search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister namachivayam"

    • அமைச்சர் நமச்சிவாயத்திற்கு கடிதம்
    • போலீசாருக்கும் ஓய்வு தினத்தில் பணியில் இருக்கும் போலீசாருக்கும் மிகை நேர ஊதியம் வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை வழக்கறிஞர் தினேஷ், புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி யிருப்ப தாவது:-

    புதுவையை சேர்ந்த போலீசார் விடுமுறை இல்லாமல் 24 மணி நேரமும் தொடர்ந்து பணியில் இருப்பதால் அவர்களுக்கு கடும் மன அழுத்தம் ஏற்படுகிறது. சில போலீசார் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மன அழுத்தத்தால் அவர்களது குடும்பத்திலும் அடிக்கடி பிரச்சனை ஏற்படுகின்றது.

    எனவே புதுவையை சேர்ந்த போலீசாரின் நலனை கருத்தில் கொண்டு போலீசார் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், போலீசார் அவர்களது குடும்பத்தாருடன் போதிய நேரத்தை செலவிடுவதற்கு வசதியாக அவர்களுக்கு வார விடுமுறை அளிக்க வேண்டும்.

    மேலும் காவல்துறை சார்பில் போலீசாரின் பிறந்தநாள் மற்றும் திருமண நாள் வாழ்த்து செய்திகளை காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வாக்கி டாக்கி வாயிலாக சம்மந்த ப்பட்ட போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்.

    மேற்படி வார ஓய்வு தேவைபடவில்லை என தெரிவிக்கும் போலீசாருக்கும் ஓய்வு தினத்தில் பணியில் இருக்கும் போலீசாருக்கும் மிகை நேர ஊதியம் வழங்க வேண்டும்.

    போலீசாரின் பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களில் அவர்களின் குடும்பத்தா ருடன் கொண்டாடி மகிழ அந்த 2 நாட்களிலும் முழு ஊதியத்துடன் கூடிய விடு முறை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    • அமைச்சர் நமச்சிவாயத்திடம் மனு
    • இளைஞர் சமுதாயத்தை போதை பழக்கத்தில் இருந்து திசைதிருப்பி விளை யாட்டின் மீது ஆர்வத்தை கொண்டுவர வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை பாகூர் தொகுதியில் பள்ளி கல்வித்துறைக்கு சொந்த மான விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த விளையாட்டு மைதானம் தனியார் வசம் உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த மைதானத்தை மீட்க பாகூர் இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் சார்பில் சுமார் 300 பேர் அடங்கிய மீட்பு போராட்டக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் தலைமையில், விளையாட்டு துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    அரசுக்கு சொந்தமான விளையாட்டு திடலை மீட்டு விளையாட்டு வீரர்கள், பொதுமக்களுக்கு அர்ப் பணிக்க வேண்டும். இளைஞர் சமுதாயத்தை போதை பழக்கத்தில் இருந்து திசைதிருப்பி விளை யாட்டின் மீது ஆர்வத்தை கொண்டுவர வேண்டும்.

    மாநில, தேசிய போட்டிகளில் பங்கேற்க வழி செய்ய வேண்டும். விளையாட்டுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விளையாட்டு த்துறை மூலம் பயிற்சியா ளர்களிடம் சிறப்பு பயிற்சி பெற ஏற்பாடுகள் செய்ய வேண்டும். கிராமப்புற விளையாட்டு திடலில் சிறந்த போட்டிகளை நடத்த வேண்டும்.

    இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

    • அமைச்சர் நமச்சிவயாம் வழங்கினார்
    • மூத்த தலைவர் இளங்கோவன் உழவர்கரை மாவட்டத் தலைவர் நாகேஸ்வரன், தமிழ் மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி நெல்லித்தோப்பு தொகுதி பா.ஜனதா கட்சி சார்பில் அதன் தலைவர் உமாபதி தலைமையில் ராஜீவ் காந்தி மகளிர் மகப்பேறு ஆஸ்பத்திரியில் பிரதமர் மோடி பிறந்தநாளில் பிறந்த 15 குழந்தைகளுக்கு பராமரிப்பு பெட்டகம் பரிசளிக்கப்பட்டது.

