என் மலர்
நீங்கள் தேடியது "பில் கேட்ஸ்"
- பங்குச்சந்தையில் Short Selling முறையில் பில் கேட்ஸ் பந்தயம் கட்டி இருந்தார்
- இந்தப் பந்தயத்தால் பில் கேட்ஸ் போன்ற பெரும் கோடீஸ்வரர் கூட திவாலாவது உறுதி.
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன்.
இதற்கென தனி தீவே அவர் வைத்திருந்தார். கடந்த 2019 இல் கைதாகி சில மாதங்களிலேயே நியூ யார்க் சிறையில் அவர் தற்கொலை செய்துகொண்டார்.
எப்ஸ்டீன் தனது வாடிக்கையாளர்களுடனான உரையாடல்கள், புகைப்படங்கள், வீடியோக்களை ஆவணப்படுத்தி வைத்திருந்தார். இவை எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.
அமெரிக்க நீதித்துறை உத்தரவுப்படி இந்த லட்சக்கணக்கான கோப்புகள் பகுதி பகுதியாக வெளியாகி வருகின்றன.
அண்மையில் வெளியான கோப்புகளில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ரஷிய பெண்களுடன் பாலியல் உறவு வைத்து பால்வினை நோய்க்கு ஆளாகி, அதற்கு ரகசியமாக மருந்து எடுத்துக்கொண்டதாக கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் நியூயார்க் டைம்ஸ் செய்தியின்படி, சமீபத்தில் தனது தொண்டு நிறுவனமான கேட்ஸ் பவுண்டேசன் ஊழியர்கள் மத்தியில் பேசிய பில் கேட்ஸ், தான் ரஷிய பெண்கள் இருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக ஒப்புக்கொண்டார்.
மேலும் எப்ஸ்டீனுடன் நட்பு கொண்டது தான் செய்த மிகப்பெரிய தவறு என்றும் இதனால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்த செய்தியை பகிர்ந்த ஒரு எக்ஸ் பயனர் "டெஸ்லா பங்குகளை வீழ்த்த நினைப்பவர்கள் நல்ல மனது உள்ளவர்கள் கிடையாது என்று நான் அடிக்கடி சொல்லியிருக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த டெஸ்லா நிறுவன தலைவர் மஸ்க் "கர்மா உண்மையானது" என்று பதிவிட்டுள்ளார்.
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனப் பங்குகள் வீழ்ச்சியடையும் என சுமார் 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4,150 கோடி) தொகையை Short Selling முறையில் பில் கேட்ஸ் முன்பொருமுறை பந்தயம் கட்டியிருந்தார்.
இதுவே மஸ்க், தற்போது 'கர்மா உண்மையானது' என பதிலளிக்க காரணமாகும். கடந்த எட்டு ஆண்டுகளாக பில் கேட்ஸ் இந்த ஷார்ட் பொசிஷனை தொடர்ந்து வைத்திருப்பதாக மஸ்க் முன்பு கூறியிருந்தார்.
ஒருவேளை டெஸ்லா உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக மாறினால், இந்தப் பந்தயத்தால் பில் கேட்ஸ் போன்ற பெரும் கோடீஸ்வரர் கூட திவாலாவது உறுதி என்று மஸ்க் எச்சரித்திருந்தார்.
தற்போது உலகக் கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தில் எலான் மஸ்க் இருக்க, முதல் 10 இடங்களில் கூட பில் கேட்ஸ் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அண்மையில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகளில் எலான் மஸ்க்கின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
Short Selling என்பது பங்குச்சந்தையில் பங்குகள் விலை குறையும் போது லாபம் ஈட்டும் ஒரு உத்தியாகும். இதில், ஒரு நிறுவனத்தின் பங்குகளின் விலை வருங்காலத்தில் குறையும் என்று கணித்து கடன் வாங்கி அந்த பங்குகளை வாங்குவார்கள்.
அதை அதிக விலைக்கு விற்பார்கள். கணித்தபடி, அந்த பங்குகளின் விலை குறையும்போது அவற்றை மீண்டும் குறைந்த விலைக்கு வாங்கி, கடனைத் திருப்பிச் செலுத்தி லாபம் பார்ப்பார்கள்.
- பிரதமர் மோடியின் பெயரும் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றுள்ளது.
- நிச்சயமாக ஜெஃப்ரி தனக்குத்தானே ஒரு மின்னஞ்சலை எழுதியிருக்கிறார்.
