search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dog Meat"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தோழமைக்கு ஏற்ற உயிரினமாக நாய்களை கருதி பலர் அவற்றை வளர்க்கின்றனர்
    • தென் கொரிய அதிபரின் மனைவி இச்சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்

    நாய்களை "மனிதனின் உற்ற நண்பன்" (Man's best friend) என அடைமொழியிட்டு கூறுவது வழக்கம். நாய்களை பாதுகாப்பிற்கு ஏற்ற காவலனாகவும், தோழமைக்கு ஏற்ற உயிரினமாகவும் கருதி வளர்ப்பதில் ஆர்வம் காட்டுபவர்கள் அயல்நாடுகளில் அதிகம்.

    தென் கொரிய மக்களில் ஒரு சிலர் நாய் இறைச்சி உண்ணுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இது உலகளவில் விலங்கின ஆர்வலர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டு வந்தது.

    தென் கொரியாவின் பல பகுதிகளில் நாய் இறைச்சி பிரியர்களுக்கென பல உணவகங்களில் அவை சமைக்கப்பட்டு, பரிமாறப்பட்டு வந்தது.

    இந்நிலையில், தென் கொரிய பாராளுமன்றம் நாய் இறைச்சியை தடை செய்து புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது.

    இத்தொழிலை சார்ந்துள்ள தொழிலாளர்களும், விற்பனையாளர்களும் வேறு தொழிலுக்கு மாறும் வகையில் 3-வருட-கால இடைவெளிக்கு பிறகே இச்சட்டம் 2027லிருந்து அமலுக்கு வரும்.

    அத்தொழிலாளர்கள் புதிய தொழிலில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளும் வகையில் மானியம் வழங்கி உதவவும் எதிர்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

    இச்சட்டத்தின்படி, இறைச்சிக்காக நாய்களை வளர்ப்பது, கொல்வது, இறைச்சியை பதப்படுத்தி விற்பனை செய்வது உள்ளிட்ட அனைத்தும் சட்டவிரோதம். இதனை மீறுவோருக்கு 2-வருட-கால சிறை தண்டனையும், பெரும் தொகை அபராதமும் விதிக்கப்படும்.

    தென் கொரிய அதிபரின் மனைவி இச்சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். பிராணிகள் வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் உடைய அதிபரும் அவர் மனைவியும் தங்கள் இல்லத்தில் 4 நாய்களும் 3 பூனைகளும் வளர்த்து வருகின்றனர்.

    நாய்களை கொன்று உண்பதை தடை செய்யும் சட்டத்தை வரவேற்றுள்ள பிராணிகள் ஆர்வலர்கள், பல வருடங்களாகவே அந்நாட்டில் நாய் இறைச்சி உண்ணும் பழக்கத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாய் இறைச்சியை சட்டப்பூர்வமாக்க எனது மனுவில் கையெழுத்திடுங்கள் என்று எழுதப்பட்ட பலகைக்கு அருகில் வாலிபர் நிற்கிறார்.
    • புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், செல்லப் பிராணிகள் வளர்ப்போர் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    பெங்களூருவை சேர்ந்த வாலிபர் ஒருவர் நாய் இறைச்சியை சட்டப்பூர்வமாக்க கோரி நடத்திய கையெழுத்து இயக்கம் தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    அதில் வாலிபர், நாய் இறைச்சியை சட்டப்பூர்வமாக்க எனது மனுவில் கையெழுத்திடுங்கள் என்று எழுதப்பட்ட பலகைக்கு அருகில் நிற்கிறார். இந்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், செல்லப் பிராணிகள் வளர்ப்போர் தங்களது விமர்சன கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    அதில் ஒருவர், இந்த நபர் விளம்பரத்திற்காகவும், பிறரின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் இது போன்று செய்வதாக பதிவிட்டுள்ளார்.

    ஆட்டு இறைச்சி தொடர்பாக மக்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்காகவே தென்சென்னை மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜோத்பூரில் இருந்து வால் நீளமான ஆடுகளை சென்னை கொண்டு வந்துள்ளார். #DogMeatInChennai #MeatRumour
    சென்னை:

    எழும்பூர் ரெயில் நிலையத்தில் கடந்த 17-ந்தேதி நாய் போன்ற தோற்றத்தில் நீண்ட வாலுடன் கூடிய இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

    ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து இந்த இறைச்சி அனுப்பப்பட்டது தெரிய வந்தது. பெரிய பார்சல்களாக அட்டைப் பெட்டியில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த 2190 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அது கெட்டுப்போன நாய்க்கறி என்று பரபரப்பான தகவல் பரவியது.

