என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bridal look"

    • ஐ-லைனரை கண்ணின் ஓரத்திலிருந்து போடாமல் நடுவில் இருந்து போடவேண்டும்.
    • ப்ளெண்ட் செய்யும்போது முழு அழுத்தத்தையும் முகத்தில் காட்டாமல், ப்ளெண்டரில் காட்டவேண்டும்.

    மஞ்சள் கொத்து இல்லையென்றால் பொங்கல் வைக்க முடியாது என்று தைப்பொங்கலன்று சிலர் வாக்குவாதம் செய்வர். அப்படி மேக்கப் இல்லையென்றால் தற்போது திருமணம் கிடையாது என்பதுபோல, ஒப்பனை என்பது முக்கிய பங்கு வகிக்கிறது திருமணத்தில். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு சடங்குமுறையை பின்பற்றுவர். அவ்வாறு அவர்களது திருமண முறையும் மாறுபடும். திருமண முறைகளுக்கு ஏற்றவாறு மேக்கப் முறைகளும் வந்துவிட்டன. அந்தவகையில் சிம்பிள் கிறிஸ்டியன் மேக்கப் போடுவது எப்படி என விளக்கியுள்ளார் அழகு கலை நிபுணர் உமா. ராணி ஆன்லைனுக்கு அளித்த நேர்காணல் மூலம் அவர் கூறிய ப்ரைடல் மேக்கப் வழிமுறைகளை காணலாம்.

    CTM (Cleansing, Toning and Moisturizing) பிராசஸ்

    முதலில் கிளென்சிங் பண்ணவேண்டும். ஏனென்றால், பார்லர் வரும்போதே சிலர் மேக்கப் போட்டிருப்பார்கள். அதனை முதலில் நீக்கவேண்டும். கிளென்சிங் செய்தபிறகு டோனர். ஓபன் போர்செஸ் இருப்பவர்களுக்கு டோனர் பயன்படுத்தலாம். டோனர் ஸ்பிரே காய்ந்தபின்பு, மாய்ச்சுரைஸர். அடுத்து கன்சீலர். கன்சீலருக்கு பின் ஃபவுண்டேஷன். எப்போதுமே ஃபவுண்டேஷன் ப்ரைடலின் நிறத்தைவிட கொஞ்சம் ஃபேராக இருக்குமாறு போட்டுக்கொள்ள வேண்டும். மூன்று ஃபவுண்டேஷன்களை எடுத்து எது அவர்களின் நிறத்தைவிட கொஞ்சம் ஃபேராக இருக்கிறதோ அதை பயன்படுத்தலாம். சிலர் ஐ-மேக்கப் போட்டுவிட்டு, ஃபேஸ் மேக்கப் போடுவார்கள். ஃபேஸ் மேக்கப் போட்டுவிட்டும், ஐ-மேக்கப் போடலாம். இப்படித்தான் போடவேண்டும் என்று இல்லை. நான் எப்போதும் ஃபேஸ் மேக்கப் போட்டுவிட்டுதான் ஐ-மேக்கப் போடுவேன். பிரஷ், பியூட்டி ப்ளெண்டர் என எது உங்களுக்கு நன்றாக இருக்கிறதோ, அதிலே ப்ளெண்ட் செய்யலாம். எந்தளவு பிளெண்ட் செய்கிறோமோ அந்தளவிற்கு மேக்கப் நன்றாக வரும்.

    ப்ளெண்ட் செய்யும்போது...

    ப்ளெண்ட் செய்யும்போது முழு அழுத்தத்தையும் ப்ரைடலின் முகத்தில் காட்டாமல், பிளெண்டரில் காட்டவேண்டும். ஏனெனில் நாம் வேகமாக அழுத்தும்போது விரலின் அழுத்தம் முகத்தில் படும்போது அவர்களுக்கு வலிக்கும். கண்ணிற்கு கீழ் க்ரீஸ் லைன் வரும். அப்போது மேலே பார்க்கசொல்லி, மெதுவாக ப்ளெண்ட் செய்யவேண்டும். அடுத்தது ஃபவுண்டேஷனுக்கு எந்த ஷேடு எடுத்தோமோ அதனைவிட டார்க்கர் ஷேடு எடுத்து காண்டோரிங் செய்யவேண்டும். நீங்கள் எது செய்வதாக இருந்தாலும், ப்ரைடுக்கு விருப்பமா எனக்கேட்டு செய்யுங்கள். ஃபவுண்டேஷன் அப்ளை செய்தபிறகு, பேக் செய்யவேண்டும்.

