என் மலர்
நீங்கள் தேடியது "சிவபெருமான்"
- பார்வதி தேவி சிவனை வேண்டி பூஜை செய்த நாள் மகாசிவராத்திரி.
- சதுர்த்தியன்று தேவர்கள் ஈசனை பூஜை செய்து அர்ச்சித்து வழிபட்டனர். அந்த நாளே சிவராத்திரி.
சூரிய பகவான் கும்பராசியில் சஞ்சரிக்கும் மாசி மாதம் புண்ணியமான மாதமாகவும் சுபநிகழ்ச்சிகள் செய்ய உகந்த மாதமாகவும் சொல்லப்படுகிறது. மாசி மாத சிறப்புகளின் மகுடம் மகாசிவராத்திரி. தேய்பிறை சதுர்தசி திதி நாள் சிவராத்திரி ஆகும். என்றாலும் மாசி மாதம் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரி என்று போற்றப்படுகிறது.
சாந்திராயனம் எனப்படும் சந்திரனை அடிப்படையாகக் கொண்ட நாட்காட்டியின் படி இந்த மாதத்தை `மகா' மாதம் என்று கூறுவர். எனவே இந்த மாதம் வரும் சிவராத்திரியை மகா சிவராத்திரி என்கின்றனர்.
பார்வதி தேவி சிவனை வேண்டி பூஜை செய்த நாள் மகாசிவராத்திரி. அந்த பூஜையினால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் மகாநிசி காலத்தில் அருளியதை நமது ஆகமங்களும் புராணங்களும் சொல்கின்றன.
தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலை கடைந்தபோது அதிலிருந்து ஆலகால விஷம் வந்தது. அந்த விஷத்தினை சிவபெருமான் உண்டு உலகை காத்தருளினார். சதுர்த்தியன்று தேவர்கள் ஈசனை பூஜை செய்து அர்ச்சித்து வழிபட்டனர். அந்த நாளே சிவராத்திரி ஆகும்.
உலகிற்கு ஆதாரமான சிவபெருமான் உலக உயிர்களை படைத்தலும், படைத்த உயிர்களை காத்தலும், காத்த உயிர்களை தன்னுள் ஐக்கியப்படுத்திக் கொள்ளுதலும் இந்த நாளில்தான் நடக்கும் என்கின்றன புராணங்கள்.
மாசி மாதத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால் மாசி மாதம் வரும் சிவராத்திரி, மகா சிவராத்திரி எனவும், மற்ற மாதங்களிலும் சிவன் மீது மிகுந்த பற்று இருப்பவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்து சிவபெருமான் குறித்த அறிவை அடைய உதவுவதினால் அவை மாத சிவராத்திரி எனவும் போற்றப்படுகிறது.
மற்ற மாதங்களில் சிவராத்திரி விரதம் கடைப்பிடிக்க முடியாதவர்களும் மாசி மாதத்தின் மகா சிவராத்திரி அன்று விரதமிருந்து சிவனை வழிபாடு செய்தால் ஓர் ஆண்டின் அனைத்து சிவராத்திரிகளிலும் வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்கிறார்கள் ஆன்மீக பெரியவர்கள்.
- பவள லிங்கத்தை வழிபட்டால் நோய்தீரும். நட்பு பெருகும்.
- கல்லினால் ஆன லிங்கத்தை வழிபட்டால் ஆற்றல் கூடும்.
சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட தலங்கள், எட்டு இருக்கின்றன. அவற்றை 'அட்ட வீரட்ட தலங்கள்' என்கிறோம். இவற்றிற்கு யோக பலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். எதையும் துணிந்து செய்யும் ஆற்றல் வரும்.
தைரியம் வழங்கும் தலங்கள்
1. திருக்கடையூர் - எமதர்மனை காலால் உதைத்தது
2. திருக்கண்டியூர் - பிரம்மனின் தலையைக் கொய்தது
3. திருவதிகை - திரிபுரத்தை எரித்தது
4. திருவழுவூர் -யானையின் தோலை உரித்தது
5. திருப்பறியலூர் - தட்சனை சம்ஹாரம் செய்தது
6. திருக்கோவிலூர் - அந்தகாசுரனை வதம் செய்தது
7. திருக்குறுக்கை - மன்மதனை எரித்தது
8. திருவிற்குடி -ஜலந்தராசுரனை வதம் செய்தது
ஏழுவகை சிவலிங்கங்கள்
ஏழேழு பிறவிக்கும் நற்பலன்கள் கிடைக்க ஏழு வகை சிவலிங்கங்கள் உண்டு. அவைகளை முறைப்படி வழிபட்டால் அவற்றிற்குரிய நன்மை வந்தடையும்.
சுயம்புருவம் - தானாக உண்டானது
தேவியகம் - அம்பிகை வழிபட்டது
தைவிகம் - தேவர்கள் வழிபட்டது
மானுஷம் - மனிதர்கள் வழிபட்டது
ராட்சஷம் - அசுரர்கள் வழிபட்டது
ஆரிஷம் - ரிஷிகள் வழிபட்டது
பாணம்- பாணாசுரன் பூஜித்தது
சிவலிங்க பூஜையும், பலனும்...
ரத்தினத்தால் ஆன சிவலிங்கத்தை பூஜை செய்து வழிபட்டால் லட்சுமி கடாட்சம் கிட்டும். செல்வம் பெருகும். உலோகத்தால் ஆன சிவலிங்கத்தை வழிபட்டால் துன்பம் நீங்கும், எதிர்ப்புகள் அகலும்.
