என் மலர்tooltip icon

    வழிபாடு

    • கோசல நாட்டின் தலைநகரமாக அயோத்தி இருந்தது.
    • கோசல நாட்டின் மன்னராக இருந்த தசரதனின் மகன் தான் ராமர்.

    உலகில் உள்ள மதங்களில் மிகவும் பழமையானது இந்து மதம். அயோத்தி, வாரணாசி, மதுரா, ஹரித்வார், காஞ்சீபுரம், உஜ்ஜைனி, துவாரகா உள்ளிட்டவை முக்கிய ஆன்மிக நகரங்கள் என இந்துக்கள் கருதுகிறார்கள். அதில் முதலில் இருப்பது அயோத்தி நகரம். ஏனென்றால் கடவுள் விஷ்ணு, ராமராக பூமியில் வந்து பிறந்த நகரம் தான் அயோத்தி என்று இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்திலும் பல்வேறு புராணங்களிலும் கூறப்பட்டுள்ளன.

    பண்டைய காலத்தில் அயோத்தி நகரம், சகேதா என்ற சமஸ்கிருத வார்த்தையில் அழைக்கப்பட்டு வந்தது. இதன் பொருள் பூமியில் உள்ள வைகுண்டம் என்பதாகும். இந்து மதம் மட்டுமின்றி புத்த மற்றும் சமண மதத்தினரும் அயோத்தி நகரத்தை தங்களது புனித நகரமாக கருதுகின்றனர். ஏனென்றால் புத்தரும், மகாவீரரும் இந்த நகரங்களில் பல ஆண்டு காலம் வசித்து வந்ததாக அவர்கள் நம்புகின்றனர். குறிப்பாக சமண மதத்தின் 5 போதகர்கள் அயோத்தியில் தான் பிறந்தனர் என்ற வரலாறும் உண்டு.

    பண்டைய காலத்தில் கோசல நாட்டின் தலைநகரமாக அயோத்தி இருந்தது. இந்த கோசல நாட்டின் முதல் மன்னர் இக்ஷ்வாகு. இவர் தான் சூரிய வம்சத்தை நிறுவியதாக புராணங்கள் சொல்கின்றன. கோசல தேசம் என்பது தற்போதைய உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், நேபாளம், பூடான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது ஆகும்.

    இந்த கோசல நாட்டின் மன்னராக இருந்த தசரதனின் மகன் தான் ராமர். ராமர் ஒரு மன்னர் மட்டுமல்லாமல், விஷ்ணு பகவானின் ஒரு அவதாரமும் ஆவார். இந்தியாவில் ராமரை ஏராளமானோர் வழிபடுகின்றனர். அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படும் ராம ஜென்ம பூமியில் கோவில் கட்ட வேண்டும் என நீண்டகாலமாக பக்தர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

    தற்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, அங்கு மிக பிரமாண்டமாக ரூ.2 ஆயிரம் கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் கட்டுமான பணிகளை ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த ஷேக்த்ரா என்ற அறக்கட்டளை செய்து வருகிறது. இங்கு கோவில் கட்டுவதற்கு கடந்த 2020-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

    இந்த கோவில் தரைத்தளத்துடன் சேர்த்து 3 தளங்களாக கட்டப்பட்டு வருகிறது. தற்போது வரை தரைதளமும், முதல் தள பணிகளும் முடிந்து உள்ளன. 2-ம் தளம், கோவிலை சுற்றி கட்டப்பட உள்ள இதர சன்னதிகள் மற்றும் 161 அடி உயர கோபுரம் ஆகியவை இன்னும் கட்டப்பட உள்ளது. தற்போது தரைத்தளத்தில் உள்ள கோவில் கருவறையில், ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் வைபவம் வருகிற 22-ந் தேதி நடக்கிறது.

    • ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
    • மதுரை செல்லத்தம்மன் யானை வாகனத்தில் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, மார்கழி-22 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: ஏகாதசி இரவு 10.10 மணி வரை பிறகு துவாதசி

    நட்சத்திரம்: விசாகம் இரவு 7.58 மணி வரை பிறகு அனுஷம்

    யோகம்: மரணயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சர்வ ஏகாதசி. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு, திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு. மதுரை செல்லத்தம்மன் யானை வாகனத்தில் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சனம், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உவகை

    ரிஷபம்-உழைப்பு

    மிதுனம்-ஊக்கம்

    கடகம்-சலனம்

    சிம்மம்-சிரத்தை

    கன்னி-முயற்சி

    துலாம்- நற்செயல்

    விருச்சிகம்-போட்டி

    தனுசு- கவனம்

    மகரம்-செலவு

    கும்பம்-வரவு

    மீனம்-வெற்றி

    • சிவபெருமான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெயர்களில் உள்ளார்.
    • அண்ணாமலை என்றால் நெருங்க முடியாத மலை என்று அர்த்தம்.

    தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான சிவாலயங்கள் உள்ளன. மூவேந்தர்கள் காலத்தில் கட்டப்பட்ட சிவாலயங்களில் பல நூறு ஆலயங்கள் அழிந்துவிட்டன. சில நூறு ஆலயங்கள் மட்டுமே எஞ்சி உள்ளன.

    இந்த ஆலயங்களில் உள்ள சிற்பங்கள், ஆலய அமைப்புகள், வழிபாடு முறைகள் அனைத்தும் நம்மை இன்றும் பிரமிக்க வைக்கின்றன. ஆனால் பழமையான அந்த ஆலயங்களின் புனித தன்மைகளை பக்தர்களில் 90 சதவீதம் பேர் அறிந்து கொள்ளாமலேயே இருக்கிறார்கள்.

    குறிப்பாக ஈசனின் பெயரை உச்சரித்து விட்டு அடுத்த நிமிடமே அதை மறந்தும் விடுகிறார்கள். ஒவ்வொரு சிவாலயத்திலும் சிவபெருமானுக்கு ஒவ்வொரு பெயர் இருக்கிறது. ஒரு பெயர் போல இன்னொரு பெயர் இருப்பதில்லை.