அமெரிக்க நீதிமன்றம் வெளியிட்ட 'எப்ஸ்டீன் கோப்புகள்' உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காரணம் உலகின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளது. அதில் குறிப்பிடத்தக்கவர்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ர்ம்ப், பிரதமர் மோடி, தொழிலதிபர் பில் கேட்ஸ் ஆவர்.
இந்நிலையில் பில் கேட்ஸ் இந்த விவகாரம் தொடர்பாக மன்னிப்புக் கோரியுள்ளார். சமீபத்தில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகளில், பில் கேட்ஸ் பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதனால் அவருக்குப் பாலியல் தொற்று நோய் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்தத் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், எப்ஸ்டீன் தன்னை அவதூறு செய்வதற்காகவே அத்தகைய மின்னஞ்சல்களை எழுதியிருப்பார் என்றும் பில் கேட்ஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள பில் கேட்ஸ்,
"அவருடன் நான் கழித்த ஒவ்வொரு நிமிடத்திற்கும் வருந்துகிறேன், நான் அப்படிச் செய்ததற்கு மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்," என்று கேட்ஸ் கூறினார். "நிச்சயமாக ஜெஃப்ரி தனக்குத்தானே ஒரு மின்னஞ்சலை எழுதியிருக்கிறார். நான் அவர் குறிப்பிட்டுள்ளவாறு எந்த மின்னஞ்சலையும் எழுதவில்லை. மேலும் அதில் உள்ள தகவல்கள் பொய்யானவை. அவருடைய உள்நோக்கம் என்னவாக இருந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அவர் ஏதோ ஒரு வகையில் என்மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளார்." என்று தெரிவித்தார்.
மேலும் எப்ஸ்டீன் ஏற்கனவே பாலியல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட பிறகும் 2011 இல் அவரை சந்தித்ததாக கேட்ஸ் ஒப்புக்கொண்டார். ஆனால் ஒருபோதும் எப்ஸ்டீனின் தனியார் தீவுக்கு சென்றதில்லை என்றும் தெரிவித்துள்ளார். "அவருடன் நேரத்தைச் செலவிட்டது நான் செய்த முட்டாள்தனம், அவரைத் தெரிந்ததற்காக வருந்தும் பல நபர்களில் நானும் ஒருவன்." என்றும் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இதுதொடர்பாக பேசியிருந்த பில் கேட்ஸின் முன்னாள் மனைவி மெலிண்டா, எப்ஸ்டீன் தொடர்பான இந்த ஆவணங்கள் தனது திருமண வாழ்க்கையின் வேதனையான நினைவுகளை மீண்டும் கொண்டு வருவதாகவும், இது தொடர்பாக பில் கேட்ஸ் பதிலளிக்க வேண்டிய கடமை அவருக்கு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
- மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் பேட்ஸ் குறித்து கோப்புகளில் அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன
- மனைவி மெலிண்டாவிக்ரு தெரியாமல் மறைக்க பில் கேட்ஸ் ரகசியமாக மருந்துகளை உட்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது
அமெரிக்க நீதித்துறை எப்ஸ்டீன் தொடர்பான சுமார் 30 லட்சம் பக்க ஆவணங்கள், 2,000 வீடியோக்கள் மற்றும் 1.8 லட்சம் படங்களை ஜன.31ம் தேதி வெளியிட்டது. இதில் உலகின் பல செல்வாக்குமிக்க மனிதர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் பில் கிளிண்டன், இளவரசர் ஆண்ட்ரூ, பிரதமர் மோடி, பில் கேட்ஸ், எலான் மஸ்க், ரிச்சர்ட் பிரான்சன் போன்றோரின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் பேட்ஸ் குறித்து கோப்புகளில்அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன
அதாவது, ரஷியப் பெண்களுடன் ஏற்பட்ட பாலியல் தொடர்பு காரணமாகப் பில் கேட்ஸிற்குப் பால்வினை நோய் (STD) ஏற்பட்டதாகவும், அதைத் தனது மனைவி மெலிண்டா கேட்ஸிற்குத் தெரியாமல் மறைக்க அவர் ரகசியமாக மருந்துகளை உட்கொண்டதாகவும் புதிய ஆவணங்கள் கூறுகின்றன. இதற்கிடையே இந்தக் குற்றச்சாட்டுகளைப் பில் கேட்ஸின் செய்தித் தொடர்பாளர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
இந்நிலையில், எப்ஸ்டீன் கோப்புகள் குறித்து பில் கேட்ஸ் பதில் சொல்ல வேண்டும் என்று அவரது முன்னாள் மனைவி மெலிண்டா தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய மெலிண்டா, "எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எனக்கு நம்பமுடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய பில்
கேட்ஸ் உள்பட அனைவரும் இது குறித்து எழும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். எந்த சிறுமிக்கு ஏற்படவே கூடாத ஒரு அவல நிலை, எஃப்ஸ்டீன் மற்றும் அவரது கூட்டாளிகளால் ஏற்பட்டுள்ளன. என் மகள் வயதில் இருக்கும் அச்சிறுமிகளை பார்க்கும்போது இதயம் நொறுங்கிப் போனது" என்று தெரிவித்தார்.
