search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "future"

    இளம் வயதில் நல்ல கல்விக்கு அடித்தளம் அமைத்தால் தான் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கலெக்டர் சாந்தா பேசினார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு புதிய இளநிலை பாடப்பிரிவுகள்  தொடக்க விழா மற்றும் புதிய மாணவிகளை வரவேற்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் சீனி வாசன் தலைமை வகித்தார். செயலாளர் நீல்ராஜ், துணை தலைவர் அனந்தலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியில் புதிய இளநிலைப் பாடப் பிரிவுகளான  பாரன்சிக் சயின்ஸ், சைக்காலஜி,  புட் டெக்னாலஜி மற்றும் குவாலிட்டி கன்ட்ரோல், பி.பி.ஏ. ஏவியேஷன் மேனேஜ் மெண்ட் ஆகிய துறைகளை சார்ந்த முதலாம் ஆண்டு வகுப்புகளை கலெக்டர் சாந்தா தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:- 

    பாரன்சிக் சயின்ஸ் துறைக்கான களங்கள் மருத்துவ கல்லூரியில் மட்டுமே இருக்கும். ஆனால் முதல் முறையாக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாரன்சிக் சயின்ஸ் பிரிவை கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் வளர்ந்த நூலகங்கள் இணைய தளங்கள் இயங்கி வருகின்றன. அதனைப் பயன்படுத்தி பயனுள்ள கல்வியை  பெற வேண்டும். இளம் வயதில் நல்ல கல்விக்கு அடித்தளம் அமைத்தால் தான் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். நடந்த கொலையை கண்டுபிடிக்க இயலாத நிலையில் அந்த குற்றங்களைக் கண்டுபிடிப்பது பாரன்சிக் சயின்ஸ் துறை தான் எனவும் மாணவிகளுக்கு விளக்கி கூறினார்.

    கவுரவ விருந்தினராக எஸ்.பி. திஷாமித்தல் கலந்துகொண்டு பேசு கையில், குற்றவியல் பிரிவு, சட்டப்பிரிவு, ராணுவப்பிரிவு போன்ற பல துறைகளுக்கு பாரன்சிக் சயின்ஸ் துறை பயன்படுகிறது. இதைப் போலவே சைக்காலஜி துறையும் முக்கியத்துவம் வாய்ந்தது. மாணவிகள் தினந்தோறும் வரும் சவால்களை எதிர் கொள்ள வேண்டும். தினமும் ஏதாவதொரு புதிய தகவல்களைக் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். வலிமை வாய்ந்த பெண்கள் சாதனைப்படைக்க வேண்டும்  என்றார்.

    இந்திய குற்றவியல் மற்றும் தடய அறிவியல் பேரவையை சேர்ந்த குற்றவியல் ஆய்வாளர் பெயின் பேபி, கல்லூரி முதல்வர் செந்தில்நாதன் உட்பட பலர் பேசினர். இதில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக துணை முதல்வர் அப்ரோஸ் வரவேற்றார். முடிவில் மாணவி நிமிஷா நன்றி கூறினார்.
    அமெரிக்காவுடன் தலீபான் பேச்சு வார்த்தை தொடரும் என ஆப்கானிஸ்தான் தலீபான்கள் அரசின் முன்னாள் நிதி மந்திரி முஸ்டாசிம் ஆகா ஜன் கூறியுள்ளார்.
    பெஷாவர்:

    அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன், நியூயார்க் உலக வர்த்தக மையம் ஆகியவற்றின் மீது அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர். 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி நடந்த இந்த தாக்குதல்கள், உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தின.

    அதைத் தொடர்ந்து அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அங்கு தலீபான்களை ஆட்சியில் இருந்து அகற்றியது. அதைத் தொடர்ந்து அங்கு 18-வது ஆண்டாக உள்நாட்டுப்போர் நீடிக்கிறது. இதை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக தலீபான்களுடன் அமெரிக்க அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளிவந்தன. அதை இப்போது ஆப்கானிஸ்தான் தலீபான்கள் அரசின் முன்னாள் நிதி மந்திரி முஸ்டாசிம் ஆகா ஜன் உறுதி செய்து உள்ளார்.

    தற்போது துருக்கியில் உள்ள அவர் இதுபற்றி கூறுகையில், “கத்தார் நாட்டில் தலீபான் அரசியல் பிரதிநிதிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் நேரடி பேச்சு நடத்தினார்கள். இதில் வேறு எந்த தரப்பினரும் பங்கேற்கவில்லை. இப்போது இந்த பேச்சு வார்த்தை அடிமட்ட அளவில் உள்ளது. இரு தரப்பினரும் பேச்சு வார்த்தையை படிப்படியாக அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்வார்கள்” என்று குறிப்பிட்டார்.

    தொடர்ந்து அவர் கூறும்போது, “பேச்சு வார்த்தை உயர் மட்டத்தில் நடைபெறுகிறபோது, நாங்கள் உடன்பாட்டை எட்ட முடியும். தலீபான்களும், அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்துவார்கள்” என்றார்.

