என் மலர்tooltip icon

    வழிபாடு

    • செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியை வீட்டுக்கு வரவேற்கும் நாளாகும்.
    • சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் விரதம் இருக்கலாம்.

    மகா விஷ்ணுவின் துணைவியான மகாலட்சுமி வரங்களை அள்ளித் தருவதால் 'வரலட்சுமி' என அழைக்கப்படுகிறார். செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியை வீட்டுக்கு வரவேற்கும் நாளாகும்.

    மகாலட்சுமி தேவியை வழிபட்டு வேண்டிய வரம் பெறும் சிறப்பான விரதம் வரலட்சுமி விரதமாகும்.

    இந்த விரதத்தை திருமணமான சுமங்கலிப் பெண்களும், திருமணம் ஆகாத கன்னிப் பெண்களும் கடைபிடிக்கலாம்.

    வரலட்சுமி விரதத்தை ஒவ்வொரு ஆண்டும் தவறாது கடைபிடித்து வரும் வீட்டில் வறுமை, திருமணத் தடை இருக்காது. திருமணமான பெண்களுக்கு மாங்கல்ய பலமும் கிடைக்கும். சில குடும்பத்தில் வரலட்சுமி பூஜை செய்யும் வழக்கம் கிடையாது. அவர்கள் பூஜை செய்யும் வழக்கம் உள்ளவர்கள் வீட்டிற்கு சென்று பூஜை செய்யலாம்.

    விரதத்துக்கு முதல் நாள் வீட்டை சுத்தம் செய்து பசு மாட்டின் கோமியம் தெளித்து மாவிலைத் தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையில், பலகையை போட்டு, அதன் மீது மாக்கோலம் போட வேண்டும்.

    மகாலட்சுமியின் படம் வைத்து கோலத்திற்கு நடுவில் நெல் பரப்பி தட்டு வைத்து அதன் மீது கலசம் வைத்து, பட்டுப்பாவாடை , நகைகள் போட்டு மஞ்சள், குங்குமம் வைத்து, பூச்சூட்டி, கும்பத்தை அலங்காரம் செய்து கட்டி, கோலமிட்டு மகாலட்சுமிக்கு வரவேற்பு கொடுத்து வீட்டிற்கு அழைத்து கலசத்தில் ஆவாகனம் செய்ய வேண்டும்.

    மறுநாள் வெள்ளிக்கிழமை நோன்பு நாளில் நோன்பு சரடை கும்பத்தோடு வைத்து, பஞ்சமுக நெய் விளக்கு ஏற்றி கும்பத்திற்கு வெற்றிலை, பாக்கு, பழம், அன்னம் நெய் ஊற்றிய சர்க்கரை பொங்கல் , சுண்டல் போன்ற உணவுப்பொருட்கள் படைக்க வேண்டும்.

    வரலட்சுமியின் முன் வைத்திருந்த நோன்பு சரடை மஞ்சள் குங்குமம் இட்ட மலர்களோடு சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். வரலட்சுமியிடம் வேண்டிய வரத்தை கேட்டு வரலட்சுமியின் ஸ்தோத்திரங்களை கூறி, தூப தீப ஆராதனைகளை செய்து வர லட்சுமி தாயை வழிபாடு செய்ய வேண்டும்.

    பூஜையின் போது அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்க வேண்டும். சுமங்கலி பெண்கள் இந்த விரதத்தின் போது தாலிக்கயிற்றை வைத்து பூஜை செய்து அதனை அணிந்து கொள்ள வேண்டும்.

    பெண்கள் வரலட்சுமி விரதம் இருந்தால் அஷ்ட லட்சுமிகளும் மகிழ்வர். இதனால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். திருமண தோஷம் உள்ள கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

    வயது முதிர்ந்த சுமங்கலிகளுக்கு மாங்கல்ய பலம் அதிகம். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 8-ம் இடமும், 8-ம் அதிபதியும் 8-ல் நின்ற கிரகமுமே ஆயுள், மாங்கல்ய பலத்தை தீர்மானிக்கும். 8-ம் அதிபதி சுப கிரக சம்பந்தத்துடன் வலுப்பெற்று விட்டால் அந்த பெண் தன் கணவனுடன் தீர்க்க சுமங்கலியாக தனது சொந்த பந்தங்களுடன் நீண்ட நெடுங்காலம் வாழ்வார். அத்துடன் செவ்வாயும்,சுக்கிரனும் பலம் பெற்றால் லட்சுமி கடாட்சம் நிறைந்த தீர்க்கசுமங்கலியாவார்.