- மனைவி மெலிண்டா கேட்ஸிற்குத் தெரியாமல் மறைக்க அவர் ரகசியமாக மருந்துகளை உட்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு விருந்தாகும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் ஆவார் .
அமெரிக்காவில் சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு விருந்தாகும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டவர் தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன். இவர் தொடர்புடைய கோப்புகளில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த சர்ச்சை கோப்புகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் அமெரிக்க நீதித்துறை நேற்று லட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்ட புதிய ஆவணங்களை வெளியிட்டது.
அதில் அதிபர் டொனால்டு டிரம்ப், தொழிலதிபர்கள் எலான் மஸ்க், பில் கேட்ஸ், பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரு, நியூ யார்க் மேயர் மம்தானியின் தாயும் பிரபல எழுத்தாளருமான மீரா நாயர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் பேட்ஸ் குறித்து கோப்புகளில்அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அதாவது, ரஷியப் பெண்களுடன் ஏற்பட்ட பாலியல் தொடர்பு காரணமாகப் பில் கேட்ஸிற்குப் பால்வினை நோய் (STD) ஏற்பட்டதாகவும், அதைத் தனது மனைவி மெலிண்டா கேட்ஸிற்குத் தெரியாமல் மறைக்க அவர் ரகசியமாக மருந்துகளை உட்கொண்டதாகவும் புதிய ஆவணங்கள் கூறுகின்றன.
2013-இல் எப்ஸ்டீன் தனக்குத்தானே அனுப்பிக்கொண்ட மின்னஞ்சல்களில் பில் கேட்ஸ் குறித்து இத்தகைய தகவல்களைக் குறிப்பிட்டுள்ளார்.
மெலிண்டாவிற்குத் தெரியாமல் இருக்க எப்ஸ்டீனின் உதவியுடன் பில் கேட்ஸ் ஆன்டிபயாட்டிக் மருந்துகளைப் பெற்றதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மின்னஞ்சல்களை அழித்துவிடுமாறு பில் கேட்ஸ் தன்னிடம் கோரியதாகவும் எப்ஸ்டீன் தனது குறிப்புகளில் எழுதியுள்ளார்.

இதற்கிடையே இந்தக் குற்றச்சாட்டுகளைப் பில் கேட்ஸின் செய்தித் தொடர்பாளர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
எப்ஸ்டீனுடன் பழகியது தனது வாழ்வின் மிகப்பெரிய தவறு என்று பில் கேட்ஸ் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளார்.
2021-இல் பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா விவாகரத்து செய்தபோது, எப்ஸ்டீனுடனான கேட்ஸின் நட்பும் ஒரு முக்கிய காரணமாக மெலிண்டாவால் சுட்டிக்காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பாலியல் குற்றவாளி உடன் பில் கேட்ஸிற்கு இருந்த தொடர்பும் இந்த விவாகரத்திற்கு ஒரு முக்கியக் காரணம் என்று மெலிண்டா கூறியுள்ளார்.
- ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் பில் கேட்ஸ் இருக்கும் புகைப்படங்களும் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
உலகின் முன்னணி பணக்காரரான மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் 27 ஆண்டுகளாக மனைவி மெலிண்டா கேட்ஸ் உடன் வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் 2021இல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அவர்களுக்கு ஜென்னர், ரோரி மற்றும் போப் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
2000 - ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் இருந்து இல் 2024 மெலிண்டா விலகி தனியாக ஒரு தொண்டு நிறுவனத்தை உருவாக்கினார்.