    அந்த வகையில் தமிழகத்தில் சிவபெருமான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெயர்களில் உள்ளார். விதி விலக்காக சில பெயர்கள் மட்டும் பல கோவில்களில் இடம் பெற்றுள்ளது. உதாரணமாக அகத்தீஸ்வரர் கோவில்கள் தமிழ்நாடு முழுக்க உள்ளன. தொண்டை மண்டலத்தில் மட்டும் 108 அகத்தீஸ்வரர் ஆலயங்கள் இருக்கின்றன.

    குறுமுனியான அகத்தியர் எந்தெந்த இடங்களில் எல்லாம் லிங்கத்தை நிறுவி ஈசனை வழிபட்டாரோ அந்த இடங்களில் எல்லாம் சிவாலயங்கள் பிரமாண்டமாக உருவாகின.

    அகத்தியர் வழிபட்ட லிங்கம் என்பதால் அந்த தலத்து ஈசனுக்கு அகத்தீஸ்வரர் என்ற பெயர் உருவானது. இதே போன்றுதான் பஞ்ச பாண்டவர்கள் வழிபாடு செய்த லிங்கங்கள் மூலவராக உள்ள சிவாலயங்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ளன. அந்த ஆலய ஈசனின் பெயர்கள் பஞ்சபாண்டவர்களின் பெயர் தாங்கியுள்ளன.

    இவை தவிர சிவபெருமான் கணக்கிட முடியாத அளவுக்கு எத்தனையோ திருவிளையாடல்களை நடத்தி உள்ளார். முனிவர்கள், மகான்கள், பக்தர்கள் என அனைத்து தரப்பினரிடமும் சிவபெருமான் தனது லீலையை காட்டி உள்ளார். அவ்வளவு ஏன்? தனது உடம்பில் சரிபாதி இடம் கொடுத்துள்ள அம்பிகையுடன் கூட அவர் திருவிளையாடல் செய்ததுண்டு. அப்படி அவர் நடத்திய திருவிளையாடல்களை பிரதிபலிக்கும் ஆலயங்கள் தமிழகம் முழுக்க உள்ளன.

    சில சமயங்களில் விநாயகர், முருகன், பெருமாள் ஆகியோர் சிவனை வழிபட்டு சாப நிவர்த்தி பெற்றுள்ளனர். அவர்கள் வழிபட்ட இடங்களில் அதற்கான சிவாலயங்கள் உருவாகி உள்ளன. சில ஊர்களில் அந்த ஊரின் பெயருக்கு ஏற்ப ஈசன் பெயர் அமைவதுண்டு. ஆனால் அதிலும் ஒரு வரலாறு அடங்கி இருக்கும்.

    மொத்தத்தில் பழமையான சிவாலயங்களில் உள்ள ஈசனின் பெயரை படித்து பார்த்தால் அதன் பின்னணியில் ஒரு சம்பவம் அல்லது வரலாறு அல்லது மிகப்பெரிய நிகழ்ச்சி நிச்சயம் இருக்கும். சிவபெருமானின் ஒவ்வொரு பெயரிலும் ஒவ்வொரு ரகசியம் ஊடுருவி இருக்கிறது. ஆனால் நாம் அந்த ரகசியங்களை கண்டு கொள்ளாமலேயே இருக்கிறோம்.

    எந்த ஊருக்கு போனாலும் நிச்சயம் ஏதாவது ஒரு பழமையான சிவாலயம் இருக்கும். அந்த ஆலயத்தை யார் கட்டியது? எப்படி கட்டினார்கள்? அதன் வரலாறு என்ன? என்பதையெல்லாம் அந்த தலத்து ஈசனின் பெயர் ஒரே வரியில் சொல்லி விடும்.

    உதாரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் என்ற பெயரை எடுத்துக் கொள்ளுங்கள். அண்ணாமலை என்றால் நெருங்க முடியாத மலை என்று அர்த்தம்.

    அருணாசலேஸ்வரர் என்பதில் அருணன் என்பது செந்நிற தீயை குறிக்கும். சிவபெருமான் அடிமுடி வரலாற்றை நடத்தி திருமாலுக்கும், பிரம்மாவுக்கும் தீப் பிழம்பாக காட்சியளித்த இடம். இப்படி ஒவ்வொரு ஈசனின் பெயருக்கு பின்னாலும் ஒரு கதை இருக்கிறது.

    அந்த வகையில் கும்பகோணம் அருகே உள்ள திருமங்கலக்குடி ஆலயத்தில் இருக்கும் சிவபெருமானின் பெயரும் ஒரு புராண நிகழ்வை பின்னணியாக கொண்டு அமைந்து இருக்கிறது.

    அந்த தலத்தின் ஈசனின் பெயர் பிராண நாதேஸ்வரர் இவரை பிராண வரதரேஸ்வரர் என்றும் அழைப்பார்கள். பிராணன் என்றால் உயிர் என்று அர்த்தம். பக்தன் ஒருவனுக்கு உயிரை திருப்பி கொடுத்ததால் அந்த தலத்து ஈசன் பிராண நாதேஸ்வரர் என்ற பெயரை பெற்றார்.

    இதற்கு காரணமாக இருந்தது பார்வதிதேவி ஆவார். ஒரு பெண்ணின் மாங்கலயத்தை காத்து அருள்பாலிக்க செய்வதற்காகவே அவள் ஈசனிடம் சொல்லி பிராணனை திருப்பி கொடுக்க செய்தாள். இதன் காரணமாக இந்த தலத்தில் அம்பாளுக்கு மங்களநாயகி என்ற பெயர் ஏற்பட்டது. இவர்கள் இருவரையும் வழிபட்டால் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.