    இத்தகைய அம்சம் நிறைந்த சுமங்கலிகளிடம் வரலட்சுமி நோன்பு அன்று ஆசி பெற்றால் எத்தகைய திருமணத்தடையும் அகலும். மாங்கல்ய பலம் அதிகரிக்கும். அதனால் பூஜைக்கு வயதான சுமங்கலிப் பெண்களை அழைத்து உணவு கொடுத்து வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல் கொடுத்து ஆசி பெறுவது மிகச் சிறப்பு. மறுநாள் புனர் பூஜை செய்து விரதத்தை முடிக்க வேண்டும்.

    இந்த பூஜையை தொடர்ந்து ஆண்டு தோறும் செய்து வந்தால் லட்சுமி இல்லம் தேடி வருவாள். ஆடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் அமைதி கிடைக்கும். வருடம் முழுவதும் வசந்த காலமாகும். லட்சுமி கவசம் பாடி வழிபாடு செய்தால் பணத் தேவைகள் பூர்த்தி ஆகும்.

    • சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆடி-30 (வியாழக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: தசமி காலை 7.04 மணி வரை பிறகு ஏகாதசி

    நட்சத்திரம்: கேட்டை காலை 10.30 மணி வரை பிறகு மூலம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி காலை சிறப்பு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-தாமதம்

    ரிஷபம்-ஆதாயம்

    மிதுனம்-சிந்தனை

    கடகம்-உழைப்பு

    சிம்மம்-உதவி

    கன்னி-ஆசை

    துலாம்- பயணம்

    விருச்சிகம்-விவேகம்

    தனுசு- இன்பம்

    மகரம்-சாதனை

    கும்பம்-விருத்தி

    மீனம்-பொறுப்பு

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • கோட்புலி நாயனார் குருபூஜை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆடி-29 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: நவமி காலை 7 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: அனுஷம் காலை 9.47 மணி வரை பிறகு கேட்டை

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். ராமேஸ்வரம் சுவாமி, அம்பாள் இருவரும் தங்கக் கேடயச் சப்பரத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு. கோட்புலி நாயனார் குருபூஜை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி சிறப்பு திருமஞ்சனம். வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் பவனி. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நட்பு

    ரிஷபம்-விவேகம்

    மிதுனம்-பொறுமை

    கடகம்-நன்மை

    சிம்மம்-வெற்றி

    கன்னி-நலம்

    துலாம்- அமைதி

    விருச்சிகம்-ஜெயம்

    தனுசு- யோகம்

    மகரம்-சாந்தம்

    கும்பம்-வரவு

    மீனம்-மாற்றம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம்.
    • தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது.

    சென்னை:

    கோவில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம், இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது.

    ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம், தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம்.

    ஆனால் தேங்காய் உடைப்பதில் ஒரு சிறிய தத்துவ தகவல். இதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது.

    தேங்காயின் மேல் கடுமையான ஓடும், அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும், அதனுள் நீரும் உள்ளது.

    உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும்.

    உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.

    இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது.

    ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.

    ஈசுவர சன்னிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தைக் காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.

    இவ்வளவு உட்கருத்து இருப்பதால்தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம் முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணரவேண்டும்.

    • தமிழ்நாட்டுப் பெண்கள் அனுசரிக்கும் விரதம்.
    • பார்வதிக்கு, வரட்சுமி விரதத்தை பற்றி சிவபெருமான் எடுத்துரைத்தார்.

    ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில், 'வரலட்சுமி நோன்பு' கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் நாடு முழுவதும் வெகு விமரிசையாக கடைப்பிடிக்கப்படும் ஒன்று என்றாலும், குறிப்பாக தமிழ்நாட்டுப் பெண்கள் அனுசரிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இது பார்க்கப்படுகிறது.

    பூவும், பொட்டும், சகல சவுபாக்கியங்களும் பெற்று, குடும்பம் சிறந்தோங்க வேண்டும் என்று சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள்.

