என் மலர்

  நீங்கள் தேடியது "விண்ணப்பிக்கலாம்"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஈரோடு மாவட்டத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.
  • இது சார்பான காலிப்பணியிட விவரங்கள் முதன்மைக்கல்வி, மாவ ட்டக்கல்வி, வட்டாரக்கல்வி அலுவலகங்ககளின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டு உள்ளது.

  ஈரோடு:

  கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

  தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2022-23-ம் கல்வி ஆண்டில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.

  தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ண ப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வி தகுதிச்சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

  இது சார்பான காலிப்பணியிட விவரங்கள் முதன்மைக்கல்வி, மாவ ட்டக்கல்வி, வட்டாரக்கல்வி அலுவலகங்ககளின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டு உள்ளது.

  விண்ணப்பங்களை வரும் 6-ந் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

  குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது. தகவல் பலகையில் வெளி யிடப்படும் காலிப்பணியிட விவரங்கள் மாறுதலுக்கு உட்பட்டது.

  விண்ணப்பங்கள் ஈரோடு கல்வி மாவட்டம் - deoerode2016@gmail.com, பவானி கல்வி மாவட்டம் - deobhavani6@gmail.com, கோபிசெட்டிபாளையம் கல்வி மாவட்டம் - deogobi@gmail.com, பெருந்துறை கல்வி மாவட்டம்-deoperundurai@gmail.com, சத்தியமங்கலம் கல்வி மாவட்டம்-deosathy@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரியில் அனுப்பலாம்.

  இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேர்வில் தோல்வியடைந்த பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூலை 25ந் தேதி முதல் துணைத்தேர்வு நடக்கவுள்ளது.
  • 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்டு 2ம் தேதி முதல் துணைத்தேர்வு நடக்கவுள்ளது.

  உடுமலை :

  பிளஸ் 2 மற்றும்10-ம் வகுப்புகளுக்கு, துணைத்தேர்வு எழுத விரும்புவோர் வரும் 4ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

  கடந்த 20ந் தேதி 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. மாவட்டத்தில், 24 ஆயிரத்து, 395 பேர் பிளஸ் 2 தேர்வெழுதினர். இவர்களில் 23 ஆயிரத்து 559 பேர் தேர்ச்சி பெற்றனர். 10ம் வகுப்பு தேர்வை, 29 ஆயிரத்து, 631 பேர் எழுதினர். இவர்களில் 26 ஆயிரத்து 612 பேர் தேர்ச்சி அடைந்தனர். தேர்வில் தோல்வியடைந்த பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூலை, 25ந் தேதி முதல் ,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்டு 2ம் தேதி முதல் துணைத்தேர்வு நடக்கவுள்ளது.

  இத்தேர்வு எழுத விரும்புவோர் ஜூலை, 4 ந் தேதிக்குள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழகத்தில் மின் கம்பியாளர் உதவியாளர் (ஒயர்மேன் ஹெல்பர்) தகுதிக்கான தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 24 மற்றும் 25-ந் தேதி நடக்க உள்ளது.
  • விண்ணப்பத்தை, https://skilltraining.tn.gov.in/DET என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

  ஈரோடு:

  தமிழகத்தில் மின் கம்பியாளர் உதவியாளர் (ஒயர்மேன் ஹெல்பர்) தகுதிக்கான தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 24 மற்றும் 25-ந் தேதி நடக்க உள்ளது. இப்பணிக்கு தகுதியான 21 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  விண்ணப்பதாரர்கள் மின் ஒயரிங் தொழிலில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் தொழிலாளர்களுக்கான மாலை நேர வகுப்பில் மின் கம்பியாளர் பிரிவில் பயிற்சி பெற்று தேறியவர்கள், தேசிய புனரமைப்பு திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட மின்சார பணியாளர் மற்றும் கம்பியாளர் தொழில் பிரிவில் பயிற்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

  விண்ணப்பத்தை, https://skilltraining.tn.gov.in/DET என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அடுத்த மாதம் 26-ந் தேதி மாலை 5:30 மணிக்குள், 'முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஈரோடு –638009' என்ற முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

  ஈரோடு அரசு ஐ.டி.ஐ.யை, 0424 2275244 என்ற எண்ணிலும், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் அலுவலகத்தை, 0424 2270044 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு கூடுதல் விபரம் அறியலாம்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கல்பனா சாவ்லா விருது பெற சாதனை பெண்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
  • விண்ணப்பிக்க விரும்புவர்கள் http://awards.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வருகிற 30-ந் தேதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

  சிவகங்கை

  சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கல்பனா சாவ்லா விருது ஆண்டு தோறும் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளிலும் மிகப் பெரிய சாதனை புரியும் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

  2022-ம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சமுதாயத்தில் துணிச்சலான, தைரியமிக்க சாதனை புரிந்த பெண்கள் இந்த விருதினை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவர்கள் http://awards.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வருகிற 30-ந் தேதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2022-2023-ம் கல்வியாண்டிற்கு நேரடி 2-ம் ஆண்டு மற்றும் முதலாமாண்டு முழு நேரம் பட்டயப்படிப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இந்த தகவலை பெருந்துறை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

