சின்னசேலம் அருகே வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி

பெரியசாமி அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சின்னசேலம் அருகே  வாகனம் மோதி கூலி தொழிலாளி பலி
Published on

கள்ளக்குறிச்சி:

சின்னசேலம் அருகே வி.அலம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. கூலி தொழிலாளியான இவர் இன்று அதிகாலை விருத்தாசலத்தில் இருந்து சொந்த ஊரான வி.அலம்பலம் கிராமத்திற்கு செல்ல நைனார்பாளையம் கிராமம் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த கீழ்குப்பம் போலீசார் பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com