    ஒரு சமயம் திருக்கயிலாயத்தில் பரமசிவனும், பார்வதிதேவியும் வீற்றிருந்தனர். அப்போது பார்வதிதேவி, சிவபெருமானை நோக்கி "சுவாமி! எந்த தேவதையை நினைத்து பெண்கள் விரதம் இருந்தால், அவர்களின் குடும்பம் சகல துக்கங்களில் இருந்தும் நீங்கப்பெற்று சுகவாழ்வை அடையும்" என்று கேட்டார்.

    அதற்கு சிவபெருமான், "எல்லா சவுபாக்கியங்களையும் தரும் வரலட்சுமி விரதத்தைப் பற்றிச் சொல்கிறேன் கேள்" என்று கூறி, அந்த விரதம் ஏற்பட்ட வரலாற்றை சொன்னார்.

    மகத தேசத்தில் குந்தினபுரம் என்ற ஒரு பட்டினம் உண்டு. அந்த பட்டினத்தில் சாருமதி என்னும் பதிவிரதை இருந்தாள். அவள் லட்சுமி தேவியை வணங்குவதை வழக்கமாக கொண்டிருந்தாள். அவளது கணவன் உஞ்சவிருத்தி மூலம் கொண்டுவரும் அரிசியைக் கொண்டு, அந்த குடும்பத்தில் அனைவரும் பசியாறி வந்தனர்.

    கருணையே வடிவான வரலட்சுமி தேவி, பதிவிரதையான சாருமதிக்கு அனுக்கிரகம் செய்ய முன்வந்தாள். ஒரு நாள் சாருமதியின் கனவில் தோன்றிய வரலட்சுமி தேவி, "சாருமதி.. உன் பக்தியால், நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    உனக்கு அனுக்கிரகம் செய்வதற்காகவே வந்திருக்கிறேன். நீ ஆவணி மாதம் பூர்வ பட்சத்தில், பவுர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமையில் என்னைப் பூஜித்தால் உன் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்" என்றாள்.

    அதைக் கேட்ட சாருமதி, தான் கண்ட கனவிலேயே, அன்னை வரலட்சுமி தேவியை வலம் வந்து வழிபட்டாள். மேலும், தனக்குத் தெரிந்த மந்திரங்களைச் சொல்லி பூஜிக்கவும் செய்தார். அதோடு பவுர்ணமிக்கு முந்தை வெள்ளிக்கிழமை அன்று பூஜை செய்யும் வழிமுறைகளைப் பற்றியும் வரலட்சுமி தேவியிடம் கேட்டு தெரிந்துகொண்டாள்.

    அதிகாலையில் கண் விழித்து எழுந்ததும், தான் கண்ட கனவு பற்றி, தன்னுடைய கணவன் மற்றும் மாமியார், மாமனாரிடம் சொன்னாள், சாருமதி. அவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து, அந்த உன்னதமான விரதத்தை கண்டிப்பாக கடைப் பிடிக்க வேண்டும் என்று மனதில் உறுதி கொண்டனர்.

    அதன்படி ஆவணி மாத பூர்வபட்ச பவுர்ணமிக்கு முன்பு வந்த வெள்ளிக்கிழமையில் உதய காலத்தில், சாருமதியும், அவளது குடும்பத்தினரும் விழித்தெழுந்தனர். பின்னர் நீராடி விட்டு நல்ல வஸ்திரங்களை அணிந்து கொண்டு, பூஜை செய்வதற்குத் தேவையான பொருட்களை சேகரித்தனர்.

    வீட்டில் ஓர் இடத்தை தேர்ந்தெடுத்த சாருமதி, அந்த இடத்தை மொழுகி, அரிசி மாவினால் கோலமிட்டாள். வரலட்சுமி தேவிக்கு ஒரு மண்டபம் அமைத்தாள். வண்ணப் பொடிகளால் தாமரைப் போன்று கோலமிட்டு அதனை அழகுபடுத்தினாள்.


