என் மலர்
வழிபாடு
- லட்சுமி மற்றும் குபேர பகவானை வழிபடும்போது நாணய வழிபாடு மிகவும் முக்கியமானது.
- குபேர பகவானின் 108 போற்றிகளை மனதார உச்சரிக்க வேண்டும்.
தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்தால் செல்வத்தையும், ஐஸ்வரியத்தையும் அள்ளித்தருவார் என்பது நம்பிக்கை. குறிப்பாக லட்சுமி மற்றும் குபேர பகவானை வழிபடும்போது இந்த நாணய வழிபாடு மிகவும் முக்கியமானது. இந்த வழிபாட்டில், நாணயங்களை வைத்து அர்ச்சனை செய்வது, குபேரர் மற்றும் லட்சுமி தேவியின் அருள் பெறவும், பொருளாதார கஷ்டங்களை நீக்கி, நிலையான செல்வத்தை பெற உதவும் என்பது நம்பிக்கை.
குபேர பகவானுக்கு உகந்த எண் 5. அதனால் ஒரு தட்டில் உங்கள் கை நிறையும் அளவிற்கு 5 ரூபாய் நாணயங்களைப் போட்டு, அதைத் தட்டில் இருந்து இரு கைகளாலும் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டில் போடுவதுமாக இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும்.
இப்படி செய்யும் போது குபேர பகவானின் 108 போற்றிகளை மனதார உச்சரிக்க வேண்டும். போற்றி சொல்லியபடியே தட்டில் உள்ள நாணயங்களை இரு கைகளால் அள்ளி எடுப்பதும், மீண்டும் தட்டிலேயே போடுவதுமாக இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், நாணயங்களில் இருந்து ஒலி எழும்பும். அந்த ஒலியோடு சேர்ந்து குபேர மந்திரங்களை சொல்ல வேண்டும்.
நாணய பூஜை செய்து முடித்தவுடன் பால் மற்றும் சர்க்கரை கலந்த சிவப்பு அவல் நைவேத்யம் செய்து, தீப தூபம் காட்டி நாணய வழிபாடு பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
தீபாவளி அன்று குபேர பகவானுக்காகச் செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது நம்பிக்கை.
இந்த வழிபாட்டை தீப ஒளித் திருநாளன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரையும் அல்லது இரவு 8 மணி முதல் 9 மணி வரை புதன் ஓரையில் செய்ய வேண்டும்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
நினைத்தது நிறைவேறும் நாள். செலவிற்கு ஏற்ப வரவு வந்து சேரும். திட்டமிட்ட பணிகளை செய்துமுடிக்க சற்று தாமதம் ஏற்படும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.
ரிஷபம்
கணிசமான தொகை கைகளில் புரளும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவலொன்று வந்து சேரலாம்.
மிதுனம்
வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உற்றார் உறவினர்கள் உங்கள் பணிகளுக்கு ஒத்துழைப்பு செய்ய முன்வருவர். மறதியால் விட்டுப்பொன காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
கடகம்
சிந்தனைகளில் வெற்றி பெறும் நாள். செயல்பாட்டில் அவசரம் காட்ட வேண்டாம். பூமி வாங்கும் யோகம் உண்டு. பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம்
மனக்கலக்கம் ஏற்படும் நாள். பண நெருக்கடி அதிகரிக்கும். தொழிலில் குறுக்கீடுகள் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் யோசித்து கையெழுத்திடுவது நல்லது. உற னர்கள் பகை உருவாகலாம்.
கன்னி
ஒற்றுமை பலப்படும் நாள். உடல்நலம் சீராக ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உண்டு. நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம்.
துலாம்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. வரன்கள் வாயில் தேடி வந்து சேரலாம்.
விருச்சிகம்
விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் நாள். புகழ் கூடும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். வருமானம் உயரும்.
தனுசு
கருத்து வேறுபாடுகள் அகலும் நாள். கல்யாணப் பேச்சுவார்த்தை கைகூடும். பிரபலஸ்தர்களின் ஒத்துழைப்போடு பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்வீர்கள். உத்தியோக உயர்வு உண்டு.
மகரம்
பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். தொழில் வளர்ச்சியில் குறுக்கீடு ஏற்படும். தூரத்து உறவினர்களால் தொல்லை உண்டு. வரவைவிடச் செலவு கூடும்.
கும்பம்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.
மீனம்
வரவு திருப்தி தரும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.
- திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை.
- இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-31 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : ஏகாதசி பிற்பகல் 2.16 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம் : மகம் மாலை 5.22 மணி வரை பிறகு பூரம்
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். பாபநாசம் ஸ்ரீ சிவபெருமான் புறப்பாடு. மதுரை ஸ்ரீ கூடலழகர் திருமஞ்சனம். திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் கிளி வாகன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர் படை வீடு, ஸ்ரீ ரேணுகாபாள் புறப்பாடு.
லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுமை
ரிஷபம்-போட்டி
மிதுனம்-விவேகம்
கடகம்-அன்பு
சிம்மம்-ஆதரவு
கன்னி-ஆசை
துலாம்- பாராட்டு
விருச்சிகம்-செலவு
தனுசு- நற்செயல்
மகரம்-வரவு
கும்பம்-பணிவு
மீனம்-சுகம்
- பல தலைமுறையாகத் தீராத கடன் தீரும். வாராக் கடன் வசூலாகும்.
- நீண்ட நாள் நிலுவையில் இருந்த தீர்க்கமுடியாத சொத்து தொடர்பான வழக்குகள் கூட முடிவுக்கு வரும்.
தொழில் ரீதியிலான வளர்ச்சி வேண்டுமென்றால் லட்சுமி குபேர பூஜையைத் தொடர்ந்து செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது தொழில் மேன்மை பெறும். வீட்டிலும் எப்போதும் தானிய வகைகள் நிரம்பி இருக்கும். உத்தியோகம், ஊதிய உயர்வு மற்றும் பணவரவு அதிகரிக்கும்.
லட்சுமி குபேர பூஜை செய்தால் அந்த லட்சுமி குபேரர் உங்களின் தீராத கடன்களையும் தீர்ப்பார் என்பது நம்பிக்கை. பல தலைமுறையாகத் தீராத கடன் தீரும். வாராக் கடன் வசூலாகும். கடன் தீர்வது மட்டுமின்றி உங்களுக்கு கிடைக்கும் சொத்து பல்கிப் பெருகி பல தலைமுறைகளுக்கு நிலைத்து நிற்கும்.
நீண்ட நாள் நிலுவையில் இருந்த தீர்க்கமுடியாத சொத்து தொடர்பான வழக்குகள் கூட முடிவுக்கு வரும். குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் பெருகும்.
பணம், சொத்து என பொருளைத்தேடி ஓடிக்கொண்டே இருக்கும் மனிதன் அதை சம்பாதிக்கும் போது பலரது ஆசிகளை இழப்பது மட்டுமின்றி அறிந்தோ, அறியாமலோ பலவித பாவங்களையும், சாபத்தையும் சம்பாதிக்கிறான். ஒருவருக்கு கெடுதல் செய்தால் தான் பாவம் என்று அர்த்தமில்லை. ஒருவரை மனதளவில் காயப்படுத்திவிட்டாலும் அதுவும் பாவம் தான்.
காலம் முழுவதும் தான் சுகமாக வாழ பிறரை வஞ்சித்தும், சாபத்தைப் பெற்றும் வாழும் மனிதர்களுக்கு அருளோ கடவுளின் ஆசியோ கிடைப்பதரிது. ஏனென்றால் குரோதம், மோகம், ஆணவம் ஆகிய இம்மூன்றும் செல்வத்தால், பொருளால் வருவது. இவை இருந்தால் நிச்சயமாக கடவுளின் அருள் கிடைக்காது.

பாவங்களைப் போக்க என்ன செய்ய வேண்டும். கோவிலுக்கு சென்றால் பாவங்கள் போய்விடுமா என்றால் அதுதான் இல்லை. ஏனென்றால் கோவில்களுக்குச் செல்வதால்- தானதர்மம் வழங்குவதால் ஒருவர் பாவங்களை ஒருபோதும் அழிக்கமுடியாது. சக மனிதர்களிடம் அன்பு, பணிவு, அமைதி ஆகியவை இருந்தால், கடவுளின் அருளோடு பொருளும் தானாக வந்துசேரும்.
