search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hometown"

    • திருப்பூரில் நீண்ட நாட்களாக வசித்தாலும் பெரும்பாலானவர்களுக்கு சொந்த ஊர்களில் வாக்காளராக உள்ளனர்.
    • அவசரமாக அனுப்ப வேண்டிய கோடை கால ஆர்டர்கள் சென்றுவிட்டதால் உற்பத்தியை குறைப்பதில் பிரச்சினை இருக்காது.

    திருப்பூர்:

    திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களும் பணியாற்றுகின்றனர். இவர்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை போல் தேர்தல்களுக்கும் சொந்த ஊர் செல்வது வழக்கம்.

    பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே சொந்த தொகுதிகளில் நடக்கும் தேர்தல் பிரசாரத்தை தினமும் கேட்டறிந்து வந்தனர். திருப்பூரில் நீண்ட நாட்களாக வசித்தாலும் பெரும்பாலா னவர்களுக்கு சொந்த ஊர்களில் வாக்காளராக உள்ளனர்.

    இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் நேற்று நிறைவு பெற்றதுடன் நாளை ஓட்டு ப்பதிவு நடக்கப்போகிறது. இதையடுத்து சொந்த ஊர்களுக்கு சென்று ஓட்டுப்பதிவு செய்ய ஏதுவாக, திருப்பூர் பனியன் தொழிலாளர்கள் இன்று சொந்த ஊர்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். குழந்தைகளுக்கு பள்ளி கோடை விடுமுறை என்பதால் குடும்பத்துடன் பயணிக்கின்றனர். சிலர் ஒரு மாதத்துக்கு முன்ன தாகவே, பஸ், ரெயில்களில் புக்கிங் செய்துவிட்டனர். இதனால் நேற்றிரவு மற்றும் இன்று காலை திருப்பூர் ரெயில், பஸ் நிலையங்களில் பனியன் தொழிலாளர்கள், பயணிகள் கூட்டம் அலைமோதியது.

    தேர்தல் காரணமாக, தொழிலாளர்கள் வெளியே செல்வதும், வருவதுமாக இருப்பதால் கடந்த சில வாரங்களாக பின்னலாடை உற்பத்தியும், ஜாப் ஒர்க் நிறுவனங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல அடுத்த கட்டமாக வடமாநிலங்களிலும் தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கப்போகிறது.

    திருப்பூரில் மட்டும் 21 மாநிலங்களை சேர்ந்த 2.50 லட்சம் தொழிலாளர் உள்ளனர். இவர்கள் தேர்தலில் ஓட்டளிக்க சொந்த மாநிலங்களுக்கு செல்ல உள்ளனர். இதன்காரணமாகவும், பெரும்பாலான பனியன் நிறுவனங்களில் வழக்கமான உற்பத்தி மற்றும் பிராசசிங் பணிகள் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.

    வெளிமாவட்ட தொழிலாளர்கள் குடும்பமாக சொந்த ஊர் செல்கின்றனர். ஏற்கனவே சிலர் சென்றுவிட்டனர். பள்ளி கோடை விடுமுறை என்பதால் 10 நாட்களுக்கு பின் திருப்பூர் திரும்புவர். வடமாநில தொழிலாளர்கள் 20ந்தேதிக்கு பின், திருப்பூரில் இருந்து அந்தந்த மாநில தேர்தல் வாக்குப்பதிவுக்கு புறப்படுவார்கள். இதன் காரணமாக பின்னாலடை உற்பத்தி குறையும். அவசரமாக அனுப்ப வேண்டிய கோடை கால ஆர்டர்கள் சென்றுவிட்டதால் உற்பத்தியை குறைப்பதில் பிரச்சினை இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பெரியசாமி அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • இது குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே வி.அலம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. கூலி தொழிலாளியான இவர் இன்று அதிகாலை விருத்தாசலத்தில் இருந்து சொந்த ஊரான வி.அலம்பலம் கிராமத்திற்கு செல்ல நைனார்பாளையம் கிராமம் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த கீழ்குப்பம் போலீசார் பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பா.ஜ.க.வின் அடிமையாகி விட்டது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
    • நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்த உள் ளோம்.

