என் மலர்
நீங்கள் தேடியது "மாம்பழம் சின்னம்"
- இந்த 2 வழக்குகளும் ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
- உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்று உத்தரவு.
பா.ம.க.வில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாசுக்கும் கட்சி யாருக்கு என்று மோதல் நடந்து வருகிறது. இந்தநிலையில், பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்து, தேர்தல் ஆணையம் அன்புமணி முகவரிக்கு கடிதம் அனுப்பியது.
இதை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் 3 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில், டாக்டர் ராமதாஸ் புதிதாக மேலும் 2 வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.
அதில் ஒரு வழக்கில், "பா.ம.க.. தலைவராக நான்தான் உள்ளேன். இது தொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டபோது, உட்கட்சி தேர்தல் நடத்தி தலைவராக தேர்ந்தெடுத்து பரிந்துரை கடிதத்தை அனுப்பி வைத்தால், அதை பதிவு செய்து அங்கீகரிப்போம் என்று தேர்தல் ஆணையம் கூறியது.
அதன்படி, தலைவராக பதிவு செய்யும்படி நான் அனுப்பிய கடிதத்தை இதுவரை தேர்தல் ஆணையம் பரிசீலிக்காமல் உள்ளது. தற்போது தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் நெருங்குவதால் எந்நேரமும் தேர்தல் அறிவிப்பு வெளிவரலாம் என்ற நிலை உள்ளது.
அதனால், என்னை பா.ம.க. தலைவராக அங்கீகரித்து பதிவு செய்யும்வரை, தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்தல் அறிவிப்பை வெளியிடக்கூடாது. தேர்தல் அறிவிப்பை தள்ளி வைக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
மற்றொரு மனுவில்,"பா.ம.க.வின் தேர்தல் சின்னமாக மாம்பழம் உள்ளது. ஆனால், கட்சிக்கு சம்பந்தமே இல்லாத சிலர் இந்த சின்னத்தை பயன்படுத்துகின்றனர். எனவே, இந்த சின்னத்தை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும், இந்த மாம்பழம் சின்னம் எனக்கும். நான் தலைவராக இருக்கும் பா.ம.க.விற்கு மட்டுமே சொந்தம் என்றும் அறிவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இந்த 2 வழக்குகளும் ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், ராமதாஸ் தலைமையிலான நிர்வாகிகளை அங்கீகரிக்கக்கோரி ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரி ராமதாஸ் தாக்கல் செய்த மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உட்கட்சி விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் நிவாரணம் தேடிக்கொள்ள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
உரிமையியல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. 10 தொகுதிகளில் போட்டியிட்டது.
- பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னம் தொடர்ந்து இருக்கும்.
சென்னை:
தேர்தலுக்கு தேர்தல் பா.ம.க. போடும் கூட்டணி கணக்கு அந்த கட்சிக்கு சில நேரங்களில் சாதகமாக அமைந்தாலும் பல நேரங்களில் பாதகமாக அமைந்து முதலுக்கே மோசம்போன கதையில் கட்சிக்கே சிக்கலை ஏற்படுத்தி விடுகிறது.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. 10 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் தர்மபுரி தொகுதியை தவிர மற்ற தொகுதிகளில் மற்ற கட்சிகளுக்கு போட்டியாகவே பா.ம.க. இல்லை.
வாக்கு வங்கி அதிகம் உள்ள வடமாவட்ட தொகுதி களில் கூட பா.ம.க.வால் சாதிக்க முடியவில்லை. திண்டுக்கல் தவிர 9 தொகுதி களும் பா.ம.க.வுக்கு செல் வாக்கு மிக்க தொகுதிகள். இதில் காஞ்சீபுரத்தில் பா.ம.க. வேட்பாளர் ஜோதி 1 லட்சத்து 64 ஆயிரத்து 931 வாக்குகள் பெற்று 3-வது இடத்துக்கு சென்றார்.
அரக்கோணம், ஆரணி, கடலூர் தொகுதிகளில் 3-வது இடத்துக்கு தள்ளப் பட்டது. கள்ளக்குறிச்சி தொகுதியில் நாம் தமிழர் கட்சியை விட குறைவான வாக்குகளை பெற்று 4-ம் இடத்தை பெற்றது.
10 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க. 18 லட்சத்து 77 ஆயிரத்து 490 வாக்குகளை பெற்றது. போட்டியிட்ட 10 தொகுதி களில் 6 தொகுதிகளில் பா.ம.க. டெபாசிட்டையும் இழந்தது. அதே போல் வாக்கு வங்கியும் 4.33 சதவீதமாக குறைந்துள்ளது.
1989-ம் ஆண்டு முதல் முறையாக பா.ம.க. பாராளு மன்ற தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட்டது. தனித்து போட்டியிட்டு 5.82 சதவீதம் வாக்குகளை பெற்று யானை சின்னத்தையும் தக்க வைத்தது. அதன் பிறகு நடந்த தேர்தல்களில் வாக்கு சதவீதத்தில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களால் யானை சின்னத்தை இழந்தது.
2016 சட்டமன்ற தேர்த லில் தனித்து போட்டியிட்டது. 2019 பாராளுமன்ற தேர்தலி லும், 2021 சட்டமன்ற தேர்த லிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது. இதில் 2019 பாராளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. ஆனாலும் 5.42 சதவீத வாக்கு வங்கியை தக்க வைத்து கொண்டது.
கடந்த சட்டமன்ற தேர்த லில் 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிக ளில் வென்றது. ஆனால் வாக்கு சதவீதம் 3.8 சத வீதமாக குறைந்தது. இதற்கு காரணம் தேர்தலுக்கு தேர் தல் கூட்டணி மாறுவ தால் வன்னியர் சமூக ஓட்டு களும் முழுமையாக கிடைக்கவில்லை என்கி றார்கள்.
இந்த நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர் தலில் யாருடன் கூட்டணி என்று எதிர்பார்த்த நிலையில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தது.
கூட்டணி விசயத்தில் அ.தி.மு.க.வுடன் செல்ல வேண்டும் என்ற கருத்து பா.ம.க.வினரிடம் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் ஏற்பட்ட வெறுப் பில்தான் சொந்த கட்சியினர் வாக்குகளே முழு அளவில் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் ஏற்க னவே மாநில கட்சி அங்கீகா ரத்தை இழந்த நிலையில் மாம்பழம் சின்னத்தையும் இழக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி பா.ம.க. செய்தி தொடர்பாளர் வக்கீல் பாலு கூறியதாவது:-
பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னம் தொடர்ந்து இருக்கும். தேர்தல் ஆணையத்தின் தேர்தல் சின்னம் ஒதுக்கீடு விதி 1968-பத்தி 10-ல் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தில் தெளிவாக தெரிவித்துள்ளது.
பதிவாகும் மொத்த வாக்குகளில் ஒரு சதவீதத்துக்கும் குறையாமல் வாக்குகளை பெற்றிருந்தால் அந்த கட்சி முன்பு பயன்படுத்திய சின்னத்தை தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதியோடு தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள எந்த தடையும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.






