பட்டு விடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று தென்னக ரயில்வே நிர்வாகம் பிற்பகல் 3 மணிக்கு தெரிவித்த தகவலை மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "காலையிலிருந்து ரயில் பயணிகள் மற்றும் பயணிகளின் உறவினர்களிடமிருந்து தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு புறம் பயணிகளிடனும் இன்னொரு புறம் தெற்கு இரயில்வேயின் தலைமையகத்துடனும் தொடர்ந்து பேசி வருகிறேன். யாரும் பதட்டமடைய வேண்டாம். ரயில்வே நிர்வாகம் உரிய மாற்று ஏற்பாடுகளை செய்து நிலமையை திறம்பட கையாண்டு வருகின்றனர். என்பதை பயணிகளுக்கு தெரிவித்தபடி உள்ளேன்.
ரயில்வே நிர்வாகம் பிற்பகல் 3 மணிக்கு தெரிவித்த நிலைமையை கீழே பதிவிட்டுள்ளேன்.
கீழே உள்ள இரயில்கள் தவிர தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த பிற ரயில்கள் அனைத்தும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டுள்ளன. விரைவில் அவைகள் அனைத்தும் நிறைவிடத்துக்கு வந்து சேரும்.
சென்னை விழுப்புரம் இடையே உள்ள முக்கிய வழித்தடம் அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் சரி செய்யப்பட்டு விடும் என்று அதிகாரிகள் நம்பிக்கையோடு தெரிவித்தனர். எனவே இன்று இரவு சென்னையிலிருந்து புறப்படும் இரயில்கள் அனேகமாக ரத்தாக வாய்ப்பில்லை. தேவைப்பட்டால் புறப்படும் நேரத்தில் சிறிது மாற்றம் இருக்கலாம் என்பதை தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 5.30 மணிக்கு புறப்பட்ட கன்னியாகுமரி விரைவு வண்டி இப்பொழுது வாலாஜா ரோடு கடந்துள்ளது. காலை உணவு திருக்கோயிலூர் மக்கள் தந்தனர். காட்பாடியில் அவரவர் வாங்கிக் கொண்டனர் என்று இரயில் பயணிகள் தெரிவித்தனர்.
ஒரு புறம் நிலமையை திறம்பட கையாளப் பெருக்கெடுத்தோடும் நீருக்கு நடுவே நின்று தண்டவாளங்களை சரி செய்து கொண்டிருக்கும் இரயில்வே ஊழியர்கள். மற்றும் விழிப்போடு இயங்கிக் கொண்டிருக்கும் இரயில்வே அலுவலர்கள். மறுபுறம், எங்கெங்கோ சென்றபடி நகரும் ரயிலுக்குள் நிலமையை சமாளித்து பயணித்துக் கொண்டிருக்கும் பயணிகள். இரு முனைகளின் குரல்களையும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
பெரும் புயலும், பேரிடரும் சந்தித்து மீளும் வலிமையே மனிதத்தின் தனித்துவம்.
——
இரயில்வே நிர்வாக தகவல்கள்;
சென்னை பிரிவு;
17653 கச்சேகுடா - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் நிறுத்தப்பட்டது.
17655 காக்கிநாடா துறைமுகம் - புதுச்சேரி சர்கார் எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டில் நிறுத்தப்பட்டது.
560 உணவுப் பொட்டலங்களும் 700 தண்ணீர் பாட்டில்களும் விநியோகிக்கப்பட்டன சிக்கித் தவிக்கும் பயணிகளை ஏற்றிச் செல்ல பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
திருச்சி பிரிவு;
போக்குவரத்து ஏற்பாடுகள்: மாம்பழப்பட்டு, வெங்கடேசபுரம் மற்றும் விழுப்புரம் ரயில் நிலையங்களில் சிக்கித் தவிக்கும் 2700க்கும் மேற்பட்ட பயணிகளை சென்னையின் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல மொத்தம் 27 பிரத்யேக பேருந்துகள் பயன்படுத்தப்பட்டன. •
உணவு மற்றும் நீர் விநியோகம்: பாதிக்கப்பட்ட ரயில்களில் பயணம் செய்த அனைத்து பயணிகளுக்கும் இடையூறு ஏற்படும் போது அவர்களின் வசதி மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக உணவு பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. (3000 உணவுப் பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் விநியோகிக்கப்பட்டன) • பாதுகாப்பான போக்குவரத்து: பேருந்துகள் பயணிகளை பாதுகாப்பாக சென்னையில் அவர்கள் சேருமிடத்திற்கு ஏற்றிச் சென்றன.