    மதுரை

    மதுரை ரிங் ரோடு மஸ் தான்பட்டி அருகே கலைஞர் திடல் பகுதியில் அமைக்கப் பட்டுள்ள முன்னாள் முதல் வர் கருணாநிதியின் திருவு ருவச் சிலையை தி.மு.க. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து தி.மு.க. இளைஞ ரணி சார்பாக நடை பெற்ற செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

    சேலத்தில் டிசம்பர் 17-ந்தேதி தி.மு.க. இளைஞரணி யின் 2-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. அதற்கு அழைக்கும் விதமாக தான் இந்த செல்வீரர் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாடு நடத்துவதற்கு முக்கிய காரணம் அமைச்சர் மூர்த்தி தான். மதுரை எப்போதும் தி.மு.க. இளைஞர் அணியின் தாய்வீடு. மதுரை ஜான்சி ராணி பூங்காவில் தான் தி.மு.க. இளைஞர் அணி தொடங்கப்பட்டது.

    இளைஞர் அணியினர் மிக கடுமையாக உழைக்க வேண் டும். நம்முடைய முதல்வர் கொண்டு வந்த திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். உழைத்தால் முன் னேறலாம் என்பதற்கு எடுத் துக்காட்டு, இந்த மேடை யில் அமர்ந்திருப்ப வர்களே சாட்சி. அமைச்சர் மூர்த்தி இதற்கு முன்பு பகுதி செயலா ளராக இருந்து பிறகு ஒன்றிய செயலாளர், அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலா ளர், எம்.எல்.ஏ., தற்போது அமைச்சராக உயர்ந்துள்ளார்.

    அதேபோல் கோ.தளபதி எம்.எல்.ஏ. முதலில் பகுதி செயலாளராக இருந்து, பின்பு கடுமையாக உழைத்து மாவட்ட செயலாளராக வந்துள்ளார். அதேபோல் சேடப்பட்டி மணிமாறன். அவருடைய தந்தை சேடப் பட்டி முத்தையா முதிர்ந்த அரசியல்வாதி. ஒரு அரசியல் பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தாலும் மிக கடுமையாக உழைத்து ஒன்றிய செயலாளராக இருந்து தற்போது மாவட்ட செயலாள ராக இருக்கிறார். எனவே கடுமையாக உழைத்தால் நீங்கள் முன்னேறலாம், என் றும் உயர்ந்த பதவிக்கு வர லாம்.

    மாநாட்டு நிதிக்காக ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார். சேலத்தில் டிசம்பர் 17-ந்தேதி இரண்டா வது மாநில மாநாடு நடத்த உள்ளோம். இதனை வெற்றி அடைய வைக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய முடியுமா என ஆர்.பி.உதய குமார் கூறிய கருத்திற்கு நாங்கள் நீட் தேர்வு ரத்து செய்வதற்காக போராடி வருகிறோம். கடந்த மாதம் 20-ந்தேதி உண்ணாவிரத ஆலப்போராட்டம் நடத்தி னோம். கூடிய விரைவில் நீட் தேர்வுக்கு எதிராக கையெ ழுத்து இயக்கம் நடத்த உள் ளோம்.

    அண்ணாவைப் பற்றி தவறாக பேசியவர்கள் மீது தி.மு.க. கொதித்து எழ வேண்டாமா? என செல்லூர் ராஜூ கூறுகிறார். சனாதனம் ஒழிப்பு கூட்டத்தில் பத்து நிமி டம் தான் பேசினேன். தற்போது உலகம் முழுவதும் சனாதனம் குறித்து தவறாக பேசியதாக கூறி வருகின்றனர்.

