search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "donations"

    • கடந்த 4 ஆண்டுகளில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாரதிய ஜனதா கட்சி ரூ.5 ஆயிரம் கோடி நிதி பெற்று இருப்பதாக தகவல் வெளியானது.
    • மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ரூ.20 ஆயிரம் வரை நன்கொடை அளிக்கும் நன்கொடையாளர் தனது பான் எண்ணை சமர்ப்பிக்க தேவை இல்லை.

    புதுடெல்லி:

    அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தங்கள் செலவினங்களுக்காக தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து நிதி வசூலித்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தேர்தல் பத்திரம் மற்றும் காசோலை மூலமாக நன்கொடையாக இதனை கட்சிகள் பெற்றுக் கொள்ளலாம்.

    ஒவ்வொரு கட்சியும் தணிக்கை செய்யப்பட்ட வரவு-செலவு கணக்குகளை தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

    அந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாரதிய ஜனதா கட்சி ரூ.5 ஆயிரம் கோடி நிதி பெற்று இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தேர்தல் பத்திர திட்டங்கள் பாரதிய ஜனதா அரசுக்கு சாதகமாக இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வந்தது.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியும் நன்கொடைகள் மற்றும் நிதி திரட்டுவதற்கு ஒரு பிரத்யேக தளத்தை தொடங்குவதற்கு முடிவு செய்துள்ளது.

    தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெறுவதற்கு விதிமுறைகள் உள்ளன.

    மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ரூ.20 ஆயிரம் வரை நன்கொடை அளிக்கும் நன்கொடையாளர் தனது பான் எண்ணை சமர்ப்பிக்க தேவை இல்லை. அதற்கு மேல் பெறப்படும் பணத்திற்கு தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும்.

    எனவே ரூ.100 அல்லது 500, 1000 ரூபாய் என சிறிய நன்கொடையாக இருந்தாலும் வரவேற்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நிதி குறைந்து கொண்டே வருகிறது. கட்சிக்கு நன்கொடை வழங்கி வந்த பெரும்பாலானோர் ஆளும் பா.ஜனதாவுக்கு ஆதரவாக சாய்ந்ததால் காங்கிரஸ் கட்சிக்கு பணம் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், கட்சி செலவை சமாளிக்க நிதி திரட்டும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருவதாகவும் கட்சியின் அலுவலக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • அ.தி.மு.க., பா.ம.க. கட்சிகள் நன்கொடை பெறவில்லை என்று கூறியுள்ளன.
    • ஆம் ஆத்மிக்கு வெளிநாட்டில் இருந்து ரூ.1 கோடியே 82 லட்சம் நன்கொடை கிடைத்துள்ளது.

    புதுடெல்லி :

    ஒவ்வொரு நிதிஆண்டிலும், அரசியல் கட்சிகள் தாங்கள் பெற்ற நன்கொடை விவரத்தை தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதுபோல், 2021-2022 நிதிஆண்டில், அங்கீகரிக்கப்பட்ட 26 அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரம், தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அந்த விவரத்தை சேகரித்து, ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு, ஒரு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி, 26 கட்சிகளும் மொத்தம் ரூ.189 கோடியே 80 லட்சம் நன்கொடை பெற்றுள்ளன. இவற்றில், 5 மாநில கட்சிகள் மட்டும் பெற்ற நன்கொடை ரூ.162 கோடியே 21 லட்சம் (85.46 சதவீதம்) ஆகும்.

    இந்த நன்கொடையில், பாரத ராஷ்டிர சமிதி ரூ.40 கோடியே 90 லட்சம் நன்கொடை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. ஆம் ஆத்மி ரூ.38 கோடியே 24 லட்சம், ஐக்கிய ஜனதாதளம் ரூ.33 கோடியே 26 லட்சம், சமாஜ்வாடி ரூ.29 கோடியே 80 லட்சம், ஒய்.எஸ்,ஆர்.காங்கிரஸ் ரூ.20 கோடி என அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

    அ.தி.மு.க., பிஜு ஜனதாதளம், நாகாலாந்து ஜனநாயக முற்போக்கு கட்சி, சிக்கிம் ஜனநாயக முன்னணி, பா.ம.க., தேசிய மாநாட்டு கட்சி ஆகிய கட்சிகள் நன்கொடை பெறவில்லை என்று கூறியுள்ளன.

