என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்திரேலிய வீரர்"

    • இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பிராட்மேன் இதை அணிந்திருந்தார்.
    • கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தொப்பியை மூன்று தலைமுறைகளாகப் பத்திரமாகப் பாதுகாத்து வந்தனர்.

    மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் பயன்படுத்திய புகழ்பெற்ற தொப்பி, ஏலத்தில் சாதனை விலைக்கு விற்பனையாகியுள்ளது.

    ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் பகுதியில் நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்ற ஏலத்தில், இந்தத் தொப்பி 4,60,000 ஆஸ்திரேலிய டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 4.2 கோடி) விற்பனையானது.

    இந்தத் Baggy Green தொப்பிக்கு ஒரு சிறப்பு வரலாறு உண்டு. 1947-48இல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பிராட்மேன் இதை அணிந்திருந்தார்.

    பின்னர் இதை இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீரங்க வாசுதேவ் சோஹோனிக்கு பிராட்மேன் பரிசாக வழங்கினார்.

    சோஹோனி குடும்பத்தினர் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தொப்பியை மூன்று தலைமுறைகளாகப் பத்திரமாகப் பாதுகாத்து வந்தனர்.

    தொப்பியின் உட்புறத்தில் பிராட்மேன் மற்றும் சோஹோனியின் பெயர்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

    70 ஆண்டுகளைக் கடந்து தற்போது இந்த தொப்பி சாதனை விலைக்கு விற்பனை ஆகியுள்ளது.

    • மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார்.
    • ஆஸ்திரேலிய அணிக்காக 67 டெஸ்ட் மற்றும் 208 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் டேமியன் மார்ட்டின் தூண்டப்பட்ட கோமா நிலையிலிருந்து மீண்டு எழுந்தார். 

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் டேமியன் மார்ட்டின் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவர்கள் அவரைத் தூண்டப்பட்ட கோமா நிலைக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் இன்று கோமாவில் இருந்து டேமியன் எழுந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    'எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த இந்த அபரிமிதமான ஆதரவிற்காக அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். இந்த சவாலான காலகட்டம் முழுவதும் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட கோல்ட் கோஸ்ட் பல்கலைக்கழக மருத்துவமனை மருத்துவக் குழுவினருக்கு எங்களின் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். இது ஒரு கடினமான நேரமாக இருந்துள்ளது, எனவே குடும்பத்தினரின் தனிப்பட்ட உரிமையை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். என டேமியன் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

    மேலும் "அவர் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து வேறுபிரிவிற்கு மாற்றப்படுகிறார். இது அவர் எவ்வளவு சிறப்பாக மீண்டு வருகிறார் என்பதையும், நிலைமை விரைவாக மாறியுள்ளது என்பதையும் காட்டுகிறது" என ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். 


    • மருத்துவர்கள் அவரைத் தூண்டப்பட்ட கோமா நிலைக்குக் கொண்டு சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) வைத்துள்ளனர்.
    • உடைந்த விரலுடன் பேட்டிங் செய்த போதிலும், அவர் ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் எடுத்தார்

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் டேமியன் மார்ட்டின் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது கோமா நிலையில் உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

    54 வயதான டேமியன் மார்ட்டின், கடந்த டிசம்பர் 26 அன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து குயின்ஸ்லாந்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாதிப்பு தீவிரமாக இருந்ததால், மருத்துவர்கள் அவரைத் தூண்டப்பட்ட கோமா நிலைக்குக் கொண்டு சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) வைத்துள்ளனர். மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள சவ்வுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் மெனிஞ்சைடிஸ் (Meningitis) எனப்படும் மூளைக்காய்ச்சலால் டேமியன் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டேமியன் உடல்நிலை மோசமாக இருந்தாலும், சிறந்த முறையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக அவரது நெருங்கிய நண்பரும், முன்னாள் வீரருமான ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் டேரன் லீமன், வி.வி.எஸ். லக்ஷ்மன் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்களும், தற்போதையை வீரர்களும் டேமியன் குணமடைய பிரார்தித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

    1992 மற்றும் 2006 க்கு இடைப்பட்ட காலத்தில் டேமியன் மார்ட்டின் ஆஸ்திரேலிய அணிக்காக 67 டெஸ்ட் மற்றும் 208 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தியபோது, உடைந்த விரலுடன் பேட்டிங் செய்த போதிலும், அவர் ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் எடுத்தார்,

    • சக பவுலர்கள் வீசிய பவுன்சர் பந்துகளை ஹெல்மெட் அணிந்து கொண்டு பேட்டிங் செய்து பயிற்சி எடுத்துள்ளார்.
    • ஒரு பந்து அவருடைய கழுத்துப் பகுதியில் பலமாக பட்டுள்ளது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த 17 வயது இளம் வீரர் பென் ஆஸ்டின் பேட்டிங் பயிற்சியின்போது கழுத்தில் பந்துதாக்கி மரணம் அடைந்துள்ளார்.