    இதில் சிறப்பு விருந்தினராக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ. ரிச்சர்ட், ஜான்குமார் பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார், மூத்த தலைவர் இளங்கோவன் உழவர்கரை மாவட்டத் தலைவர் நாகேஸ்வரன், தமிழ் மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும் நெல்லித்தோப்பு தொகுதி சார்பில் பூங்குன்றனார், ரேணுகாதேவி, மாதவி திலகவதி, பக்கிரிசாமி, செல்வராஜ் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்
    • அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பையை வழங்கினார்.

    புதுச்சேரி:

    திருக்கனூரை அடுத்த கே.ஆர்.பாளையம் காமராஜர் விளையாட்டு கழகம் சார்பில் 15-ம் ஆண்டு கைப்பந்து போட்டி கடந்த 16-ந் தேதி தொடங்கியது.

    புதுவை, தமிழகத்தை சேர்ந்த 35 அணிகள் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

    வில்லியனூர் மாவட்ட பா.ஜனதா செயலாளர் தங்கராசு தலைமை வகித்தார். திருநாவுக்கரசு வரவேற்றார். செந்தில் வாழ்த்தி பேசினார்.

    விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பையை வழங்கினார்.

    விழுப்புரம் ராஜு பிரெண்ட்ஸ் அணிக்கு முதல் பரிசாக ரூ 25 ஆயிரமும், கோப்பையும், 2-வது பரிசாக கேஆர்.பாளையம் காமராஜர் விளையாட்டு கிளப் அணிக்கு ரூ 22 ஆயிரமும், 3-வது பரிசாக மயிலாடு துறை அணிக்கு ரூ.18 ஆயிரமும், 4-வது பரிசாக புதுகுப்பம் கே.ஜி. பிரெண்ட்ஸ் அணிக்கு ரூ. 15 ஆயிரமும், 5-வது பரிசாக வாதானூர் அணிக்கு. ரூ. 12 ஆயிரமும், 6-வது பரிசாக நரேஷ் பிரெண்ட்ஸ் அணிக்கு

    விழாவில் பா.ஜனதா நிர்வாகிகள் கலிய பெருமாள், செல்வகுமார், கண்ணன், பாலச்சந்தர், காமராஜ், ராதாகிருஷ்ணன், மணிகண்டன், அருள்குமார், வினோத், ஜெயச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைக்கிறார்
    • விழாவுக்கு வில்லியனூர் மாவட்ட பா.ஜனதா செயலாளர் தங்கராசு தலைமை வகிக்கிறார். திருநாவுக்கரசு வரவேற்கிறார்.

    புதுச்சேரி:

    புதுவை கே.ஆர்.பாளையம் காமராஜர் விளையாட்டு கழகம் சார்பில் 15-ம் ஆண்டு கைப்பந்து போட்டிகள் திருக்கனூர் போலீஸ் நிலையம் எதிரே நடக்கிறது.

     7 மணிக்கு கைப்பந்து போட்டிகளை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைக்கிறார். விழாவுக்கு வில்லியனூர் மாவட்ட பா.ஜனதா செயலாளர் தங்கராசு தலைமை வகிக்கிறார். திருநாவுக்கரசு வரவேற்கிறார். செந்தில் வாழ்த்துரை வழங்குகிறார்.

    இன்றும், நாளை (ஞாயிற்றுக்கிழமையும்) நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு முதல்பரிசாக ரூ.25 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.22 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.18 ஆயிரம், 4-ம் பரிசாக ரூ.15 ஆயிரம், 5-ம் பரிசாக ரூ.12 ஆயிரம், 6-ம் பரிசாக ரூ.10 ஆயிரம், 7-ம் பரிசாக ரூ.8 ஆயிரம், 8-ம் பரிசாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. சிறப்பு பரிசாக ரூ.4 ஆயிரம், சிறந்த ஆட்டநாயகனுக்கு ரூ.3 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது.