  ஈரோடு:

  பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2022-2023-ம் கல்வியாண்டிற்கு நேரடி 2-ம் ஆண்டு மற்றும் முதலாமாண்டு முழு நேரம் பட்டயப்படிப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். www.tnpoly.in என்ற இணையதளம் மூலம் வரும் அடுத்த மாதம் 8-ந் தேதி வரை விண்ணப்பித்து பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

  இந்த கல்லூரியில் அமைப்பியல், எந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் மற்றும் கணிணி பொறி யியல் என 5 முழுநேரப் பாடப்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 60 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

  இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யும் பொதுப்பிரிவினர் ரூ.150 பதிவுக்கட்டணமாக கிரிடிட் கார்டு, டேபிட் கார்டு,நெட் பேங்க் மூலம் செலுத்தலாம். பழங்குடி-பட்டியல் பிரிவினருக்கு விண்ணப்ப பதிவுக்கட்டணம் இல்லை.

  முதலாம் ஆண்டில் சேர விரும்பும் மாணவர்கள் 10-ம் வகுப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணை யான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  நேரடி 2-ம் ஆண்டு சேர விரும்பும் மாணவர்கள் மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இயற்பி யல், வேதியியல், கணிதம், உயிரியல் அல்லது தொழில் பிரிவில் கணிதம், இயற்பியல், வேதியியல் அல்லது அதற்கு சமமான படிப்பு படித்து இருக்க வேண்டும்.

  இந்த தகவலை பெருந்துறை அரசினர் பாலி டெக்னிக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாமக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான பள்ளி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

  நாமக்கல்:

  நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள அறிக்கை–யில் கூறியிருப்பதாவது:-

  நாமக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான பள்ளி விடுதிகள் -18, மாணவிகளுக்கான விடுதிகள்-5, கல்லூரி மாணவா்களுக்கான விடுதிகள்-3 மற்றும் மாணவி–களுக்கான விடுதிகள்-2 என மொத்தம் 28 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

  இந்த விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளும், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு பயிலும் மாணவ, மாணவியா் கல்லுரி விடுதிகளில் சேரத் தகுதியுடையவா்கள் ஆவா். இந்த விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சாா்ந்த மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்து கொள்ளப்படுவர். சோ்க்கை பெறுவோருக்கு உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படுகிறது.

  10-ம் வகுப்பு வரை பயிலுவோருக்கு சீருடைகள், சிறப்பு வழிகாட்டி புத்த–கங்கள் வழங்கப்படும். மலைப் பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும். இதற்கான தகுதிகளாக, பெற்றோா் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த விதிமுறையானது மாணவிகளுக்கு பொருந்தாது.

  தகுதியுடைய மாணவ, மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளா், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி பாதுகாவலரிடமும், மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலகத்தில் ஜூன் 30- க்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொருத்தவரை ஜூலை 31க்குள்ளும் சமா்ப்பிக்க வேண்டும்.

  மாணவ, மாணவியா்கள் விண்ணப்பிக்கும்போது ஜாதி, பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்க வேண்டும். ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழா்களின் குழந்தைகளுக்கென தனியாக 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குழந்தைத் தொழிலாளா்கள் தங்கி பயில்வதற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சமூக சேவகர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்க்கிஸ் தெரிவித்தார்.

  ராமநாதபுரம்

  சுதந்திர தினவிழா ஆண்டு தோறும் ஆகஸ்ட் 15ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 2022-23-ம் ஆண்டிற்கான சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பெண்களின் முன்னேற்ற த்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற் கான விருது கள் வழங்கப்பட உள்ளது. எனவே கீழ்க்கா ணும் தகுதியான நபர்களி டமிருந்து கருத்து ருக்கள் வருகிற 30-ந் தேதிக்குள் வரவேற்கப்படு கின்றன.

  தமிழ்நாட்டை பிறப்பிட மாகக் கொண்ட 18 வயதிற்கு மேற்பட்ட பெண்ணாக இருத்தல் வேண்டும். சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பாகுபாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாகப் பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணி யாற்றுபவராக இருத்தல் வேண்டும்.

  மேற்காணும் வகையில் சாதனை புரிந்தவர்களாக இருப்பின் உரிய கருத்துருவுடன் மாவட்ட சமூகநல அலுவலகம், ராமநாதபுரம் (மாவட்ட கலெக்டர் வளாகம்) அணுகி இணைப்பு படிவம் பெற்று முழுமையாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிரப்பி வழங்க வேண்டும். மேலும் தகவலுக்கு தொலைபேசி எண் 04567-23046 தொடர்பு கொள்ளவும்.

  மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்க்கிஸ் தெரிவித்தார்.

  ×