பவள லிங்கத்தை வழிபட்டால் நோய்தீரும். நட்பு பெருகும். கல்லினால் ஆன லிங்கத்தை வழிபட்டால் ஆற்றல் கூடும். கல்வி, கலைகளில் தேர்ச்சி கிட்டும். அரும்பெரும் சக்தி உண்டாகும்.
இழந்த செல்வங்களை மீண்டும் பெற வழிபட வேண்டிய சிவதலங்கள்:
திருவெண்காடு, திருவையாறு, திருவிடைமருதூர், திருச்சாய்க்காடு, ஸ்ரீவாஞ்சியம், மயிலாடுதுறை. இந்த தலங்களுக்கு யோக பலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வந்தால் இழந்த பதவி, இழந்த செல்வங்களை மீண்டும் பெறலாம்.
- சிவபெருமானுக்கு 5 தலைகள் இருப்பதை போன்று ஆரம்பத்தில் பிரம்ம தேவனுக்கும் 5 தலைகள் இருந்துள்ளது.
- சிவபெருமான் அழைத்தது, பிரம்மலோகத்தில் இருந்த பிரம்மாவின் காதுகளில் ஒலித்தது.
மும்மூர்த்திகளில் படைக்கும் தொழிலுக்கு அதிபதியானவர், பிரம்ம தேவன். இவரால் தான் உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிகளும் படைக்கப்படுகின்றன. பூமியில் பிரம்மனுக்கு கோவில்கள் குறைவு என்றாலும், அதில் நான்கு முகங்களுடன் பிரம்மா காட்சி தருவார். நான்கு முகங்களும் நான்கு வேதங்களையும், நான்கு திசைகளையும் குறிப்பதாக கூறப்படுகிறது.
புராணங்கள்படி, சிவபெருமானுக்கு 5 தலைகள் இருப்பதை போன்று ஆரம்பத்தில் பிரம்ம தேவனுக்கும் 5 தலைகள் இருந்துள்ளது. அவ்வாறு ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மா 'நான்முகன்' ஆனதற்கு சில புராணக் கதைகள் கூறப்படுகின்றன. அதில் ஒன்றை இங்கு பார்ப்போம்.
சிவனை போன்று 5 தலைகள் இருந்ததால், "அழிக்கும் கடவுளான சிவபெருமானை விட, படைக்கும் கடவுளான நானே உயர்ந்தவர்" என்ற கர்வம் பிரம்மனுக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, பிரம்மா யாரையும் மதிக்காமல் செயல்பட ஆரம்பித்தார். இதை அறிந்த சிவபெருமான், பிரம்மனின் கர்வத்தை அடக்கி, உண்மையை உணர்த்திட முடிவு செய்தார்.
ஒரு சமயம் சிவபெருமான் கயிலாயத்தில் இருந்துகொண்டே பிரம்ம தேவனை அழைத்தார். சிவபெருமான் அழைத்தது, பிரம்மலோகத்தில் இருந்த பிரம்மாவின் காதுகளில் ஒலித்தது. இருப்பினும், படைப்பு தொழிலில் கவனம் செலுத்துவது போல இருந்தார். இதனால் கோபம் அடைந்த சிவபெருமான், பிரம்மலோகம் வந்தார். அப்போதும் பிரம்மா, சிவபெருமானை கவனிக்காமல் உதாசீனப்படுத்தினார்.
இதனால் மிகுந்த கோபத்துக்கு ஆளான சிவபெருமான், "பிரம்மனே! என்னை போன்று உனக்கும் ஐந்து தலைகள் இருப்பதால் தானே இவ்வளவு ஆணவம். இப்போதே உனது ஐந்தாவது தலையை துண்டித்து விடுகிறேன்" என பிரம்மனின் ஒரு தலையை துண்டித்து எறிந்தார். மேலும், "படைக்கும் தொழிலை இழந்து, பூலோகத்தில் மானிடராய் வாழ்ந்து அவதிப்படுவாய்" என்று சாபமிட்டார்.
பின்பு, தன் தவறை உணர்ந்த பிரம்மா, பூலோகத்தில் மானிடராய் அலைந்து திரிந்து, செல்லும் இடமெல்லாம் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அவ்வாறு திருப்பட்டூர் தலத்துக்கு வந்து சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டபோது, சிவபெருமான் மனம் மகிழ்ந்து பிரம்மனுக்கு சாப விமோசனம் அளித்தார். இதையடுத்து நான்முகனாக, பிரம்மா மீண்டும் படைக்கும் தொழிலை கவனிக்க தொடங்கினார்.
- இந்த நாளில் வழிபாடு மற்றும் விரதம் தவிர, மனதில் கொள்ள வேண்டிய வேறு சில விஷயங்களும் உள்ளன.
- பிரதோஷ விரதத்தின் போது, யாரிடமும் தவறாக எதுவும் சொல்லவோ, யாரிடமும் பொய் சொல்லவோ கூடாது.
பிரதோஷம் அன்று சிவபெருமானுக்கு பூஜை செய்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. விரதம் இருந்து பிரதோஷ காலத்தில் சிவனாரை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும். சகல செளபாக்கியங்களும் உண்டாகும். புகழும் கெளரவமுமாக வாழலாம்.
விரதம் இருந்து பிரதோஷ நாளில் செய்யப்படும் எந்த தானமும் மும்மடங்குப் பலன்களை வழங்கும் என்பது ஐதீகம். பிறப்பே இல்லாத முக்தியை அளித்து அருள் செய்யும்.