உங்களின் பாவங்களைப் போக்கி இந்த தீப ஒளித் திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாட லட்சுமி குபேரரிடம், அறிந்தும் அறியாமலும் செய்த தவறுக்கு மன்னிப்புக் கோரி வழிபாடு செய்யுங்கள். இறை அருளோடு நிரம்பிய பொருள் பெற்று நல்வாழ்வு பெறுங்கள்.
- ரோகிணி தேவி, சந்திரனை மணந்து கொள்வதற்காக பாண்டவதூத பெருமாளை வணங்கி வழிபாடு செய்தாள்.
- ஞான சக்தியையும், விஸ்வரூப தரிசனத்தையும் காட்டிய பெருமாளை வழிபாடு செய்ய, ரோகிணி தேவி இங்கு தினமும் சூட்சும வடிவில் வருவதாக ஐதீகம்.
27 நட்சத்திரங்களில் ஒருவரான ரோகிணி தேவி, சந்திரனை மணந்து கொள்வதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பாடகம் பகுதியில் அமைந்துள்ள பாண்டவதூத பெருமாளை வணங்கி வழிபாடு செய்தாள். பின்பு ரோகிணி தேவி, சந்திரனை மணவாளனாக அடையும் பேறு பெற்றாள்.
சந்திரன், 27 நட்சத்திர தேவியர்களை மணம்முடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டபோதும், முதன் முதலில் ஞான சக்தி பெற்ற ரோகிணியையும், அடுத்து அக்னி சக்தி பெற்ற கார்த்திகையையும் மணமுடித்த பின்பே ஏனைய நட்சத்திர தேவியர்களை மணந்ததாக வரலாறு கூறுகிறது.
ஞான சக்தியையும், விஸ்வரூப தரிசனத்தையும் காட்டிய பெருமாளை வழிபாடு செய்ய, ரோகிணி தேவி இங்கு தினமும் சூட்சும வடிவில் வருவதாக ஐதீகம். எனவே, ரோகிணி நட்சத்திரக்காரர்கள் புதன், சனிக்கிழமைகளிலும், அஷ்டமி திதி, எட்டாம் தேதிகளிலும் இங்கு வந்து அர்ச்சனை செய்தால் அபரிமிதமான பலன்கள் கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது.
- குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர்.
- செல்வத்தையும், வளத்தையும் கொடுக்கும் அதிபதியாக விளங்குகின்றார் குபேரன்.
செல்வத்துக்கு அதிபதியான லட்சுமியையும், அதனை காக்கும் குபேரனையும் தீபாவளி திருநாளில் ஒரு சேர தரிசித்து வந்தால், அவர்கள் வாழ்வில் செல்வம் செழிக்கும்.
ஸ்ரீ லட்சுமி குபேரன் வாழப்பிறந்தவனுக்கு வடக்கு என்ற பழமொழி உருவானது. குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர். ஆனால் செல்வத்துக்கு கடவுள் மகாலட்சுமி. செல்வத்தை பக்தர்களுக்கு முறையாக பகிர்ந்து அளிக்க அவர் பணித்தார். எனவே தான் குபேரன் லட்சுமி குபேரன் என்று அழைக்கப்படுகிறார்.
குபேர பூஜையினை புதன் ஓரையில் செய்வது மிகுந்த செல்வ வளத்தினை தரும். மேலும் குபேரன் பிறந்த நட்சத்திரமாக கருதப்படும் பூச நட்சத்திரத்தன்றோ அல்லது வியாழக்கிழமை நாட்களிலோ வழிபாடு செய்வது மிகுந்த நன்மை தரும்.
குபேரனுடைய நடத்தையை மெச்சி, எட்டு திசைகளில், ஒன்றான வடக்கு திசைக்கு அதிபதியாக குபேரனை நியமனம் செய்தார் பார்வதி தேவி. செல்வத்தையும், வளத்தையும் கொடுக்கும் அதிபதியாக விளங்குகின்றார் குபேரன். அவரை வணங்கினால், செல்வம் பெருகும், வளம் கொழிக்கும் என்பது நம் முன்னோர்கள் நம்பிக்கையாகும்.
- ஜனாதிபதி திரவுபதி முர்பு வருகிற 22-ந்தேதி சபரிமலைக்கு வருகிறார்.
- சபரிமலை மேல்சாந்தி பொறுப்புக்கு 14 பேரும், மாளிகைபுரம் மேல்சாந்தி பொறுப்புக்கு 13 பேரும் நேர்முக தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்தமாதம் தொடங்க உள்ளது. மண்டல பூஜைக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தற்போதே தொடங்கி நடந்து வருகின்றன.
இந்தநிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜை நாளை மறுநாள் (18-ந்தேதி) தொடங்குகிறது. இதற்காக கோவில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. சபரிமலை கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்கிறார்.
நாளை மாலை சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை மறுநாள் முதல் வருகிற 22-ந்தேதி வரை வழக்கமான பூஜைகள் நடைபெறும். ஜனாதிபதி திரவுபதி முர்பு வருகிற 22-ந்தேதி சபரிமலைக்கு வருகிறார்.
இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக 21 மற்றும் 22 ஆகிய 2 நாட்கள் சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களுக்கான ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. 18, 19 மற்றும் 20-ந்தேதிகள் மட்டும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும் சபரிமலை மற்றும் மாளிகைபுரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு நாளை மறுநாள் (18-ந்தேதி) காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. சபரிமலை மேல்சாந்தி பொறுப்புக்கு 14 பேரும், மாளிகைபுரம் மேல்சாந்தி பொறுப்புக்கு 13 பேரும் நேர்முக தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
அவர்களில் சபரிமலை மற்றும் மாளிகைபுரம் கோவில்களுக்கு தனித்தனி மேல்சாந்தி குடவோலை முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளனர். புதிய மேல்சாந்திகளாக தேர்வு செய்யப்படுபவர்கள் நடப்பு ஆண்டு மண்டல பூஜை முதல் ஒரு ஆண்டு காலத்திற்கு சபரிமலையில் தங்கியிருந்து அனைத்து பூஜைகள் மற்றும் திருப்பணிகளை நிறைவேற்றுவார்கள்.
- பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல பொறுப்புகள் கிடைக்கும்.
- உடன்பிறப்புகளின் திருமணங்களை முன்நின்று நடத்துவீர்கள்.
