search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bridal women beauty tips"

    திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் சில மாதங்களுக்கு முன்பாகவே உணவு பழக்க வழக்கத்தில் சில கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். அதுவும் சரும பொலிவை மெருகேற்ற உதவும்.
    திருமணத்திற்கு தயாராகும் பெண்கள் மண நாள் நெருங்கும் வேளையில் அலங்காரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். சில மாதங்களுக்கு முன்பாகவே உணவு பழக்க வழக்கத்தில் சில கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். அதுவும் சரும பொலிவை மெருகேற்ற உதவும்.

    முக்கியமாக கார உணவுகள், தேநீர், காபி, கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். பச்சை காய்கறிகள், பழ வகைகளை சாப்பிட்டு வருவது சருமத்தை மெருகேற்ற உதவும். தினமும் 2 முதல் 4 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். இது உடல் பருமன், முகப்பரு, சரும வறட்சி போன்ற பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.

    எண்ணெய் சருமம் கொண்டவர்கள் முல்தானி மெட்டி, உலர்ந்த ஆரஞ்சு தோல், சந்தன தூள் ஆகியவற்றை மிக்சியில் அரைத்து வாரம் இருமுறை முகத்தில் பூசி வரலாம். பன்னீருடன் தேயிலை டிகாஷனை சிறிதளவு கலந்து முகத்தில் மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவுவதும் நல்லது. வறண்ட சருமம் கொண்டவர்கள் 2 டேபிள்ஸ்பூன் ஓட்ஸ், ஒரு டீஸ்பூன் பொடித்த பாதாம் மற்றும் சந்தன எண்ணெய் ஆகியவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து மசாஜ் செய்து, நீரில் கழுவி வரலாம். 
    ×