அந்த வகையில், இன்று ஜனவரி மாதத்தின் கடைசி பிரதோஷ விரதம். அதிலும் இன்று வெள்ளிக்கிழமையும் கூட. அதனால்தான் இந்த விரதம் சுக்கிரவார பிரதோஷ விரதம் என்று அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் வளர்பிறையில் வரும் இந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்தது.
அதன்படி, இன்றைய பூஜையின் முழு மனதுடன் உங்களின் வேண்டுதலை சிவனுக்கு சில பொருட்களை காணிக்கையாக செலுத்துவதன் மூலம் நிறைவேறும். அதாவது உங்களுக்கு ஏதேனும் பணி நிலுவையில் இருந்தால் இதனை செய்யலாம்.
இன்றைய பூஜைக்கான நல்ல நேரம் மற்றும் இந்த நாளில் சிவ பெருமானுக்கு என்ன பிரசாதம் செய்வது பொருத்தமானது என்று பார்ப்போம்...
இன்று சுக்கிரவார பிரதோஷ விரதத்தை வழிபடுவதற்கு உகந்த நேரம்:
இன்றைய பிரதோஷ காலம் மாலை 5:01 மணிக்கு தொடங்கி 6:45 மணி வரை. வழிபாட்டிற்கான நல்ல நேரம் மாலை 5:59 மணி முதல் இரவு 8:37 மணி வரை. தோராயமாக இரண்டரை மணி நேரம் கொண்ட இந்த நல்ல நேரத்தில் நீங்கள் மனதார சிவபெருமானையும் பார்வதி தேவியையும் வணங்கினால், உங்களின் வேண்டுதல் நிறைவேறும்.
சிவ பெருமானுக்கு உகந்தவை:
உங்கள் மனதில் நீண்ட நாட்களாக ஒரு ஆசை இருந்தாலோ அல்லது சில வேலைகள் பாதியில் நின்றாலோ இன்று இந்த பரிகாரத்தை முயற்சி செய்யலாம். சுக்கிர வார பிரதோஷ விரதத்தில், சிவபெருமான் சிவலிங்கத்தில் சில சிறப்புப் பொருட்களை படைத்தால் மகிழ்வார். அதாவது, சிவ பெருமானுக்கு பச்சைப் பால் மற்றும் குங்குமப்பூ படைத்தால், வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன், காதல் வாழ்க்கையில் உள்ள தடைகளும் குறையும். இது தவிர, நீங்கள் மற்றொரு எளிய பரிகாரத்தையும் முயற்சி செய்யலாம். வில்வத்தில் சிறிது தேன் தடவி சிவ பெருமானுக்கு சமர்ப்பித்தால், உங்கள் நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளும் நிறைவடையத் தொடங்கும்.
பிரதோஷத்தில் இந்த தவறுகளை செய்யாதீர்கள்:
இந்த நாளில் வழிபாடு மற்றும் விரதம் தவிர, மனதில் கொள்ள வேண்டிய வேறு சில விஷயங்களும் உள்ளன. இன்று, தவறுதலாக கூட இறைச்சி மற்றும் மது உள்ளிட்ட பொருட்களை உட்கொள்ளக்கூடாது. மேலும், இந்த நாளில் ஒருவர் தனது பேச்சின் மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். இன்று, உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதும், கோபத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் முக்கியம். மேலும், பிரதோஷ விரதத்தின் போது, யாரிடமும் தவறாக எதுவும் சொல்லவோ, யாரிடமும் பொய் சொல்லவோ கூடாது. மேலும், சிவபெருமானுககு உடைந்த எந்தப் பொருளையும் படைக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் குங்குமப்பூவை படைத்தால், அதன் இழைகள் உடைக்கப்படக்கூடாது.
- இத்தல இறைவன் 'உலகேஸ்வரர், ஒலகேஸ்வரர், உலக விடங்கீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.
- இத்தலத்தில் சஞ்சீவி மலையின் ஆற்றலும், பயனும் நிறைந்துள்ளதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
ராமாயணத்தோடு தொடர்புடைய தலமாகவும், அனுமனால் வழிபடப்பட்ட தலமாகவும், பல வரலாற்று சிறப்புகளைக் கொண்ட தலமாகவும் உள்ளது, உலக விடங்கீஸ்வரர் திருக்கோவில். ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து வெள்ளித் திருப்பூர் செல்லும் சாலையில் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஒலகடம் என்ற ஊர். இங்கு உலக விடங்கீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
சங்க இலக்கியத்தில் 'உலகடம்' என்று இடம்பெற்றுள்ள இந்த ஊர், கி.பி. 12-ம் நூற்றாண்டில் கொங்கு சோழர்களின் ஆட்சியில் 'உலகவிடங்கம்' என்று அழைக்கப்பட்டது. தற்போது இந்த ஊர் 'ஒலகடம்' எனப்படுகிறது. காவிரிக்கரையின் வட பகுதியில் அமைந்திருப்பதால் 'வடகரை உலக விடங்கம்' என்ற பெயரும் இதற்கு உண்டு.
இத்தல இறைவன் 'உலகேஸ்வரர், ஒலகேஸ்வரர், உலக விடங்கீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். அம்பாளின் திருநாமம் 'உலக நாயகி' என்பதாகும். 'விடங்கர்' என்றால் 'உளியால் செதுக்கப்படாதவர்' என்று பொருள். இங்கு உள்ள ஈசன் சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறார். உலக விடங்கர் உலக மக்க ளைக் காக்கும் பெருமைக்குரிய உலக ஈஸ்வரராக இங்கு திகழ்கிறார்.