    • திருவள்ளூர், திருவல்லிக்கேணி பெருமாள் சுவாமிக்கு திருமஞ்சன சேவை.
    • ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, மார்கழி-21 (சனிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: தசமி இரவு 9.55 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம்: சுவாதி இரவு 7.05 மணி வரை பிறகு விசாகம்

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருநள்ளாறு சனி பகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பாராட்டு

    ரிஷபம்-சோர்வு

    மிதுனம்-பணிவு

    கடகம்-ஓய்வு

    சிம்மம்-கடமை

    கன்னி-மகிழ்ச்சி

    துலாம்- இன்பம்

    விருச்சிகம்-புகழ்

    தனுசு- லாபம்

    மகரம்-மேன்மை

    கும்பம்-வாழ்வு

    மீனம்-பொறுப்பு

    • சிவபெருமான் படத்தை வீட்டில் தனியாக வைக்க கூடாது.
    • சிவனும், பார்வதியும் தம்பதி சமேதராக இருக்கும் படத்தை வைத்து வழிபடலாம்.

    வீட்டில் லிங்கம் வைத்து பூஜை செய்பவர்கள் 7 கிழமையில் எந்தெந்த நாளில் என்னென்ன நிவேதனம் வைத்தால்! ஐஸ்வரியம் மேலும் பெருகும் தெரிந்து கொள்ளுங்கள்! சிவனுடைய பக்தர்கள் வீட்டில் கட்டாயம் லிங்கம் அல்லது சிவன் படம் வைத்திருப்பார்கள். சிவபெருமான் படத்தை வீட்டில் தனியாக வைத்திருக்கக் கூடாது என்று கூறப்படுகிறது. சிவனும், பார்வதியும் தம்பதி சமேதராக இருக்கும் படத்தை தாராளமாக யார் வேண்டுமானாலும் வீட்டில் வைத்து வழிபடலாம்.

    இதனால் குடும்பத்திற்குள் கணவன்-மனைவி பிரச்சினை ஏற்படாது என்பது சாஸ்திர நியதி. கணவன் மனைவி ஒற்றுமை, செல்வ வளம், தொழில் விருத்தி போன்றவை ஏற்பட சிவபெருமானை வழிபடலாம். இப்படி பக்தர்கள் துயர் தீர்க்கும் எம்பெருமான் ஈசனுக்கு எந்தெந்த நாளில் என்னென்ன நிவேதனம் செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

    திங்கட்கிழமை:

    திங்கள் கிழமை என்பது சிவபெருமானுக்கு உகந்த கிழமையாகும். இதனை சோமவாரம் என்றும் கூறுவர். சோமவார விரதம் இருப்பவர்களுக்கு கேட்ட வரம் எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம். சோமவார விரதத்தை சிவபெருமானுக்கு கடைப்பிடிப்பது வழக்கம். அப்படி திங்கட்கிழமை விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுபவர்கள் பால் சாதம் அல்லது தயிர் சாதம் போன்றவற்றை நைவேத்தியமாக படைப்பது நல்லது. இதன் மூலம் வருமானம் பன்மடங்கு பெருகும் என்பது ஐதீகம்.

    செவ்வாய்க்கிழமை:

    செவ்வாய்க்கிழமை தோறும் சிவபெருமானை வழிபட்டு, விரதம் இருப்பவர்களுக்கு ஞானம் உண்டாகும் என்பது விதியாகும். சிறந்த அறிவாற்றல் பெற செவ்வாய்க் கிழமையில் ஈசனை வணங்கலாம். அப்படி அவருக்கு செவ்வாய்க் கிழமையில் வழிபாடுகள் செய்யும் பொழுது நைவேத்தியம் படைக்க வெண் பொங்கலை தயார் செய்வது மிக மிக நல்லது. கல்வி கற்கும் மாணவர்கள், கலைகளை கற்க விரும்பும் அனைவரும் ஈசனை செவ்வாய்க் கிழமையில் வழிபடலாம்.

    புதன்கிழமை:

    புதன் கிழமை அன்று சிவபெருமானை வழிபடுபவர்கள் சுபகாரியத் தடைகள் நீங்கப் பெறுவார்கள். 'பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது' என்பது ஜோதிட பழமொழி. அத்தகைய சக்தி வாய்ந்த புதன் கிழமையில் சிவபெருமானை விரதமிருந்து வழிபட வாழ்வில் சகல, சவுபாக்கியங்களையும் பெறலாம். புதன் கிழமையில் வழிபடுபவர்கள் செய்ய வேண்டிய நைவேத்தியம் கதம்ப சாதம் ஆகும். அதாவது அனைத்து காய்கறிகளும் சேர்த்து செய்த சாதம் கதம்ப சாதம் ஆகும். இவ்வாறு செய்ய சுபகாரிய முயற்சிகள் தடையில்லாமல் வெற்றி பெறும் என்பது பக்தர்களுடைய நம்பிக்கை.

    வியாழக்கிழமை:

    குருவின் ஆதிக்கம் உள்ள வியாழக்கிழமை மிகவும் விசேஷமானது ஆகும். சுகபோக வாழ்வு பெறவும், சொத்து சுகங்களை அனுபவிக்கவும் வியாழக்கிழமையில் ஈசனை வழிபட வேண்டும். ஈசனை அடைக்கலம் தேடி செல்வோர் துன்பக் கடலில் மூழ்குவது இல்லை. எனவே அவரின் அருள் பெற வியாழக்கிழமை அன்று பூஜை செய்பவர்கள் சித்ரான்னம் படைத்து வழிபடலாம். இதனால் வாழ்வில் சகல, சம்பத்துகளும் பெறுவதாக ஐதீகம் உள்ளது.

