search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Commercial Tax"

    • 1 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
    • அடையாள விபரங்கள் சரி பார்க்கப்பட்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் மையக் கணினியிலிருந்து சம்பந்தப்பட்ட நபருக்கு வழங்கப்படும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் சார்பில் 25 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் ஈரோடு மற்றும் தூத்துக்குடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டடங்கள் மற்றும் கோபிச்செட்டிப் பாளையம், சத்தியமங்கலம், துறையூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலகக் கட்டடங்கள், 3 கோடியே 62 இலட்சம் ரூபாய் செலவில் அரகண்டநல்லூர் மற்றும் சத்திரப்பட்டி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

    இதில் ஈரோடு மாநில வரிக் கோட்டத்திற்குட்பட்ட இணை ஆணையர் வரி விதிப்பு மற்றும் நுண்ணறிவு கோட்ட அலுவலகம், சேவை மற்றும் சரக்கு வரி மேல் முறையீட்டு அலுவலகம், உதவி ஆணையர், திண்டல், பெருந்துறை மற்றும் சென்னிமலை வரிவிதிப்பு வட்ட அலுவலகங்கள் என மொத்தம் 6 அலுவலகங் களுக்கு ஈரோட்டில் அலுவலகக் கட்டிடம், சத்தியமங்கலம், கோபிச் செட்டிபாளையத்தில் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள், துறையூர், புதுக்கோட்டையில் வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள், துணை ஆணையர், தூத்துக்குடி சரக அலுவலகம், உதவி ஆணையர், தூத்துக்குடி-1, 2 மற்றும் 3 ஆகிய வரிவிதிப்பு வட்ட அலுவலகங்கள் என மொத்தம் 4 அலுவலகங்களுக்கு தூத்துக்குடியில் 4 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள் என மொத்தம் 25 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிக வரித்துறை கட்டடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    அரகண்டநல்லூரில் 1 கோடியே 63 லட்சம் ரூபாய் செலவிலும், பழனி பதிவு மாவட்டத்தில், சத்திரப்பட்டி யில், 1 கோடியே 99 லட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

    சார்பதிவாளர் அலுவலகங்களில் 1865-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட 10 கோடி ஆவணங்களின் சான்றிட்ட நகலை இணைய வழியாக பெறும் சேவையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    பதிவுத்துறை தொடங்கப்பட்டதிலிருந்து பதிவு செய்யப்பட்ட 10 கோடி ஆவணங்கள் தற்போது ஒளிவருடல் செய்யப்பட்டு மையக் கணினியில் சேமிக்கப்பட்டுள்ளன. சொத்து தொடர்பான (உயில், டிரஸ்ட், இதர ஆவணங்களை தவிர்த்து) எந்த ஆவணத்திற்கும் இணைய வழியில் விண்ணப்பிக்கவும், தேவையான கட்டணங்களை இணையவழியிலேயே செலுத்தி பொதுமக்கள் பெற்றிட வசதி செய்யப்பட்டுள்ளது.

    ஒளிவருடல் செய்யப் பட்ட ஆவணங்களை சேமிப்பதற்கும், அதிவிரைவாக மின்னணு கையொப்பமிட்ட சான்றிட்ட நகல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்கும் ஏதுவாக, அதிவிரைவு சேமிப்பு கலன்கள் 31 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டு ஆவண நகல்கள் சேமிக்கப்பட்டுள்ளன.

    மின்னணு கையொப்பமிட்ட சான்றிட்ட நகல்களை பொதுமக்கள் https://tnreginet.gov.in என்ற இணையவழியாக பெறும் சேவையினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    உயில், டிரஸ்ட் ஆவணங்களின் நகல்கள் சரியான நபருக்கு அவரின் அடையாள விபரங்கள் சரி பார்க்கப்பட்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் மையக் கணினியிலிருந்து சம்பந்தப்பட்ட நபருக்கு வழங்கப்படும்.

    இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், பொதுமக்கள் சொத்து தொடர்பான எந்த ஒரு சான்றிட்ட நகலுக்காகவும் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. 1865-ம் ஆண்டு முதல் பதிவுசெய்யப்பட்ட 10 கோடி ஆவணங்களின் நகல்கள் உலகின் எந்த மூலையில் உள்ள பொது மக்களுக்கும் கிடைக்கும் வண்ணம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    பதிவுத்துறையின் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் தற்போதுள்ள மூன்று இணையநெறிமுறை புகைப்படக்கருவிகளுடன், 6 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் சார்பதிவகங்களில் உள்ள பதிவறைகளில் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ள இரண்டு இணைய நெறி முறை புகைப்படக் கருவிகளின் பயன்பாட்டினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, வணிக வரி ஆணையர் முனைவர் டி.ஜகந்நாதன், பதிவுத் துறை தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தமிழகம் முழுவதும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 7 வணிக வரி கோட்ட அலுவலகங்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
    • அவிநாசி அருகே கைகாட்டிப்புதுாரில் உள்ள ஏ.இ.பி.சி., வளாகத்தில், புதிய வணிக வரி கோட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

    திருப்பூர்,ஜூலை.23-

    தமிழகம் முழுவதும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 7 வணிக வரி கோட்ட அலுவலகங்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    திருப்பூரில், அவிநாசி அருகே கைகாட்டிப்புதுாரில் உள்ள ஏ.இ.பி.சி., வளாகத்தில், புதிய வணிக வரி கோட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. வணிக வரித்துறை இணை கமிஷனர் (பொறுப்பு) லட்சுமி பவ்யா தனிரு, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அமலாக்க பிரிவு இணை கமிஷனர் (பொறுப்பு) ரமாதேவி, வணிக வரித்துறை துணை கமிஷனர் முருககுமார், வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன் உள்பட நிர்வாகிகள், ஆடிட்டர்கள் பங்கேற்றனர்.