    அதன் மீது ஒரு நுனி வாழை இலையைப் போட்டு, அந்த இலை முழுவதும் பச்சரிசியை பரப்பி வைத்தாள். பச்சரிசியின் மேல் பகுதியில் பித்தளை செம்பில் சுண்ணாம்பு தடவி, அதன் வாய்ப் பகுதியில் மாவிலைகளை சுற்றிவைத்து, தேங்காயை வைத்து கலசம் போல் மாற்றினாள்.

    அந்த கலசத்தின் மீது அம்மன் முகத்தை பதித்தாள். பின்னர் குத்துவிளக்கேற்றி வைத்தாள். கலசத்தை மலர் மாலைகளைக் கொண்டு அலங்கரித்தாள். அந்த கலசத்தில் வரலட்சுமி தேவியை ஆவாகனம் செய்தாள்.

    இந்த பூஜையில் சாருமதியும் அவளது வீட்டின் அருகில் உள்ள பெண்களும் பக்தி சிரத்தையுடன் பங்கேற்று, வரலட்சுமி தேவியை பிரார்த்தனை செய்தனர்.

    பத்மாஸநே, பத்மகராம்

    ஸர்வலோக பூஜிதே

    நாராயணப்ரியே தேவி

    ஸுப்ரி தாப்பவ ஸர்வதா!!

    என்ற லட்சுமி சுலோகத்தால், வரலட்சுமி தேவியை வணங்கி, ஷோடச உபசார பூஜைகள் செய்து, ஒன்பது முடிச்சு போட்ட மஞ்சள் சரடினை வலது கையில் கட்டிக் கொண்டனர்.

    வரலட்சுமி தேவிக்கு ஒன்பது விதமான பட்சணங்களை நைவேத்தியமாக படைத்து, கற்பூர தீபாராதனை காட்டி வணங்கினர். விரதம் முடிந்ததும் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    பின் அனைவரும் அவரவர் வீட்டிற்குச் சென்றபோது, அந்த பெண்களின் வீடுகள் அனைத்தும் மாட மாளிகைகளாக ஆடம்பரமாக காட்சியளித்தன. இதைக் கண்ட மக்கள் அனைவரும், 'இது சாருமதி செய்த வரலட்சுமி பூஜையின் மகிமையால் ஏற்பட்டது' என்பதை அறிந்து சாருமதியை போற்றினர்.

    இந்த வரலட்சுமி விரதம் இருப்பவர்கள், வரலட்சுமி தேவியின் அருளைப் பெற்று, தங்கள் பக்திக்கான நற்பலன்களை அடைவது உறுதி என்று பார்வதிக்கு, வரட்சுமி விரதத்தைப் பற்றி சிவபெருமான் எடுத்துரைத்தார்.

    பவிஷ்ய புராணத்தில் பரமேஸ்வரனால் பார்வதி தேவிக்கு சொல்லப்பட்ட இந்த வரலட்சுமி விரதத்தைப் பற்றி சொல்பவர்களும், சொல்லக் கேட்பவர்களும், விரதம் இருந்து அதை பூர்த்தி செய்பவர்களும், அஷ்ட ஐஸ்வரியங்களுடன், புத்திர பாக்கியமும், தீர்க்காயுளும் பெற்று வாழ்வார்கள் என்பது ஐதீகம்.


    சரடு எடுக்க சொல்லும் சுலோகம்

    ஒன்பது முடிச்சுகள் கொண்ட மஞ்சள் சரடை பூஜையில் வைத்து, பூஜை முடிந்ததும் அதனை வலக் கையில் கட்டிக் கொள்ள வேண்டும். பூஜை முடிந்து சரடை எடுக்கும் போது,

    ஸர்வமங்கள மாங்கள்யே ஸர்வபாப ப்ரணாசினி!

    தோரகம் பரதிக்ருஹ்ணாமி ஸுப்ரீதா பவ ஸர்வதா!!

    என்ற மந்திரத்தைச் சொல்ல வேண்டும். பின்னர் தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மஞ்சள் வைத்து, பூஜையில் பங்கேற்ற சுமங்கலி கையில் கொடுத்து கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்லவும்.

    நவதந்து ஸமாயுக்தம் நவக்ரந்திஸமன்விதம்

    பத்னியாம் தக்ஷிணே ஹஸ்தே தோரகம் ஹரிவல்லபே

    பிறகு மஞ்சள் சரடை வலது கையில் கட்டி விட வேண்டும். இதேபோல் மற்ற சுமங்கலிகளுக்கும் கட்டி விடவேண்டும்.