    வெள்ளிக்கிழமை:

    வெள்ளிக்கிழமையில் சிவபெருமான் வழிபாடு செய்வது மிகவும் விசேஷமானது ஆகும். சிவபெருமானையும், அம்பாளையும் சேர்த்து வழிபட குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கி காணப்படும். கணவன்-மனைவிக்குள் திடீர் பிரச்சனைகள் ஏற்படுவது தடுக்கப்படும். கணவன்-மனைவிக்குள் பிரிவு உண்டாகும் பொழுது வெள்ளிக்கிழமையில் சிவபெருமானை நோக்கி விரதமிருந்து, வழிபாடுகள் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமையில் சிவபெருமான் வழிபாடு செய்யும் பொழுது நிவேதனமாக பால் பாயாசம் வைப்பது முறையாகும்.

    சனிக்கிழமை:

    சனிக் கிழமைகளில் சிவபெருமானை வழிபடுபவர்களுக்கு நவகிரக தோஷங்கள் விலகும் என்பது நியதி. சனிக்கிழமையில் பைரவர் வழிபாடு, சிவபெருமானுக்கு வழிபாடு, மகாவிஷ்ணு வழிபாடு, சனி பகவான் வழிபாடு, ஆஞ்சனேயர் வழிபாடு செய்வது மிகவும் விசேஷமானது. நவகிரக தோஷங்கள் ஆட்கொண்டு இருக்கும் போது, அவைகள் விலக முற்றும் அறிந்த ஈசனை வழிபட வேண்டும். அப்படி சனிக்கிழமையில் சிவ வழிபாடு செய்பவர்கள் புளியோதரை வைத்து வழிபட வேண்டும் என்பது முறையாகும். விரதத்தை முடித்தபின் புளியோதரை தானம் செய்யலாம்.

    ஞாயிற்றுக்கிழமை:

    ஞாயிற்றுக் கிழமையில் சிவபெருமானுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. இந்நாளில் சர்க்கரை பொங்கல் செய்வது மிகுந்த பலனை தரக்கூடியது ஆகும். ஞாயிறு அன்று சிவ வழிபாடு செய்தபின் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்வது எல்லா வளங்களையும் கிடைக்க செய்யும். பதினாறு பேறுகளையும் பெற்று புகழின் உச்சிக்கு செல்லலாம்.

    • 5-வது படைவீடாக இருப்பது திருத்தணி.
    • திருத்தணியில் சூரசம்ஹார விழா நடைபெறுவதில்லை.

    முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் 5-வது படைவீடாக இருக்கும், திருத்தணி முருகப்பெருமானின் ஆலயத்தில் உள்ள சிறப்புகளில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

    * வள்ளலார், கண்ணாடியில் முருகப்பெருமானின் தரிசனத்தைக் கண்டு அருள்பெற்றவர். அந்த முருகப்பெருமான், திருத்தணிகை முருகப்பெருமான் என்பது குறிப்பிடத்தக்கது. திருவருட்பா நூலில் `சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும்' என்ற பாடலில், முருகனின் திருவருள் தரிசனம் பெற்ற அற்புதத்தைப் பற்றி வள்ளலார் கூறியுள்ளார்.

    * கர்நாடக சங்கீத மேதைகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர், ஒருமுறை திருத்தணி வந்தார். மெய்மறந்து உள்ளம் உருகி முருகனை வணங்கி துதித்துக் கொண்டிருந்தபோது ஆறுமுகப்பெருமானே ஒரு சிறுவன் வடிவில் வந்து ஒரு கற்கண்டை தீட்சிதர் வாயில் போட்டதாகவும், அன்று முதல் இவர் அற்புதமான கீர்த்தனைகளைப் பாட ஆரம்பித்ததாகவும் சொல்லப்படுகிறது.

    * முருகப்பெருமான் கோபம் தணிந்து அருளும் தலம் என்பதால், திருத்தணியில் சூரசம்ஹார விழா நடைபெறுவதில்லை.

    * காதர் என்னும் இஸ்லாமியரால் கட்டப்பட்ட நவாப் மண்டபத்தில் ஆடிக்கிருத்திகை போன்ற திருவிழா காலங்களில் இஸ்லாமிய நண்பர்கள் வாத்தியம் இசைக்கின்றனர்.

    * சேத்துப்பட்டிற்கு (போளூர்) அருகாமையில் உள்ள தேவிகாபுரம் மலையில் குடிகொண்டிருக்கும் சிவனுக்கும் அனுதினமும் வெந்நீர் அபிஷேகம் நடந்து வருகிறது. அதேபோல திருத்தணி கோவிலில் முதல் பிரகாரத்தில் உள்ள பாலமுருகனுக்கு ஆருத்ரா அன்று வெந்நீர் அபிஷேகம் நடைபெறும்.

    • படைப்பின் ரகசியம் குறித்து முனிவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
    • சிவபெருமானை வழிபட்டு வந்தால் இந்த சாபம் நீங்கும்.

    முன்பொரு சமயம் பிரம்மதேவன், தன் படைப்பின் ரகசியம் குறித்து முனிவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இதைக்கேட்டு கொண்டிருந்த சுகமுனிவர், அதை அப்படியே சரஸ்வதியிடம் சென்று கூறினார். இதனால் கோபம் கொண்ட பிரம்மன், சுக முனிவரை நோக்கி, "சொன்னதை திரும்பச் சொல்லும் கிளியின் தன்மை கொண்ட நீ, கிளியாக மாறுவாய்" என சாபமிட்டார். உடனே சுகமுனிவர்,

    பிரம்மனின் தாள் பணிந்து சாபம் நீங்க வழிகேட்டார். அதற்கு பிரம்மா, "வனப்பகுதியில் (இப்போதைய கோவில் பகுதி) சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கும் சிவபெருமானை வழிபட்டு வந்தால் இந்த சாபம் நீங்கும்" என்று விமோசனத்துக்கு வழி கூறினார்.

    இதையடுத்து எண்ணற்ற கிளிகளுடன், ராஜா கிளியாக மாறிய சுகமுனிவர், தினமும் இத்தல இறைவனை வழிபட்டு வந்தார்.