    ஐ-லென்ஸ்

    மேக்கப்பிற்கு முன்பு ஐ-லென்ஸ் வைக்கவேண்டும். லென்ஸ் போடுவதற்கு முன்பு ப்ரைடலிடம் கேட்கவேண்டும். அவர்கள் ஐ-லென்ஸ், முன்பு போட்டிருக்கிறார்களா என்று? ஏனெனில் சிலருக்கு தலைவலிக்கும், சிலருக்கு கண் சென்சிட்டிவாக இருக்கும். லென்ஸ் போட்டுக்கொண்டே லைட் வெளிச்சத்தை எல்லாம் பார்த்தால், கண்கலங்கும். எப்போதும் பயன்படுத்துபவர்கள் என்றால் பிரச்சனை இல்லை. அதனால் ப்ரைடலிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.

    ஐ-மேக்கப்

    அடுத்தது ஐ-மேக்கப். நமக்கு எந்த ஐ-ஷேடோ வேண்டுமோ, அதை எடுத்துக்கொண்டு பிளெண்ட் செய்யலாம். அடுத்தது கிளிட்டர். எப்போதும் ஐ-லைனரை ஓரத்திலிருந்து போடாமல் நடுவில் இருந்து போடவேண்டும். அப்போது ப்ளெண்ட் செய்ய நன்றாக இருக்கும். அடுத்தது காஜல். எப்போதுமே கண் புருவத்திற்கு கருப்பு நிறத்தை பயன்படுத்துவதைவிட, நம் இந்தியர்களின் நிறத்திற்கேற்ப ப்ரவுன் ஷேடு பயன்படுத்தலாம். அடுத்தது காண்டோரிங். அடுத்தது ப்ளஷ் மற்றும் ஹைலைட்டர். பின்னர் லிப்லைனர். லிப்லைனர் அப்ளை செய்துவிட்டு, லிப்ஸ்டிக் போட்டுக்கொள்ளலாம். கடைசியாக செட்டிங், ஃபிட்டிங் ஸ்பிரே அடித்துக் கொள்ளலாம்.

    • மணப்பெண் போல் மயக்கும் சில்வர் நிற லெஹங்கா உடையை தமன்னா அணிந்தது ரசிகர்களை திகைக்க வைத்துள்ளது
    • ஏஞ்சல் போல, மணப்பெண் போல தமன்னா மிக அழகாக இருக்கிறார் என வர்ணித்து வருகின்றனர்

    பிரபல நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை தமன்னா நேற்று மணப்பெண் போல நீல நிற 'லெஹங்கா' உடை, வைரம், ரூபி கற்கள் பதித்த நெக்லஸ் அணிந்திருந்தார்.

    இந்த புகைப்படம் மற்றும் வீடியோவை அவரது ஆடை வடிவமைப்பாளர் கௌரவ் குப்தா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். நடிகையான தமன்னா தற்போது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் டேட்டிங் செய்து வருகிறார்.

    இந்நிலையில் அவரது ஆடை வடிவமைப்பாளர் தயாரித்த மணப்பெண் போல் மயக்கும் நீல நிற லெஹங்கா உடையை தமன்னா அணிந்தது ரசிகர்களை திகைக்க வைத்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் ஏஞ்சல் போல, மணப்பெண் போல தமன்னா மிக அழகாக இருக்கிறார் என வர்ணித்து வருகின்றனர்.

    மேலும் அற்புதம், மனதைக் கவரும், அழகான, வசீகரமான, சிறப்பான ஆடை எனவும் முற்றிலும் அழகாக உள்ளது எனவும் ரசிகர்கள் புகழ்ந்துள்ளனர். மேலும் காதலனுடன் திருமணம் எப்போது எனவும் இணையத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×