லட்சுமணனின் உயிரைக் காப்பதற்காக இமயமலையில் இருந்து மூலிகைச் செடிகள் நிரம்பிய சஞ்சீவி மலையை எடுத்துக் கொண்டு இந்த வழியாக பறந்து சென்றார், அனுமன். இந்த ஆலய இறைவன் இருக்கும் இடத்திற்கு மேலே பறந்தபோது, அனுமனின் கை அசைவற்று நின்று போனது.
இதையடுத்து, கீழே சிவபெருமானின் திருத்தலம் இருப்பதை உணர்ந்து கொண்ட அனுமன், கீழே இறங்கி, மூன்று முறை இத்தல இறைவனின் இருப்பிடத்தை வலம் வந்து வழிபட்டு அதன் பிறகு புறப்பட்டுச் சென்றார் என்கிறது தல வரலாறு. இதனால் இத்தலத்தில் சஞ்சீவி மலையின் ஆற்றலும், பயனும் நிறைந்துள்ளதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.
- அழகிய கடற்கரைத் தலமான மாரியூரில் ஒரு சிவபக்தராய் விளங்கிய மீனவர் குடும்பத்தில் பார்வதிதேவி மகளாக அவதரித்தார்.
- ஒரு சமயம் இந்திரனுக்கும், வருணனுக்கும் யார் பெரியவர் என்னும் பிரச்சனை எழுந்தது.
சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் 64. அவற்றில், ஆழ்கடலில் யாருக்கும் அடங்காமல் பல அட்டூழியங்கள் புரிந்த பயங்கர சுறாமீனை அடக்கி, மீனவர் குல மகளாக அவதரித்த உமாதேவியை கரம்பிடித்து மண முடித்த திருத்தலமாய் மாரியூர் என்னும் கடற்கரை ஊர் உள்ளது. இங்கு பவளநிற வல்லி அம்மன் சமேத பூவேந்தியநாதர் கோவில் அமைந்துள்ளது. திருவிளையாடல் புராணத்தில் 57-வது நிகழ்வாக நடைபெற்ற வலைவீசிய படலத்தைப் பற்றி பார்ப்போம்.
தல வரலாறு
ஒரு நாள் மாலைப்பொழுது தனிமையிடத்தில் பரம்பொருளாகிய ஈசன், நால்வகையான வேத நூல்களின் உட்பொருளை உமாதேவிக்கு விளக்கி கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த விநாயகரும், முருகரும் அன்னையின் மடியில் அமர்ந்து விளையாட ஆரம்பித்தனர். இதை எதிர்பாராத உமாதேவி தன் கவனத்தை மாற்றி குழந்தைகளுடன் பேச ஆரம்பித்துவிட்டார்.
தர்மநெறி சாத்திரங்களைச் சொல்லும் வேத தத்துவங்களை புறந்தள்ளிவிட்டு, குழந்தைப் பாசத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த பார்வதியை கோபத்துடன் பார்த்தார் ஈசன். ''எந்தவித தர்மமோ, முறையான விரத நெறிகளோ எதுவும் அறியாத மீனவர் குலத்தில் ஒரு பெண்ணாகப் பிறப்பாயாக'' என ஈசன், உமாதேவிக்கு சாபமிட்டார். இதனைக் கேட்டதும் பார்வதி மிகவும் கவலை அடைந்தாள்.
இறைவன், "தேவி இதற்காக வருந்த வேண்டாம். நீ மீனவர் மகளாக வளர்ந்து பருவமங்கை ஆகும் வேளையில் நானே நேரில் வந்து உன் கரம் பிடிப்பேன்" என ஆறுதல் சொன்னார். தாய்க்கு இப்படியொரு சாபம் கொடுத்த தந்தையின் செயலைக் கண்டு ஆத்திரப்பட்டார் ஆனைமுகன். ''இந்த வேதங்களால் அல்லவா என் தாய்க்கு சாபம் கிடைத்தது. இவைகள் இனிமேலும் இங்கு இருக்கக்கூடாது'' என முடிவெடுத்தார். அடுத்த கணமே வேத சுவடிகளை எல்லாம் தூக்கி கடலில் வீசி எறிந்தார்.
அதே நேரத்தில் ஆறுமுகனும் தன் பங்குக்கு தனது தந்தையின் கையிலிருந்த சிவஞான போத சுவடிகளை பிடுங்கி கடலில் வீசினார். இதை சற்றும் எதிர்பாராத சிவபெருமான், திகைத்துப் போனார். இதனால் ஈசனின் கோபம், தாங்கள் தனித்திருக்கும் வேளையில் அனுமதியில்லாமல் குழந்தைகளை உள்ளே அனுமதித்த நந்திதேவன் மேல் திரும்பியது. "இத்தனை அசம்பாவிதங்களுக்கும் காரணமானவன் நீதான். எனவே, நீ பயங்கர சுறா மீனாகப் பிறந்து, பிறரது வசைகளுக்கு ஆளாவாய்" என சாபமிட்டார்.
அதன்படி அழகிய கடற்கரைத் தலமான மாரியூரில் ஒரு சிவபக்தராய் விளங்கிய மீனவர் குடும்பத்தில் பார்வதிதேவி மகளாக அவதரித்தார். வருடங்கள் பல உருண்டோடியது. மணமுடிக்கும் பருவமங்கையாக பார்வதி வளர்ந்திருந்தார். அதே சமயம், அன்றாடம் ஆழ்கடலில் மீனவர்களுக்கு தொடர்ந்து பல தொல்லைகளைக் கொடுத்து வந்தது ஒரு கொடிய சுறா.