    இதனையடுத்து வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பொதுமக்கள் காரசாரமாக கருத்துக்களை பதிவு செய்தனர்.

    இதனால் சென்னையில் வசிக்கும் அசைவ பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இத்தனை நாட்களாக நாம் சாப்பிட்டது நாய்க்கறி தானோ? என்கிற கேள்வியும் அவர்கள் மனதில் தோன்றியது.

    இதன் காரணமாக சென்னையில் உள்ள பெரும்பாலான அசைவ ஓட்டல்களில் வியாபாரம் குறைந்தது. பிரியாணி, மட்டன் கறி சாப்பிடுவதை அசைவ பிரியர்கள் தவிர்த்தனர்.

    இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்டது நாய்க்கறியா? ஆட்டுக்கறியா? என்கிற விவாதங்கள் சூடாகிக் கொண்டே சென்றது. இந்த நிலையில் 6 நாட்களுக்கு பிறகு நாய்க்கறி பீதியை அடக்கும் வகையில் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.

    எழும்பூர் ரெயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது, நாய்க்கறி இல்லை. அது ஆட்டுக்கறிதான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகி உள்ளது.

    இந்த நிலையில் பொதுமக்கள் மத்தியில் நிலவும் நாய்க்கறி பீதியை முற்றிலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தென் சென்னை மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவரான தமிழ்செல்வன் இதற்காக ஜோத்பூரில் இருந்து வால் நீளமான ஆடுகளை சென்னை கொண்டு வந்துள்ளார்.



    இதுபற்றி அவர் கூறும்போது, மக்கள் மத்தியில் ஆட்டு இறைச்சி தொடர்பாக நிலவும் சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வெளி மாநிலங்களில் இருந்து இறைச்சியை பதப்படுத்திய முறையில்தான் கொண்டு வர வேண்டும் என்றும், சாதாரண பார்சல்களை போல கொண்டு வரக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். இதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்செல்வன் கூறினார்.

    சென்னையில் உள்ள கறிக்கடைகளிலும், ஓட்டல்களிலும் வெளி மாநில ஆடுகளே அதிக அளவில் இறைச்சிக்காக பயன்படுத்தப்படுகின்றன. ஜோத்பூரில் 1 கிலோ ஆட்டுக்கறியின் விலை ரூ.300-லிருந்து 350 ரூபாய் வரையிலேயே உள்ளது. அதனை அங்கிருந்து வாங்கித்தான் வியாபாரிகள் இங்கு கிலோ ரூ.600-க்கு விற்பனை செய்கிறார்கள்.

    வெளிநாடுகளில் இருந்து ஆட்டிறைச்சியை கொண்டு வருவதற்காக சில வழிமுறைகள் உள்ளன. ஆட்டை வெட்டியவுடன் நன்றாக கழுவி அது கெட்டுப்போவதற்கு முன்பே ஐஸ் பெட்டியில் வைத்து முழுக்க முழுக்க குளிர்சாதன வசதியுடன் கூடிய கண்டெய்னரில்தான் எடுத்து வர வேண்டும் என்று விதி உள்ளது. இதனை இனிமேலாவது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

    இப்படி எவ்வளவுதான் விளக்கங்கள் கொடுத்தாலும் நாய்க்கறி பீதியில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்கு மேலும் நாட்கள் ஆகும் என்றே தெரிகிறது.   #DogMeatInChennai #MeatRumour



    எழும்பூர் ரெயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது எந்த வகையான இறைச்சி என்பது இன்று மாலை தெரிய வரும். #DogMeat #DogMeatinChennai
    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் 2190 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பார்சலில் அனுப்பப்பட்டிருந்த இந்த இறைச்சியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அப்போது அது அழுகிய நிலையில் காணப்பட்டது.

    இதனை தொடர்ந்து இறைச்சி அனைத்தையும் கொடுங்கையூர் குப்பை கிடங்குக்கு கொண்டு சென்று அழித்தனர்.