2021ல் ஒப்புக்கொண்ட விவாகரத்து ஒப்பந்தப்படி மெலிண்டாவுக்கு பில்கேட்ஸ் ரூ.1,12,800 கோடி ஜீவனாம்சம் வழங்க வேண்டும்.
இந்தநிலையில், மைக்ரோசாப்ட் உரிமையாளரான பில்கேட்ஸ் தனது மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார்.
ஏற்கனவே ரூ.41,700 கோடியை மெலிண்டாவுக்கு பில்கேட்ஸ் வழங்கிய நிலையில், இறுதியாக தற்போது ரூ.71,100 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மெலிண்டாவுக்கு பில் கேட்ஸ் மொத்தமாக 1.05 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளார். சமீபத்திய வரி தாக்கல் அறிக்கைகளின்படி இது தெரியவந்துள்ளது.
இதுவே உலகின் மிகவும் காஸ்ட்லியான விவாகரத்து என்று கூறப்படுகிறது. இந்த பணத்தை பெண்கள் முன்னேற்றத்துக்கு செலவழிக்க போவதாக மெலிண்டா கூறியுள்ளார்.
சிறுமிகளை கடத்தி பணக்காரர்களுக்கு போகப்பொருளாக மாற்றிய பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் பில் கேட்ஸிற்கு இருந்த தொடர்பும் இந்த விவாகரத்திற்கு ஒரு முக்கியக் காரணம் என்று மெலிண்டா கடந்த காலங்களில் தெரிவித்திருந்தார்.
ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் பில் கேட்ஸ் இருக்கும் புகைப்படங்களும் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
- பில் கேட்ஸ் - மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் தம்பதி கடந்த 2021 இல் விவாகரத்து பெற்றது.
- தனது வாழ்வில் தான் செய்த மிகப்பெரிய தவறாக நினைத்து வருந்துவதாகத் தெரிவித்திருந்தார்.
மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் - மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் தம்பதி கடந்த 2021 இல் விவாகரத்து பெற்றது.
இந்த விவாகரத்து பற்றி கடந்த ஜனவரியில், பில் கேட்ஸ் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில், 27 ஆண்டு கால திருமண வாழ்வை விவகாரத்து மூலம் முடித்துக் கொண்டது தனது வாழ்வில் தான் செய்த மிகப்பெரிய தவறாக நினைத்து வருந்துவதாகத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அண்மையில் ஆங்கில ஊடகம் ஒன்றில் நடந்த நேர்காணலில் மெலிண்டா பிரெஞ்ச் பேசுகையில், மிகவும் நெருங்கிய உறவில், உங்களது மதிப்புடன் உங்களால் வாழ முடியாத நிலை ஏற்படும்போது, பிரிவது என்பது மிகவும் அவசியமாகிறது.
அவர் என்ன சொல்லியிருந்தார் என்பது எனக்குத் தெரியாது, எனவே அதுகுறித்து நான் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. அது அவரது சொந்த வாழ்க்கை. எனக்கென்று ஒரு வாழ்க்கை உள்ளது. நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன் என்று தெரிவித்தார்.
- இளைஞர் ஒருவர் ரொட்டியை (சப்பாத்தி) சமைக்கும் முறையை பிக் கேட்ஸூக்கு கற்றுக் கொடுக்கிறார்.
- இந்தியாவில் பல தினை உணவுகள் உள்ளன. அவற்றையும் நீங்கள் செய்து பார்க்கலாம்.
உலக கோட்டீஸ்வரரும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ் தான் ரொட்டி சமைக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அந்த வீடியோவில், செப் ஒருவர் தான் இந்தியா சென்று வந்ததாகவும், அங்கு பிரபலமான ரொட்டியை (சப்பாத்தி) சமைக்கும் முறையை பிக் கேட்ஸூக்கு கற்றுக் கொடுக்கிறார்.
மாவு பிசைந்து, உருண்டை பிடித்து வட்டமாக தேய்த்து சப்பாத்தி சுடுவதை பின்பற்றி, பில்கேட்ஸ் ரொட்டி சுட்டார். இந்த வீடியோ வைரலானது.

இந்நிலையில், பில்கேட்ஸின் சமையலுக்கு பிரதமர் மோடி பாராட்டினார். மேலும், "இந்தியாவில் ஆரோக்கியமான உணவுகளின் ஒன்று திணை. இந்தியாவில் பல தினை உணவுகள் உள்ளன. அவற்றையும் நீங்கள் செய்து பார்க்கலாம்" என்று சிரித்த எமோஜியுடன் பிரதமர் கூறினார்.