ஒரு கட்டத்தில் இனியும் சுறாவின் அட்டூழியத்தை தாங்கிக்கொள்ள முடியாது என முடிவெடுத்த மீனவர் தலைவர், ஒரு அறிவிப்பையும் வெளியிட்டான். எவர் ஒருவர் ஆழ்கடலில் துன்புறுத்தும் சுறாவை அடக்கி பிடிக்கிறாரோ, அவருக்கு தன் மகளை மணமுடித்துத் தருவதாக வாக்களித்தார். இந்த தகவல் காட்டுத் தீ போல் எங்கும் பரவியது. அதே சமயம் இது தான் பார்வதிதேவியை ஆட்கொண்டு கரம்பிடிக்க வேண்டிய தருணம் என முடிவெடுத்தார் இறைவன்.
ஒரு மீனவர் வேடம் பூண்டு மாரியூருக்கு வந்த இறைவன், சுறாவை அடக்க வந்திருப்பதாக ஊர்க்காரர்களிடம் கூறினார். உடனே கடலுக்குள் அவரை அனுப்ப ஏற்பாடு செய்தனர். இதையடுத்து ஆழ்கடலில் ஆர்ப்பாட்டம் செய்துவந்த சுறாவை இறைவன் தனது வலையில் எளிதாக பிடித்தார். இதனால், கரையிலிருந்த மீனவர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தனர். ஏற்கனவே, மீனவ தலைவனின் வாக்குப்படி அவரது மகளான பார்வதியை கரம் பிடித்தார், இறைவன்.

மாரியூர் கடலில் நடத்தப்படும் வலைவீசும் படலம் நிகழ்ச்சி
இந்த சுவையான புராண நிகழ்வு நடந்ததை எடுத்துக்காட்டும் விதமாக ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமித் திருநாளில் கடலுக்குள் வலை வீசும் படலத்தை உண்மை சம்பவம் போல் நடத்திக் காட்டுகின்றனர். பதினொரு நாட்கள் இவ்விழா நடைபெறும். சுறாவை அடக்கி முடித்ததும் சுவாமி பூவேந்தியநாதர், அம்பாள் பவளநிற வல்லி திருமண நிகழ்வு கோவில் வளாகத்தில் அமைந்திருக்கும் அலங்கார பந்தலில் வெகுவிமரிசையாக நடைபெறும். மணவிழாவையொட்டி நடைபெறும் பிரமாண்ட அன்னதானத்தில் திரளாக பக்தர்கள் கலந்துகொள்வர்.
பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் இடைக்குள நாடு என்ற உள்நாட்டுப் பிரிவின் கீழ் இப்பகுதி அடங்கி இருந்தது. கி.பி.13-ம் நூற்றாண்டில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் சுவாமி, அம்பாளுக்கு தனித்தனியாக கோவில்கள் கட்டப்பட்டன. சுவாமி சன்னிதியின் வலப்பக்கம் அம்பாள் கோவில் உள்ளது. செவிவழிச் செய்தியின்படி, வருணபகவான் தன் சாபம் நீங்க, இத்தல பரம்பொருளுக்கு லிங்க பிரதிஷ்டை செய்து வைத்தாராம்.
ஒரு சமயம் இந்திரனுக்கும், வருணனுக்கும் யார் பெரியவர் என்னும் பிரச்சனை எழுந்தது. இதில், வருணனது கை, கால்கள் கட்டப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்டான். பல நாட்கள் கடலில் தத்தளித்த வருண பகவான், இறுதியில் மாரியூர் கடற்கரையில் வந்து தங்கினார். அங்கு, மனதில் லிங்கம் அமைத்து வழிபட்டு வந்தார். ஒரு கட்டத்தில் அவரது பிரார்த்தனைக்கு இரங்கிய ஈசன், அவருக்கு காட்சி தந்து சாபவிமோசனம் தந்தார். வருண பகவான் கரையேறிய பகுதியாக இத்தல தீர்த்த கட்டம் விளங்குவதால் 'வருண தீர்த்தம்' என அழைக்கப்படுகிறது. மார்கழி மாதத்தில் இதை நினைவுகூரும் விதமாக வருணபகவானுக்கு தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.
ஆடி, தை, புரட்டாசி அமாவாசைகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இங்கு முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு பக்தர்கள் நூற்றுக்கணக்கில் கூடுவர். சேதுபதி மன்னர்கள் ஆட்சியில் பக்தர்கள் வசதிக்காக கோவில் எதிரே பெரிய சத்திரம் ஒன்று கட்டி வைக்கப்பட்டது. தல விருட்சம் அபூர்வமான முன்னை மரம் ஆகும். சுவாமி சன்னிதி உள்சுற்றில் உள்ள தீர்த்தக் கிணற்றில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் போட்டால் அது செழுவனுார் சிவாலய திருக்குளத்தில் மிதப்பதாக நம்பப்படுகிறது.

கோவில் தோற்றம்
அமாவாசைதோறும் தல விருட்சத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது. திருமணத் தடை, கணவன்- மனைவி ஒற்றுமை, வேலைவாய்ப்பு, நீண்ட காலமாக இருக்கும் கோர்ட்டு வழக்குகள் ஆகிய பிரச்சனைகளுக்கு யாகம் வளர்த்து பரிகார பூஜை செய்யப்படுகிறது.