தனுசு ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு அஷ்டமத்தில் சஞ்சரிக்கிறார். இது அவ்வளவு நல்லதல்ல. வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். வளர்ச்சிக்கு இடையூறாக பல சம்பவங்கள் நடைபெறும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு திடீரென திருப்தி தராத பொறுப்புகள் மாற்றப்படலாம். உறவினர் பகையால் ஊர் மாற்றம், நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்ய முடியாத சூழல் உருவாகும். பிள்ளைகளால் பிரச்சனைகள் ஏற்பட்டு மனக் கலக்கத்தை உருவாக்கும்.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கிறார். அவர் உச்சம் பெற்று இருப்பதால் நன்மை கிடைக்கும். என்றாலும் அலைச்சல் அதிகரிக்கும். அடிக்கடி பயணங்களால் ஆரோக்கிய சீர்கேடு உருவாகும். ஒருசில காரியங்கள் விரையில் முடிந்தாலும் எதிர்பார்த்துக் காத்திருந்த சில காரிங்கள் முடிவடையாமல் தாமதத்தை ஏற்படுத்தும். இடமாற்றம், வீடு மாற்றம் எதிர்பாராத விதத்தில் அமையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு குறையும். அதனால் வேறு உத்தியோகத்திற்குச் செல்லலாமா என்ற சிந்தனை மேலோங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகளில் குறுக்கீடுகள் வரலாம்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் சகாய ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். சகாய ஸ்தானாதிபதி சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே எதையும் ஒரு முறைக்குப் பல முறை யோசித்தும், அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனையை கேட்டும் செய்வது நல்லது. ஒரு சில காரியங்கள் நடைபெறுவதுபோல் இருந்து கடைசி நேரத்தில் நழுவி செல்லலாம். கடன்சுமையின் காரணமாக மனக்கவலை அதிகரிக்கும். உத்தியோகத்தில் வருவதாக இருந்த பதவி உயர்வு தடைப்படும். அதிக கவனம் தேவைப்படும் நேரம் இது.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், செவ்வாய். அவர் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இவ்வேளையில், சுப விரயங்கள் அதிகரிக்கும். துணிந்து எந்த முக்கிய முடிவும் எடுக்க இயலாது. சொத்துக்கள் விரயமாகலாம். சொந்தங்களால் பிரச்சனை உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் குணமறிந்து நடந்துகொள்ள மாட்டார்கள். வெளிநாடு செல்லும் முயற்சி கைகூடினாலும் அது திருப்தி அளிக்காது. உடன்பிறப்புகளின் வழியில் செலவு உண்டு.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். லாபாதிபதியான அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரத்தில் பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும். புகழ்பெற்றவர்களின் சந்திப்பு நிகழும். ஆடை, ஆபரணச் சேர்க்கை, வெளிநாட்டு வணிகத்தால் ஆதாயம் உண்டு. பெண்வழிப் பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். பிறர் போற்றும் அளவிற்கு வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டுமென்று விரும்புவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளால் பிரச்சனை ஏற்படும். கலைஞர்களுக்கு மாதக் கடைசியில் மகிழ்ச்சி நிலவும். மாணவ -மாணவிகளுக்கு படிப்பில் வெற்றி உண்டு. பெண்களுக்கு இல்லற வாழ்க்கை இனிமை தரும். எப்பொழுதோ கொடுத்த தொகை வந்துசேரும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 18, 19, 22, 23, 29, 30, நவம்பர்: 3, 4, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.
மகர ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் சப்தம ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்கிறார். அதிலும் அவர் உச்சம் பெற்றிருப்பதால் உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். முன்னேற்றப் பாதையில் இருந்த குறுக்கீடுகள் அகலும். 'குரு பார்வை கோடி நன்மைக்கு வித்திடும்' என்பதால் கல்யாண முயற்சிகள் கைகூடும். கடமையில் இருந்த தொய்வு அகலும். பகை அனைத்தும் உறவாகும். பாதியில் நின்ற பல பணிகள் ஒவ்வொன்றாக முடியும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும் மாதம் இது.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அதிசார கதியில் வந்தாலும் சப்தம ஸ்தானம் என்பதால் நல்ல காரியங்கள் பலவும் நடைபெற வழிவகுத்துக் கொடுப்பார். 'இதுவரை சேமித்த சேமிப்புகள் கரைந்துவிட்டதே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, அதை ஈடுகட்டும் வாய்ப்புகள் வந்துசேரும். குருவின் பார்வையால் தடைப்பட்ட காரியம் தானாக நடைபெறும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல பொறுப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர்பதவிகள் வருவதற்கான அறிகுறிகள் தென்படும். இடம், பூமி விற்பனையால் லாபம் உண்டு.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் தன ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். இரண்டில் ராகு இருப்பதால் திரண்ட செல்வம் வரும். என்றாலும் சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால் விரயங்களும் கூடுதலாக இருக்கும். வீடு, வாகனப் பராமரிப்பு செலவு உண்டு. ஆடை, ஆபரணச் சேர்க்கை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். சனி உங்கள் ராசிநாதனாகவும் இருப்பதால் உடல் நலத்திற்காக சிறிது செலவிடும் சூழல் உண்டு. குடும்பத்தினரின் பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கலாம். அருகில் உள்ளவர்களின் ஆதரவு குறையலாம்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் லாப ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். தொழிலில் கிளைத் தொழில்கள் தொடங்கும் வாய்ப்பு உருவாகும். தாய்வழி ஆதரவு உண்டு. 'கட்டிடம் கட்டிக் குடியேறும் வாய்ப்பு இன்னும் கை கூடவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, அது கைகூடும். எதையும் துணிந்து செய்ய முன்வருவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும். நாள்பட்ட நோயில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்கள் அதிகார அந்தஸ்திற்கு உயர்த்தப்படுவர்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகின்றது. உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். குடும்பப் பிரச்சனை அகலும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி நீங்கள் தீட்டிய திட்டம் வெற்றி பெறும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதோடு கேட்ட சலுகைகளும் கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களால் லாபம் உண்டு. சகோதர வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு கூடுதல் லாபம் உண்டு. உத்தியோகஸ்தர்களுக்கு இலாகா மாற்றங்களும், ஊதிய உயர்வும் கிடைக்கும். கலைஞர்களுக்கு முயற்சியில் வெற்றி உண்டு. மாணவ - மாணவிகளுக்கு, பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு திருப்தி தரும். பெண்களுக்கு சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். தன வரவு திருப்தி தரும். வீடு வாங்கும் யோகம் உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 20, 21, 23, 24, நவம்பர்: 1, 2, 5, 6, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.
கும்ப ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். மேலும் ஜென்மச் சனியாகவும் இருக்கிறார். எனவே ஏழரைச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் எதிலும் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திடீர், திடீரென மனக்குழப்பம் ஏற்படும். ஜென்மத்தில் ராகுவும் இருப்பதால் பொருளாதாரத்தில் ஓரளவு திருப்தி ஏற்பட்டாலும் விரயங்கள் மிகவும் அதிகரிக்கும். எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து செய்யவேண்டிய மாதம் இது.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு எதிர்ப்பு, வியாதி, கடன்சுமை ஆகியவற்றை குறிக்கும் இடத்தில் தனாதிபதி குரு உச்சம் பெறுவதால் இக்காலத்தில் மிகுந்த கவனம் தேவை. எதிரிகளின் பலம் மேலோங்கும். இணைந்து செயல்படுபவர்கள் உங்களை விட்டு விலக நேரிடும். ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு ரண சிகிச்சைகள் கூட வரலாம். உத்தியோகத்தைப் பொறுத்தவரை உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைப்பது அரிது. திடீரென வரும் மாற்றங்கள் மனவருத்தத்தை உருவாக்கும்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் உங்கள் ராசியிலேயே சனியும், ராகுவும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். அதிலும் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். இது போன்ற நேரங்களில் நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கலாம். மேலும் ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால், அது எத்தனையாவது சுற்று என்பதைக் கண்டறிந்து செயல்பட வேண்டும். முதல் சுற்றோ, மூன்றாவது சுற்றோ நடைபெற்றால் முயற்சிகளில் தாமதம் ஏற்படும். நடுச்சுற்று நடந்தால் நல்லது நடக்க வழிபிறக்கும். இருப்பினும் சனி பகவானை முறையாக வணங்குவது நல்லது.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் தொழில் ஸ்தானத்திற்கு வரும்போது, தொழிலில் முன்னேற்றமும், எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும். புதிய கூட்டாளிகள் வந்திணைவர். பொருளாதாரம் உயரும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த கருத்துவேறுபாடுகள் மாறும். சகோதரர்களுக்கு கொடுத்து உதவுவீர்கள். உடன்பிறப்புகளின் திருமணங்களை முன்நின்று நடத்துவீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். இப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. இதுபோன்ற நேரத்தில் பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிரச்சனைகள் ஒவ்வொன்றாக நல்ல முடிவிற்கு வரும். முன்னோர் சொத்துக்களில் முறையாக பங்கீடு கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து உத்தியோகம் சம்பந்தமாக நல்ல அழைப்புகள் வரலாம். கை நழுவிச் சென்ற வாய்ப்புகள் கூட இப்பொழுது கைகூடிவரும். உறவினர் பகை அகலும். தாய்வழி ஆதரவு உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நண்பர்களால் நல்ல திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு போதுமான முதலீடு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு வளர்ச்சியும், தளர்ச்சியும் மாறி மாறி வரலாம். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை தேவை. பெண்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் இல்லம் தேடிவரும். வருமானம் திருப்தி தரும். சொத்துக்கள் வாங்கும் முயற்சி கைகூடும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 22, 23, 27, 28, நவம்பர்: 3, 4, 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கரும்பச்சை.