    ஆப்கானிஸ்தான் அரசுடன் தலீபான்கள் பேச்சு நடத்த மறுத்தது பற்றி கேள்வி எழுப்பியபோது, “தலீபான்களின் போர், ஆப்கானிஸ்தானுக்கு எதிரானது அல்ல. அது அமெரிக்காவுக்கு எதிரானது” என பதில் அளித்தார்.

    இந்த தகவல்களை பாகிஸ்தானின் ‘தி டெய்லி டைம்ஸ்” ஏடு வெளியிட்டு உள்ளது. 
    இளைஞர்களுக்கு அ.தி.மு.க.வில்தான் எதிர்காலம் இருக்கிறது என்று மதுரையில் நடந்த புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

    மதுரை:

    மதுரை விளாங்குடியில் அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    தமிழகத்தில் இளைஞர்களுக்கு எதிர்கால வாழ்வை வளமாக்கும் பல்வேறு திட்டங்களை தந்தவர் மறைந்த முதல்-அமைச்சர் அம்மா அவர்கள்.

    அவர் வழியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் மாணவர்கள், இளைஞர்கள் நலன் காக்கும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை செய்து வருகிறார். எனவே தான் 1½ கோடி தொண்டர்கள் உள்ள அ.தி.மு.க. இயக்கத்தில் இளைஞர்களும், இளம்பெண்களும் ஆர்வமாக சேர்ந்து வருகிறார்கள்.

    தி.மு.க.வில் உள்ள இளைஞர்களுக்கு பதவியும் கிடைக்காது. எதிர்காலமும் இல்லை. அங்கே அவர்களது வாரிசுகள்தான் பதவிக்கு வரமுடியும். ஆனால் அ.தி.மு.க.வில் உழைக்கும் அனைத்து இளைஞர்களுக்கும் எதிர்காலம் உண்டு.

    தேடி வந்து இளைஞர்களுக்கு பதவியை கொடுக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. தான். இதை உணர்ந்த காரணத்தால்தான் அ.தி. மு.க.வில் இளைஞர்கள் இணைந்து வருகிறார்கள். எனவே இந்த அரசுக்கும், ஆட்சிக்கும் இளைய சமுதாயம் துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், புதூர் துரைப்பாண்டியன், தங்கம், வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், திரவியம், சோலைராஜா, பரவை ராஜா, கறிக்கடை முத்துக்கிருஷ்ணன், பாஸ்கரன், பிரிட்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    எதிர்காலத்தில் பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரத்திலிருந்து 25 மணி நேரமாக மாற வாய்ப்பு உள்ளதாக புவியியல் ஆராய்சியாளர் ஸ்டீபன் மேயர்ஸ் கூறியுள்ளார். #25hours #futureEarth
    நியூயார்க்:

    அமெரிக்காவின் விஸ்கான்சின் - மேடிசன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளராக இருக்கும் ஸ்டீபன் மேயர்ஸ் கூறுகையில்,

    140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு அருகில் நிலவு இருந்தது. தற்போது அது 44 ஆயிரம் கிமீட்டர் தூரம் விலகி சென்று உள்ளது. 140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் ஒரு நாள் என்பது வெறும் 18 மணி நேரம் 41 நிமிடமாக இருந்தது  தற்போது 24 மணி நேரமாக உள்ளது.

    நிலவு வருடத்திற்கு 3.82 சென்டி மீட்டர் விலகி சென்றுள்ளது.சென்று கொண்டு இருக்கிறது  இவ்வாறு செல்வதால் சில மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர், நிலவு அதிகம் தூரம் சென்று விடும் இதனால் பூமியின் சுற்றும் வேகத்தி மாறுபாடு ஏற்பட்டு பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

    "ஒரு நாளைக்கு நான் பார்க்கும் வேலைக்கு 24 மணி நேரம் போதவில்லை..!"  என நேரத்தை குற்றம் சொல்பவர்கள் நம்மில் பலர் இருக்கிறோம். பல வேலைகள் நேரமின்மை காரணத்தாலும், சோம்பேறித்தனத்தாலும் ஒத்திவைக்கப்படுவது வழக்கம். ஒரு நாளில் அதிக மணி நேரம் கிடைக்காதா என்று பலர் இருக்கிறார்கள் அவர்களுக்கு விரும்பியது போல் எதிர்காலத்தில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக இருக்கும் என்று புவியியல் ஆராய்சியாளர்  ஸ்டீபன் மேயர்ஸ் கூறியுள்ளார்.

    கடந்த சில நூற்றாண்டுகளாகவே பூமி சுற்றும் அளவு இரண்டு மில்லி நொடிகள் அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணிநேரத்தை எடுத்துக்கொள்கிறது. இந்நிலையில், இந்த இரண்டு மில்லி நொடிகள், இன்னும் 6.7 மில்லியன் ஆண்டுகளில் ஒரு நிமிடமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த கணக்கின் அடிப்படையில், இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் இது ஒரு மணி நேரமாக மாறும் என கூறப்படுகிறது. எனவே அப்போது ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பது மாறி 25 மணி நேரமாக மாறக்கூடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். #25hours #futureEarth
    ×