    மெல்போர்னில் கிளப் அணிக்காக விளையாடும் ஆஸ்டின் கடந்த செவ்வாய்க்கிழமை பெர்ன்ட்ரீ கல்லியில் வலை பயிற்சி எடுத்துள்ளார். அப்போது சக பவுலர்கள் வீசிய பவுன்சர் பந்துகளை ஹெல்மெட் அணிந்து கொண்டு பேட்டிங் செய்து பயிற்சி எடுத்துள்ளார். ஆனால் கழுத்து பகுதியை பாதுகாக்கும் அம்சம் அதில் இல்லை.

    இந்நிலையில் துரதிர்ஷ்டவசமாக ஒரு பந்து அவருடைய கழுத்துப் பகுதியில் பலமாக பட்டுள்ளது. அதனால் சுருண்டு விழுந்த அவரை உடனடியாக அருகில் இருக்கும் மோனஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். அங்கே அவருக்கு 2 நாட்கள் தீவிர சிகிச்சை கொடுத்தப்பட்டது. 

    ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார். இதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. இந்த செய்தி வெளியாகி கிரிக்கெட் உலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

      ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் வில் பொக்கோஸ்கி, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இளம் வயதிலேயே தொடர்ந்து சதம் சதமாக அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். 36 உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 2350 ரன்கள் அடித்திருந்தார். இதில் 7 சதம் அடங்கும். அதுமட்டுமல்லாமல் இவருடைய சராசரி 45 என்ற அளவில் இருந்தது.

      தன்னுடைய திறமை காரணமாக 22-வது வயதில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2020-21-ம் ஆண்டு அறிமுகமானார். சிட்னி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 62, இரண்டாவது இன்னிங்ஸில் 10 ரன்கள் அடித்தார்.

      ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக வருவார் என்று கணிக்கப்பட்ட நிலையில் பேட்டிங் செய்யும்போது தொடர்ந்து பந்து தலையை தாக்கிக் கொண்டு இருந்தது. இதனால் அவருக்கு பலமுறை காயம் ஏற்பட்டு போட்டியிலிருந்து பாதியில் விலகி இருக்கிறார்.

      ஒரு முறை இரண்டு முறை அல்ல காயம் அடைந்து மீண்டும் குணம் அடைந்து களத்திற்கு வரும்போது மீண்டும் தலையில் பந்து தாக்கி அவர் ஓய்வு பெற்று விடுவார். இப்படியே தொடர்கதையாக இருந்தது. இவருக்கு தொடர்ந்து எப்படி ஒரே இடத்தில் பந்து படுகிறது என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.

      இதில் பந்து தலையை தாக்கி விடுமோ என்ற பயத்தில் அவர் விளையாடுவதால் தான் பேட்டிங் யுத்தியை அவர் மறந்து விடுவதாக மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். கடைசியாக ஒரு முறை கிரிக்கெட்டில் சாதித்து விடலாம் என வில் பொக்கோஸ்கி வந்தபோது கடந்தாண்டு மார்ச் மாதம் மீண்டும் தலையில் பந்து அடிபட்டு அவர் காயமடைந்தார்.

      இந்த நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் தொடர்ந்து பந்து தலையைத் தாக்கியதால் அது அவருக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாகவும், இதனால் வில் பொக்கோஸ்கி இனி விளையாடவே முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

      இந்நிலையில், தன்னுடைய 27 ஆவது வயதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வில் பொக்கோஸ்கி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

      • ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக வருவார் என்று கணிக்கப்பட்டவர்.
      • வில் பொக்கோஸ்கி 22-வது வயதில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார்.

      மெல்போர்ன்:

      ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இளம் வயதில் அணியில் இடம் கிடைப்பது மிகப்பெரிய விஷயாமாக பார்க்கபடும் நிலையில் 20 வயதில் தேசிய அணியில் விளையாட வில் பொக்கோஸ்கிக்கு வாய்ப்பு கிடைத்தது.

      உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இளம் வயதிலேயே தொடர்ந்து சதம் சதமாக அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். 36 உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 2350 ரன்கள் அடித்திருந்தார். இதில் 7 சதம் அடங்கும். அதுமட்டுமல்லாமல் இவருடைய சராசரி 45 என்ற அளவில் இருந்தது.