    • 16-ந்தேதி வரலட்சுமி விரதம்.
    • 17-ந்தேதி சனிப்பிரதோஷம்.

    13-ந்தேதி (செவ்வாய்)

    * சேலம் செவ்வாய் பேட்டை மாரியம்மன் வசந்த உற்சவம்.

    * குரங்கணி முத்து மாலை அம்மன் பவனி

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    14-ந்தேதி (புதன்)

    * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் வளையல் விற்ற திருவிளையாடல்.

    * ராமேஸ்வரம் சுவாமி அம்பாள் தங்க கேடய சப்பரத்தில் பவனி

    * இருக்கன்குடி மாரியம்மன் புறப்பாடு.

    * திருப்பதி ஏழுமலையான் சகஸ்ர கலசாபிஷேகம்.

    * சமநோக்கு நாள்.

    15-ந்தேதி (வியாழன்)

    * சுமார்த்த ஏகாதசி.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்,

    * சமநோக்கு நாள்.

    16-ந்தேதி (வெள்ளி)

    * சர்வ ஏகாதசி.

    * வரலட்சுமி விரதம்.

    * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் புட்டுக்கு மண் சுமந்தருளிய விலை.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    17-ந்தேதி (சனி)

    * சனிப்பிரதோஷம்

    * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிவில் விறகு விற்ற திருவிளையாடல்.

    * திருவரங்கம் நம்பெருமான், பண்ணார்குடி ராஜ கோபாலசுவாமி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    18-ந்தேதி (ஞாயிறு)

    * திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் ரத உற்சவம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மாடவீதி புறப்பாடு.

    * சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    19-ந்தேதி (திங்கள்)

    * பவுர்ணமி

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

    * கீழ்திருப்பதி கோவிந்த ராஜ பெருமாளுக்கு புஷ்ப அலங்காரம்.

    * மேல்நோக்கு நாள்.

    • முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம்.
    • மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் சட்டத் தேரில் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆடி-28 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: அஷ்டமி காலை 6.11 மணி வரை. பிறகு நவமி.

    நட்சத்திரம்: விசாகம் காலை 8.29 மணி வரை. பிறகு அனுஷம்.

    யோகம்: மரண, சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். குறுக்குத்துறை ஸ்ரீமுருகப் பெருமான் புறப்பாடு. குரங்கணி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி. மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் சட்டத் தேரில் பவனி. வடபழனி, திருப்போரூர், குன்றத்தூர், திருத்தணி, கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். கழுகுமலை, மருதமலை கோவில்களில் ஸ்ரீமுருகப்பெருமான் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-முயற்சி

    ரிஷபம்-சாந்தம்

    மிதுனம்-பெருமை

    கடகம்-மேன்மை

    சிம்மம்-நிறைவு

    கன்னி-தியாகம்

    துலாம்- உதவி

    விருச்சிகம்-உண்மை

    தனுசு- உழைப்பு

    மகரம்-இரக்கம்

    கும்பம்-நட்பு

    மீனம்-கடமை

    • திருப்போரூர் ஸ்ரீமுருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.
    • ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆடி-27 (திங்கட்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: அஷ்டமி முழுவதும்

    நட்சத்திரம்: சுவாதி காலை 6.39 மணி வரை பிறகு விசாகம்.

    யோகம்: அமிர்த, மரணயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு. மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் தங்கக் குதிரையில் பவனி. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் மஞ்சள் நீராட்டு விழா. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சன்னதியில் ஸ்ரீகருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருப்போரூர் ஸ்ரீமுருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உயர்வு

    ரிஷபம்-இரக்கம்

    மிதுனம்-சோர்வு

    கடகம்-சுகவீனம்

    சிம்மம்-ஆதாயம்

    கன்னி-தாமதம்

    துலாம்- அனுகூலம்

    விருச்சிகம்-நன்மை

    தனுசு- சுபம்

    மகரம்-நற்சொல்

    கும்பம்-மாற்றம்

    மீனம்-உறுதி

    • பதிகம் பாடிய சுந்தரருக்கு, குரு பூஜை விழா.
    • சுந்தரருடனே சிவபாதம் அடைந்தவர் சேரமான் பெருமான் நாயனார்.