    பாராளுமன்றத்துக்குள் குடியரசு தலைவரை அழைத் துச் செல்லவில்லை இதுதான் அவர்களது சனாதனம். எப்போது ஜெயலலிதா இறந்தாரோ, அப்போதி லிருந்து பா.ஜ.க.வின் அடிமை யாகி விட்டது அ.தி.மு.க., அது அண்ணா தி.மு.க. அல்ல, அமித்ஷா தி.மு.க. என்றார்.

    சனாதன சேற்றில் இருந்து மக்கள் வெளியேறாதது வேதனையை அளிக்கிறது. மக்கள் இந்த சேற்றை சந்தனம் என்று எடுத்து பூசி கொள்கி றார்கள். இதை, நான் சொல்ல வில்லை, பேரறிஞர் அண்ணா சொன்னது. உங்களுக்கு தெம்பு, திராணி இருந்தால் இந்த வார்த்தையை நீங்கள் சொல்ல முடியுமா செல்லூ ராஜூ அவர்களே.

    ஒன்பது வருடமாக ஆட்சி செய்தீர்களே மோடி, என்ன செய்தீர்கள்? ஒன்பது வரு டங்களுக்கு முன்பு பிரதமர் இந்தியாவை மாற்றி காட்டு கிறேன், வல்லரசு ஆக்குகிறேன் என்று சொன்னார். தற்போது 2024-ல் வல்லரசு ஆக்குகி றேன் என சொல்கிறார்.

    இதற்கெல்லாம் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பதிலடி கொடுக்க நமது மக்கள் தயாராக வேண்டும். அதற்காக இளைஞர் அணியி னர் கடுமையாக பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி, கோ.தளபதி எம்.எல்.ஏ., சேடப்பட்டி மணிமா றன் ஆகியோர் தலைமை தாங்கினர். இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் கள் ஜி.பி. ராஜா, இன்பா ரகு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் விமல் சௌந்தரராஜன், அழகு பாண்டி, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இளங்கோ, வைகை மருது, கவுன்சிலர் காளிதாஸ், ராம் பிரசாத் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    அவைத்தலைவர்கள் பாலசுப்பிரமணியன், ஒச்சுப் பாலு, பொருளாளர் சோம சுந்தர பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம், முன்னாள் மேயர் குழந்தை வேலு, வேலுச்சாமி, பகுதி செயலாளர்கள் மருதுபாண்டி சசிகுமார், கிருஷ்ண பாண்டி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து ஒரேநாளில் 1½ லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் செய்துள்ளனர். #Pongal
    சென்னை:

    பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்று கொண்டாட வசதியாக 14-ந் தேதி அரசு விடுமுறை அளித்துள்ளதால் தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

    இதனால் நேற்று முதல் பயணிகள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். பள்ளி, கல்லூரிகள் உள்பட ஐ.டி. நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதால் வெளியூர் செல்லக்கூடியவர்கள் பஸ், ரெயில் நிலையங்களில் குவிந்தனர்.



    சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் சென்ற அனைத்து ரெயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தன. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் மக்கள் படிக்கட்டு வரை நின்று பயணம் செய்யும் நிலை இருந்தது.

    பொங்கல் பண்டிகை கூட்டத்தை சமாளிக்க அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 4 நாட்கள் சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது.

    சென்னையில் இருந்து 14 ஆயிரம் சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து வழக்கமாக செல்லும் 2275 பஸ்களோடு கூடுதலாக சிறப்பு பஸ்கள் விடப்பட்டுள்ளன.

    நேற்று முதல் வெளியூர் செல்லும் பயணிகள் குவியத்தொடங்கினர். வழக்கமான பஸ்கள் தவிர கூடுதல் 748 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 3,100 பஸ்கள் சென்னையில் இருந்து இயக்கப்பட்டன.

    ஒரு லட்சத்து 45 ஆயிரம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். முன்பதிவு செய்த பயணிகள் எவ்வித சிரமமும் இன்றி பயணம் செய்தனர். முன்பதிவு செய்யாத பயணிகள் அலைந்து திரிந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது.