மீன ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை உங்கள் ராசியில் பதிவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனநிறைவான வாழ்க்கை அமையும். 6-க்கு அதிபதி நீச்சம் பெறுவது யோகம். எனவே கடன்சுமை குறையும். கவலைகள் தீரும். இடமாற்றம், ஊர் மாற்றம் இனிமை தரும் விதம் நடைபெறும். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைத்து மகிழ்வீர்கள். நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும் மாதம் இது.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிநாதன் உச்சம் பெறும் இந்த நேரம் அற்புதமான நேரமாகும். அவரது பார்வை பரிபூரணமாக உங்கள் ராசியில் பதியும் இந்த நேரம் தொட்டது துலங்கும். தொழிலில் கணிசமான தொகை கைகளில் புரளும். இனிய சந்தர்ப்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும். வீடு வாங்கும் யோகம் உண்டு. வாங்கிப் போட்ட சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு வெளியில் வந்து, சுய தொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இப்பொழுது அது கைகூடும். பாதியில் நின்ற பணிகள் யாவும் முடிவடையும்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் விரய ஸ்தானத்தில் சனியும், ராகுவும் இணைந்து சஞ்சரிக்கிறார்கள். விரய ஸ்தானத்தில் விரயாதிபதி சனி வக்ரம் பெறுவதால் எதிர்பாராத விரயங்கள் ஏராளமாக வந்துசேரும். 'பணம் வந்த மறுநிமிடமே செலவாகின்றதே' என்று கவலைப்படுவீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் குறைவாகவே கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் கொஞ்சம் அதிகரிக்கலாம். கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ள நேரிடும். படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் வேறு திருப்தியற்ற வேலை கிடைக்கும். வாகனப் பழுதுச் செலவு உண்டு. பிறருக்குப் பொறுப்பு சொல்வதால் பிரச்சனை ஏற்படும்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசியில் செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கு இதுவரை அஷ்டமத்தில் சஞ்சரித்து வந்த செவ்வாய், இப்பொழுது பாக்கிய ஸ்தானத்திற்கு வருவதால் எல்லாவிதமான நன்மைகளும் கிடைக்கும். குறிப்பாக பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். பேச்சாற்றல் மிக்க ஒருவர் உங்களுக்குப் பின்னணியாக இருந்து பல நல்ல காரியங்களை முடித்துக் கொடுப்பார். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்திணைவர். வாங்கிய கடனைக் கொடுத்து மகிழ்வீர்கள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். வெளிநாடு அல்லது வெளிமாநிலம் செல்லும் முயற்சி கைகூடும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. இருப்பினும் உங்கள் ராசிநாதன் குருவிற்கு சுக்ரன் பகைக்கிரகம் ஆவார். அவர் அஷ்டமத்தில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரம் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கும். ஜீரணத் தொல்லைகளும், திடீர், திடீரென உடல்நிலையில் பாதிப்புகளும் ஏற்படலாம். பிறருக்கு பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்தால், அதனால் பிரச்சனைகள் உருவாகும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குத் தள்ளிப்போன விஷயங்கள் தானாக நடைபெறும். வியாபாரம், தொழில் செய்பவர்கள், எதிர்பார்த்த இலக்கை அடைவர். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உயர் பதவி பெறுவர். கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவ - மாணவிகளுக்குப் படிப்பில் வெற்றி உண்டு. பெண்களுக்கு பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும். நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 24, 25, 28, 30, 31, நவம்பர்: 5, 6, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.
- தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும்.
- குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும்.
சிம்ம ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் நீச்சம் பெற்று வலுவிழந்து சஞ்சரிக்கிறார். வக்ரச் சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. சர்ப்ப கிரகங்களின் ஆதிக்கமும் மேலோங்கி இருக்கிறது. எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அதன் விளைவாக மருத்துவச் செலவு கூடும். 'திறமை இருந்தும் எதையும் செய்ய இயலவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. வளர்ச்சி ஏற்பட்டாலும் விரயங்கள் அதிகரிக்கும்.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். முறையான பெயர்ச்சி இல்லாமல் அதிசாரப் பெயர்ச்சியாக இருந்தாலும் அதைப் பார்க்கும் இடங்கள் புனிதமடைகின்றன. எனவே விரயங்கள் அதிகரிக்கும். அதைச் சுபவிரயமாக மாற்றிக்கொள்வது நல்லது. தாயின் உடல்நலம் சீராகும். பழைய வாகனங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவோ, கல்யாணம் சம்பந்தமாகவோ, கடல் தாண்டிச் சென்று பணிபுரிவது சம்பந்தமாகவோ, ஏதேனும் முயற்சி செய்தால் அதில் வெற்றி கிடைக்கும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் சப்தம ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். இது அவ்வளவு நல்லதல்ல. எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. வாழ்க்கைத் துணை வழியே பிரச்சனைகள் மற்றும் குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நிலை தொல்லை ஏற்பட்டு மனக்கவலை அதிகரிக்கும். உத்தியோகமாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும் முறையாக அதில் கவனம் செலுத்த இயலாமல் தவிப்பீர்கள். இதுபோன்ற நேரங்களில் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவது நல்லது. பலரின் மனக்கசப்பிற்கு ஆளாக நேரிடும்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சுக ஸ்தானத்தில் பலம்பெறும் இந்த நேரம், ஒரு அற்புதமான நேரமாகும். சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும். இடம், வீடு வாங்கும் யோகம் உண்டு. தாய் - தந்தையரின் ஒத்துழைப்பு கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களால் லாபமும், புதிய முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும் நேரம் இது.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு 3, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சகாய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரம், அமைதியான வாழ்க்கைக்கு அடிகோலும் விதத்தில் சம்பவங்கள் நடைபெறும். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். முக்கியப் புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் யோகம் உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இலாகா மாற்றம் ஏற்படலாம். கலைஞர்களுக்கு கணிசமான தொகை கைகளில் புரளும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்களுக்கு குடும்பச்சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் நிதானம் தேவை.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 20, 21, 25, நவம்பர்: 8, 9, 15, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.
கன்னி ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் தன ஸ்தானத்தில் பரிவர்த்தனை யோகம் பெற்றுள்ளார். சுக்ரனும், புதனும் தன் வீடுகளை மாற்றி அமர்ந்திருப்பதால் பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புதிய பாதை புலப்படும். இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். ஆலய தரிசனங்களும், ஆன்மிகப் பயணங்களும் உருவாகும். விரயாதிபதி சூரியன் தன ஸ்தானத்தில் இருப்பதால் திடீர் விரயங்கள் உண்டு. என்றாலும் அதைச் சமாளிக்க, முன்னதாகவே அதற்குரிய தொகை வந்துசேரும்.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ம் இடத்தில் உச்சம்பெற்றுச் சஞ்சரிக்கிறார். அதிசாரப் பெயர்ச்சியாக இருந்தாலும் அதற்குரிய பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். 4, 7-க்கு அதிபதியானவர் குரு என்பதால் ஆரோக்கியம் சீராகும். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கல்யாணத் தடைகளும், காரியத் தடைகளும் அகலும். தாயின் உடல்நலம் சீராகும். சென்ற மாதம் ஏற்பட்ட தட்டுப்பாடுகளும், பண நெருக்கடியும் தானாகவே விலகும். எதிர்பாராத வரவுகளால் இதயம் மகிழும். குடும்ப ஒற்றுமை பலப்பட நீங்கள் எடுத்த முயற்சி பலன்தரும். பழைய பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் கும்ப ராசியில் சனி- ராகு சேர்க்கை ஏற்படுகிறது. 6-க்கு அதிபதி சனி, 6-ம் இடத்திலேயே வக்ரம் பெறுவது யோகம்தான். 'வாங்கிய கடனைக் கொடுக்க முடியவில்லையே, கொடுத்த கடனை வாங்க முடியவில்லையே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது மகிழ்ச்சி தரும் விதத்தில் கொடுக்கல் -வாங்கல்கள் ஒழுங்காகும். வளர்ச்சி அதிகரிக்கும் இந்த நேரத்தில் இதைச் செய்வோமா, அதைச் செய்வோமா என்று சிந்திப்பீர்கள். தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் விருப்ப ஓய்வு மூலம் வெளிவந்து புது முயற்சியில் ஈடுபட்டு பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் நல்ல மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக தொழில் நடக்கும் இடத்தை மாற்றம் செய்ய விரும்புவீர்கள். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நல்லவிதமாக நடைபெறும். உடன்பிறந்தவர்கள் பகை மறந்து செயல்படுவர். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். உடல்நலனில் மட்டும் சிறுசிறு தொல்லைகள் வந்து அலைமோதும். எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்பு கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். இப்ெபாழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலவி வந்த பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். குறிப்பாக பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். நூதனப் பொருட்களின் சேர்க்கை உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு புதிய கூட்டாளிகள் வந்திணைவர். உத்தியோகம், தொழில் செய்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் தேர்ச்சி உண்டு. பெண்களுக்குப் பொருளாதார நிலை உயரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 21, 22, 27, 28, நவம்பர்: 7, 8, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- இளஞ்சிவப்பு.
