search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆயுள் தண்டனை கைதி தப்பிய விவகாரம்- சிறை வார்டன் டிஸ்மிஸ்
    X

    ஆயுள் தண்டனை கைதி தப்பிய விவகாரம்- சிறை வார்டன் டிஸ்மிஸ்

    • மனைவியை சந்திக்க ஹரிகிருஷ்ணன் பரோலில் சென்றார்.
    • சேலம் மத்திய சிறை வாசல் வரை சென்றதும் உள்ளே போகாமல் தப்பி ஓடிவிட்டார்.

    சேலம்:

    சென்னை பள்ளிகரணையை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது52). கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர், பல்வேறு சிறைகளில் மாறி மாறி 12 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்தார்.

    இதில், அவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது மனைவியை சந்திக்க, ஹரிகிருஷ்ணன், 2022 ஜூன் 22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை பரோலில் சென்றார்.

    பின்னர், அவர் சேலம் திரும்பியபோது, சேலம் மத்திய சிறை வாசல் வரை சென்றதும் உள்ளே போகாமல் தப்பி ஓடிவிட்டார். இதற்கு, சிறை வார்டன் ராமகிருஷ்ணன் உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    அப்போதைய சிறை எஸ்.பி. கிருஷ்ணகுமார், துறை நடவடிக்கை மேற்கொண்டு வார்டனை, சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    பின் கோவை கூடுதல் சிறை எஸ்.பி. சதீஷ்குமார், விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் நடத்திய விசாரணையில், வார்டன் மோட்டார் சைக்கிளில் ஆயுள் தண்டனை கைதியை அழைத்துச் சென்று அஸ்தம்பட்டி சந்திப்பில் இறக்கி விட்டு, அவரை தப்பிக்கவிட்டார் என்பது உறுதியானது.

    அதன்படி எஸ்.பி. தமிழ்செல்வன், வார்டனை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

    Next Story
    ×