செவ்வாய், வெள்ளிக்கிழமை ராகு கால வேளைகளில் பவளம் மகளிர் குழுவினரால் அம்பாள் துதிப்பாடல்கள் பாடப்படுகிறது. தினமும் நான்கு கால பூஜை நடத்தப்பட்டு வருகிறது. பிரதோஷ வழிபாடு, தேய்பிறை அஷ்டமி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை முதல் சோம வாரத்தில் 108 சங்காபிஷேக வழிபாடு, ஆடிப்பூரம் அம்பாளுக்கு வளைகாப்பு, விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் சுவாமி ஐயப்பன் சன்னிதியில் விரதமிருக்கும் பக்தர்களின் பஜனை வழிபாடு நடைபெறும். கோவில், காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் இருந்து வாலிநோக்கம் செல்கிற நெடுஞ்சாலையில் 12 கி.மீ. தொலைவில் மாரியூர் கடற்கரைத் தலம் உள்ளது.
- பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
- தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள்.
தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
பாடல்:-
அன்புடை யானை அரனைக்கூடல்
ஆலவாய் மேவியது என்கொல்என்று
நன்பொனை நாதனை நள்ளாற்றானை
நயம்பெறப் போற்றி நலம் குலாவும்
பொன்புடை சூழ்தரு மாடக்காழிப்
பூசுரன் ஞானசம் பந்தன்சொன்ன
இன்புடைப் பாடல்கள் பத்தும்வல்லார்
இமையவர் ஏத்த இருப்பவர்தாமே.
- திருஞானசம்பந்தர்
விளக்கம்:- அனைத்து உயிர்களிடத்திலும் அன்புடையவனான சிவனை, கூடல் ஆலவாயில் எழுந்தருள என்ன காரணம் எனக் கேட்டு, பொன் போன்றவனாகவும், தலைவனாகவும் விளங்கும் திருநள்ளாற்று இறைவனை நயமாக போற்றி, செம்பொன் நிறைந்த மாட வீடுகளால் சூழப்பட்ட சீர்காழியில் தோன்றிய திருஞானசம்பந்தர் பாடிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடுபவர்கள், தேவர்களெல்லாம் போற்றுமாறு திகழ்வர்.
- உலக உயிர்களை காக்கும் பொருட்டு, அந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் விழுங்கினார்.
- விஷம் அருந்திய சிவன் சுருண்டு பார்வதிதேவியின் மடியிலே படுத்துவிட்டதால் இந்த இடத்திற்கு 'சுருட்டப்பள்ளி' என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
மும்மூர்த்திகளில் ஒருவராகவும், அனைத்திற்கும் ஆதியாகவும் கருதப்படுபவர், சிவபெருமான். பல கோவில்களில் சிவபெருமானை லிங்க வடிவிலும், நடராஜர் ரூபத்திலும் தரிசித்திருப்போம். ஆனால், சயன கோலத்தில் அதாவது படுத்த நிலையில் சிவபெருமான் காட்சி தரும் அரிதான கோவில் ஆந்திராவில் உள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரம் அருகே உள்ளது, சுருட்டப்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் பள்ளிக்கொண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குதான் சிவபெருமான் சயன கோலத்தில் காட்சி தருகிறார். அதுவும் பார்வதி தேவியின் மடியில் தலை வைத்திருப்பது போல காட்சி தருகிறார்.
தல வரலாறு
புராணத்தின்படி, இந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க, பெருமாளின் உதவியுடன் பாற்கடலை கடைய முற்பட்டான். ஒருபுறம் தேவர்கள், மறுபுறம் அசுரர்கள் என வாசுகி பாம்பை கயிறாக திரித்தும், மந்திர மலையை மத்தாக மாற்றியும் பாற்கடலை கடைந்தனர். அப்போது, வலி தாங்க முடியாத வாசுகி பாம்பு மிகக்கொடிய ஆலகால விஷத்தை கக்கியது. அதனால், தேவர்களும், அசுரர்களும் அஞ்சினர். இந்த விஷத்தால் அனைத்து உலக உயிர்களும் அழியும் அபாயம் ஏற்பட்டது. எனவே அனைவரும் சிவபெருமானிடம் காத்தருளும்படி வேண்டி நின்றனர்.
உலக உயிர்களை காக்கும் பொருட்டு, அந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் விழுங்கினார். மிகக்கொடிய விஷம் என்பதால் சிவபெருமானின் உடலுக்குள் இறங்காமல் இருப்பதற்காக பார்வதி தேவி சிவபெருமானின் கழுத்தை அழுத்தி பிடித்தார். இதனால், விஷம் உடலுக்குள் செல்லாமல் கழுத்திலே நின்று விட்டது. இதன் காரணமாகவே ஈசனுக்கு நீலகண்டன்' என்ற பெயர் உண்டானது.
