எப்ஸ்டீன் பைல்ஸ்: பில் கேட்ஸ்க்கு பால்வினை நோயா? - முன்னாள் மனைவி மெலிண்டா அதிர்ச்சி

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் பேட்ஸ் குறித்து கோப்புகளில் அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளனமனைவி மெலிண்டாவிக்ரு தெரியாமல் மறைக்க பில் கேட்ஸ் ரகசியமாக மருந்துகளை உட்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது
எப்ஸ்டீன் பைல்ஸ்: பில் கேட்ஸ்க்கு பால்வினை நோயா? - முன்னாள் மனைவி மெலிண்டா அதிர்ச்சி
Published on

அமெரிக்க நீதித்துறை எப்ஸ்டீன் தொடர்பான சுமார் 30 லட்சம் பக்க ஆவணங்கள், 2,000 வீடியோக்கள் மற்றும் 1.8 லட்சம் படங்களை ஜன.31ம் தேதி வெளியிட்டது. இதில் உலகின் பல செல்வாக்குமிக்க மனிதர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் பில் கிளிண்டன், இளவரசர் ஆண்ட்ரூ, பிரதமர் மோடி, பில் கேட்ஸ், எலான் மஸ்க், ரிச்சர்ட் பிரான்சன் போன்றோரின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் பேட்ஸ் குறித்து கோப்புகளில்அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன

அதாவது, ரஷியப் பெண்களுடன் ஏற்பட்ட பாலியல் தொடர்பு காரணமாகப் பில் கேட்ஸிற்குப் பால்வினை நோய் (STD) ஏற்பட்டதாகவும், அதைத் தனது மனைவி மெலிண்டா கேட்ஸிற்குத் தெரியாமல் மறைக்க அவர் ரகசியமாக மருந்துகளை உட்கொண்டதாகவும் புதிய ஆவணங்கள் கூறுகின்றன. இதற்கிடையே இந்தக் குற்றச்சாட்டுகளைப் பில் கேட்ஸின் செய்தித் தொடர்பாளர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

இந்நிலையில், எப்ஸ்டீன் கோப்புகள் குறித்து பில் கேட்ஸ் பதில் சொல்ல வேண்டும் என்று அவரது முன்னாள் மனைவி மெலிண்டா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய மெலிண்டா, "எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எனக்கு நம்பமுடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய பில்

கேட்ஸ் உள்பட அனைவரும் இது குறித்து எழும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். எந்த சிறுமிக்கு ஏற்படவே கூடாத ஒரு அவல நிலை, எஃப்ஸ்டீன் மற்றும் அவரது கூட்டாளிகளால் ஏற்பட்டுள்ளன. என் மகள் வயதில் இருக்கும் அச்சிறுமிகளை பார்க்கும்போது இதயம் நொறுங்கிப் போனது" என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com