- பவுலா ஹர்ட் என்ற விதவை பெண்ணுடன் பில் கேட்ஸ் தற்போது ஊர் சுற்றுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- பவுலா ஹர்டுக்கு பில்கேட்சுடன் நட்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஒன்றாக ஊர் சுற்ற தொடங்கினார்கள்.
வாஷிங்டன்:
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரும், உலக பணக்காரர்களில் ஒருவருமாக திகழ்ந்து வருபவர் பில் கேட்ஸ். இவரது முன்னாள் மனைவி மெலிண்டா.
இவர்களுக்கு ஜெனீபர் (வயது 26 ) என்ற மகனும் ரோரி (23) மற்றும் போபே (20) என்ற 2 மகள்களும் உள்ளனர். இந்தநிலையில் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து செய்ய முடிவு செய்தனர்.
அதன் பிறகு அவர்கள் விவாகரத்து பெற்றனர். இதனால் அவர்களது 27 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் பவுலா ஹர்ட் என்ற விதவை பெண்ணுடன் பில் கேட்ஸ் தற்போது ஊர் சுற்றுவதாக தகவல் வெளியாகி உள்ளது. பவுலா ஹர்ட்டின் கணவர் மார்க் ஹர்ட் பிரபல ஆரக்கிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவி வகித்தவர். இந்த தம்பதிக்கு கேத்ரின், உள்பட 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு மார்க் மரணம் அடைந்து விட்டார்.
இந்த சூழ்நிலையில் தான் பவுலா ஹர்டுக்கு பில்கேட்சுடன் நட்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் ஒன்றாக ஊர் சுற்ற தொடங்கினார்கள்.
கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியை ஒன்றாக அமர்ந்து கண்டுகளித்தனர். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதே போல பல இடங்களுக்கும் அவர்கள் ஜோடியாக சென்றுவருவதாக தகவல் வந்த வண்ணம் உள்ளது.
டென்னிஸ் மீது அவர்கள் வைத்து இருந்த ஆர்வம் தான் 2 பேரையும் காதலில் விழ வைத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை 2 பேருமே இதுவரை மறுக்கவில்லை.
பவுலா ஹர்ட் தொழில் மேலாண்மை பட்டப்படிப்பு முடித்து உள்ளார், அவர் விற்பனை மற்றும் நிர்வாக துறையில் நீண்ட காலம் பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சச்சின் தெண்டுல்கர் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சை சந்தித்தார்.
- மும்பை சென்ற பில்கேட்ஸ் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாசை சந்தித்தார்.
மும்பை:
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மும்பை சென்ற பில்கேட்ஸ், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாசை சந்தித்தார்.
இந்நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி ஆகியோரை மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் நேற்று சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து சச்சின் டுவிட்டர் பதிவில், நாம் அனைவரும் வாழ்நாள் முழுவதும் மாணவர்கள். உலகின் சவால்களைத் தீர்க்க யோசனைகளைப் பகிர்வது ஒரு சக்திவாய்ந்த வழியாகும். உங்கள் நுண்ணறிவுக்கு நன்றி பில்கேட்ஸ் என தெரிவித்துள்ளார்.
- மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
- இந்திய பயணத்தின் போது தன்னுடன் பல்கலைக்கழகத்தில் பயின்ற ஆனந்த் மஹிந்திராவை பில் கேட்ஸ் சந்தித்தார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் மஹிந்திரா ட்ரியோ எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனத்தை ஓட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் இந்தியா வந்திருந்த பில் கேட்ஸ் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தன்னுடன் பயின்ற ஆனந்த் மஹிந்திராவை பில் கேட்ஸ் சந்தித்தார்.
இருவரின் சந்திப்பின் போது குழுக்களும் உடனிருந்தனர். ஐடி மற்றும் வியாபாரம் கடந்து இருவரும் சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் பல்வேறு விஷயங்களை பற்றி பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பில் கேட்ஸ் இந்திய பயணத்தின் போது எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். வீடியோவில் பில் கேட்ஸ் மஹிந்திரா ட்ரியோ எலெக்ட்ரிக் மூன்று சக்கர வாகனத்தை ஓட்டும் காட்சிகள் உள்ளன.

