search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "road traffic"

    • பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
    • போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறிய வாகன ஓட்டிகள்.

    சென்னை, தாம்பரம் இரும்புலியூரில் தனியார் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் புறப்பட்டதால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

    இதனால், பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

    ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    • 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணை 97 அடியை எட்டியதால் வெள்ளநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
    • உயர்மட்ட பாலம் பயன்பாட்டுக்கு வந்ததால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டியுள்ள கேரளா, நீலகிரி மாவட்டத்தில் கடந்தாண்டு ஜூன், ஜூலை மாதங்களில் அதிகளவில் பருவ மழை பெய்தது.

    இதனால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணை 97 அடியை எட்டியதால் வெள்ளநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    மேலும் நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி, கூடலூர் மாயாறு பகுதிளில் இருந்தும் மழைநீர் பவானிசாகர் அணைக்கு தண்ணீா் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.

    இதையொட்டி பவானிசாகர் நீர்த்தேக்க பகுதிகளான சிறுமுகை 1-வது வார்டுக்குட்பட்ட லிங்காபுரம் கிராமத்தில் இருந்து பழங்குடியின கிராமங்களான காந்தவயல், உலியூர், ஆலூர், காந்தையூர் உள்ளிட்ட கிராமளுக்கு செல்லும் உயர்மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியது.

    மேலும் இந்த பகுதியில் உள்ள விளைநிலங்களும் தண்ணீரில் மூழ்கியது. இதனிடையே கடந்த ஆகஸ்டு மாதம் லிங்காபுரத்தில் இருந்து காந்தவயல் செல்லும் சாலையின் உயர்மட்ட பாலம் முற்றிலும் தண்ணீரில் மூழ்கியதால் சாலை போக்குவரத்து முடங்கியது.

    இதனால் சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பரிசல், மோட்டார் படகு போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதையொட்டி காந்தவயல்-லிங்காபுரம் இடையே தண்ணீரில் மூழ்கிய உயர்மட்ட பாலம் 7 மாதங்களுக்கு பின் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.

    இதனிடையே நேற்று முதல் பொதுமக்கள் இந்த உயர்மட்ட பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே ஒருசில வாரங்களில் லிங்காபுரம்-காந்தவயல் இடையே உயர்மட்டம் பாலம் பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்து தண்ணீரில் மூழ்காதவாறு பால பணிகள் மேற்கொள்ளப்படும் என சிறுமுகை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கு, சுந்தரனார் அரங்கத்தில் நடைபெற்றது.
    • கருத்தரங்கில் சாலை பாதுகாப்பு குறித்த உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தர் சந்திரசேகர் மற்றும் பதிவாளர் அண்ணாத்துரை வழிகாட்டுதலின்படி, நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக சாலை போக்குவரத்து விழிப்புணர்வு கருத்தரங்கு, சுந்தரனார் அரங்கத்தில் நடைபெற்றது.

    நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வாசுகி வரவேற்றார். ரோட்டரி சங்க பொறுப்பாளர் நாகேந்திரன் சாலையில் பாதுகாப்பாக செல்வது குறித்தும், தலைக்கவசத்தின் முக்கியத்துவம் குறித்தும் சாலை விபத்தின் காட்சிகள், விளக்கப்படங்கள் மற்றும் குறியீடுகளை விளக்கிக் கூறினார்.

    நயினார் முகம்மது சாலை விபத்தினைக் குறைப்பது பற்றியும், மாணவர்களிடம் சாலை பாதுகாப்பு குறித்து வினா எழுப்பி மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் வெளியப்பன், சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்தும் உரையாற்றி வாழ்த்துரை வழங்கினார்.

    போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செல்வ குமார் விபத்திற்கான காரணங்களையும் அதனைத் தவிர்க்கும் முறைகளைப் பற்றியும், சிக்னல்களை புரிந்து கொள்ளுதல் மற்றும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதங்கள் குறித்தும் உரையாற்றினார்.