    பரிசுத்தொகையை ஊர் பிரமுகர்கள் வழங்கு கின்றனர். பரிசுக கோப்பைகளை விஜய் மக்கள் இயக்க மண்ணாடிப்பட்டு தொகுதி தலைவர் பாரதிதாசன் வழங்குகிறார். பந்து மற்றும் வலைகளை பரந்தாமன், மருதையன், வீரர்கள், விளையாட்டுக்கு தேவையான வசதிகளை தேவநாதன், சதீஷ், ராமு, ராதாகிருஷ்ணன், அருள்குமார் ஆகியோர் வழங்குகின்றனர். 

    • அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து
    • கூட்டுறவு சங்க மேலாளர் ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்றார்.

    புதுச்சேரி:

    திருபுவனை விவசாயிகள் சேவை கூட்டுறவு சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற நபர்கள் பதவி ஏற்கும் விழா திருபுவனையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க மேலாளர் ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்றார். சங்கத் தலைவர் பாண்டியன் என்ற வெங்கடாஜலபதி துணைத்தலைவராக வடிவேலு இயக்குனர்களாக முருகன் என்ற சுப்பிர மணியன் , உதயசூரியன், சரவணன், அருள்வாணன் ராம கிருஷ்ணன், ரவிக்குமார், சத்தியசீலன் ஆகியோர் பதவி ஏற்றனர்.

    பதவி ஏற்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர் இயக்குனர்களுக்கு அமைச்சர் நமச்சிவாயம், சிவசங்கரன் எம்.எல்.ஏ. ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்

    • அவருக்கு கிரேனில் கொண்டு வரப்பட்ட பிரமாண்ட மாலையை அணிவித்து ஆதரவாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
    • பிரம்மாண்ட மாலை அணிவிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

    புதுச்சேரி:

     உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் பிறந்தநாள் விழா  கொண்டாடப்பட்டது.

    அவரது ஆதரவாளர்கள் கடந்த 10 நாட்களாக பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.  அவருக்கு கிரேனில் கொண்டு வரப்பட்ட பிரமாண்ட மாலையை அணிவித்து ஆதர வாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

     60 அடி உயரம் கொண்ட இந்த மாலை 25 தொழிலாளர்களை கொண்டு 14 மணிநேரத்தில் உருவாக்கப்பட்டது. இதற்காக ஒரு டன் பூக்கள் மற்றும் நார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    புதுவை வில்லியனூரில் பூக்கடையில் ரமேஷ் என்பவர் இந்த பிரமாண்ட மாலையை உருவாக்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ.75 ஆயிரமாகும். அமைச்சருக்கு கிரேன் மூலம் இந்த மாலை அணிவிக்கப்பட்டது. பிரம்மாண்ட மாலை அணிவிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

    • அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு
    • கல்வித்துறை துணை இயக்குனர் கொஞ்சுமொழி குமரன் வரவேற்றார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் மதிய உணவு சமைப்பவர், ரொட்டிபால் ஊழியர்களுக்கு புத்தாக்க பயிற்சி கருவடிகுப்பம் காமராஜர் மணி மண்டபத்தில் நடந்தது.

    கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்து ஊழியர்களின் கடமைகள், முக்கியத்துவம் குறித்தும், அவர்களின் கடின உழைப்பையும் பாராட்டி, கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.

    நிகழ்ச்சியில் சத்தியசாய் அன்னபூர்ணா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஸ்ரீமதுசூதன்சாய் பிறந்தநாளையொட்டி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சிறு தானிய மிட்டாய் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கல்வித்துறை துணை இயக்குனர் கொஞ்சுமொழி குமரன் வரவேற்றார். கல்வித்துறை முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வன் நேரு நன்றி கூறினார். கல்வித்துறை துணை இயக்குனர் சிவராமரெட்டி, அறக்கட்டளை தேசிய மேலாளர் அல்லட்சந்தோஷ் வாழ்த்தி பேசினர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை துணை இயக்குனர் கொஞ்சுமொழி குமரன் தலைமையில் அதிகாரிகள், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிய இளைஞர்கள்
    • சந்திராயன் வெற்றிகரமாக தரையிறங்கியபோது அங்கு கூடியிருந்த மக்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்கி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.