    சைவ சமயத்தில் போற்றப்படும் நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார், திருமணம் செய்ய முயன்ற போது, சிவபெருமான் கிழவன் வேடம் தரித்து சென்று, அதை தடுத்தார். சுந்தரரின் பிறவி நோக்கம், இறைவனை புகழ்ந்து பாடுவது என்பதை உணர்த்தி, சிவபெருமான் அவ்வாறு தடுத்தாட்கொண்டார்.

    அதன்பின், பல கோவில்களுக்கு சென்று, சிவபெருமானை பாடியுள்ளார். திருமணத்தை தடுத்த சிவபெருமானே, இரண்டு பெண்களை சுந்தரரருக்கு திருமணம் செய்து வைத்தார். பன்னிரு திருமுறைகள் மற்றும் தேவாரத்தில், சுந்தரமூர்த்தி நாயனார் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

    சிவபெருமான் மீது, பண்களுடன் 38 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். திருப்பூர், திருமுருகண்டி பூண்டியில் சுந்தரர் தங்கியிருந்த போது, சிவபெருமான், பூத கணங்களை அனுப்பி, பொருட்களை கவர செய்து, திருவிளையாடல் புரிந்தார்.

    அப்போது, வெஞ்சிலை வடுக வேடுவர் எனும் பதிகம் பாடியதால், அகம் மகிழ்ந்த இறைவன், சுந்தரரின் பாடலுக்காக, கவர்ந்த பொருட்களை கோவில் முன் குவித்தார்.

    சிவாலயங்கள் தோறும் பதிகம் பாடிய சுந்தரருக்கு, குரு பூஜை விழா, திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், அர்த்த சாம பூஜை சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் நடக்கும். பல்வேறு திரவியங்களில் அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.

    வெள்ளை யானை வாகனத்தில், சுந்தரமூர்த்தி நாயனார் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு, அருள்பாலித்தார்.

    சுந்தரமூர்த்தி நாயனாரிடம் நட்பு கொண்டு, அவருடனே பல கோவில்களுக்கு சென்று இறைவனை வணங்கியவர்; சுந்தரருடனே சிவபாதம் அடைந்தவர், கழறிற்றறிவார் நாயனார் எனப்படும் சேரமான் பெருமான் நாயனார்.

    அரசராக இருந்தாலும், சிவதொண்டையே பெரும் பாக்கியமாக கருதி, சுந்தரரோடு கயிலாயம் அடைந்த சேரமான் பெருமாள், குரு பூஜையும் இன்று.

    • நயினார் கோவில் ஸ்ரீ சவுந்தர நாயகியம்மன் மஞ்சள் நீராட்டு விழா.
    • சேரமான் பெருமான் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூஜை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆடி-26 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சப்தமி மறுநாள் விடியற்காலை 5.09 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம்: சுவாதி (முழுவதும்)

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. நயினார் கோவில் ஸ்ரீ சவுந்தர நாயகியம்மன் மஞ்சள் நீராட்டு விழா. மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் புஷ்பப் பல்லக்கில் திருவீதியுலா. சேலம் செவ்வாய்ப் பேட்டை ஸ்ரீ மாரியம்மன் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி விமானத்தில் பவனி. சேரமான் பெருமான் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூஜை. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சியருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆக்கம்

    ரிஷபம்-ஆதரவு

    மிதுனம்-நலம்

    கடகம்-பாசம்

    சிம்மம்-பக்தி

    கன்னி-பாராட்டு

    துலாம்- உதவி

    விருச்சிகம்-போட்டி

    தனுசு- ஆர்வம்

    மகரம்-ஓய்வு

    கும்பம்-பணிவு

    மீனம்-கடமை

    • திருநெடுங்களம் கோவிலை வணங்கினால் தீரா துயர் தீரும்.
    • திருமணஞ்சேரி தலத்தில் வழிபட்டால் திருமண தோஷம் விலகும்.

    சென்னை:

    கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி. நமது ஊரில் உள்ள கோவில்களுக்குச் சென்று சாமியை தரிசனம் செய்து வரவேண்டும் என முன்னோர் வலியுறுத்தி உள்ளனர்.