அதன்பிறகு, சிவபெருமானும், பார்வதி தேவியும் கயிலாயத்தை நோக்கி புறப்பட்டனர். அப்போது, விஷம் அருந்தியதால் சிவபெருமானுக்கு களைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஈசனும், பார்வதி தேவியும் ஓரிடத்தில் ஓய்வு எடுத்தனர். அப்போது, சிவபெருமான் பார்வதி தேவியின் மடியில் தலைவைத்து படுத்து (சயன கோலத்தில்) ஓய்வு எடுத்தார். அவர்கள் ஓய்வு எடுத்த இடமே சுருட்டப்பள்ளி எனும் இந்த கிராமம் என்று ஆலய வரலாறு சொல்கிறது. அதன் காரணமாகவே, சிவபெருமான் இந்த கோவிலில் சயன கோலத்தில் காட்சி தருகிறார். விஷம் அருந்திய சிவன் சுருண்டு பார்வதிதேவியின் மடியிலே படுத்துவிட்டதால் இந்த இடத்திற்கு 'சுருட்டப்பள்ளி' என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
இந்த கோவிலில் பள்ளிகொண்டீஸ்வரர் சயன கோலத்தில் தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார். பார்வதி தேவி, பக்தர்களால் 'சர்வமங்களாம்பிகை' என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இந்த கோவிலின் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த கோவிலில் பெரும்பாலான தெய்வங்கள் தம்பதிகளாக காட்சி தருகின்றனர். தட்சிணாமூர்த்தி தன் மனைவி தாராவுடன் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் இரண்டு நந்திகேஷ்வரரை தரிசிக்கலாம்.
பிரதோஷ வழிபாடு
இக்கோவிலில் பிரதோஷக்கால வழிபாடுகள் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தில்தான் முதல்முதலில் பிரதோஷம் நடத்தப்பட்டதாகவும், அதன் பிறகே மற்ற சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் திருவாதிரை, மகாசிவராத்திரி, நவராத்திரி போன்ற நாட்களில் இக்கோவிலில் சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது.
சனிப்பிரதோஷத்தில் கலந்துகொண்டு இறைவனை தரிசித்தால் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும், தம்பதியர் ஒற்றுமை பலப்படும், திருமணத்தடை நீங்கும் என்பது நம்பிக்கை.
இத்தல சிவபெருமானிடம் வேண்டியது நிறைவேறியதும், பிரதோஷம் அன்று பக்தர்கள் சிவபெருமானுக்கு வில்வ மாலை சூட்டி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இங்கு வந்து வழிபட்டால் தீராத குறைகள் நீங்கி, நன்மைகள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.
அமைவிடம்
சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 59 கி.மீ. தொலைவில் சுருட்டப்பள்ளி எனும் இடத்தில் கோவில் உள்ளது.
- சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை தேவாரம்' என்று அழைக்கிறோம்.
- ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியிருக்கிறார்கள்.
சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள். தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
பாடல்:-
கோவண ஆடையும் நீறுப்பூச்சும்
கொடுமழு ஏந்தலும் செஞ்சடையும்
நாவணப் பாட்டுநள் ளாறுடைய
நம்பெரு மான்இது என்கொல்சொல்லாய்
பூவண மேனி இளையமாதர்
பொன்னும் மணியும் கொழித்தெடுத்து
ஆவண வீதியில் ஆடும்கூடுல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
- திருஞானசம்பந்தர்
விளக்கம்:-
கோவணத்தை ஆடையாகக் கொண்டும், திருநீற்றை உடலில் பூசியும், வளைந்த மழு ஆயுதத்தை ஏந்தியும், சிவந்த சடைமுடியும், நாவில் பல்வேறு சந்தங்களில் பாடும் வேதப் பாட்டும் உடையவனாக நள்ளாற்றில் வீற்றிருக்கும் பெருமானே! பூப்போன்ற மென்மையான மேனியை உடைய இளம் மகளிர், பொன்னும், மணியும் திரளாகச் சேர்த்து கடை வீதியில் உலவும் கூடலின்கண் விரும்புவதற்கு என்ன காரணமோ? சொல்வாயாக!
- பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
- ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியிருக்கிறார்கள்.
சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள்.
தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.
இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
பாடல்:-
பாகமும் தேவியை வைத்துக்கொண்டு பைவிரி துத்திப் பரியபேழ்வாய்
நாகமும் பூண்டநள் ளாறுடைய
நம்பெரு மான்இது என்கொல் சொல்லாய்
போகமும் நின்னை மனத்துவைத்துப்
புண்ணியர் நண்ணும் புணர்வுபூண்ட
ஆகம்உ டையவர் சேரும்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
- திருஞானசம்பந்தர்
விளக்கம்:-
ஒரு பாகத்தில் உமாதேவியை வைத்துக் கொண்டு, நஞ்சினையும், அகன்ற படத்தையும், பிளந்த வாயையும் உடைய நாகத்தை அணிகலனாய் பூண்டு, நள்ளாற்றில் வீற்றிருக்கும் பெருமானே! உன்னை மனதில் நினைத்து, இன்பம் அடையும் புண்ணியர்களான அடியவர்கள் விளங்கும் கூடல் ஆலவாயின்கண் விரும்பி தங்குவதற்கு என்ன காரணமோ? சொல்வாயாக!
- சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
- ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியிருக்கிறார்கள்.
சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள்.
தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது 'தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.
இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.
பாடல்:-
தண்ணறு மத்தமும் கூவிளமும்
வெண்தலை மாலையும் தாங்கியார்க்கும்
நண்ணல்அ ரியநள் ளாறுடைய
நம்பெரு மான்இது என்கொல்சொல்லாய்
புண்ணிய வாணரும் மாதவரும்
புகுந்துடன் ஏத்தப் புனைஇழையார்
அண்ணலின் பாடல் எடுக்கும்கூடல்
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
-திருஞானசம்பந்தர்
விளக்கம்:-
குளிர்ந்த மணம் வீசும் ஊமத்தம் பூவும், வில்வ இதழும், வெண்மையான கபாலத்தை மாலையாகவும் அணிந்து, யாவருக்கும் வழிபடுவதற்கு அரியவனாய் திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் பெருமானே! புண்ணியம் செய்தவர்களும், பெருந்தவம் செய்தவர்களும் போற்ற, சிறப்பாக விளங்கும் பெருமானின் பாடலைப் பாடும் ஆலவாயின்கண் விரும்பி தங்குவதற்கு என்ன காரணமோ? சொல்வாயாக!