    2020-2021 நிதிஆண்டில் நன்கொடை பெறாத ராஷ்டிரீய லோக்தந்திரிக் கட்சி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, தே.மு.தி.க. ஆகியவை 2021-2022 நிதிஆண்டில் நன்கொடை பெற்றதாக தெரிவித்துள்ளன. தே.மு.தி.க. ரூ.50 ஆயிரம் பெற்றதாக கூறியுள்ளது.

    மொத்தம் ரூ.190 கோடியில், ரொக்கமாக ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் பெறப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அதிகபட்சமாக ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்தை ரொக்கமாக பெற்றுள்ளது.

    தமிழ்நாட்டில் இருந்துதான் அதிக அளவில் ரொக்கமாக (ரூ.5 லட்சத்து 50 ஆயிரம்) நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மிக்கு வெளிநாட்டில் இருந்து ரூ.1 கோடியே 82 லட்சம் நன்கொடை கிடைத்துள்ளது.

    • தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
    • . இதனை மயிலம் வட்டார கல்வி அலுவளர் மதன்குமார் தொடங்கி வைத்தார்,

    விழுப்புரம்:

    தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் மயிலம் அருகே உள்ள சித்தனி அரசு நடுநிலை பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றதும இதில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பதாகைகள ஏந்தி சேர்ப்போம், சேர்ப்போம், அரசு பள்ளிகளிள் தமிழ் வழியில் மாணர்களை சேர்ப்பபேம் என கோஷங்கள் எழுப்பி முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று வந்தனர்.       

                   நிகழ்ச்சியில் முன்னதாக சித்தனி அரசு நடுநிலை பள்ளியில் படித்த முன்னாள் மாணவரும், தேசிய மக்கள் நேய நுகர்வோர் உரிமை பாதுகாப்பு இயக்க புரவளருமான சித்தனி ஏழுமலை ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 2 பீரோ, மின்விசிறி ஆகியவற்றை பள்ளிக்கு நன்கொடையாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பரிமளா, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயகதிர்காமன், துணை தலைவர் அமர்நாத், ஊராட்சி செயலாளர் முருகன், ஆசிரியர்கள் அருளப்பன், தட்சினாமூர்த்தி, பானுமதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட தேசிய கட்சிகள் கடந்த நிதியாண்டில் பெற்ற நன்கொடை குறித்த தகவல்களை ஜனநாயக மாற்றத்திற்கான அமைப்பு (ADR) வெளியிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட தேசிய கட்சிகள் கடந்த நிதியாண்டில் (2016-17) ரூ.20 ஆயிரத்திற்கும் அதிகமாக பெற்ற நன்கொடை குறித்த தகவல்களை ஜனநாயக மாற்றத்திற்கான அமைப்பு (ADR) வெளியிட்டுள்ளது. பாஜக ரூ.532.27 கோடிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

    காங்கிரஸ் ரூ.41.90 கோடி, தேசியவாத காங்கிரஸ் ரூ.6.34 கோடி, சிபிஎம் ரூ.5.25 கோடி, திரினாமுல் காங்கிரஸ் ரூ.2.15 கோடி மற்றும் சிபிஐ ரூ.1.44 கோடி நன்கொடையாக பெற்றுள்ளன. மற்ற அனைத்து கட்சிகள் பெற்ற நன்கொடையை கூட்டினாலும், பாஜக பெற்ற நன்கொடை 9 மடங்கு அதிகமாக உள்ளது.

    கடந்த 2015-16 நிதியாண்டை எடுத்துக்கொண்டால் பாஜக ரூ.76.85 கோடி நன்கொடையாக பெற்றிருந்தது. தற்போது, அக்கட்சிக்கான நன்கொடை 593 சதவிகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றொரு தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் ரூ.20 ஆயிரத்திற்கு அதிகமாக யாரிடமும் நன்கொடை பெறவில்லை என்பதால் மொத்த நன்கொடை விபரங்கள் வெளியாகவில்லை.
    ×