    அதன்படி, எந்த ஊருக்குச் சென்று எந்த சாமியை வணங்கினால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.

    திருக்கருக்குடி கோவிலை வணங்கினால் குடும்ப கவலை நீங்கும்.

    திருக்கருவேலி கோவிலை வணங்கினால் குழந்தை பாக்கியம் பெறலாம். வறுமை நீங்கும்.

    திருவழுந்தூர் கோவிலை வணங்கினால் முன்ஜென்ம பாவம் விலகும்.

    திருப்பராய்துறை கோவிலை வழிபட்டால் கர்வத்தால் கெட்டவர்கள் நலம் பெறலாம்.

    திருநெடுங்களம் கோவிலை வணங்கினால் தீரா துயர் தீரும்.

    திருவெறும்பூர் கோவிலை வழிபட்டால் அதிகார மோகத்தால் வீழ்ந்தவர்கள் தெளிவு பெறலாம்.

    திருப்பைஞ்ஞீலி கோவிலை வணங்கினால் எம பயம் விலகும்.

    திருவையாறு கோவிலை வழிபட்டால் அக்னி தோஷம் விலகும்.

    திருவைகாவூர் கோவிலில் வில்வ அர்ச்சனை செய்தால் பாவங்கள் விலகும்.

    திருமங்கலங்குடி ஈசனை வணங்கினால் குழந்தை பாக்கியம் பெறலாம்.

    திருமணஞ்சேரி தலத்தில் வழிபட்டால் திருமண தோஷம் விலகும்.

    திருமுல்லைவாயல் ஈசனை வணங்கினால் சந்திர தோஷம் விலகும்.

    திருவெண்காடு கோவிலை வழிபட்டால் ஊழ்வினை தோஷம் நீங்கும்.

    திருநெல்வேலி நெல்லையப்பரை வணங்கினால் மகான்களுக்கு செய்த குற்றம் விலகும்.

    திருக்குற்றாலம் குற்றால நாதரை வேண்டினால் முக்தி கிடைக்கும்.

    திருவாலவாய் கோவிலை வணங்கினால் நட்சத்திர தோஷம் நீங்கும்.

    திருப்பரங்குன்றத்தை வழிபட்டால் வாழத் தெரியாது தவிப்பவர்களுக்கு வழி கிடைக்கும்.

    திருவாடானை தலத்தை வணங்கினால் தீராத பாவம் நீங்கும்.

    திருமுருகநாத சுவாமி கோவிலை வழிபட்டால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலகும்.

    திருப்பாதிரிபுலியூர் தலத்தை வணங்கினால் தாயை விட்டுப் பிரிந்திருக்கும் குழந்தைக்கு தோஷம் நீங்கும்.

    திருவேற்காடு ஈசனை வணங்கினால் வாணிப பாவம் விலகும்.

    திருமயிலாப்பூர் கபாலீஸ்வரரை வழிபட்டால் 3 தலைமுறை தோஷம் நீங்கும்.

    • அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவது வழக்கம்.
    • வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மூங்கில்பட்டி கிராமத்தில் சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவில் உள்பிரகாரத்தில் வனவாராஹி அம்மன் சன்னதி உள்ளது. இங்கு தினமும் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவது வழக்கம்.

    குறிப்பாக பஞ்சமி திதியில் அம்மனுக்கு அதிகாலை முதல் நடக்கும் சிறப்பு பூஜையில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அதன்படி நேற்று நாகபஞ்சமியை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

    அப்போது பக்தர்கள் கொடுத்த பிரசாத பாலை நைவேதியம் செய்வதற்காக கரண்டியில் பாலை எடுத்துச் சென்றபோது அம்மன் அதனை குடித்தது. இதனை பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    தொடர்ந்து கரண்டியில் பாலை எடுத்து அம்மன் வாய் அருகே எடுத்துச் சென்றபோது அது முற்றிலும் காலியானது. இதனை பக்தர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டனர். தொடர்ந்து ஒவ்வொரு பக்தராக தாங்கள் கொண்டு வந்த பாலை அம்மனுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். இதனால் அவர்கள் பக்தி பரவசத்தால் உற்சாகம் அடைந்தனர்.

    ×