திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆவணங்கள் இல்லாத 50 பனியன் பண்டல்கள் பறிமுதல் - வணிக வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை

உள்நாட்டு ஆடை வகைகள் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.வணிகவரித்துறை பறக்கும் படையை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

 திருப்பூர் :

திருப்பூரில் உற்பத்தியாகும் பனியன் உள்ளிட்ட உள்நாட்டு ஆடை வகைகள் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மராட்டியம், டெல்லி உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த வகையில் அனுப்பப்படும் ஆடை பண்டல்கள் பெரும்பாலும் ரெயில்கள் மூலம் அனுப்பப்படுகிறது.

இந்த நிலையில் திருப்பூரில் இருந்து அனுப்பப்படும் ஆடைகள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படுவதாக ஈரோடு வணிக வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் திருப்பூர் ரெயில்நிலைய பார்சல் பிரிவில் வணிகவரித்துறை பறக்கும் படையை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் பில் உள்பட முறையான ஆவணங்கள் இன்றி ஒருசில மாநிலங்களுக்கு அனுப்ப வைக்கப்பட்டிருந்த 50 பனியன் மற்றும் ஆடை பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகளை ஈரோடு வணிகவரித்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com