    கோயம்பேடு, மாதவரம், தாம்பரம், கே.கே.நகர், பூந்தமல்லி ஆகிய 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கோயம்பேட்டில் இருந்து மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் போன்ற தென் மாவட்டங்களுக்கும், வேலூர், ஆரணி, வந்தவாசி பகுதிகளுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    நேற்றைவிட இன்று பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று 3741 பஸ்கள் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்கின்றன.

    அரசு பஸ்களில் பயணம் செய்ய ஒரு லட்சத்து 54 ஆயிரம் பேர் மொத்தம் முன்பதிவு செய்துள்ளனர். இதில் சென்னையில் இருந்து மட்டும் 59 ஆயிரம் பேர் செல்ல முன்பதிவு செய்தனர்.

    சிறப்பு பஸ்கள் 14-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. வெளியூர் செல்லக்கூடிய பயணிகள் நெரிசலில் சிக்காமல் செல்ல ஏதுவாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விரிவான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி அதிகாரிகள் அனைத்து பஸ் நிலையங்களிலும் முகாமிட்டு பயணிகள் தேவை அறிந்து சிறப்பு பஸ்களை தேவையான இடத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள். #Pongal
    சந்திர கிரகணத்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என நினைத்ததால் கர்நாடக மந்திரிகள் சிலர் பெங்களூரில் இருந்து புறப்பட்டு சொந்த ஊர்களுக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #chandragrahan
    பெங்களூர்:

    சந்திரகிரகணம் நேற்று நள்ளிரவு ஏற்பட்டது. இது இந்த ஆண்டின் மிக நீண்ட நேர கிரகணமாக 4 மணிநேரம் நீடித்தது.

    இந்த கிரகணம் ஜோதிட ரீதியாக 8 நட்சத்திரக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான பரிகாரமும் கூறப்பட்டது.

    கர்நாடகத்தில் ஜோதிடத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்ட மந்திரிகள் சிலர் கிரகணம் தொடர்பாக தங்களது ஆஸ்தான ஜோதிடர்களை சந்தித்து ஆலோசனைகளை கேட்டுக்கொண்டனர்.

    அதன்படி கிரகணத்தின் போது சில மந்திரிகள் பெங்களூரில் தங்காமல் சொந்த ஊருக்கே சென்று விட்டனர். கிரகணம் நள்ளிரவு தான் ஏற்படுகிறது. ஆனால் மந்திரிகளை முதல் நாளே பெங்களூரை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு ஓட்டம் பிடித்து விட்டனர். இதனால் பெங்களுரில் நேற்று மந்திரிகள் அறைகளில் கூட்டம் இல்லை. தலைமைச் செயலகம் வெறிச்சோடி காணப்பட்டது.

    உயர் கல்வித்துறை மந்திரி ஜி.டி.தேவகவுடா உள்பட 26 மந்திரிகள் மட்டுமே நேற்று பெங்களூரில் தலைமைச் செயலகத்தில் இருந்து அலுவல்களை கவனித்தனர். 20-க்கும் மேற்பட்ட மந்திரிகள் சந்திரகிரகணம் என்பதால் ஊரிலே இல்லை. இதனால் மந்திரிகளை சந்திக்க வரும் மக்களின் கூட்டம் இல்லாமல் அலுவலகம் வெறிச்சோடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால் மூத்த காங்கிரஸ் மந்திரி ஒருவர் இந்த தகவலை மறுத்தார். மந்திரி பரமேஸ்வராவின் சகோதரர் சிவபிரசாத் இறந்துவிட்டதால் துக்கம் விசாரிப்பதற்காக அனைவரும் தும்கூர் சென்று விட்டனர் என்றார்.

    கர்நாடகத்தின் சிக்கமகளூர் என்.ஆர்.புரா தாலுகாவில் உள்ள கிராமத்தில் ஹாவுகொல்லா என்ற பழங்குடியின மக்கள் 25 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்கள் கிரகணத்தின் போது வீட்டில் இருக்கக் கூடாது என்று கருதி வீடுகளை விட்டு வெளியேறினார்கள். #chandragrahan
    ×