துலாம் ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அதிக விரயம் ஏற்படும். லாபாதிபதி சூரியனும் நீச்சம் பெற்றிருக்கிறார். 10-ல் உள்ள குருவால் பதவி மாற்றம், இடமாற்றம், ஊர் மாற்றம் ஏற்படும் சூழல் உண்டு. மாதத்தின் பிற்பகுதியில் சுக்ரன் பெயர்ச்சிக்குப் பிறகு, மகிழ்ச்சியான தகவல் வந்துசேரும். பொருளாதாரத்தில் இருந்த ஏற்ற இறக்க நிலை மாறும். எதையும் ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்துச் செயல்பட வேண்டிய மாதம் இது.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை பலத்தால் நன்மை கிடைக்கும். என்றாலும் 10-ம் இடத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் திடீரென மாற்றப்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் மனதைப் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படும். அண்ணன், தம்பிகளுக்குள் ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் முடிவிற்கு வருவதில் தாமதம் ஏற்படும். திருமணத்தடை உருவாகும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால் பண நெருக்கடியின் காரணமாக ஒரு சிலர் சொத்துக்களை விற்க நேரிடும். பாகப் பிரிவினை திருப்தி தராமல் போகலாம். பிள்ளைகளால் மீண்டும் பிரச்சனை தலைதூக்கும். பெற்றோரின் அனுசரிப்பு கொஞ்சம் குறையும். 'நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கின்றதே' என்று கவலைப்படுவீர்கள். பரம்பரை நோயின் தாக்கத்தால் பதற்றம் ஏற்படும். முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது.
விருச்சிக - செவ்வாய்
இக்காலம் ஒரு இனிய காலமாகும். ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு தனாதிபதியான செவ்வாய், தன ஸ்தானத்திற்கு வரும்போது, அனைத்து துறையிலும் வெற்றி கிடைக்கும். எதிர் கருத்து உள்ளவர்கள் கூட இணக்கமாக நடந்துகொள்வர். குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் இருந்த மந்தநிலை மாறும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. வீண் வாக்குவாதங்களால் வந்த பிரச்சனை அகலும். வருமானம் உயரும். பிள்ளை களின் வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சி பலன்தரும். ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் வருகிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. எனவே இக்காலத்தில் இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். உங்கள் ராசிநாதன் உங்கள் ராசிக்கே வருவது யோகம்தான். உடல்நலன் சீராகும். செல்வநிலை உயரும். உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். அரசு வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அது கைகூடும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர் களுக்கு கூட்டாளிகளால் நன்மை உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்த இலக்கை அடைய இயலும். கலைஞர்களுக்கு நட்பால் நன்மை உண்டு. மாணவ - மாணவிகளுக்கு பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு குடும்பச்சுமை குறையும். உடன்பிறந்தவர்களால் நன்மை உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 18, 19, 23, 24, 30, 31, நவம்பர்: 9, 10, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.
விருச்சிக ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியை உச்சம் பெற்ற குரு பகவான் பார்க்கிறார். அது 5-ம் பார்வையாக இருப்பதால் பொன் கொழிக்கும் மாதம் இது. எடுத்த முயற்சிகள் யாவிலும் வெற்றி கிடைக்கும். அடுத்தடுத்து ஆதாயம் தரும் தகவல் வந்து கொண்டேயிருக்கும். 'நீங்கள் கொடுத்து வைத்தவர்' என்று கூட இருப்பவர்கள் பாராட்டுவார்கள். பொருளாதார நிலை உச்சம் அடையும். புதிய திருப்பங்கள் ஏற்படும். நீங்கள் தேர்ந்தெடுத்த களம் எதுவாக இருந்தாலும் அதில் வெற்றி கிடைக்கும் மாதம் இது.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை பலத்தால் பலவித நன்மைகள் கிடைக்கும். குரு பார்க்க கோடி நன்மை என்பதால், இக்காலத்தில் உடல்நலம் சீராகும். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். ஆதாயம் தரும் தகவல்கள் அதிக அளவில் வந்து மகிழ்விக்கும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். பொதுநலத்தில் ஈடுபடுபவர்களுக்கு அதிகார அந்தஸ்து தேடிவரும். மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். இந்த நேரத்தில் குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் கைகூடும். ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். வாகனம் வாங்குவது, தொழில் தொடங்குவது ஆகியவற்றில் ஈடுபடுவீர்கள்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் சுக ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். 'கும்ப ராகு, குடம் குடமாக கொடுக்கும்' என்பார்கள். அந்த அடிப்படையில் பொருளாதார நிலை உயரும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். கடை திறப்பு விழா, கட்டிடத் திறப்பு விழா போன்றவற்றில் கவனம் செலுத்துவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு ஏற்படும். தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு கைகூடும். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். சனி வக்ர இயக்கத்தில் இருப்பதால் ஆரோக்கியத் தொல்லை அகலும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்குச் செவ்வாய் வருகிறார். உங்கள் ராசிக்கும், 6-ம் இடத்திற்கும் அதிபதியானவர் செவ்வாய். அவர் உங்கள் ராசிக்கே வருவது யோகமான நேரமாகும். இடம், பூமி வாங்கும் வாய்ப்பு உண்டு. எதைச் செய்ய நினைத்தாலும், அதை உடனடியாகச் செய்து முடிக்கும் வகையில் பொருளாதார நிலை இடம் கொடுக்கும். தொழிலில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகள் உங்கள் கருத்துக்களை ஏற்றுக்கொள்வர். கேட்ட சலுகைகளையும் வழங்குவர். இது ஒரு பொற்காலமாகும்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு விரயாதிபதியான சுக்ரன் விரய ஸ்தானத்திற்கு வரும்போது, கூடுதல் விரயம் ஏற்படத்தான் செய்யும். என்றாலும் அதை சுபவிரயமாக மாற்றிக்கொள்வது நல்லது. இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழலாம். வாடகைக் கட்டிடத்தில் நடைபெறும் தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். இடமாற்றம் எளிதில் கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புகழ் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு கணிசமான தொகை கைகளில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு உண்டு. கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். மாணவ - மாணவிகளுக்கு மதிப்பெண் அதிகம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு வருமானம் போதுமானதாக இருக்கும். வசதி வாய்ப்புகள் பெருகும். சுபச் செய்தி உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 19, 21, 27, 28, நவம்பர்: 1, 2, 11, 12, 15.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.
- வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
- பூர்வீகச் சொத்துக்களால் லாபமும், புதிய முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும் நேரம் இது.