    அப்போது வேடனான வச்சிரகாந்தன் என்பவன் கவண் கல்லால் கிளிகளை விரட்டி வர, அவை அங்கிருந்த புற்றின் உள்ளே பதுங்கியது. இதனால் வேடன் ஆத்திரத்தில் மண்வெட்டியால் புற்றை வெட்டினான். இதில் கிளிகள் எல்லாம் மாண்டு போனது. ஆனால் ராஜா கிளி (சுகமுனிவர்) மட்டும் புற்றுக்குள் இருந்த சுயம்பு மூர்த்தியை காக்கும் பொருட்டு தன் இறக்கைகளை குடையாய் விரித்து மறைத்து நின்றது.

    உடனே வேடன் கிளியை வெட்ட, ரத்தம் பீறிட்டு ராஜா கிளி மாண்டுபோனது. அதேநேரத்தில் சுயம்பு மூர்த்தியின் தலையிலும் வெட்டுப்பட்டு ரத்தம் பீறிட்டது. இதைக்கண்ட வேடன் வெடவெடத்து போனான்.

    தான் வெட்டியது இறைவனைத்தான் என உணர்ந்த வேடன், தன்னைத்தானே வாளால் வெட்டி உயிரை மாய்த்து கயிலாயத்தை அடைந்தான். கிளி கூட்டமும் இறைவன் திருவடியை அடைந்தன.

    சிவனருளால் கிளி உருவம் நீங்கப்பெற்ற சுகமுனிவர் இறைவனை நோக்கி, "பெருமானே, நீங்கள் சுகவனேஸ்வரராக இந்த திருத்தலத்தில் எழுந்தருளி அனைவருக்கும் அருள்பாலிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொள்ள, அதன்படியே இறைவனும் அருளியதாக தலவரலாறு கூறுகிறது.

    • திருமணிமுத்தாற்றின் கரையோரம் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவில் உள்ளது.
    • மூலவரான சிவலிங்கம் ஒரு பக்கம் சாய்வாக இருக்கும்.

    கோவில் தோற்றம்

    சேலம் மாநகரின் மையப்பகுதியில் திருமணிமுத்தாற்றின் கரையோரம் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவில் உள்ளது. கிளி கொஞ்சும் வனமாக முன்பு இருந்ததாலும், கிளி முகத்தைக் கொண்ட சுக முனிவர் தவமியற்றி வழிபட்டதாலும் இங்குள்ள இறைவன் 'சுக வனேஸ்வரர்' என அழைக்கப்படுகிறார். இங்குள்ள இறைவனுக்கு வனநாதர், கிளிவண்ணமுடையார் என்ற பெயர்களும், இறைவியான சொர்ணாம்பிகைக்கு, மரகதவல்லி, பச்சைவல்லி என்ற பெயர்களும் உண்டு.

    கருவறையில் உள்ள மூலவரான சிவலிங்கம் ஒரு பக்கம் சாய்வாக இருக்கும். அதன் மேல் பகுதியில் வெட்டு தழும்பு ஒன்றும் காணப்படுகிறது. சுகவனேஸ்வரர் அருளாட்சி புரியும் இந்த திருத்தலம் ஆதிசேஷன் வழிபட்ட தலம் ஆகும். கிருதயுகத்தில் `பாபநாசம்' எனவும், திரேதாயுகத்தில் 'பட்டீசுவரம்' எனவும், துவாபர யுகத்தில் 'நாகீஸ்வரம்' எனவும் வழங்கப்பட்டது.

     கலியுகமான இப்போது `சுகவனேஸ்வரம்' என அழைக்கப்படுகிறது. இந்தக் கோவில் 13-ம் நூற்றாண்டில் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது. மேலும் சேர, சோழ, பாண்டிய மன்னர்களாலும், நாயக்க மன்னர்களாலும் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. அருணகிரிநாதராலும், அவ்வையாராலும் பாடல் பெற்ற திருத்தலம் இது. கோவில் கிழக்கு முகமாகவும், வாசல் தெற்கு முகமாகவும் உள்ளது. மூன்று நிலை ராஜகோபுரம் கம்பீரமாக அமைந்துள்ளது. கோபுரத்தை தாண்டியதும் முதல் சன்னிதியாக, சொர்ணாம்பிகை அம்மனின் சன்னிதி தெற்கு நோக்கியபடி இருக்கிறது.

    மகா மண்டபத்தில் உள்ள பெரிய நந்தியின் பின்புறம் கொடிமரம் உள்ளது. இரு துவார பாலகர்களை கடந்தால், உள்ளே ஆள் உயரத்தில் சதுர ஆவுடையாராக சுகவனேசுவரர் கம்பீரமாக காட்சி தருகிறார். தென்மேற்கில் இரட்டை விநாயகரும், வடமேற்கில் சுகவன சுப்பிரமணியரும் தனிச் சன்னிதி கொண்டுள்ளனர். தென்புறம் அறுபத்து மூவரும், வடகிழக்கில் பைரவர், சூரியன் சன்னிதிகளும் உள்ளன.

    பிரகாரத்தில் பஞ்சபூத லிங்கங்கள், கங்காடர், காசிவிஸ்வநாதர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, சண்டிகேசுவரர், சுவர்ண துர்க்கை சன்னிதிகளும், நவக்கிரகங்கள், சுகப்பிரம்ம ரிஷி, வியாசர், ஜேஷ்டாதேவி சன்னிதிகளும் உள்ளன. அண்ணாமலையார் உருவம் ஒரு மரப்பொந்தில் செதுக்கி இருப்பது சிற்பக்கலையின் உச்சமாகும்.

    கோவிலில் உள்ள திருக்குளம் `அமண்டூக தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது. இதில் தவளைகள் வசிப்பதில்லை என்பதால் இப்பெயர் பெற்றது. இதுதவிர பாபநாச தீர்த்தம், மனுசார்ன தீர்த்தம், மானது தீர்த்தம், மணிமுத்தாறு ஆகிய புனித தீர்த்தங்களும் உள்ளன.

