search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jail warden"

    • மனைவியை சந்திக்க ஹரிகிருஷ்ணன் பரோலில் சென்றார்.
    • சேலம் மத்திய சிறை வாசல் வரை சென்றதும் உள்ளே போகாமல் தப்பி ஓடிவிட்டார்.

    சேலம்:

    சென்னை பள்ளிகரணையை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது52). கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர், பல்வேறு சிறைகளில் மாறி மாறி 12 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்தார்.

    இதில், அவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது மனைவியை சந்திக்க, ஹரிகிருஷ்ணன், 2022 ஜூன் 22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை பரோலில் சென்றார்.

    பின்னர், அவர் சேலம் திரும்பியபோது, சேலம் மத்திய சிறை வாசல் வரை சென்றதும் உள்ளே போகாமல் தப்பி ஓடிவிட்டார். இதற்கு, சிறை வார்டன் ராமகிருஷ்ணன் உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    அப்போதைய சிறை எஸ்.பி. கிருஷ்ணகுமார், துறை நடவடிக்கை மேற்கொண்டு வார்டனை, சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    பின் கோவை கூடுதல் சிறை எஸ்.பி. சதீஷ்குமார், விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் நடத்திய விசாரணையில், வார்டன் மோட்டார் சைக்கிளில் ஆயுள் தண்டனை கைதியை அழைத்துச் சென்று அஸ்தம்பட்டி சந்திப்பில் இறக்கி விட்டு, அவரை தப்பிக்கவிட்டார் என்பது உறுதியானது.

    அதன்படி எஸ்.பி. தமிழ்செல்வன், வார்டனை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

    • நெல்லை தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 49). இவர் அப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
    • புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 49). இவர் அப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

    பத்தமடை பகுதியை சேர்ந்தவர் லட்சுமண பெருமாள். அம்பை கிளை சிறையில் வார்ட னாக பணிபுரிந்து வரும் இவர் கடந்த மாதம் ராஜகோபாலின் நிதி நிறு வனத்திற்கு சென்றுள்ளார்.

    அப்போது அவர் அதிக அளவில் பணம் கடனாக கேட்டதால் இவ்வளவு பெரிய தொகை என்னிடம் இல்லை என்று ராஜகோபால் தெரிவித்துள்ளார். இதனால் அங்கிருந்து லட்சுமண பெருமாள் சென்று விட்டார்.

    இந்நிலையில் கடந்த 6-ந் தேதி ராஜகோபால் தனது நண்பர்களுடன் காரில் அம்பை தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார்.

    அதன் பின்னர் கல்லி டைக்குறிச்சி ஆற்றுப்பாலம் பகுதியில் வந்த போது அங்கு வந்த லட்சுமண பெருமாள் அவரது காரை வழி மறித்துள்ளார். பின்னர் பணம் கேட்டால் கொடுத்தாக வேண்டும் என்று கூறி காரில் இருந்த ராஜகோபாலை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ராஜகோபால் கல்லிடைக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் லெட்சுமண பெருமாள் மீது சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் ஜோசப் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கோவில்பட்டி அருகே ஜெயில் வார்டன் மனைவி தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கிருஷ்ணன்புதூரைச் சேர்ந்தவர் பரமசிவன் (வயது 31). இவர் பாளையங்கோட்டை மத்திய ஜெயிலில் வார்டனாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சகுந்தலா தேவி (25). இவர்களுக்கு சசிகுமார் (6) என்ற மகன் உள்ளார்.

    பரமசிவனின் பெற்றோர் இறந்து விட்டனர். எனவே சிறுவன் சசிகுமாரை கவனித்து கொள்வதற்காக, பரமசிவனின் வீட்டில் சகுந்தலா தேவியின் தாயார் மகாலட்சுமி வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று காலையில் பரமசிவன் வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் மதியம் மகாலட்சுமி தன்னுடைய பேரன் சசிகுமாருடன் வீட்டுக்கு வெளியே சென்றார். பின்னர் சிறிதுநேரத்தில் அவர்கள் தங்களது வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது சகுந்தலா தேவி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மகாலட்சுமி, சசிகுமார் ஆகிய 2 பேரும் அலறினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், கொப்பம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    தற்கொலை செய்த சகுந்தலா தேவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சகுந்தலா தேவி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில்பட்டி அருகே ஜெயில் வார்டன் மனைவி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பாளையங்கோட்டை அருகே காதல் திருமணம் செய்த 25 நாளில் புதுப்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை:

    நெல்லை தாழையூத்து அருகே உள்ள தென்கலம் பகுதியை சேர்ந்தவர் பாலகுரு (வயது27). இவர் பாளை ஜெயிலில் வார்டனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது மகள் வேலம்மாள் (21) என்பவருக்கும் காதல் மலர்ந்தது. வேலம்மாள் நர்சிங் படித்து விட்டு வேலை தேடி வந்தார்.

    இவர்கள் காதலுக்கு பாலகுரு வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனாலும் இரு வீட்டாரும் பேசி முடித்து கடந்த 31-ந்தேதி குறுக்குத்துறை முருகன் கோவிலில் வைத்து பாலகுருவுக்கும், வேலம்மாளுக்கும் திருமணம் நடந்தது.

    திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பாலகுருவுக்கும், வேலம்மாளுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து பெரியவர்கள் சமரசம் பேசி அவர்களை ஒன்று சேர்த்து வைத்தனர். ஆனாலும் அவ்வப்போது கணவன்-மனைவிக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு பாலகுரு தனது மனைவி வேலம்மாளை திருச்செந்தூர் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று கூறி, தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். தாழையூத்து 4 வழிச்சாலை வழியாக பாளை கே.டி.சி.நகருக்கு வரும் வழியில் கணவன்- மனைவிக்கு இடையில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வேலம்மாள் தனது காதல் கணவர், தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டி அழைத்து செல்கிறார் என்று தெரிந்து மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கினார்.

    அப்போது பாலகுரு மோட்டார் சைக்கிளில் தயாராக வைத்திருந்த அரிவாளை எடுத்து மனைவியை வெட்ட முயன்றுள்ளார். வேலம்மாள் உயிர் பிழைக்க நான்கு வழிச்சாலையில் இருந்து கீழே புதர் பகுதியில் இறங்கி ஓடினார். ஆனால் பாலகுரு விரட்டி சென்று வேலம்மாளை சரமாரியாக வெட்டினார். அவரது தலையையும் துண்டித்து படுகொலை செய்தார்.

    பின்னர் தலையை தனியாக எடுத்து ரோட்டின் மறுபுறம் வீசினார். பின்னர் ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறி பாளை போலீஸ் நிலையத்திற்கு வந்து சரணடைந்தார்.


    நள்ளிரவு நடந்த சம்பவத்தை கேட்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று வேலம்மாள் உடலை தேடினார்கள். ஆனால் இரவு நேரம் என்பதால் அவரது உடல் கிடந்த இடம் தெரியவில்லை. இதைத்தொடர்ந்து இன்று காலை பாலகுருவை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று போலீசார் தேடினார்கள். அப்போது 4 வழிச்சாலை பொட்டல் பகுதியில் வேலம்மாளின் உடல் ஒரு பக்கமும், தலை மற்றொரு பக்கமும் கிடந்தது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு நெல்லை மாநகர போலீஸ் துணை கமி‌ஷனர் சுகுணாசிங், உதவி கமி‌ஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் ராமையா மற்றும் போலீசார் விரைந்து சென்று வேலம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள்.

    இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிந்து ஜெயில் வார்டன் பாலகுருவை கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    காதல் திருமணம் செய்த 25 நாளில் புதுப்பெண்ணை அவர் வெட்டி கொலை செய்துள்ளதால் அவர்களுக்குள் என்ன காரணத்தால் தகராறு ஏற்பட்டது என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக அவர்களது செல்போன்களையும் ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் இன்று காலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை ஜெயிலில் கைதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பணியில் இருந்த 2 வார்டன்களை சஸ்பெண்டு செய்து எஸ்.பி. செந்தில்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.
    கோவை:

    கோவை பீளமேடை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 46). இவர் அடிதடி வழக்கில் கடந்த மாதம் 5-ந் தேதி கைது செய்யப்பட்டு கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    பேரூர் பரட்டையம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய்(19). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புகாரில் கடந்த 25-ந் தேதி கைது செய்யப்பட்டார்.

    ரமேஷ் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. டாக்டர்கள் அறிவுரைப்படி தினமும் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறார். விஜய் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி மருந்து சாப்பிட்டு வருகிறார். விசாரணை கைதிகளான இருவரும் கோவை மத்திய ஜெயிலில் 3-வது பிளாக்கில் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று மதிய உணவுக்காக கைதிகள் திறந்து விடப்பட்டனர்.

    அப்போது கழிவறை சென்று விட்டு வந்த விஜய், ரமேஷ் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முடிந்த பின் ரமேஷ் 3-வது பிளாக் அருகே திண்ணையில் படுத்திருந்தார். அங்கு சென்ற விஜய் கீழே கிடந்த பெரிய கல்லை எடுத்து ரமேசை தாக்கினார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த ஜெயில் ஊழியர்கள் ரமேசை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். வழியிலேயே ரமேஷ் இறந்தார்.

    இதுகுறித்து ஜெயிலர் தர்மலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்காக ஜெயிலுக்குள் சென்ற போலீசார் சக கைதிகள் மற்றும் சம்பவத்தை நேரில் பார்த்த சிறை ஊழியர்கள், சக கைதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயிலில் கைதிகளுக்குள் நடந்த மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சிறைத்துறை டி.ஐ.ஜி. அறிவுடைநம்பி உத்தரவிட்டார். அதன்பேரில் ஜெயில் சூப்பிரண்டு செந்தில்குமார் விசாரணை நடத்தினார்.

    மோதல் சம்பவம் நடந்த போது தலைமை வார்டன் முனுசாமி (49), வார்டன் ஆதி கருப்பசாமி(27) ஆகியோர் 3-வது பிளாக்கில் பணியில் இருந்துள்ளனர். அவர்கள் பணியில் கவனக்குறைவாக இருந்தததாக கூறி இருவரையும் சஸ்பெண்டு செய்து எஸ்.பி. செந்தில்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை மத்திய ஜெயிலில் மொத்தம் 1768 கைதிகள் உள்ளனர். இதில் விசாரணை கைதிகள் 807 பேர் ஆவர். நேற்றைய சம்பவத்தில் ரமேசுக்கும், விஜய்க்கும் இடையே முன்விரோதம் எதுவும் இல்லை. விஜய் கழிவறை சென்று விட்டு திரும்பிய போது ரமேஷ் அவரது தாயாரை பற்றி தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார்.

    இதனால் விஜய் ஆவேசமடைந்து ரமேசை தாக்கியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதற்கிடையே, மோதல் சம்பவத்தை தொடர்ந்து கோவை மத்திய ஜெயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    கொலை செய்யப்பட்ட ரமேஷ் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. #tamilnews
    ×