      தன்னுடைய திறமை காரணமாக 22-வது வயதில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2020-21-ம் ஆண்டு அறிமுகமானார். சிட்னி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 62, இரண்டாவது இன்னிங்ஸில் 10 ரன்கள் அடித்தார்.

      ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் மிகப்பெரிய வீரராக வருவார் என்று கணிக்கப்பட்ட நிலையில் பேட்டிங் செய்யும்போது தொடர்ந்து பந்து தலையை தாக்கிக் கொண்டு இருந்தது. இதனால் அவருக்கு பலமுறை காயம் ஏற்பட்டு போட்டியிலிருந்து பாதியில் விலகி இருக்கிறார். 

      ஒரு முறை இரண்டு முறை அல்ல காயம் அடைந்து மீண்டும் குணம் அடைந்து களத்திற்கு வரும்போது மீண்டும் தலையில் பந்து தாக்கி அவர் ஓய்வு பெற்று விடுவார். இப்படியே தொடர்கதையாக இருந்தது. இவருக்கு தொடர்ந்து எப்படி ஒரே இடத்தில் பந்து படுகிறது என்பது குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.

      இதில் பந்து தலையை தாக்கி விடுமோ என்ற பயத்தில் அவர் விளையாடுவதால் தான் பேட்டிங் யுத்தியை அவர் மறந்து விடுவதாக மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். கடைசியாக ஒரு முறை கிரிக்கெட்டில் சாதித்து விடலாம் என வில் பொக்கோஸ்கி வந்தபோது கடந்த மார்ச் மாதம் மீண்டும் தலையில் பந்து அடிபட்டு அவர் காயமடைந்தார்.

      இந்த நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் தொடர்ந்து பந்து தலையைத் தாக்கியதால் அது அவருக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாகவும், இதனால் வில் பொக்கோஸ்கி இனி விளையாடவே முடியாது என்றும் மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர். இதனையடுத்து வில் பொக்கோஸ்கி கிரிக்கெட் விளையாடும் தகுதியை இழந்து விட்டதாகவும் அவர் ஓய்வு பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

      இதனால் வில் பொக்கோஸ்கி தற்போது வெளிநாடுகளில் சுற்றுலா சென்று இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் விக்டோரியா நிர்வாகி மோரிஸ், சில மருத்துவ குழு நிபுணர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதன் காரணமாக அவர் கிரிக்கெட் பக்கமே திரும்பவில்லை. அவர் பயிற்சி செய்ய கடந்த மூன்று மாதங்களாக வரவில்லை. தற்போது அவர் வெளிநாட்டில் சுற்றுலாவில் இருக்கின்றார். மருத்துவர்களின் அறிக்கை எங்களுக்கு எந்த ஒரு ஆச்சரியத்தையும் கொடுக்கவில்லை என்று மோரிஸ் கூறியிருக்கிறார்.

      • ஐபிஎல் மெகா ஏலம் இம்மாத 24, 25 தேதிகளில் நடைபெறுகிறது.
      • ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் அணிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

      இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 18-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது இம்மாத 24, 25 தேதிகளில் நடைபெறம் என பிசிசிஐ நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

      இந்த ஏலத்திற்கு முன்னதாக இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் சேர்ந்து 46 வீரர்களை தக்க வைத்துள்ளன. மற்ற வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகின்றனர்

      இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் அணிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

      இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

      ஆர்சிபி அணி நிர்வாகம் எனக்கு போன் செய்து, தக்க வைப்பது குறித்து பேசினார்கள். நாங்கள் அரை மணி நேரம் பேசினோம். ஒவ்வொரு அணியும் இவ்வாறு செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன். இது அணிக்கும் வீரர்களுக்கும் இடையே உள்ள உறவை மேம்படுத்தும். நான் மீண்டும் ஆர்சிபிக்கு வந்தால் எனக்கு சந்தோஷம்தான்.

      இவ்வாறு அவர் கூறினார்.

      • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கை ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக இருந்தார்.
      • சாம்பியன் டிராபியில் இருந்து ஆஸ்திரேலிய அணி அரையிறுதியில் வெளியேறியது.

      சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

      சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கை ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக இருந்தார். சாம்பியன் டிராபியில் இருந்து ஆஸ்திரேலிய அணி அரையிறுதியில் வெளியேறியது.

      இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

      ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஸ்மித் தொடர்ந்து விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

      35 வயதான ஸ்டீவ் சுமித் 170 போட்டிகளில் விளையாடி 5,800 ரன் எடுத்துள்ளார். சராசரி 43.28 ஆகும். 12 சதமும், 35 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சம் 164 ரன் குவித்துள்ளார். தனது கடைசி ஒருநாள் போட்டியில் அவர் 73 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

      ×