    எழும்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட பார்சல்களில் இருந்தவை தோல் உரிக்கப்பட்ட நாயின் தோற்றத்தில் நீண்ட வாலுடன் காணப்பட்டது. இதையடுத்து வெளி மாநிலத்தில் இருந்து நாய்களை அடித்து கொன்று அதனை பார்சலில் சென்னைக்கு அனுப்பி வைப்பதாக பரபரப்பு தகவல் வெளியானது.

    இந்த நாய் இறைச்சி சென்னையில் உள்ள ஓட்டல்களில் ஆடு மற்றும் மாட்டுக் கறியுடன் கலந்து சமைத்து விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

    சென்னைவாசிகளை பொருத்தவரையில் பெரும்பாலானோர் வார இறுதி நாட்களில் அசைவ ஓட்டல்களுக்கு சென்று சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாகவே வைத்துள்ளனர். குறிப்பாக மட்டன் பிரியாணியை ஓட்டல்களில் பலர் விரும்பி சாப்பிடுவார்கள். அதே நேரத்தில் மாட்டுக் கறி உணவும் சென்னையில் விருப்ப உணவு போலவே ஆகிவிட்டது.

    துரித உணவகங்களிலும், ஓட்டல்களிலும் மாலை நேரங்களில் மாட்டுக்கறியை (சில்லி பீப்) விரும்பி சாப்பிடுவர்கள் அதிகம். இதுபோன்ற அசைவ பிரியர்களுக்கு நாய்கறி பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியான தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதன் காரணமாக இனி, அசைவ ஓட்டல்களில் சாப்பிடுவது உடல் நலத்துக்கு தீங்குதானோ? என்கிற எண்ணமும் மக்கள் மனதில் பரவலாக தோன்றி உள்ளது.

    சென்னையில் நாய் இறைச்சி பிடிபட்டதாக வெளியான தகவல் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களிலும் பரபரப்பாகவே பரப்பப்பட்டு வருகிறது. இது பொது மக்கள் மத்தியில் ஓட்டல்களில் பரிமாறப்படுவது நாய்கறி தானோ? என்கிற சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது. மட்டன் பிரியாணியில் தெரியாத அளவுக்கு நாய் கறி கலக்கப்படுவதாகவும், இதனால் அது வெளியில் தெரிய வாய்ப்பு இல்லை என்றும் பேசப்படுகிறது.

    பொது மக்கள் மத்தியில் நிலவும் இந்த அசைவ உணவு சந்தேகங்களையும், அச்சத்தையும் போக்கும் வகையில் எழும்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சியை பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதன் முடிவு இன்று மாலையில் வர இருப்பதாகவும் அதன் பின்னரே பறிமுதல் செய்யப்பட்டது எந்த வகையான இறைச்சி என்பது தெரிய வரும் என்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


    பொது மக்கள் மத்தியில் நாய் கறி தொடர்பான பீதி நிலவுவதால், எழும்பூரில் பறிமுதல் செய்யப்பட்டது எந்த வகை இறைச்சி? என்பது பற்றி சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விரிவான அறிக்கையை அளிக்க உள்ளனர்.

    அதில் பொது மக்களின் பீதியை அடக்கும் வகையில் தகவல்கள் இருக்குமா? இல்லை நாய் இறைச்சி தான் என்று உறுதி செய்யப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இன்று வெளியாக உள்ள அறிக்கையில் அதற்கான விடை கிடைத்து விடும்.

    இதற்கிடையே நாய்க்கறி தொடர்பாக சமூக வலைதளங்களில் கேலி கிண்டல்களுடன் பல்வேறு தகவல்கள் தொடர்ந்து பதிவிடப்பட்டு வருகிறது. #DogMeat #DogMeatinChennai
    உணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காக ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 1000 கிலோ நாய்க்கறியை சென்னை எழும்பூர் ரெயில் நிலைய போலீசார் இன்று பறிமுதல் செய்தனர். #DogMeat #DogMeatinChennai
    சென்னை:

    “பிரியாணி”.. இந்த மந்திர வார்த்தைக்கு மயங்காத அசைவப் பிரியர்கள் யாருமே இருக்க முடியாது. விசேஷம் என்றால் பிரியாணி, விருந்து என்றாலும் பிரியாணி என்று மொகலாயர்களின் சிறப்பு உணவு வகையான பிரியாணி, இன்று தமிழகத்தின் பாரம்பரிய உணவுப் பட்டியலில் ஒரு அங்கமாக இடம்பிடித்து விட்டுள்ளது.