    மனிதர்களால் ஆராயப்படாத நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

    நிலவியல் லேண்டர் இறங்கும் நிகழ்வு அரசின் செய்தி விளம்பரத்துறை சார்பில் காந்தி திடலில் பிரம்மாண்ட திரை அமைக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது. சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்சரவணக்குமார், செய்தி விளம்பத்துறை இயக்குனர் தமிழ்செல்வன் உட்பட பொதுமக்கள் பலர் கண்டுகளித்தனர். சந்திராயன் வெற்றிகரமாக தரையிறங்கியபோது அங்கு கூடியிருந்த மக்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இளைஞர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பட்டாசு வெடித்தனர்.

    புதுவை கல்விதுறை சார்பில் காமராஜர் மணிமண்டபத்தில் சந்திராயன் நிலவில் இறங்கும் நேரலை ஒளிபரப்பபட்டது. இதனை பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் பார்த்தார். நிலவில் சந்திராயன் கால் பதித்த போது அங்கிருந்த மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    பாண்டிமெரீனாவிலும் எல்.இ.டி. திரையில் நிகழ்வு ஒளிபரப்பு செய்யப்பட்டது. அங்கு மூவர்ண பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் நிகழ்வை கண்டு -கைதட்டி ஆரவாரம் செய்தனர். தேசியக் கொடியை ஏந்தி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டது.

    இதேபோல் புதுவை நகர பகுதி மட்டுமல்லாது கிராமங்கள் தோறும் பல்வேறு இளைஞர், சமூக அமைப்புகள் சார்பில் நிலவில் சந்திரயான் இறங்கிய நிகழ்வு பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. கிராம சாலைகளில் தேசிய கொடியுடன் இளைஞர்கள் உலா வந்தனர். இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனையை பாராட்டி முதல்-அமைச்சர், அமைச்சர்கள் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.

    • அமைச்சர் நமச்சிவாயம் அறிவுறுத்தல்
    • கட்டிடம் வலுவிழந்து வருவதால் ரூ.9 கோடியில் 2 கட்டமாக பழமை மாறால் புதுப்பிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை போலீஸ் தலைமையக அலுவலக கட்டிடத்தை புனரமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம்

    டி.ஜி.பி. அலுவலகத்தில் நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் தலைமை வகித்தார்.

    டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ் முன்னிலை வகித்தார். பொதுப்பணித்துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை போலீஸ் தலைமையகம் 200 ஆண்டு பழமையானது. கட்டிடம் வலுவிழந்து வருவதால் ரூ.9 கோடியில் 2 கட்டமாக பழமை மாறால் புதுப்பிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    ரெட்டியார்பாளையம் பேக்கரியில் தாக்குதல் நடத்தியவர்களை கைதுசெய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சட்ட- ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது.

    போலீஸ் மீது மக்கள் நம்பிக்கை குறைந்து விடக்கூடாது என அதிகாரிகளிடம் சுட்டிக் காட்டியுள்ளேன்.