    3 வணிக வரி மாவட்டங்களை உள்ளடக்கி, திருப்பூர் வணிக வரி கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வணிக வரி மாவட்டம் 1ல், அனுப்பர்பாளையம், அவிநாசி, காந்திநகர், பொங்கலூர், திருப்பூர் வடக்கு - 1, திருப்பூர் வடக்கு - 2, திருப்பூர் ரூரல் - 1, திருப்பூர் ரூரல் 2 சரகங்கள் உள்ளன.

    வணிக வரி மாவட்டம் 2 ல், திருப்பூர் தெற்கு, திருப்பூர் பஜார், திருப்பூர் சென்ட்ரல் - 1, சென்ட்ரல் 2, கொங்குநகர், லட்சுமி நகர்.வேறு மாவட்டத்திலிருந்த திருப்பூர் வருவாய் மாவட்ட பகுதிகள் சேர்க்கப்பட்டு, புதிதாக திருப்பூர் வணிக வரி மாவட்டம் - 3 உருவாக்கப்பட்டுள்ளது. வணிக வரி மாவட்டம் 3 ல், தாராபுரம், காங்கயம், பல்லடம் - 1, பல்லடம் - 2, வெள்ளகோவில், உடுமலை வடக்கு, உடுமலை தெற்கு பகுதிகள் இடம் பெற்றுள்ளன.

    திருப்பூர் வணிக வரி கோட்டத்தை முழு செயல்பாட்டுக்கு கொண்டு வர விரைவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் வணிக வரி கோட்டம் உதயமாகியுள்ளதால் திருப்பூர் மாவட்ட வர்த்தகர்கள், வரி பயிற்சியாளர், ஆடிட்டர்கள், ஈரோடு, கோவை என வெவ்வேறு மாவட்டங்களுக்கு செல்லவேண்டிய நிலை இனி ஏற்படாது.

    • உள்நாட்டு ஆடை வகைகள் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
    • வணிகவரித்துறை பறக்கும் படையை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

     திருப்பூர் :

    திருப்பூரில் உற்பத்தியாகும் பனியன் உள்ளிட்ட உள்நாட்டு ஆடை வகைகள் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மராட்டியம், டெல்லி உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த வகையில் அனுப்பப்படும் ஆடை பண்டல்கள் பெரும்பாலும் ரெயில்கள் மூலம் அனுப்பப்படுகிறது.

    இந்த நிலையில் திருப்பூரில் இருந்து அனுப்பப்படும் ஆடைகள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படுவதாக ஈரோடு வணிக வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் திருப்பூர் ரெயில்நிலைய பார்சல் பிரிவில் வணிகவரித்துறை பறக்கும் படையை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் பில் உள்பட முறையான ஆவணங்கள் இன்றி ஒருசில மாநிலங்களுக்கு அனுப்ப வைக்கப்பட்டிருந்த 50 பனியன் மற்றும் ஆடை பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகளை ஈரோடு வணிகவரித்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

    • வணிகவரி 10 சதவீத்தில், 9 சதவீதம் திரும்ப வழங்கப்பட்டது.
    • நிலுவை வரியை செலுத்த கேட்டு நான்கு ஆண்டுகளுக்கு பின் நோட்டீஸ் அனுப்பி வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு பனியன் வர்த்தகம் நடக்கும் போது சி-பார்ம் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் செலுத்திய வணிகவரி 10 சதவீத்தில், 9 சதவீதம் திரும்ப வழங்கப்பட்டது. நடைமுறை சிக்கலால் சி-பார்ம் வழங்குபவர், 1 சதவீதம் மட்டும் வரி செலுத்த வழிவகை செய்யப்பட்டது.

    கடந்த 2019 முதல் ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்ததால் சி-பார்ம் பிரச்னை மறைந்தது. சிறு, குறு உற்பத்தியாளர்களும், முறையாக ஜி.எஸ்.டி., பதிவு செய்து வர்ததகம் செய்து வருகின்றனர். பழைய கணக்குகளை சரிபார்த்த வணிகவரித்துறை, சி-பார்ம் கொடுக்காமல் ஒரு சதவீதம் மட்டும் வரி செலுத்தியவர்கள், நிலுவை வரியை செலுத்த கேட்டு நான்கு ஆண்டுகளுக்கு பின் நோட்டீஸ் அனுப்பி வருகிறது.இது குறித்து திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்கள் கூறுகையில், சி-பார்ம் சமர்ப்பிக்காத நிறுவனங்கள் வரி நிலுவையை செலுத்த வேண்டுமென வணிக வரித்துறை நோட்டீஸ் கொடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஒரு சதவீத வரியை செலுத்திவிட்டன. பல்வேறு காரணத்தால் சி-பார்ம் சமர்ப்பிக்க இயலவில்லை. அதாவது அரசுக்கு வழக்கமாக செலுத்த வேண்டிய வரியை செலுத்திவிட்டனர். எனவே சி-பார்ம் பிரச்னையை சுமூகமாக தீர்த்து வைக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம் என்றனர். 

    ×