இவைகள் தவிர
1. மாம்பழப்பட்டில் (MMP) - 16 பேருந்துகள், 1500 பயணிகள் 2. வெங்கடேசபுரத்தில் (விகேஎம்) - 5 பேருந்துகள், 600 பயணிகள் 3. விழுப்புரம் ஜன. (VM) - 5 பேருந்துகள், 600 பயணிகள் உணவுப் பொட்டலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன: 1. மாம்பழப்பட்டில் (MMP) - 450 பாக்கெட்டுகள் மற்றும் போதுமான அளவு தண்ணீர் பாட்டில்கள் 2. வெங்கடேசபுரத்தில் (விகேஎம்) - 450 பாக்கெட்டுகள் மற்றும் போதுமான அளவு தண்ணீர் பாட்டில்கள் 3. விழுப்புரம் ஜன. (VM) - 2000 பாக்கெட்டுகள் மற்றும் போதுமான அளவு தண்ணீர் பாட்டில்கள் 4. திருவண்ணாமலையில் (TNM) - 100 பாக்கெட்டுகள் மற்றும் போதுமான அளவு தண்ணீர் பாட்டில்கள் தரப்பட்டுள்ளன.
கீழே உள்ள ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன
1. பண்ருட்டி நிலையத்தில் ரயில் எண். 20606 (TCN-MS).
2. ரயில் எண். 17408 (MQ-TPTY) திருப்பாதிரிப்புலியூர் நிலையத்தில்
3. ரயில் எண். 12694 (TN-MS), ரயில் எண். 22662 (RMM-MS), 16752 (RMM-MS) விழுப்புரம் ஜே.என்.
4. வெங்கடேசபுரத்தில் ரயில் எண். 20636 (QLN-MS)
5. மாம்பழப்பட்டில் ரயில் எண். 12662 (SCT-MS), 12638 (MDU-MS)
- மருத்துவ அரங்கும், மருத்துவக்கல்வியும் அனித்தாக்களுக்கானது. அதை பறிப்பதை தடுக்கும் நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
- தமிழகத்தின் கனவு அனித்தாக்களின் கல்வி உரிமையை நிலைநாட்டுவதே.
மதுரை:
தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகத்தை விரைவு செய்து ஒப்புதல் தரக்கோரி குடியரசு தலைவருக்கு மதுரை எம்.பி. வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று பதில் அளித்துள்ள அனுப்பிய கடிதத்தை வெங்கடேன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
டுவிட்டரில் வெங்கடேசன் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகத்தை விரைவு செய்து ஒப்புதல் தரக்கோரி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
"உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக" குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று பதிலளித்துள்ளார்.
அனித்தாக்களின் கல்வி உரிமை;
— Su Venkatesan MP (@SuVe4Madurai) March 14, 2023
குடியரசு தலைவரின் பதிலும்
முதல்வரின் பெயர் சூட்டலும்.
தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகத்தை விரைவு செய்து ஒப்புதல் தரக் கோரி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தேன். 1/3 pic.twitter.com/l6qAc7cBbB
அரியலூர் மருத்துவ கல்லூரி அரங்கத்திற்கு அனிதாவின் பெயர் சூட்டி இன்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மருத்துவ அரங்கும், மருத்துவக்கல்வியும் அனித்தாக்களுக்கானது. அதை பறிப்பதை தடுக்கும் நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
தமிழகத்தின் கனவு அனித்தாக்களின் கல்வி உரிமையை நிலைநாட்டுவதே.
இவ்வாறு எம்.பி. வெங்கடேசன் டுவிட்டரில் கூறியுள்ளார்.