    தலவிருட்சமான பாதிரி மரம் நந்தவனத்தில் உள்ளது. இந்தக் கோவிலில் வைகாசிப் பெருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடக்கும். தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் செல்வது கண்கொள்ளாக்காட்சியாகும்.மேலும் கார்த்திகை தீபத் திருவிழா, சித்திரைத் திருவிழா ஆகியன கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    பல்லி விழுந்த உபாதைகள் நீங்க, இத்தலத்தில் வழிபடுவது விசேஷம். கோவிலில் உள்ள விகடசக்கர விநாயகருக்கு தேங்காய், பழம், கடலை, சர்க்கரை வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பாலாரிஷ்டம் நீங்கும் என்பது ஐதீகம். இந்தக் கோவிலுக்கு பக்தி சிரத்தையுடன் வந்து சுகவனேஸ்வரரையும், சொர்ணாம்பிகையையும் வழிபட்டால் சுகவாழ்வு கிடைக்கும் நிறைவாழ்வு வாழலாம்.

    திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், உத்தியோக பாக்கியம் உண்டாகும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. நவக்கிரகங்களில் ராகு, செவ்வாய் இருவரும் இத்தலத்தில் இடம் மாறியுள்ளனர். இந்த கிரகங்களை வழிபடுவதால் பெண்களுக்கு நல்ல வரனும், ஆண்களுக்கு உயர்ந்த உத்தியோகமும் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

    • துன்பத்தை போக்கும் திறன்கொண்ட கண்ணபிரானே!
    • உன் பொற்பாதங்களை வணங்குகிறோம்.

    திருப்பாவை

    பாடல்

    முப்பத்து மூவர் அமரருக்கு முன்சென்று

    கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்;

    செப்பம் உடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு

    வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்;

    செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்

    நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்;

    உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை

    இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்

    முப்பத்து மூன்று கோடி தேவர்களின் துன்பத்தையும், அவை வருவதற்கு முன்பே ஓடோடிச் சென்று துன்பத்தை போக்கும் திறன்கொண்ட கண்ணபிரானே! துயில் எழுவாய்! செழுமையுடையவனே! பகைவர்களை வெல்பவனே! பகைவர்களுக்கு துன்பத்தைக் கொடுக்கின்ற தூய்மையானவனே! துயில் நீங்கி எழுந்து வர வேண்டும். பொன்னால் ஆன கலசம் போன்ற மார்பினையும், பவளம் வளம் போன்ற சிவந்த வாயினையும், சீர்மிகு சிற்றிடையை உடைய நப்பினையே! திருமகள் போன்றவளே! பாவை நோன்பு நோற்பதற்கு தேவையான விசிறி, முகம் பார்க்கும் கண்ணாடி இவைகளையும் உன்னுடைய கணவனாகிய கண்ணனையும் எங்களுக்கு வழங்கி, இப்போதே எங்களை நீராட்டுவாயாக! நாங்கள் நோன்பு நோற்ற பலனை அடைந்து மகிழ்ச்சி அடைவோம்.

    திருவெம்பாவை

    பாடல்

    போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்

    போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்

    போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்

    போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

    போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

    போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்

    போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்

    போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்

    எங்கள் இறைவனே! உன் சிறப்பு வாய்ந்த ஒளிவீசும் திருவடிகளை எங்களுக்குத் தந்து அருள்புரிய வேண்டும். எல்லா உயிரினங்களின் பிறப்பிடமான உன் பொற்பாதங்களை வணங்குகிறோம். பாதுகாக்கின்ற உனது திருவடிதான் சகல உயிர்களின் தோற்றமும் முடிவுமாக உள்ளன. அனைத்து உயிர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக விளங்கும் உன் திருவடிகளைப் போற்றுகிறோம்! பிரம்மனும், திருமாலும் காண முடியாத உன் திருப்பாதங்களை வணங்குகிறோம். நாங்கள் முக்தி அடையும் படியாக எங்களை ஏற்று அருளும் பாதங்களை போற்றுகிறோம். இத்தனை சிறப்புகள் மிக்க எல்லாம் வல்ல இறைவனைப் பாடி புகழ்ந்து வணங்கி, அதன் மூலம் கிடைக்கும் ஆனந்தத்தில் திளைத்து மார்கழி நீராடுவோம்.

    • இமயமலைப் பகுதியில் ஏராளமான புண்ணிய தலங்கள் உள்ளன.
    • வாரணாசிக்கு அடுத்ததாக உத்தரகாசி.

    இமயமலைப் பகுதியில் ஏராளமான புண்ணிய தலங்கள், திருக்கோவில்கள் அமைந்துள்ளன. வெள்ளைவெளேர் என்ற பளிங்கு நிறத்தில் தெய்வத் திருமேனிகள் பளிச்சென்று தோற்றம் அளிக்கின்றன. அந்த தெய்வ உருவங்களை நாம் தொட்டு அபிஷேகம் செய்யலாம். மலர் மாலை அணிவிக்கலாம். இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலம் 'தேவபூமி' என அழைக்கப்படுகிறது.

    கேதார்நாத், கங்கோத்ரி, யமுனுத்திரி, பத்ரிநாத் போன்ற பல புனித பகுதிகளை தரிசிக்க தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

    வாரணாசிக்கு அடுத்ததாக உத்தரகாசி. அடுத்ததாக உத்தரகாசியில் சார் தாம் பாதையில் அமைந்துள்ள காசிவிஸ்வநாதர் கோவில், கலியுகத்தின் இரண்டாவது கோவில் என அழைக்கப்படும் பெருமைக்கு உரியது. உத்தரகாசி நகரம், கங்கை நதிக்கரையில் வரூணா மற்றும் அசி நதிகளுக்கு இடையே அமைந்துள்ளது.