    அனுமதியின்றி இயங்கும் சுற்றுலா படகுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கடலோர காவல்பிரிவுக்கு தேவையான படகுகள் வாங்கவும், பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அமைச்சர் நமச்சிவாயத்தின் பேச்சால் பரபரப்பு
    • முதல் அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். அமைச்சர் நமச்சிவாயம், சாய்.ஜெ. சரவணன் குமார்,

    பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

    முன்னாள் தலைவர் தாமோதரன், மூத்த நிர்வாகி இளங்கோ, அசோக் பாபு எம்.எல்.ஏ, மாநில துணைத் தலைவர்கள் தங்க விக்ரமன், ;இளங்கோ, செல்வம் ரவிச்சந்திரன, அருள்முருகன், முருகன், முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், மாநில செயலாளர்கள் ரத்தினவேல், அகிலன், நாகராஜ், லதா ஜெயந்தி, சகுந்தலா, மாநில இளைஞரணி தலைவர் கோவேந்தன் கோபதி பட்டியலின தலைவர் தமிழ்மாறன், விவசாய அணி தலைவர் புகழேந்தி ஓ.பி.சி அணி தலைவர் சிவகுமார், மகளிர் அணி தலைவி ஜெயலட்சுமி மற்றும் மாநில பிரிவு அமைப்பாளர்கள். மாவட்ட தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

    கூட்டத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் புதுவை மாநிலத்தில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் வெற்றி பெற கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் கட்சி பணி செய்ய வேண்டும்.

    ஒவ்வொரு கிளையிலும் உள்ள செல்வாக்கு மிக்க வர்களை நேரில் சந்தித்து 9 ஆண்டுகால பிரதமரின் சாதனை புத்தகத்தை வழங்கி அவருடன் தொடர்பில் இருக்க வேண்டும். ஒவ்வொரு கிளையிலும் 5-க்கும் மேற்பட்ட தாமரை சின்னங்கள் வரைய வேண்டும்.

    ஒவ்வொரு கிளையிலும் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் மற்றும் மக்களின் நீண்ட கால தேவைகளை கண்டறிய வேண்டும். ஒவ்வொரு சக்தி கேந்திரத்திலும் அனைத்து நிர்வாகிகளையும் ஒன்று திரட்டி சாதனை தெருமுனை பிரசாரம் செய்ய வேண்டும்.

    கட்சி நிர்வாகிகளின் குறை களையும் ஆலோசனைகளையும் பதிவு செய்து மாநில நிர்வாகிகள் தலைமைக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு நமச்சிவாயம் பேசினார்.

    புதுவையில் முதல் அமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கிறது.

    கூட்டணியில் அ.தி.மு.க.வும் இடம் பெற்றுள்ளது. மேலும் பாராளுமன்ற தேர்தலு க்கான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைக்கான பூர்வாங்க பணிகள் கூட நடைபெறவில்லை.

    இந்த நிலையில் தேர்தலில் கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கு என கூறாமல் பா.ஜனதா வேட்பாளர் வெற்றிக்கு நிர்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என அமைச்சர் நமச்சிவாயம் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் நமச்சிவாயத்தின் பேச்சு தேர்தலில் பா.ஜனதாதான் போட்டியிட உள்ளதை உறுதி செய்வதாகவும் உள்ளது. இது கூட்டணிக்குள் சலசலப்பையும் உருவாக்கி உள்ளது.

    • அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை
    • நோட்டு புத்தகம் வழங்கி பேசியதாது: கல்வித்துறையை மேம்படுத்த அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

    புதுச்சேரி:

    பாகூர் அருகே உள்ள சோரியாங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அமைச்சர் நமச்சிவாயம் நோட்டு புத்தகம் வழங்கி பேசியதாது: கல்வித்துறையை மேம்படுத்த அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. பள்ளிக்கல்விக்கு மட்டும் ரூ.900 கோடி ஒதுக்கீடு செய்துள்ளோம். சீருடை, சைக்கிள், பாடபுத்தகம் அரசே வழங்குகிறது. மாலையில் சிறுதானிய உணவு கொடுக்க உள்ளோம்.

    புரோட்டின் சத்து தேவை என்பதால் வாரத்துக்கு 2 முட்டை வழங்கிய நிலையில், 3 முட்டை வழங்க அறிவுறுத்தியுள்ளோம். மாணவர்களுக்கு கலவையான, தரமான உணவு வழங்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மதிய உணவை தரமாக வழங்க வேண்டும். இல்லாவிட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ தங்கவிக்ரமன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×