    முன்னர் முஸ்லிம்கள் வீட்டு திருமணங்கள் மற்றும் ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளின்போது மட்டும் அதிகமாக பிரியாணியின் நறுமணத்தை பலர் ரசித்து வந்தனர். ‘மிலிட்டரி ஹோட்டல்’ எனப்படும் முனியாண்டி விலாஸ் போன்ற ஹோட்டல்களில் மட்டன் பிரியாணி மிகவும் பிரசித்தியாக இருந்தது.

    ஆனால், சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளாக இன்று ஒரு தெருவுக்கு நான்கு பிரியாணி கடைகள் என்னும் அளவுக்கு நமக்கு பிரியாணி மேல் இருக்கும் பிரியம் அதிகரித்து வருகிறது. ஒரு பிளேட் பிரியாணி இவ்வளவு விலை என்பதுபோக ஒரு கிலோ பிரியாணி இன்று எடைபோட்டு விற்கப்படுகிறது.

    இப்படி தெருவுக்குத்தெரு முளைத்துள்ள பிரியாணி கடைகளில் பயன்படுத்தப்படும் இறைச்சியின் தரம் பற்றி நம்மில் பலருக்கு அக்கறை இல்லை. சிக்கன் பிரியாணியில் கோழிக்கறிக்கு பதிலாக காக்கை கறி சேர்க்கப்படுவதாக முன்னர் பரபரப்பாக செய்திகள் வெளியாகின.

    பின்னர், மட்டன் பிரியாணி என்ற பெயரில் வெளி மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் வரும் செத்த ஆடுகளின் தரமற்ற இறைச்சி பயன்படுத்தப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதற்காக அனுப்பப்பட்ட பல ஆயிரம் கிலோ அளவிலான கெட்டுப்போன ஆட்டிறைச்சியை சென்னை எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கைப்பற்றி அவற்றை அழித்தனர்.

    இந்நிலையில், சென்னையில் உள்ள உணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காக ராஜஸ்தானில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 1000 கிலோ நாய்க்கறியை சென்னை எழும்பூர் ரெயில் நிலைய போலீசார் இன்று பறிமுதல் செய்தனர்.



    ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் நகரில் இருந்து ஐஸ் பெட்டிகளில் வைத்து அனுப்பப்பட்ட இந்த நாய்க்கறியை பெற்றுக்கொள்ளும் நபரின் முகவரியை கண்டுபிடித்துள்ள சென்னை நகர போலீசார், இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

    இந்த விசாரணையில் எந்தெந்த உணவகங்களில் மட்டன் பிரியாணி என்ற பெயரில் நாய்க்கறி பரிமாறப்பட்டது என்னும் விபரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில், இன்று பறிமுதல் செய்யப்பட்ட நாய்க்கறியை புதைத்து அழிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.  #DogMeat #DogMeatinChennai 
    தென்கொரியாவில் எந்த வித காரணமும் இன்றி இறைச்சிக்காக நாய்களை கொல்வது சட்டவிரோதம் என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. #SouthKoreancourt
    சியோல்:

    தென் கொரியாவில் நாய்களின் இறைச்சியை மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் இறைச்சிக்காக ஆண்டுதோறும் 10 லட்சம் நாய்கள் கொல்லப்படுகின்றன. ஆனால் நாய்கள் மனிதர்களின் உற்ற நண்பனாக, தோழனாக பழகுகின்றன. எனவே அவற்றை கொன்று உணவாக சாப்பிடக்கூடாது என்ற எண்ணம் தென் கொரியாவில் இளைய சமூகத்தினரிடம் எழுந்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு விலங்குகள் நல அமைப்பான ‘கேர்’ புசியோன் நகரை சேர்ந்த நாய் பண்ணை உரிமையாளர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில் எந்த வித காரணமும் இன்றி நாய்களை கொல்ல தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டிருந்தது.

    அந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் இறைச்சிக்காக நாய்களை கொல்வது சட்டவிரோதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் புசியான் பண்ணை உரிமையாளர் குற்றவாளி என தீர்ப்பு அளித்த கோர்ட்டு அவருக்கு ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் அபராதமும் விதித்தது.

    இதற்கு ‘கேர்’ அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும் தென்கொரியா முழுவதும் இறைச்சிக்காக நாய்கள் கொல்லப்படுவதை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. #SouthKoreancourt
    ×