என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி
    X

    மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

    • இந்த 2 வழக்குகளும் ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
    • உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்று உத்தரவு.

    பா.ம.க.வில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் கட்சி யாருக்கு என்று மோதல் நடந்து வருகிறது. இந்தநிலையில், பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்து, தேர்தல் ஆணையம் அன்புமணி முகவரிக்கு கடிதம் அனுப்பியது.

    இதை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் 3 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், டாக்டர் ராமதாஸ் புதிதாக மேலும் 2 வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.

    அதில் ஒரு வழக்கில், "பா.ம.க.. தலைவராக நான்தான் உள்ளேன். இது தொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டபோது, உட்கட்சி தேர்தல் நடத்தி தலைவராக தேர்ந்தெடுத்து பரிந்துரை கடிதத்தை அனுப்பி வைத்தால், அதை பதிவு செய்து அங்கீகரிப்போம் என்று தேர்தல் ஆணையம் கூறியது.

    அதன்படி, தலைவராக பதிவு செய்யும்படி நான் அனுப்பிய கடிதத்தை இதுவரை தேர்தல் ஆணையம் பரிசீலிக்காமல் உள்ளது. தற்போது தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் நெருங்குவதால் எந்நேரமும் தேர்தல் அறிவிப்பு வெளிவரலாம் என்ற நிலை உள்ளது.

    அதனால், என்னை பா.ம.க. தலைவராக அங்கீகரித்து பதிவு செய்யும்வரை, தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் அறிவிப்பை வெளியிடக்கூடாது. தேர்தல் அறிவிப்பை தள்ளி வைக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    மற்றொரு மனுவில்,"பா.ம.க.வின் தேர்தல் சின்னமாக மாம்பழம் உள்ளது. ஆனால், கட்சிக்கு சம்பந்தமே இல்லாத சிலர் இந்த சின்னத்தை பயன்படுத்துகின்றனர். எனவே, இந்த சின்னத்தை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும், இந்த மாம்பழம் சின்னம் எனக்கும். நான் தலைவராக இருக்கும் பா.ம.க.விற்கு மட்டுமே சொந்தம் என்றும் அறிவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    இந்த 2 வழக்குகளும் ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

    இந்நிலையில், ராமதாஸ் தலைமையிலான நிர்வாகிகளை அங்கீகரிக்கக்கோரி ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    உட்கட்சி விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் நிவாரணம் தேடிக்கொள்ள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×