- பக்தர்கள் ஆன்மீக ரீதியான அறிவைப் பெறுவார்கள்.
- இனிப்புகளை காணிக்கையாக்கி, பாவங்கள் மற்றும் கர்மாவில் இருந்து விடுபட வேண்டுங்கள்.
தமிழ் மாதத்தின் ஐந்தாவது மாதமான ஆவணி மாதம் இன்று பிறந்துள்ளது. இந்த மாதத்தின் ஒவ்வொரு திங்களும், மிகவும் சுபத்துவம் வாய்ந்தது. சிவன் கோவில்களில், ஆவணி மாதத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
சிவலிங்கத்திற்கு இரவும், பகலும் தொடர்ந்து நீர் மற்றும் பால் அபிஷேகம் செய்யப்படும். அது மட்டுமின்றி ஆவணி முழுவதும், ஒவ்வொரு திங்களன்றும் சிவபக்தர்கள் வில்வ இலைகள், புனித நீர், பால் மற்றும் பூக்களால் அர்ச்சிக்கின்றனர். பக்தர்களும் காலை முதல் இரவு வரை விரதமிருந்து, இரவு முழுவதும் எரியும் வகையில் ஒற்றை அகல் விளக்கை ஏற்றுவார்.
ஆவணி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சமீபத்தில் திருமணமான பெண்கள், தீய சக்தி மற்றும் துரதிர்ஷ்டம் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க, ஆவணி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மங்கள கெளரி விரதம் கடைபிடிக்கிறார்கள். ஆவணி மாத வெள்ளிக்கிழமைகள் மற்றும் சனிக்கிழமைகளில், திருமணமான பெண்கள் பெருமாளுக்கு விரதம் இருக்கிறார்கள். அதே போல, ஆண்களும், சனிக்கிழமைகளில் பெருமாளுக்கான சடங்குகளை செய்கிறார்கள்.
ஆவணி மாதத்தில் சிவபெருமானை வழிபடுவதற்கான பூஜை முறை :
சிவபெருமானைப் பூஜிக்க, கிழக்கு நோக்கி உட்கார வேண்டும். அதைத் தொடர்ந்து, வலது கையில் ஒரு சில துளிகள் புனித நீரை எடுத்துக் கொண்டு, உங்களுக்கு என்ன தேவையோ அதைக் கேட்க வேண்டும். அதைத் தொடர்ந்து, நீங்கள் தியானம் செய்யும் போது, ஈசனையும் நினைத்துக் கொள்ளவும். கையில் உள்ள நீரை, சிவலிங்கத்தின் மீது ஊற்றவும். 'ஓம் நம சிவாய' என்று கூறிய படி, பஞ்சாமிர்தத்தை சிவலிங்கத்தின் மீது அபிஷேகம் செய்யவும். மீண்டும் தண்ணீர் ஊற்றி, அட்சதைத் தூவவும். பிறகு, ஆர்த்தி எடுக்க வில்வ இல்லை மற்றும் ஊதுபத்தியை ஏற்றி வைக்கவும். இனிப்புகளை காணிக்கையாக்கி, பாவங்கள் மற்றும் கர்மாவில் இருந்து விடுபட வேண்டுங்கள்.

ஆவணி மாதத்தில் திங்கட்கிழமை அன்று சிவபெருமானை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள் :
* பக்தர்கள் ஆன்மீக ரீதியான அறிவைப் பெறுவார்கள்
* உடல் மற்றும் மன ரீதியான ஆரோக்கியம் மேம்படும்
* பிரபஞ்சத்தை உருவாக்கியதும், அழிப்பதும் ஈசனே! எனவே, இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவது, நல்ல ஞாபக சக்தியையும், மன உறுதியையும் கொடுக்கும்.
* சிவபெருமான் நல்ல வாழ்க்கைத்துணையை வழங்குவார்
* கூடுதலாக, விரதமிருப்பது, நம் பாதையில் இருக்கும் நச்சுகள் மற்றும் இடையூறுகளை நீக்குகிறது
* விளக்கு ஏற்றி வழிபட்டால், நம்முடைய அறிவு மேம்படும்
* கங்கை நீரால் அபிஷேகம் செய்வது, முக்திக்கு வழிவகுக்கும்
* சிவபெருமானுக்கு விருப்பமான பிரசாதங்களை வழங்குவது, நமக்கு எல்லா விதத்திலும் வெற்றியைப் பெற உதவும். நம்முடைய ஆசைகளும் நிறைவேறும்.
ஜோதிட ரீதியாக ஆவணி மாதத்தின் சிறப்புகள் :
வேத ஜோதிடத்தின் கூற்று படி, சூரியன் சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆகும் நாள், ஆவணி மாதம் தொடக்கம் என்று கூறப்படுகிறது. இந்த கிரகத்தின் பெயர்ச்சி, அனைத்து ராசிகளையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கிறது. அதனால் தான், பஞ்சாங்கம் இதனை மிகவும் விசேஷமான மாதமாகக் கருதுகிறது.