இன்ஸ்டாகிராம் பதிவில், "புதுமைகளை படைப்பதில் இந்தியாவின் ஆசை எப்போதும் ஆச்சரியப்படுத்தாமல் இருந்தது இல்லை. நான் ஒரு எலெக்ட்ரிக் ரிக்ஷாவை ஓட்டினேன், அது 131 கிமீ (சுமார் 81 மைல்கள்) ரேன்ஜ் கொண்டிருப்பதோடு, அதிகபட்சம் நான்கு பேருடன் பயணம் செய்ய உகந்தது. போக்குவரத்து துறையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மஹிந்திரா போன்ற நிறுவனங்களை பார்ப்பது ஊக்கமளிக்கும் விஷயமாக இருக்கிறது. " என குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்று இருவரின் சந்திப்பு குறித்து ஆனந்த் மஹிந்திராவும் டுவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார். அதில், "பில் கேட்ஸ்-ஐ மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. மேலும், வரவேற்கும் வகையில் எங்களது குழுக்கள் இணைந்து பேசிய விவகாரங்களில் ஐடி மட்டுமின்றி எந்த வியாபாரத்திலும் எப்படி ஒருங்கிணைந்து சமூக மாற்றத்தை ஏற்படுத்துவது என்பதை சார்ந்தே இருந்தது. (தனிப்பட்ட முறையில் எனக்கு இந்த சந்திப்பு லாபகரமாக இருந்தது, எனக்கு அவர் கையொப்பம் இட்ட புத்தகம் இலவசமாக கிடைத்தது)," என்று குறிப்பிட்டுள்ளார்.
- செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் உருவாக்கும் புகைப்படங்கள் சமீப காலங்களில் வைரலாகி வருகின்றன.
- இவ்வாறு ஏஐ நிபுணர் ஒருவர் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கிய டெக் தலைவர்களின் படங்கள் வெளியாகி உள்ளன.
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் பயன்பாடு உலகளவில் பெருமளவில் அதிகரித்து வருகிறது. பலர் ஏ.ஐ. தொழில்நுட்பம் கொண்டு தங்களுக்கு தேவையான பல வேலைகளை சுலபமாக முடிக்க கற்றுக் கொண்டு வருகின்றனர். மேலும் பலர் ஏ.ஐ. டூல்களை கொண்டு தங்கள் கற்பனைக்கு தீனிப்போடும் வகையில் வித்தியாசமான படங்களை உருவாக்கி வருகின்றனர்.
இவ்வாறு சிலர் உருவாக்கிய படங்கள் வைரலானதோடு, சர்ச்சைகளுக்கும் உள்ளானது. டெனால்ட் டிரம்ப் கைது செய்யப்படுவது போன்ற புகைப்படம், போப் பிரான்சிஸ் பஃபர் ஜாக்கெட் அணிந்து இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி அனைவரையும் அதிர செய்தது. இதில் டொனால்ட் டிரம்ப் புகைப்படத்தை வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியது.
பலர் ஏ.ஐ. உருவாக்கிய படங்கள் உண்மை என்றே நம்பிவிட்டனர். இந்த அளவுக்கு மக்களை குழப்பும் வகையில் ஏ.ஐ. தொழில்நுட்பம் தனது பணியை சிறப்பாக செய்து அசத்துகிறது. இந்த வரிசையில் ஏ.ஐ. நிபுணரான கோகுல் பிள்ளா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கிய டெக் துறை தலைவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இவர் உருவாக்கிய புகைப்படங்கள் டெக் துறை தலைவர்கள் ஏழையாக இருந்தால், எப்படி காட்சியளிப்பர் என்பதை தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளன. இவற்றை உருவாக்க கோகுல் பிள்ளா மிட்ஜர்னி (Midjourney) எனும் ஏ.ஐ. மென்பொருளை பயன்படுத்தி இருக்கிறார். இவர் உருவாக்கி இருக்கும் புகைப்படங்கள் டெக் தலைவர்கள் உண்மையில் ஏழையாக இருப்பதை போன்றே காட்சியளிக்கின்றன.
கோகுல் புள்ளா உருவாக்கிய ஏ.ஐ. புகைப்படங்களை கீழே காணலாம்...