     காசி அல்லது வாரணாசி நகரம், தண்ணீரால் மூழ்கடிக்கப்படும்போது காசி விஸ்வநாதர். உத்தரகாசியில் உள்ள இந்தக் கோவிலுக்கு மாற்றப்படுவார் என்பது நம்பிக்கை. அனைத்து உயிர்களுக்கும் முக்தி அளிக்கும் இத்தலத்தில், அனைத்து கடவுள்களும் தங்கள் முழுவடிவத்தில் வசிப்பதாகவும், இங்கு வசிப்பவர்கள் பாக்கியவான்கள் எனவும் கந்தபுராணம் கூறுகிறது.

    கங்கோத்ரி, யமுனுத்திரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய நான்கு புனிதத் தலங்களுக்கும் (சார் தாம் பயணம்) நுழைவு வாசலாக விளங்குவது, உத்தரகாசி. இது ரிஷிகேசில் இருந்து 184 கிலோமீட்டர் தொலைவில் கங்கோத்ரி தாமுக்கு செல்லும் பிரதான சாலை அருகில் அமைந்துள்ளது.

    இந்தக் கோவில் பழங்கால பிராதன பின்னணியில் சிகரங்களாக அடுக்கி வைக்கப்பட்ட தோற்றத்தில் உள்ள கோபுரத்துடன் கட்டப்பட்டு உள்ளது. இவ்வாலயத்தில் அருளும் மூலவரான சிவபெருமான், 56 சென்டிமீட்டர் உயரம் உள்ள லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார்.

    கருவறையில் பார்வதி தேவி, விநாயகப்பெருமான் உள்ளனர். கருவறைக்கு வெளியே நந்தி உள்ளது. மார்க்கண்டேய முனிவர் தியானத்தில் அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். வெளிப்புறத்தில் ஆஞ்சநேயர் மற்றும் ராமர் சீதை ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் இருக்கின்றன. எமனின் கோரப்பிடியில் இருந்து தன் பக்தன் மார்க்கண்டேயரைப் பாதுகாத்து அவருக்கு அருளிய திருத்தலமாகவும் உத்தரகாசி விளங்குகிறது.

    தல வரலாறு

    ஜமத்கனி முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும் மகனாக அவதரித்தவர், பரசுராமன். இவர் மகாவிஷ்ணுவின் அவதாரமாக போற்றப்படுகிறார். இவர் சிவபெருமானை நோக்கி தவம் செய்து, 'பரசு' என்ற கோடரியை பெற்ற காரணத்தால், இவருக்கு 'பரசுராமன்' என்ற பெயர் ஏற்பட்டது. 'தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை' என்ற வாசகத்தை உலகத்துக்கு உணர்த்த, தந்தையாரின் கட்டளைப்படி செயல்பட்டு, பெற்ற தாயாரான ரேணுகா தேவியின் தலையை வெட்டியவர்.

    ஒரு முறை கார்த்தவீர்யார்ஜூனன் என்ற மன்னன், காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு மிகுந்த பசி உண்டானது. பசிக்கான உணவு காட்டில் கிடைக்காத நிலையில், அங்கே ஆசிரமம் அமைத்திருந்த ஜமதக்னி முனிவரின் குடில் தென்பட்டது.

    அந்தக் குடிலுக்குச் சென்ற கார்த்தவீர்யார்ஜூனன், ஜமதக்னி முனிவரிடம் தன் பசியைப் போக்கும்படி கேட்டுக்கொண்டான், ஜமதக்னி முனிவரிடம் நினைத்ததை எல்லாம் வழங்கும் காமதேனு என்ற பசு இருந்தது. அதன் மூலம் உணவை வரவழைத்து கார்த்தவீர்யார்ஜூனனுக்கும், அவருடன் வந்த படைவீர்களுக்கும் உணவு பரிமாறினார்.

    இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட கார்த்தவீர்யார்ஜூனன், அந்தப் பசுவை தனக்கு வழங்கும்படி ஜமதக்னி முனிவரிடம் கேட்டுக்கொண்டான். அதற்கு முனிவர் மறுப்பு தெரிவிக்கவே, கார்த்த வீர்யார்ஜூனன் அந்தப் பசுவை முனிவருக்கு தெரியாமல் கவர்ந்து சென்றான். இதை அறிந்த முனிவர், தன் மகன் பரசுராமரிடம் சொல்ல, கோபத்துடன் சென்ற பரசுராமன், மன்னனைக் கொன்று பசுவை மீட்டார்.

    கார்த்த வீர்யார்ஜூனன் அந்தணன் என்பதால், அவனைக் கொன்ற பாவம் நீங்க, தீர்த்த யாத்திரை சென்று வரும்படி பரசுராமனிடம் ஜமதக்னி முனிவர் கூறினார். அதன்படி பரகராமன் தீர்த்த யாத்திரை சென்றார். இந்த நிலையில் தனது தந்தையைக் கொன்றதால் ஜமத்கனி முனிவரிடமும், பரசுராமரிடமும், கார்த்தவீர்யார்ஜூனனுடைய மகன்கள் தீராத பகை கொண்டிருந்தனர். அவர்கள் பழிக்குப்பழி வாங்க தீர்மானித்தனர்.

    ஒரு நாள் ஆசிரமத்தில் தியானத்தில் இருந்த ஜமதக்னி முனிவரை, கார்த்தவீர்யார்ஜூனனின் மகன்களில் ஒருவன் வாளால் தலையை வெட்டி எடுத்துச் சென்று விட்டான். இதை அறிந்த பரசுராமன், 'தந்தையை கொன்ற மன்னனின் 21 தலைமுறையை கூண்டோடு அழிப்பேன்' என்று சூளுரைத்தார். பின்னர் திக்விஜயம் சென்று சத்திரிய குலத்தைச் சேர்ந்த 21 தலைமுறையினரை வேரற்று போகும்படி செய்தார்.