மேஷ ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சூரியனும், சகாய ஸ்தானாதிபதி புதனும் இணைந்து சஞ்சரிப்பதால் மாதம் முழுவதும் மகிழ்ச்சி அதிகரிக்கும். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். அவரது பார்வை பலத்தால் பலவித நன்மைகள் கிடைக்கும். ஆரோக்கியத் தொல்லை அகலும். அடுக்கடுக்காக வந்த மருத்துவச் செலவு குறையும். இடமாற்றத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அது கைகூடும். போட்டிகளுக்கு மத்தியில் தொழில் முன்னேற்றம் உண்டு. தொல்லை தந்த எதிரிகள் விலகும் சூழ்நிலை உருவாகும். பயணங்களால் பலன் கிடைக்கும். வெளிநாட்டு முயற்சி அனுகூலம் தருவதாக அமையும்.
சனி-ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் லாப ஸ்தானத்தில் சனி, ராகு சேர்க்கை பெற்று சஞ்சரிக்கிறார்கள். லாபாதிபதியான சனி லாப ஸ்தானத்தில் இருப்பது யோகம்தான். சனி வக்ரம் பெற்றிருப்பதால் பயப்பட தேவையில்லை. வருமானம் திருப்திகரமாக இருந்தாலும் செலவு கூடும். திட்டமிட்டுச் செலவு செய்ய இயலாது. திடீர் செலவுகள் மனக்கலக்கத்தை உருவாக்கும். கும்ப ராசியில் உள்ள சனி உங்களுக்கு நன்மைகளையே வழங்கும். கூட்டுத் தொழில் செய்வோர், ஏற்புடைய விதத்தில் லாபம் காண்பர்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதனாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்குபவர், செவ்வாய். அவர் தன் சொந்த வீட்டிற்கு வரும் இந்த நேரத்தில் எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். இலாகா மாற்றம், தொழில் வளர்ச்சிக்கான மூலதனம் கேட்ட இடத்தில் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த இடம், பூமி விற்பனை கைகூடும். கடமையைச் செவ்வனே செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். ஆயினும் அஷ்டமத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால், ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மருத்துவச் செலவும், அதனால் மன வருத்தமும் உருவாகும். எக்காரணம் கொண்டும் தன்னம்பிக்கையை தளரவிட வேண்டாம்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. எனவே இக்காலத்தில் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டவர் களுக்கு, நல்ல வேலை கிடைத்து உதிரி வருமானம் வரும். குடும்பத்தில் ஒருவருக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் நேரம் இது. வருமானம் திருப்தி தரும் விதத்தில் அமைவதால் கொடுக்கல் - வாங்கல் ஒழுங்காகும். பெற்றோரின் உடல்நலனில் கவனம் தேவை.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய திருப்பங்கள் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும், பாராட்டும் உண்டு. கலைஞர்களுக்கு மாதத்தின் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். மாணவ-மாணவிகளுக்கு கல்வி முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு வருமானம் திருப்தி தரும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்கும் வாய்ப்பு உண்டு.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 27, 28, நவம்பர்: 1, 2, 7, 8, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
ரிஷப ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் நீச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். ஐப்பசி 17-ந் தேதி துலாம் ராசிக்குச் சென்று ஆட்சி பெறுகிறார். எனவே மாதத்தின் முற்பாதியைக் காட்டிலும் பிற்பாதி பலன் தரும். எதிர்பார்த்தபடி பொருளாதாரநிலை உயரும். உத்தியோகத்தில் நீடிப்பும் உயர் அதிகாரிகளின் ஆதரவும் உண்டு. மனப்பயம் அகன்று மகிழ்ச்சி கூடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும் யோகம் உண்டு.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு பகைக் கிரகமாக விளங்குபவர் குரு பகவான். அவர் சுக்ரனுக்கு பகைக்கிரகமாக உச்சம் பெற்றாலும் நவக்கிரகத்தில் சுபகிரகம் என்று செயல்படுவதால், அதன் பார்வைக்குப் பலன் உண்டு. அந்த அடிப்படையில் கல்யாண முயற்சி கைகூடும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். முன்னோர் வழி சொத்துக்களில் முறையான பங்கீடுகள் கிடைக்கும். ஆர்வம் காட்டிய புதிய தொழிலில் அதிக லாபம் கிடைக்கும்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் தொழில் ஸ்தானத்தில் சனி, ராகு சேர்க்கை பெற்று சஞ்சரிக்கிறார்கள். சனி வக்ரம் பெற்றிருந்தாலும் தன் சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வளர்ச்சி சிறப்பாகவே இருக்கும். ஒரு சில குறுக்கீடுகள் ஏற்படலாம். தைரியத்தோடு எதையும் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு என்பதால் எதைப் பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். இல்லம் தேடி லாபம் வந்து கொண்டேயிருக்கும். பாக்கிய ஸ்தானாதிபதியாகவும் சனி இருப்பதால், குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். இதுவரை குடும்பத்தில் நடைபெறாதிருந்த சுபகாரியம் இப்பொழுது நடைபெறும்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும்பொழுது இடம், பூமியால் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். எதிர்பாராத பயணங்களால் லாபம் கிடைக்கும். துணிந்து சில முடிவுகளை எடுத்து மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். தொழில் ரீதியாக முக்கிய முடிவெடுக்கும் பொழுது, அனுபவஸ்தர்களைக் கலந்து ஆலோசிப்பது நல்லது. உடன்பிறப்புகளின் வழியில் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறலாம். பொதுநலத்தில் இருப்பவர்களுக்கு இக்காலம் ஒரு பொற்காலமாகும்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. எனவே இக்காலத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அரசுவழிச் சலுகைகள் கிடைக்கும். ஆபரணப் பொருள் சேர்க்கை உண்டு. அரசாங்க வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு அது கைகூடும். தொழில் போட்டிகள் அகலும். வருமானம் உயரும். வாகனம் வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. 'உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கவில்லையே' என்று வருந்தியவர்களுக்கு, இப்பொழுது உரிய பலன் கிடைக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கூடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு போட்டிகள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவி உண்டு. கலைஞர்களுக்கு பாராட்டும், புகழும் கூடும். மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு. பெண்களுக்கு பகை மாறும். பணத்தேவை உடனுக்குடன் பூர்த்தியாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 18, 19, 29, 30, நவம்பர்: 2, 4, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்: நீலம்.
மிதுன ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். அதேநேரம் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான சுக்ரன் நீச்சம் பெற்றிருக்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். மருத்துவச் செலவு கூடும். இல்லத்திலும் பிரச்சனை, இடம் பூமியாலும் பிரச்சனை என்ற நிலை உருவாகும். 'நல்ல காரியங்கள் நடைபெற தாமதமாகின்றதே' என்று கவலைப்படுவீர்கள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு குறையும்.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை பலத்தால் பலவித நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக உத்தியோக மாற்றம் உறுதியாகும். ஊா் மாற்றம், இடமாற்றம் அமையும் பொழுது சுய ஜாதகத்தின் அடிப்படையில் அதை ஆராய்ந்து ஏற்றுக்கொள்வது நல்லது. ஜென்ம குரு விலகு வதால் இனி பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. என்றாலும் பஞ்சமாதிபதியும், பாக்கிய ஸ்தானாதிபதியும் நீச்சம் பெறுகிறார். எனவே எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. தைரியமும், தன்னம்பிக்கையும் குறையும். தடைகளை மீறி முன்னேற்றம் காண முயற்சி எடுப்பீர்கள்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் பாக்கிய ஸ்தானத்தில் சனியும், ராகுவும் சேர்க்கை பெற்று சஞ்சரிக்கிறார்கள். பாக்கிய ஸ்தானாதிபதி வக்ரம் பெற்றிருப்பதால் ஒரு வழியில் வருமானம் வந்தால் மறுவழியில் செலவு இருமடங்காகும். குடும்ப உறுப்பினர்களால் பிரச்சனைகளும், மனக்கசப்புகளும் ஏற்படலாம். நம்பி எதையும் செய்ய இயலாது. பெற்றோர் வழியில் பெரும் செலவு ஏற்படும். 'கற்ற கல்விக்கு நல்ல வேலை கிடைக்கவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி, விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் 6-ம் இடத்திற்கு வரும் இந்த நேரம் கொஞ்சம் கவனமாக செயல்பட வேண்டும். எதிர்ப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத விதத்தில் இலாகா மாற்றம் வந்து மன வருத்தத்தை உருவாக்கும். வளர்ச்சியில் ஏற்படும் குறுக்கீடுகளை சமாளிக்க கைமாற்று வாங்கும் சூழ்நிலை கூட ஏற்படலாம். வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டுமென்று நினைப்பவர்களுக்கு அதில் தடைகளும், தாமதங்களும் ஏற்படலாம். எதிலும் சிந்தித்துச் செயல்படுவதே நல்லது.