ஏ.ஐ. மூலம் உருவான ஜெஃப் பெசோஸ்-இன் படம்

ஏ.ஐ. மூலம் உருவான எலான் மஸ்க்-இன் படம்

ஏ.ஐ. மூலம் உருவான மார்க் ஜூக்கர்பர்க்-இன் படம்
- விண்ணப்பித்த சில பெண்களிடம், அவர்களின் கடந்த கால பாலியல் அனுபவங்கள் பற்றிய விவரங்களை கேட்டதாக தகவல்.
- இது குறித்து எந்த விவரமும் தங்களுக்கு தெரியாது என கேட்ஸ் வென்ச்சர்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்காவின் முன்னணி மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனமான "மைக்ரோஸாஃப்ட்" நிறுவனத்தின் நிறுவனர், உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ். தற்போது அவர் அதிலிருந்து விலகி உலகளவில் தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அவரது தனிப்பட்ட குடும்ப அலுவலகம், "கேட்ஸ் வென்ச்சர்ஸ்."
இந்நிலையில், அந்த நிறுவனத்தில் வேலைக்கு வந்த பெண் விண்ணப்பதாரர்களிடம், நேர்காணலின் போது வெளிப்படையாக, அந்தரங்கமான பாலியல் கேள்விகள் கேட்கப்பட்டதாக செய்தி வெளியாகி உள்ளது.
இதன்படி, வேலைக்கு விண்ணப்பித்த சில பெண்களிடம், அவர்களின் கடந்த கால பாலியல் அனுபவங்கள் பற்றிய விவரங்கள், அவர்களின் தொலைபேசிகளில் உள்ள அவர்களுக்கு நெருக்கமானவர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அவர்களுக்கு ஆபாச படங்களில் உள்ள ஈடுபாடு, பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் குறித்த விவரங்கள் போன்ற மிகவும் பொருத்தமற்ற கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறினர்.
மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில், சில பெண் விண்ணப்பதாரர்களிடம் கவர்ச்சியான நடனத்தில் ஈடுபடுவது குறித்தும், அவர்களின் திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கூடுதலாக, சில பெண் விண்ணப்பதாரர்களிடம், பணத்திற்காக ஆபாசமாக நடனம் ஆடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்களா எனவும் கேள்வி எழுப்பப்பட்டதாக தெரிகிறது.
எனினும், இந்த நேர்காணல் தொடர்பான நடைமுறையானது, "கான்சென்ட்ரிக் அட்வைசர்ஸ்" எனப்படும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட இத்தகைய நடைமுறைகளில், விண்ணப்பதாரர்களிடம் அவர்களின் கடந்த கால போதைப்பொருள் பயன்பாடு போன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்களை குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டதாக தெரிகிறது.
ஆனால், தங்கள் வாடிக்கையாளர்களுக்காக, விண்ணப்பதாரர்களிடம் தாங்கள் செய்யும் இந்த மதிப்பாய்வு நடைமுறையை (screening) நியாயப்படுத்தி கான்சென்ட்ரிக் அட்வைசர்ஸ் நிறுவனம் கூறியிருப்பதாவது:
விண்ணப்பதாரர்களின் உண்மைத்தன்மை மற்றும் அச்சுறுத்தலுக்கு பயப்படாத குணம் ஆகியவற்றை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டு இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. நேர்காணலின் போது சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்களும் வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதில்லை. அதே போன்று அவையனைத்துமே வேலைவாய்ப்பு முடிவுகளை தீர்மானிக்க பயன்படுத்தப்படுவதுமில்லை.
இவ்வாறு அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இதற்கிடையில், இது குறித்து எந்த விவரமும் தங்களுக்கு தெரியாது எனவும், தங்களின் பணியமர்த்தல் செயல்முறையில் ஒவ்வொரு விண்ணப்பதாரரையும் மதிக்கின்றோம் என்றும் கேட்ஸ் வென்ச்சர்ஸ் நிறுவனம் கூறியிருக்கிறது.
இந்த விவகாரம் பில் கேட்ஸ் தொடர்பான சர்ச்சைகளில் புதிதாக சேர்கிறது. இதற்கு முன், தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் அவர் தொடர்பிலிருந்தது சர்ச்சைக்கு வழிவகுத்தது.
அடுத்து 2019ல் ஒரு ஊழியருடனான பாலியல் உறவு குற்றச்சாட்டின் காரணமாக் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து அவர் ராஜினாமா செய்ய நேர்ந்தது. இந்த விவகாரம் சுமுகமாக முடிவுக்கு வந்ததாகக் கூறினாலும், கேள்விகள் நீடிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.






