search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    356 காவலர் பணியிடங்களை நிரப்ப 26-ந் தேதி அறிவிப்பு வெளியீடு-அமைச்சர் நமச்சிவாயம்
    X

    ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி அமைச்சர் நமச்சிவாயம் பூமி பூஜை செய்து பணி தொடங்கி வைத்த காட்சி.

    356 காவலர் பணியிடங்களை நிரப்ப 26-ந் தேதி அறிவிப்பு வெளியீடு-அமைச்சர் நமச்சிவாயம்

    • புதுவை ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையம் நீண்ட நாட்களாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு ரூ.2 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில், 2 அடுக்கு மாடி கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.
    • கூடுதல் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். காவல்துறையின் அனைத்து காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையம் நீண்ட நாட்களாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

    ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு ரூ.2 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில், 2 அடுக்கு மாடி கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். சிவசங்கரன் எம்.எல்.ஏ., டி.ஜி.பி. மனோஜ் குமார் லால், ஐ.ஜி. சந்திரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கு பிறகு முதல்-அமைச்சர் ரங்சாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதிய போலீஸ் நிலையம் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளோம். ரூ.3 கோடியில் கட்டப்படும் இந்த கட்டிடம் 8 மாதத்தில் கட்டி முடிக்கப்படும். சைபர் க்ரைமில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இதில் 500 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளது.

    இன்னும் ஆயிரம் வழக்கு உள்ளது. அவற்றை கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பங்கள் தேவைப்படுகிறது. இதனால் புதிய தொழில் நுட்பங்களுடன் சைபர் க்ரைம் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

    விரைவில் குற்றங்கள் கண்டுபிடிக்கப்படும். கூடுதல் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். காவல்துறையின் அனைத்து காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசானது பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, புதுவைக்கு வந்தபோது பெஸ்ட் புதுவையாக்குவோம் என உறுதி அளித்தார். அந்த அடிப்படையில் பல்வேறு திட்டங்களை அரசு நிறைவேற்றி வருகிறது.

    கடந்த 2, 3 மாதத்திற்கு முன்பாக லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது, மேலும் 60 சப்-இன்ஸ்பெக்டர் பதவி நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    அதுமட்டும் அல்லாது வெகு விரைவாக, காவல் துறை டிரைவர்களுக்கான பணியிட அறிவிப்பு வர உள்ளது.

    26-ந் தேதி 356 காவலர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட உள்ளது.

    சைபர் க்ரைமில் நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்திலும் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படுவர். சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்துவதிலும், போதை பொருட்களை கட்டுப்படுத்துவதிலும் காவல் துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

    காவல்துறையில் எம்.பி.சி. இடஒதுக்கீட்டை நிறைவேற்ற அரசு நடவடிக்கையை எடுத்து வருகிறது. அனைத்து சாலைகளையும் புதிதாக போட நடவடிக்கை எடுத்துள்ளோம். எதிர்கா லத்தில் பெஸ்ட் புதுவையை உருவாக்குவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×