    அந்த பாவம் தீர்வதற்கு வேள்வி செய்தார். இமயமலை அடிவாரத்தில் உள்ள உத்தர காசியில் ரிஷிகளும், சித்தர்களும், கந்தர்வர்களும் தவம் செய்த இடத்தில் பரசுராமர், காசிவிஸ்வநாதர் கோவிலைக் கட்டி முடித்தார் என்று இந்த ஆலயத்தின் தல வரலாறு சொல்கிறது.

     திரிசூல மகிமை

    உத்தரகாசி விஸ்வநாதர் கோவிலுக்கு எதிரில், பார்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட சக்தி கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள கனமான திரிசூலம் 26 அடி உயரம் உள்ளது. இது துர்க்கா தேவியால் பிசாசுகள் மீது வீசப்பட்டது. அன்னை சக்தி இங்கு திரிசூல வடிவில் மாபெரும் சக்தியாக விளங்குகிறார்.

    உத்தரகாண்டின் பழைய நினைவுச் சின்னமாக இங்குள்ள திரிசூலம் கருதப்படுகிறது 26 அடி உயரம் உள்ள திரிசூலத்தில் நாக வம்சத்தின் விவரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த திரிசூலத்தின் விசேஷமான அம்சம் என்னவென்றால், இதை முழு உடல் பலத்தால் நகர்த்த முடியாது. மாறாக உங்கள் விரல் நுனியை வைத்து லேசாக அழுத்தும் போது அது அதிர்கிறது.

    இந்த திரிசூலத்துக்கு பக்தர்கள் தண்ணீரால் அபிஷேகம் செய்து பூ வைத்து வழிபடுகிறார். திரிசூலத்தை வணங்கி வழிபடும் பக்தர்களுக்கு, குங்குமம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. திருமணத்தடை உள்ளவர்களும், குழந்தை வேண்டி வருபவர்களும் இந்த திரிசூலத்தை வணங்கி வழிபட்டால், அவர்கள் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

    • மதுரை செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் புறப்பாடு.
    • சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, மார்கழி-20 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: நவமி இரவு 9.04 மணி வரை. பிறகு தசமி.

    நட்சத்திரம்: சித்திரை மாலை 5.42 மணி வரை. பிறகு சுவாதி.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். மதுரை செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் புறப்பாடு. ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருமயிலை ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ஸ்ரீமயூரவல்லித் தாயாருக்கு மாலை வில்வத்தால் அர்ச்சனை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பண்பு

    ரிஷபம்-பக்தி

    மிதுனம்-பெருமை

    கடகம்-புகழ்

    சிம்மம்-வரவு

    கன்னி-உழைப்பு

    துலாம்- செலவு

    விருச்சிகம்-இரக்கம்

    தனுசு- ஊக்கம்

    மகரம்-சலனம்

    கும்பம்-தேர்ச்சி

    மீனம்- பொறுமை

    • 22-ந்தேதி பிரதிஷ்டை விழா.
    • கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    சென்னை:

    உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தி நகரில் ஸ்ரீராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு நிறைவடையும் நிலையில் உள்ளன. வருகிற 22-ந்தேதி பிரதிஷ்டை விழா நடைபெறுகின்றது. இதையொட்டி நாடு முழுவதும் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் 10 அடி உயர ஸ்ரீ ராமர் சிலை நிறுவப்பட்டது. அதனை ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அறங்காவலர் குழு உறுப்பினர் பராசரன் பக்தர்கள் தரிசனத்திற்காக நேற்று மாலை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் எஸ்.வேதாந்தம் ஆன்மீக சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணன், திருப்பதி தேவஸ்தான தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜே.சேகர்ரெட்டி, விஸ்வ இந்து பரிஷத் டி.டி.வி. அறங்காவலர் குழு உறுப்பினர் சங்க தலைவர் தலைவர் கோபால்ஜி மற்றும் நீதிபதிகள், தொழில் அதிபர்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    ஏ.ஜே.சேகர் ரெட்டி பேசியதாவது:-

    நாட்டின் பல்வேறு இடங்களில் ஸ்ரீராமருக்கு கோவில் இருந்தாலும் அவர் அவதாரம் நிகழ்ந்த அயோத்தியில் கோவில் இல்லாமல் இருந்த குறை தற்போது நீங்கியுள்ளது. வெகுவிரைவாக அயோத்தியில் பக்தர்கள் கனவை பிரதமர் மோடி நகவாக்க உள்ளார்.

    பீடத்துடன் கூடிய 10½ அடி உயர ராமபிரான் சிலை பைபர் வாயிலாக செய்யப்பட்டது. இதனை வருகிற 26-ந்தேதி வரை தரிசிக்கலாம். தினமும் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    வேதாந்தம் பேசுகையில், ராமஜென்ம பூமி, 500 ஆண்டுகள் போராட்டம். ராமாயணத்தில் கல் மீது ராமபிரான் பாதம் பட்டதும் அகல்யாவிற்கு விமர்சனம் கிடைக்கிறது. அதுபோல் ராமனின் பார்வை பராசுரன் மீது பட்டதும் ராம ஜென்ம பூமிக்கு விமோசனம் கிடைத்தது. அயோத்தியில் நடக்கும் ராமர் பிரதிஷ்டைக்காக இங்கு விழா எடுக்கப்படுவது வரவேற்கதக்கது என்றார்.

    மேலும் ராமர் சிலை திறப்பு விழாவையொட்டி இன்று முதல் 26-ந்தேதி வரை சிறப்பு சொற்பொழிவு மற்றும் பாடல், நடனம் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு ஆரத்தி, 10.30 மணி முதல் 12 மணி வரை பஜனை, மாலை 6 மணிக்கு ஆரத்தி நடைபெறும். இந்தியாவிலேயே முதன் முறையாக ராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்து கொண்டாடப்படுவது சென்னையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×