என் மலர்
நீங்கள் தேடியது "Petition Dismiss"
- அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2012-ம் ஆண்டு அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு.
- 2023-ம் ஆண்டு மார்ச் எம்.பி., எம்.எல்.ஏ. க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு உத்தரவு.
தமிழ்நாட்டில் 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில், வீட்டு வசதித்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பதவி வகித்தார். தற்போது இவர் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான வீட்டை, மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பாதுகாவலராக வேலை செய்த போலீஸ் அதிகாரி கணேசனுக்கு முறைகேடாக ஒதுக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2012-ம் ஆண்டு அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து, ஐ.பெரியசாமியை விடுவித்து கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் எம்.பி., எம்.எல்.ஏ. க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறுஆய்வு செய்ய, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.
இந்நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வீட்டு வசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு, விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- வழக்கறிஞர் ஜெகன்நாத் உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
- மனுக்களின் செல்லுபடி தன்மை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில் மனுதாரர்கள் மனுவை திரும்பப்பெற்றனர்.
சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
வழக்கறிஞர் ஜெகன்நாத் உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த இந்த மனுக்களின் செல்லுபடி தன்மை குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில் மனுதாரர்கள் மனுவை திரும்பப்பெற்றனர்.
உதயநிதியின் பேச்சை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்கவும், அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யவும் மனுக்களில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், 3 மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுகுறித்து தமிழக அரசு கூறுகையில், " துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சுக்கு எதிராக வழக்கு தொடர உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
சனாதன பேச்சுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரிய 3 ரிட் மனுக்களையும் மனுதாரர்கள் திரும்பப் பெற்றனர்.
இது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி" என்று தெரிவித்துள்ளது.