துலாம்-சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. இதுவரை நீச்சம் பெற்ற சுக்ரன், இப்பொழுது சொந்த வீட்டிற்கு வருவதால் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடிவரப் போகிறது. நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு புதிய முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். அரசு வழிகளில் எதிர்பார்த்த சலுகைகள் உண்டு. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு பிரச்சனைகளில் இருந்து விடுபடும் வாய்ப்பு உண்டு. உடல்நலத்தில் மட்டும் கவனம் தேவை. பொதுவாழ்வில் உள்ளவர்கள் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு பணநெருக்கடி அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. கலைஞர்களுக்கு அதிக முயற்சியின் பேரில் ஒப்பந்தங்கள் வரலாம். மாணவ - மாணவிகளுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு வருமானத்தை விட செலவு கூடும். பக்கத்தில் உள்ளவர்களிடம் பகையை வளர்த்துக்கொள்ள வேண்டாம்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 20, 21, நவம்பர்: 2, 5, 6, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.
கடக ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் அஷ்டமத்துச் சனி வக்ரம் பெற்றிருக்கிறார். அவரோடு ராகுவும், இணைந்திருக்கிறார். எனவே நல்ல சந்தர்ப்பங்கள் கை நழுவிச் செல்லும். தனாதிபதி சூரியன் நீச்சம்பெறுவதால் வரவேண்டிய பாக்கி கள் ஸ்தம்பித்து நிற்கும். எவ்வளவு முயற்சி எடுத்தும், பிரபலஸ்தர்களின் நட்பை பெற்றிருந்தாலும் எடுத்த முயற்சிகளில் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. விரயங்கள் கூடும். பிறரை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் நன்மைக்கு வழிகாட்டும்.
உச்சம் பெற்ற குரு
மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியான கடக ராசியில் குரு உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். முறையான பெயர்ச்சி இல்லாமல் அதிசார பெயர்ச்சியாக இருந்தாலும், குரு பகவான் பார்க்கும் இடங்கள் புனிதமடைகின்றன. எனவே படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். 'வரன்கள் வந்து வாசலோடு நின்று விட்டதே' என்று கவலைப்பட்டவர்களுக்கு, இப்பொழுது மகிழ்ச்சியான செய்தி வந்துசேரும். சொத்துப் பிரச்சனை சுமுகமாக முடியும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். இடமாற்றம், வீடு மாற்றம் எளிதில் அமையும்.
சனி - ராகு சேர்க்கை
மாதம் முழுவதும் அஷ்டமத்தில் சனியும், ராகுவும் சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். இது அவ்வளவு நல்லதல்ல. மன அமைதிக் குறைவை உண்டாக்கும். அதிக விரயங்களால் கலக்கமும், இடையூறுகளை சமாளிக்க முடியாமல் தடுமாற்றமும் வரலாம். இடமாற்றம், வீடு மாற்றம் ஏற்படலாம். உத்தியோகத்தில் உங்கள் பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். புதியவர்களை நம்பி ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கூடுதல் கவனம் தேவை. அனுபவஸ்தர்களின் ஆலோசனை இக்காலத்தில் கைகொடுக்கும்.
விருச்சிக - செவ்வாய்
ஐப்பசி 10-ந் தேதி விருச்சிக ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பஞ்சம ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் பொழுது, நெஞ்சம் மகிழும் சம்பவங்கள் நிறைய நடைபெறும். எதை எந்த நேரத்தில் செய்ய நிைனத்தாலும், அதை உடனடியாக செய்து முடிப்பீர்கள். சுபகாரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும் நேரம் இது. பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும்.
துலாம் - சுக்ரன்
ஐப்பசி 17-ந் தேதி, துலாம் ராசிக்கு சுக்ரன் வருகிறார். அப்பொழுது 'புத சுக்ர யோக'மும், 'புத ஆதித்ய யோக'மும் ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சுக ஸ்தானத்தில் பலம்பெறும் இந்த நேரம், தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. பட்ட சிரமங்கள் தீர்ந்தது என்று சொல்லும் அளவிற்கு நல்ல சம்பவங்கள் நடைபெறும். தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் கைகூடும். தொழிலில் தனித்து இயங்க முற்படுவீர்கள். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பிரச்சனைகள் உருவெடுக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிரிகளால் ஏமாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களால் தொல்லை உண்டு. கலைஞர்களுக்குச் சென்ற மாதத்தைக் காட்டிலும் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். மாணவ-மாணவிகளுக்கு படிப்பில் கவனம் தேவை. பெண்கள் எதையும் கலந்து ஆலோசித்துச் செய்வது நல்லது. மாதத்தின் பிற்பகுதி மகிழ்ச்சி தரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
அக்டோபர்: 18, 19, 22, 23, நவம்பர்: 3, 4, 7, 8, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.
- இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற டிசம்பர் மாதம் 30-ந்தேதி நடக்கிறது.
- ஆகம பண்டிதர்கள், அர்ச்சகர்கள், சாஸ்திர நிபுணர்களுடன் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா வருகிற டிசம்பர் மாதம் 30-ந்தேதி நடக்கிறது.
அதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி ஆகிய 2 நாட்கள் மட்டுமே சொர்க்க வாசல் திறந்து வைக்கப்படுகின்றன. அதன் வழியாக பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் நடைமுறையைப்போல் 10 நாட்களுக்கு சொர்க்கவாசலை திறந்து வைக்க, கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அரசு முடிவு செய்தது. அப்போது பல பீடாதிபதிகள், மடாதிபதிகள் அதற்கு ஆதரவு தெரிவித்து கடிதங்களை அளித்தனர். அதன்பேரில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் 10 நாட்கள் சொர்க்க வாசல் தரிசன நடைமுறையை தொடர்ந்தனர்.
ஆனால், இது ஆகம சாஸ்திரபடி விரோதமானது என்றும், 10 நாட்கள் சொர்க்கவாசல் தரிசனம் நடப்பதால், டோக்கன்களுக்காக பக்தர்கள் ஒரே நேரத்தில் திரளுவதால் தள்ளுமுள்ளு, நெரிசல் ஏற்படுவதாக சிலர் கருத்து தெரிவித்தனர்.
இதையடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மீண்டும் 2 நாட்கள் மட்டுமே சொர்க்க வாசல் தரிசனத்தை வழங்கும் திட்டத்தை அமல்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்காக, ஆகம பண்டிதர்கள், அர்ச்சகர்கள், சாஸ்திர நிபுணர்களுடன் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, தேவஸ்தான உயர் அதிகாரிகள், அர்ச்சகர்கள், ஆகம நிபுணர்கள் ஆகியோருடன் இதுதொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது. விரைவில் சொர்க்கவாசல் தரிசனம் குறித்த இறுதி முடிவு வெளியாகும், என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பாண்டவர்கள் சார்பில் பகவான் கிருஷ்ணர், கவுரவர்கள் இருக்கும் அஸ்தினாபுரத்துக்கு தூது சென்றார்.
- ஆலயம் கிழக்கு நோக்கிய நிலையில் மூன்று நிலை ராஜகோபுரங்களுடன் காட்சியளிக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பாடகம் பகுதியில் அமைந்துள்ளது, பாண்டவதூத பெருமாள் கோவில். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவில் 108 திவ்யதேச வைணவ தலங்களில் 49-வது கோவிலாகும். இங்கு, பாண்டவர்களுக்காக துரியோதனிடம் தூது சென்ற கோலத்தில் கிருஷ்ண பகவான் 25 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்.
