search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Executives Meeting"

    • அடுத்த 7 மாதங்களுக்கு யாருக்கும் ஓய்வு கிடையாது.
    • மத்திய அரசின் திட்டங்களால் பயன் அடைந்த மக்களை அழைத்து பேச வேண்டும்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் கடந்த 3-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி முறிந்ததால் அதுபற்றி டெல்லி மேலிட தலைவர்களிடம் விளக்கம் அளிக்க சென்ற அண்ணாமலை சென்னை திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதன்படி பா. ஜனதா மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் அமைந்த கரையில் உள்ள அய்யாவு மகாலில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக 66 மாவட்ட தலைவர்கள் 66 மாவட்ட பார்வையாளர்கள், மாநில நிர்வாகிகள் 32 பேர், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் 30 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.

    வெளி மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் இன்று காலையிலேயே சென்னை வந்தனர். அவர்களுக்கு காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    காலை 11 மணியளவில் நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது. கூட்டத்துக்கு வந்த அண்ணாமலையை மண்டப வாசலில் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றார்கள். பின்னர் அண்ணாமலை தலைமையில் கூட்டம் தொடங்கியது.

    இந்த கூட்டத்தில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், சரஸ்வதி மற்றும் சசிகலா புஷ்பா, நயினார் நாகேந்திரன், துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், கே.பி.ராமலிங்கம், இசை அமைப்பாளர் தினா, சக்கரவர்த்தி, கருப்பு முருகானந்தம், கனகசபாபதி, கார்த்தியாயினி, மலர்க்கொடி, ஏ.பி.முருகானந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.

    கூட்டம் தொடங்கியதும் நிர்வாகிகள் ஒவ்வொருவராக பேசி தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    பா.ஜனதா அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் பேசுகையில், "தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகி இருக்கிறது. நாம் இந்த சூழ்நிலையில் தனித்து போட்டியிட தயாராக இருக்க வேண்டும். பா.ஜனதா தனித்து போட்டியிடுவது என்பது புதிதல்ல.

    மாவட்ட தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம். பா.ஜனதா அகில இந்திய தலைமை, மாநில தலைமையை கண்காணித்து வருகிறது. எனவே நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் சரியாக பேச வேண்டும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்.

    இந்த விவகாரத்தில் அகில இந்திய தலைமைதான் உரிய பதிலை அளிக்கும். அதுவரை கூட்டணி பற்றிய கருத்துக்களை வெளியில் தெரிவிக்க வேண்டாம்" என்றார்.

    பின்னர் கூட்டத்தில் ஒவ்வொருவராக தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர். அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் அண்ணாமலை பரபரப்பாக பேசினார். அவர் பேசியதாவது:-

    அடுத்த 7 மாதங்களுக்கு தி.மு.க. அரசுக்கு எதிராக பா.ஜனதா போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும். அடுத்த 7 மாதங்களுக்கு யாருக்கும் ஓய்வு கிடையாது. தீவிரமாக உழைக்க வேண்டும். பெண்களை அதிக அளவில் பூத் கமிட்டிகளில் சேர்க்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களால் பயன் அடைந்த மக்களை அழைத்து பேச வேண்டும்.

    கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம். சர்க்கசில் ஒரு கம்பியை பிடித்து தொங்கி விளையாடும்போது ரிஸ்க் எடுத்து இன்னொரு கம்பியை பிடித்து விளையாடி வெற்றி பெறுவது உண்டு. நம்மை பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களாகிய மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

    ஜனவரி 2-வது வாரம் சென்னையில் 10 லட்சம் பேர் திரளும் பிரமாண்ட யாத்திரை நிறைவு விழா பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அகில பாரத இந்து மகா சபா செயற்குழு நிர்வாகிகள் கூட்டம் உடன்குடி வைத்தியலிங்கபுரம் இசக்கிஅம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது.
    • கூட்டத்தில் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் வழிபடும் பக்தர்கள் தரை வழியாக சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    உடன்குடி:

    அகில பாரத இந்து மகா சபா செயற்குழு நிர்வாகிகள் கூட்டம் உடன்குடி வைத்தியலிங்கபுரம் இசக்கிஅம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. நகரத் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜேந்திரன், முத்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர் சுந்தரவேலு, செயலாளர் அய்யப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் வழிபடும் பக்தர்கள் தரை வழியாக சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும், கம்பி வழியாக ஏறி இறங்குவதை அப்புறப்படுத்த வேண்டும், கோவில் அருகில் பக்தர்கள் மேள வாத்தியங்கருடன் செல்ல அனுமதிக்க வேண்டும், கூட்டத்தை சமாளிக்க போலீஸ் நிலையத்தில் உள்ள பழைய சுற்றுச்சுவரை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், பணியாளர்கள் மரியாதையாக பேச வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. உடன்குடி ஒன்றிய தலைவர் வினோத், ஒன்றிய செயலாளர் முத்துலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். செயற்குழு உறுப்பினர் அந்தோணி நன்றி கூறினார்.

    • கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடைபெற்றது.
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் திருமுருகன்பூண்டியில் திருப்பூர் புறநகர் மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தேளி.கே.காளிமுத்து தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில துணைத்தலைவரும், மாவட்ட தலைவருமான எஸ்.கர்ணன்,முன்னாள் மத்திய குழு உறுப்பினர் ராஜசேகர், திருப்பூர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் மகேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். எஸ்.ராஜா அனைவரையும் வரவேற்றார். திருப்பூர் மாவட்ட தலைவர் எஸ்.கர்ணன் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளராக மத்திய குழு உறுப்பினர் தேளி.கே.காளிமுத்து தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார். அவருக்கு நிர்வாகிகள், உறுப்பினர்கள் அவருக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி இனிப்புகள் வழங்கி வாழ்த்தினர். புறநகர் மாவட்ட தலைவராக தாமோதரன், பொருளாளராக ராமர், துணைத்தலைவராக லட்சுமணன், இணை செயலாளராக எஸ்.ராஜா, தொழிற்சங்க நிர்வாகிகளாக ஈஸ்வரன், ரமேஷ்முருகானந்தம், வெள்ளத்துரை, பிரபு, இளைஞர் அணி நிர்வாகிகளாக வீரமணி, ஜெயராம், சரவணன், மகாதிருநாவுக்கரசு, நவனேஷ், கார்த்திக், மாணவரணி நிர்வாகிகளாக ஜீவா, வினோத்குமார், பிரபாகரன்,பசுபதி, மணிகண்டன், தொண்டர் அணி நிர்வாகிகளாக ரகு,ராஜேஸ், முத்து உள்பட பல்வேறு அணி நகர,ஒன்றிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். கூட்டத்தில் மத்திய பட்ஜெட்டில் கிராமப்புறத்தில் வாழ்வாதாரத்திற்கு ஏற்ற வகையில் எந்த திட்டமும் இல்லை. தமிழக அரசு சார்பில் திருப்பூரில் சுதந்திர போராட்ட வீரர் சுபாஸ்சந்திரபோசுக்கு திருஉருவ சிலை அமைக்க வேண்டும். திருப்பூரில் நடந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் மோதல் போக்கை தடுக்க மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள், சமூக நல அமைப்புகள் இணைந்து ஆலோசனைக்கூட்டம் நடத்த வேண்டும். திருப்பூர் புறநகரில் பாதிப்படைந்து வரும் பனியன்,பவர் லூம் சிறு,குறு தொழில்களின் பின்னடைவுக்கு மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையே காரணமாகும். இ்தற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • தென்காசி மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குற்றாலம் சேனைத் தலைவர் விடுதியில் நடைபெற்றது.
    • சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பால்வசந்தகுமார் சத்தியநாராயணா தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குற்றாலம் சேனைத் தலைவர் விடுதியில் நடைபெற்றது.

    ஆலோசனை கூட்டத்திற்கு தமிழ்நாடு மாநில மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் வே.புதியவன் தலைமை தாங்கினார். தென்காசி எம்.முத்துசாமி முன்னிலை வகித்தார். குருவிகுளம் ஆர். தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசுதேவநல்லூர் கிருஷ்ண குமார் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில், தமிழக அரசு திட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரை மாற்றி கலைஞரால் அறிவிக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர் என்ற பெயரை சூட்ட வேண்டும், மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாதாந்திர ஊதியம் அந்தந்த மாதத்திலேயே கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பால்வசந்தகுமார் சத்தியநாராயணா தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க. அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற்று மக்கள் நலப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியத்தின் அடிப்படையில் நிரந்தர பணி வழங்க வேண்டும். மக்கள் நலப்பணியாளர்களின் கோரிக்கையை வென்றெடுக்க தொடர் போராட்டம் நடத்த மாநில மையத்தை இந்த கூட்டம் கேட்டுக் கொள்கிறது உள்ளிட்ட தீர்மான ங்கள் நிறைவேற்றப் பட்டது.

    தென்காசி மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர் . அதன்படி தென்காசி மாவட்ட மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் தலைவராக வாசுதேவநல்லூர் எஸ்.முருகன், மாவட்ட செயலாளராக தென்காசி எம். முத்துசாமி, மாவட்ட பொருளாளராக கீழப்பாவூர் எஸ். அருணாசலம், துணைத் தலைவர்களாக மேலநீலிதநல்லூர் பி லட்சுமி, குருவிகுளம் ஆர். தர்மராஜ், துணைச் செயலாளராக ஆலங்குளம் மு திராவிட மணி, கடையநல்லூர் கருப்பசாமி, சங்கரன்கோவில் சண்முகச்சாமி ஆகியோரும் மாநில செயற்குழு உறுப்பின ர்களாக சங்கரன்கோவில் மாரியப்பன், செங்கோட்டை பண்டாரசிவன், தென்காசி அந்தோணி செல்லதுரைச்சி, கடையநல்லூர் ராஜேந்திரன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தின் தொடர் நடவடிக்கைகள் பற்றி விரிவாகவும், விளக்கமாகவும் பேசினார்கள். முடிவில் தென்காசி மாவட்ட மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வாசுதேவநல்லூர் எஸ்.முருகன் நன்றி கூறினார்.

    • அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடந்தது.
    • நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.

    நெல்லை:

    அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெல்லையில் நடந்தது.

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன், முன்னாள் எம்.பி. முத்துக்கருப்பன், எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணை செயலாளர் நாராயணபெருமாள், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், பொருளாளர் சவுந்தர்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட செயலாளர் பெரியபெருமாள், இளைஞர் பாசறை செய–லாளர் முத்துப்பாண்டி, ஹரிகரசிவசங்கர், மகளிர் அணி ஜான்சிராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இளைஞர் பாசறை மாநில செயலாளர் பரமசிவம், பூத்கமிட்டி அமைப்பது குறித்து சிறப்புரை ஆற்றினார்.

    கூட்டத்தில் பகுதி செய லாளர்கள் வக்கீல் ஜெனி, திருத்து சின்னத்துரை, காந்தி வெங்கடாசலம், மோகன், சண்முககுமார், சக்திகுமார், சிந்துமுருகன், ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், நெல்லை பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளர் சீனிமுகம்மது சேட், கவுன்சிலர் சந்திரசேகர், பகுதி துணை செயலாளர் மாரீசன், வக்கீல் அன்பு, வட்ட செயலாளர் பாறையடி மணி, தச்சை மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×