    நெல்லை டவுன் ரோட்டரி தலைவர் இப்ராகிம் சாலைபாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை மாணவர்களுக்கு வழங்கி னார். இக்கருத்தரங்கில் சாலை பாதுகாப்பு குறித்த உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சென்றாயப்பெருமாள் நன்றி கூறினார்.

    இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித்திட்ட தொண்டர்கள், பேராசிரியர்கள், திட்ட அலுவலர்கள் திரளானோர்கள் கலந்து கொண்டனர்.

    திண்டுக்கல்லில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகரில் பல வார்டுகளில் 15 நாட்களுக்கு மேல் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    நேற்று பழனி சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்ட நிலையில் இன்று 40 மற்றும் 41-வது வார்டுக்குட்பட்ட பொது மக்கள் காலிக்குடங்களுடன் குடைப்பாறைப்பட்டியில் மறியலில் ஈடுபட்டனர்.

    ஜிகா பைப்புகள் பொருத்தப்பட்டதால் தண்ணீர் கிடைக்கவில்லை என்றும் 2 மாதமாக இதே நிலை தொடர்வதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    எனவே பழைய முறையிலேயே குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். நகர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிச் செல்வி, சேகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. #tamilnews
    திண்டுக்கல் அருகே போக்குவரத்துக்கு லாயக்கற்ற இந்த கோம்பை சாலையை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல்லில் இருந்து 10 -வது கிலோ மீட்டரில் உள்ளது அ.வெள்ளோடு, பூக்கள், திராட்சை, கீரை வகைகளுக்கு பெயர் பெற்ற ஊராகும். இன்றைக்கு தண்ணீர் இன்றி விவசாயம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

    இது ஒருபுறம் இருக்க விவசாயம் செழிப்புக்கு காரணமான மூலிகை மலையான சிறுமலை வெள்ளோட்டில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பது தான் இதற்கு சிறப்பு. விவசாயத்திற்காக சிறுமலை கோம்பை பகுதியில் தோட்டங்களிலேயே வீடு கட்டி குடியிருப்போரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியதால் பொதுமக்கள் இணைந்து வெள்ளோட்டில் இருந்து கோம்பை பகுதிக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு பாத்திமா சாலை போட்டனர்.

    இதன் பின்னர் ஒருமுறை இந்த சாலை புதுப்பிக்கப்பட்டது. தொடர்ந்து பொதுபணி துறையினர், சுற்றுலா பயணிகள், கோம்பை பகுதி வாழ் பொது மக்களின் வாகனங்கள் என அதிகளவு சென்று வந்தது. இவை தவிர தனியார் பஸ் ஒன்று சென்று வந்த நிலையில் திண்டுக்கல்லில் இருந்து கோம்பைக்கு முழு நேர அரசு பஸ் ஒன்றும் இயக்கப்பட்டது.

    போக்குவரத்து அதிகமாகி போன நிலையில் பல ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட தார்சாலை சேதமடைய தொடங்கியது. அப்போது இருந்து பொது மக்கள் சாலையை புதுப்பிக்க வேண்டும் என பல முறை மாவட்ட கலெக்டருக்கு மனு அளித்தனர். ஆனாலும் புதுப்பிக்கப்படவே இல்லை. இன்றைய நிலையில் இந்த கோம்பை பாத்திமா சாலை தான் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு கந்தலாகி காட்சி தருகிறது.

    இந்த சாலையில் சென்று வரும் 2 பஸ்களும் டப்பா பஸ்களாக மாறி போனது. பஸ்சில் பயணம் செய்பவர்களுக்கும், பஸ்சை ஓட்டும் டிரைவர்களுக்கும் மட்டுமே தெரியும் இந்த சாலையில் சென்று வரும் நிலை. இந்த சாலையில் இரு சக்கர வாகனம் முதல் பஸ், லாரி வரை சென்று வருவது பெரிய சாதனையாகவே கருதப்படுகிறது.

    இவை தவிர கந்தலாகி போன சாலையில் பஸ் வரும் போது இரண்டு சக்கர வாகனம் மற்றும் சைக்கிளில் வருபவர்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாவதும் தொடர்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கந்தலாகி போய் போக்குவரத்துக்கு லாயக்கற்ற இந்த கோம்பை சாலையை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×