தல வரலாறு
மகாபாரத காலத்தில், பாண்டவர்களில் மூத்தவரான தருமர், கவுரவர்கள் சூழ்ச்சியால் சூதாட்டத்தில் தன் செல்வங்களையும், நாட்டையும் இழந்தார். பின்பு கவுரவர்கள், பாண்டவர்களை 13 வருடம் வன வாசம் செல்ல செய்தனர். வனவாசம் சென்று திரும்பிய நிலையில் பாண்டவர்கள், ஐவருக்கும் 5 ஊர் இல்லையென்றாலும், 5 வீடாவது தர வேண்டும் என்று கிருஷ்ணரிடம் முறையிட்டனர்.
இதையடுத்து பாண்டவர்கள் சார்பில் பகவான் கிருஷ்ணர், கவுரவர்கள் இருக்கும் அஸ்தினாபுரத்துக்கு தூது சென்றார். பாண்டவர்களின் பலமே கிருஷ்ணர்தான் என்பதை அறிந்திருந்த துரியோதனன், அவரை அவமானப்படுத்த எண்ணினான். இதற்காக, அஸ்தினாபுரம் அரண்மனையில் கிருஷ்ணர் அமர்வதற்காக ஆசனம் அமைக்கப்பட்டது. அதன் முன்பாக ஆழமான பள்ளம் தோண்டப்பட்டு, அதன்மேல் பந்தலைப் போட்டு மறைத்தனர்.
அஸ்தினாபுரம் அரண்மனைக்கு வந்த கிருஷ்ண பகவான், தனக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்தார். உடனே, கிருஷ்ணர் தான் அமர்ந்த ஆசனத்துடன் பள்ளத்தில் விழுந்தார். அந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருந்த துரியோதனன், அவரை கொல்ல காவலர்களிடம் உத்தரவிட்டார். உடனே அவரைத் தாக்க சில மல்லர்கள் முயன்றனர்.
மல்லர்கள் பள்ளத்திற்குள் இறங்கியவுடன் கிருஷ் ணர் அவர்களை அழித்து, தன் விஸ்வரூப தரிசனத்தை காட்டி ஒங்கி உயர்ந்து நின்றார். அதைப் பார்த்த அவையில் இருந்த அனைவருமே மிரண்டு போயினர். பாண்டவர்களுக்காக தூது சென்றதால் கிருஷ்ணர், 'பாண்டவதூத பெருமாள்' என அழைக்கப்படுகிறார்.
பாரதப் போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்த பிறகு, பரீட்சித்து மகாராஜாவின் மகனான ஜனமேஜயர் என்ற அரசன், வைசம்பாயனர் என்ற மகரிஷியிடம் பாரதக் கதைகளை கேட்டு வந்தார். அப்பொழுது அரசனுக்கு கிருஷ்ண பகவானின் விஸ்வரூப தரிசனம் காண வேண்டும் என்ற ஆவல் வந்தது. அவர் மகரிஷியிடம், தனக்கு கிருஷ்ண பகவானின் விஸ்வரூபத்தை காண வேண்டும் என்றும், அதற்கான வழிமுறைகளை கூறும்படியும் வேண்டினார்.
அந்த மகரிஷியின் அறிவுரையின்படி, காஞ்சிபுரம் வந்து தவம் செய்தார், அரசர். தவத்தின் பயனாக பெரு மாள், தன் பாண்டவதூது கோலத்தை இத்தலத்தில் அருளினார். மேலும், திருதராஷ்டிரனுக்கும் கண நேரம் கண் பார்வை தந்து தனது விஸ்வரூப தரிசனத்தை இத்தலத்தில் காட்டி அருளினார் என்று கூறப்படுகிறது.

கோவில் தோற்றம், கொடிமரம், பலிபீடம்
கோவில் அமைப்பு
ஆலயம் கிழக்கு நோக்கிய நிலையில் மூன்று நிலை ராஜகோபுரங்களுடன் காட்சியளிக்கிறது. இக்கோவில் பல்லவர்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. பிறகு சோழர்கள், விஜயநகர பேரரசர்களால் புனரமைக்கப்பட்டதாகவும், குலோத்துங்க சோழன், ராஜராஜ சோழன் ஆகியோரின் காலத்தில் கோவிலின் சுற்றுச்சுவர் உள்ளிட்டவைகள் எழுப்பப்பட்டு, இரண்டு குளங்கள் அமைக்கப்பட்டதாகவும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குள்ள கல்வெட்டுகளில் பாண்டவதூத பெருமாள் 'தூத ஹரி' என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.
கோவில் ராஜகோபுரம் நுழைவுவாசலில் பழமையான அற்புதமான சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனைத் தாண்டி பலிபீடம், கொடிமரம் காணப்படு கிறது. காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான வைணவ தலங்களில் ஒன்றான இக்கோலிலில் மூலவர் பாண்டவ தூதர் 25 அடி உயரத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் புன்னகையோடு காட்சி தருகிறார்.
மூலவரான கிருஷ்ணர் பத்ர விமானத்தின் கீழ் அமர்ந்த நிலையில் காட்சி தருவது இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாத அற்புதமான காட்சியாகும். வலது காலை மடக்கி, அர்த்த பத்மாசன கோலத்தில் காட்சி தருகிறார். மற்ற கோவில்களைப் போல் நான்கு கரங்களுடன் இல்லாமல், இரண்டு திருக்கரங்களுடனேயே அருள்பாலிக்கிறார். வலது கரம் அபய முத்திரை காட்டியும், இடது கரம் வரதமுத்திரை காட்டியும் உள்ளது. பெருமாளை குனிந்து வணங்கும்போது மெய் சிலிர்ப்பதை உணர முடிகிறது.
இத்தலத்தில் திருமாலின் உற்சவர் சிலைகளில் ஸ்ரீதேவி பூதேவிக்கு பதிலாக ருக்மணி, சத்தியபாமா இருவரும் எழுந்தருளியுள்ளனர். ஆண்டாள் நாச்சியார், நர்த்தன கண்ணன், சுதர்சனர் ஆகிய உற்சவ மூர்த்திகளையும் கருவறையில் காணலாம்.
இக்கோவிலில் உள்ள அர்த்த மண்டபத்தில் ஆழ்வார்கள், ராமானுஜர் உள்ளிட்டோரை தரிசிக்கலாம். மூலவருக்கு தெற்குபுறம் ருக்மணிக்கு தனிச் சன்னிதி உள்ளது. வெளிப் பிரகாரத்தில் சக்கரத்தாழ்வாரின் பின்புறத்தில் தனிச் சன்னிதியில் நரசிம்மர் காட்சி அளிக்கிறார். கோவிலின் வடகிழக்கு பகுதியில் மத்ஸ்ய தீர்த்தம் உள்ளது. பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தல இறைவனை மங்களாசாசனம் செய்துள்ளனர்.
திருவிழாக்கள்
கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி, முக்கோடி ஏகாதசி, பங்குனி உத்திரம், கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் சாற்று முறை உற்சவம் ஆகிய விழாக்கள் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
பாண்டவர்களுக்கு கிருஷ்ணன் கூடவே இருந்து உதவி செய்தது போல், இத்தலத்து இறைவனை வணங்கினால் கஷ்டப்படும் பக்தர்களை கை கொடுத்து காப்பார் என்பது நம்பிக்கையாக உள்ளது. கிருஷ்ணன், இத்தலத்தில் தன் பாதங்களை பூமியில் அழுத்தி விஸ்வபாதயோக சக்திகளை கொண்டு அருளும் தலமாக இருப்பதால் இங்கு அடிப்பிரதட்சணம், அங்கப்பிரதட்சணம் செய்ப ர்களின் 72,000 அங்கநாடிகளும் துடிப்புடன் செயல்பட்டு சோதனைகளும், துன்பங்களும் விலகும் என்பது நம்பிக்கை.
பாண்டவதூத பெருமாளை வணங்குபவர்களுக்கு காரியத் தடை, திருமணத் தடை நீங்குவதோடு ஆனந்த வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் பக் தர்கள் தரிசனம் செய்வதற்காக கோவில் நடை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
காஞ்சிபுரத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு ஏராளமான பேருந்து, ஆட்டோ வசதிகள் உள்ளன.






